Jump to content

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது


Recommended Posts

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது.

நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத்  தோற்றினர்.

பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உயரதரப-பரடச-பறபற-வளயனத/175-243084

பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 181,126

கடந்த வருடம் பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 167,907

http://www.dailymirror.lk/breaking_news/AL-results-out-181-126-students-eligible-for-university-entrance/108-180302

Link to comment
Share on other sites

 

பாராளுமன்ற உறுப்பினர் இரஞ்சன் இராமநாயக்க தான் எழுதிய உயர்தர பரீட்சையில், மூன்றில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்துந்துள்ளார். கிறிஸ்வத மதம் பற்றிய பாடத்தில் சித்தியடையவில்லை.

Slide1

இவர் முதல் தடவையாக 1981இல் உயர்தர பரீட்சையை எழுதினார். தான் ஒரு சட்டத்தரணியாக வருவதே நோக்கம் எனவும் கூறி இருந்தார்.

http://www.sundaytimes.lk/article/1112939/ranjan-passes-two-subjects-in-al-exam

Link to comment
Share on other sites

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவி வணிகத்துறையில் மாவட்டரீதியில் முதல் நிலை அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேஷ சித்தி...(3A)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இன்றுவரை தந்தையை தேடிக்கொண்டிருப்பவள் ..

யுத்தத்தில் ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவருபவள்...

பாராட்டப்படவேண்டிய ஒரு குடும்பம் . கண்டிப்பாக இது எங்களது சமூகத்தின் கடமை . இவ்வளவுதூரம் மீன்றெழுந்து உயரவைத்த இந்தத்தாய்க்கு கைகொடுக்கவேண்டிய கூட்டுப்பொறுப்பு எம்சமூகத்திற்கு உண்டு நிறைவேற்ற முன்வாருங்கள் ..

- நன்றி முகநூல்  - 

 

Link to comment
Share on other sites

சரி சரி;அந்த வடக்கு மாகணத்தின் கல்வி தரம் வீழ்ந்து போச்சு என வருடா வருடம் எங்கட புத்த ஜீவிகள் புலம்பலை எப்பொழுது கேக்கலாம் ......!!!!!

மிகமுக்கியம்: “போர்காலத்தில் கல்வியில் சாதனை படைத்த நாம்  போர் இல்லா காலத்தில் வீழ்ச்சி அடைந்து போனோம”என்ற வசனம் கட்டாயம் இடம் பெற வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவி வணிகத்துறையில் மாவட்டரீதியில் முதல் நிலை அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேஷ சித்தி...(3A)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இன்றுவரை தந்தையை தேடிக்கொண்டிருப்பவள் ..

யுத்தத்தில் ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவருபவள்...

பாராட்டப்படவேண்டிய ஒரு குடும்பம் . கண்டிப்பாக இது எங்களது சமூகத்தின் கடமை . இவ்வளவுதூரம் மீன்றெழுந்து உயரவைத்த இந்தத்தாய்க்கு கைகொடுக்கவேண்டிய கூட்டுப்பொறுப்பு எம்சமூகத்திற்கு உண்டு நிறைவேற்ற முன்வாருங்கள் ..

இவ்வளவு சோகத்திலும்... படித்து,  மாவட்ட ரீதியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fdh-5.jpg

இரு பிரிவுகளில் முதலிடம் பெற்ற யாழ். இந்து கல்லூரி

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி வர்த்தகப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 107வது இடத்தையும் பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இரு-பிரிவுகளில்-முதலிடம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவி வணிகத்துறையில் மாவட்டரீதியில் முதல் நிலை அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேஷ சித்தி...(3A)

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இன்றுவரை தந்தையை தேடிக்கொண்டிருப்பவள் ..

யுத்தத்தில் ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவருபவள்...

பாராட்டப்படவேண்டிய ஒரு குடும்பம் . கண்டிப்பாக இது எங்களது சமூகத்தின் கடமை . இவ்வளவுதூரம் மீன்றெழுந்து உயரவைத்த இந்தத்தாய்க்கு கைகொடுக்கவேண்டிய கூட்டுப்பொறுப்பு எம்சமூகத்திற்கு உண்டு நிறைவேற்ற முன்வாருங்கள் ..

- நன்றி முகநூல்  - 

 

தாயும்,தம்பியும் காலில் செருப்போடு நிற்கையில் வெறுங் காலோடு just be cool என்று நம்பிக்கையோடு நிற்கும் பெண்ணே நாளை நன்றாக வருவாய் என்று இப்பொழுதே தெரிகிறது. வழ்ததுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள், இவ் மாணவிக்கு யாழ் களத்தினுடாக மேல் படிப்பிற்கு உதவி செய்ய நினைத்தால், அதில் என் பங்கும் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

student-1.jpg

மட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தினை பெற்ற மாணவன்

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் புகழ்சேர்த்துள்ளார்.

புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சுரன்ராஜ் மனோகிதராஜ் மூன்று பாடங்களிலும் ஏ (A)  சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69ஆவது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளான.

http://athavannews.com/மட்டக்களப்பு-மாவட்டத்த-5/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி டிறிபேக் மாணவி கலைப்பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடம்

Dec 28, 20190

 

சாவகச்சேரி டிறிபேக் மாணவி கலைப்பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடம்

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.இந்நிலையில் இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.வெளியான பெறுபேறுகளின்படி யாழ் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவி கலைப்பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/சாவகச்சேரி-டிறிபேக்-மாணவ/

வரலாற்றில் முதல் தடவையாக நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் சாதனை

Dec 28, 20190

 

வரலாற்றில் முதல் தடவையாக நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் சாதனை

வெளியான பெறுபேறுகளின்படி இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்றுள்ளார்.இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/வரலாற்றில்-முதல்-தடவையாக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. உயர்தர பரீட்சை – ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை

 

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா பகுதியை வசிப்பிடமாகவும் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் ராம் பிரசாத் என்ற மாணவனே 3ஏ சித்திகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

மேலும் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மற்றுமொரு மாணவன், ஸ்ரீ மதுஷான் உயிரியல் விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அத்தோடு, அககல்லூரியின் மாணவி ஆர்.கபிஷா நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்..

மேலும் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, எம்.மெரினா தொழில்நுட்ப பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம்முறை இந்த கல்லூரியில் இருந்து 130 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும் என கல்லுரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

AL-3-428x241.jpg

AL-4-428x241.jpg

http://athavannews.com/க-பொ-த-உயர்தர-பரீட்சை-ஹட்ட/

Link to comment
Share on other sites

யுத்தத்தில் கையை இழந்த தாயின் அரவணைப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையைத் தேடிக்கொண்டே வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !

இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி.

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி  இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில்   3A  சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையைத் தொலைத்துக் காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில்  வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்றுச் சாதித்துள்ளார்.

unnamed__1_.jpg

 

இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர். வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும்  கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைத்த தாயார் போற்றுதலுக்குரியவர்

https://www.virakesari.lk/article/71947.

Link to comment
Share on other sites

கந்தலோயா பாடசாலை மாணவர்களின் சாதனை

மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் உள்ள கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த 11 மாணவர்களும் நூறுவீதம் சித்தியடைந்துள்ளனர்.

2016 – 2019ஆம் ஆண்டுவரையில் கந்தலோயா பிரதேசத்தின் மாணவர்கள் 19 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கநதலய-படசல-மணவரகளன-சதன/175-243102

Link to comment
Share on other sites

உயர் தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் பிரகாசித்துள்ள சிலர்

 

க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் நேற்றிரவு வௌியான பெறுபேறுகளுக்கு அமைய தேசிய ரீதியில் முதலிடங்களை பெற்றவர்களின் விபரங்கள் வௌியாகியுள்ளன.

கணிதப் பிரிவு முதல் இடம் (புதிய பாடத்திட்டம்) – 

கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் தருச சிஹான் பொன்சேகா

கலை பிரிவு முதல் இடம்  ( புதிய பாடத்திட்டம்) –

கொழும்பு தேவி மகளிர் கல்லூரியின் தேசானி வெலிகமகே

கலை பிரிவு முதல் இடம்  (பழைய பாடத்திட்டம்) –

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின்  நிபுன விராஜ்

கணிதப் பிரிவில் முதல் இடம் (பழைய பாடத்திட்டம்) –

பின்னவல தேசிய பாடசாலையின் மாணவன் ஏ.தர்ஷன இசுருசிறி சம்பத்

கணிதப் பிரிவில் இரண்டாம் இடம் (புதிய பாடத்திட்டம்) –

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தின் உவிந்து பிரவீன் சுமனசேகர

பொறியியல் தொழிநுட்ப பிரிவு முதலாம் இடம் (புதிய பாடத்திட்டம்) –

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் வினுர ஓசத 

உயிரியல் விஞ்ஞான பிரிவு முதல் இடம் – 

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் சச்சினி விஜேவர்தன 

இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

http://www.dailyceylon.com/194484/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மருமகன் கணித பிரிவில் 3A பெற்றுள்ளார். பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் மற்றும்  சித்தியடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

உயர்தரத்தில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப் பகுதியில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க திட்டம்

உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/72040

Link to comment
Share on other sites

உயர்தர பெறுபேறுகளில் ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் சாதனை,13 பேர் 3A சித்தி

Capturexdd.png

நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரிட்சை பெறுபேறுகளில் ஹாட்லி கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்  . இதில் கணிதத்துறையில் 10 மாணவர்கள் 3A சித்தியும் உயிரியல் துறையில் 2 மாணவர்கள் 3A யும் வர்த்தக துறையில் ஒருவரும் 3A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள் .
இதன் மூலம் 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் துறைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறையை காட்டிலும் இந்த முறை கூடுதலான மாணவர்கள் பொறியியல் துறை செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

 

h1-271x300.png

h4-300x244.png h3-300x222.pngh2-300x186.png

 

Link to comment
Share on other sites

உயர்தரப் பரீட்சையுடன் கல்வியை நிறைவுபடுத்தாதீர்கள்

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு கள் வெளியாகியுள்ளன.

பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக  அனுமதி கிடைப்பது உறுதி என்ற மாண வர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பது தான் இங்கு முக் கியமான விடயம்.

பொதுவில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுவதில்லை. இவ்வாறு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கை முற்றுப்பெற்று விட்டதாக மனம் சோரக்கூடாது.

சம காலத்தில் இருக்கக்கூடிய கல்வி முறைமையானது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு என்பதைக் கடந்து பட்டப்படிப்புக்களையும் தகவல் தொழில்நுட்பக் கல்வியையும் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.

எனவே க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்கள் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற முயற்சியில் ஈடுபடலாம்.

அல்லது கல்விப்புலத்தில் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி பொருத்தமான துறைகளில் தங்களை இணைத்துக் கொண்டு பட்டப்படிப்பையும் தொழிற்கல்வியையும் மேற் கொள்ள வேண்டும்.இங்கு தான் மாணவர்களை வழிப்படுத்தல் என்ற விடயம் தேவையாகிறது.

அதாவது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதியைப் பெற் றுக்கொள்ளவில்லை என்றவுடன் இனி எல்லாம் முடிந்து விட்டது என்று மனம் தளராமல் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் பெற்றோர்கள் சிந்தித்துத் தங்கள் பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டும்.

இதற்கு மேலாக பாடசாலைகளும் தத்தம் பள்ளிகளில் கற்று வெளியேறிய மாணவர் கள் அடுத்த கட்டமாக தொடரக்கூடிய கல்வி வாய்ப்புப் பற்றி குறித்த மாணவர்களுக்கு விளக்கப்படுத்தி அவர்களை திசைமுகப்படுத்தும் பணியைச் செய்தாக வேண்டும். 
தமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் கூறுகின்ற ஆலோசனைகளைச் செவிமடுத்து அதனை அமுலாக்க வேண்டும் என்ற மனநிலை ஒவ்வொரு மாணவரிடத்தும் இருப்பதால் தங்களிடம் கற்ற மாணவர்களுக்கான நல்ல ஆலோசகர்களாக ஆசிரியர்கள் இருக்கும் போது எந்த மாணவனும் வழி தவற மாட்டான் என்பது சர்வ நிச்சயம்.

எனவே இது விடயத்தில் பாடசாலைச் சமூகம் தனது பொறுப்பை உணர்ந்து பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு என்றும் நல்ல வழிகாட்டல்களை வழங்குகின்ற பொறுப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு மேலாக பல்கலைக்கழக சமூகமும் எங்கள் மாணவர்களுக்கு பொருத்தமான வழி காட்டலை வழங்குவது காலத்தின் தேவையாகும்.

ஊடகங்கள் வாயிலாகவும் கருத்தரங்குகள் மூலமாகவும் மேற்படிப்பை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை எடுத்துக் கூறுவதன் ஊடாக எங்கள் மாணவர்களை வழிப்படுத்தலாம்.

இதேபோன்று எங்கள் அண்டை நாடான இந்தியாவில் கற்கக்கூடிய வாய்ப்புக்களை யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணைத் தூதரகம் ஏற்படுத்தித் தந்தால் அது எங்கள்   பிள்ளைகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

எனவே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய எங்கள் மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர ஒட்டுமொத்த சமூகமும் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.

http://valampurii.lk/valampurii/content.php?id=20233&ctype=news

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

பொதுவில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படுவதில்லை. இவ்வாறு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கை முற்றுப்பெற்று விட்டதாக மனம் சோரக்கூடாது.

இந்த மாணவர்கள் பொதுவாக புறக்கணிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு எனவும் அவற்றில் ஒரு சிலவற்றை இந்த ஆசிரியர் தலையங்கம் கூறுகின்றது.

அன்றாட வாழ்க்கையை வளம்பெற செய்யும் தொழில்முறைகளை ஒட்டிய கல்வி, அது சம்பந்தமான பயிற்சி இருந்தால் வேலை வாய்ப்பும் தானாக அமையும். அது அமைந்தால் இந்த மாதிரியான கல்வி மேலும் வளம்பெறும், வாழ்வும் சிறக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.