• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பெண் விடுதலைக்கு ஈடாக ஆண் விடுதலைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுவது ஏன்?

Recommended Posts

பெண் விடுதலையை அழுத்தமாக வலியுறுத்தும் பெரும்பாலானோர் கடந்து செல்லும் அல்லது அதே அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறும் ஓரிடம் உண்டு. அது, ஆண் விடுதலை. ஒரு பெண் தன்னை மீட்டெடுத்துக்கொள்ள எவ்வளவு கடினமாகப் போராடவேண்டியிருக்கிறதோ அதே அளவுக்கு ஓர் ஆணும் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடவேண்டியிருக்கிறது. இருந்தும் முதல் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் கவனம் இரண்டாவதற்குக் கொடுக்கப்படுவதில்லை.

ஆனால், இப்படிச் சொல்வது அபத்தமாக இல்லையா? உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே ஆணாதிக்கம் அல்லவா செல்வாக்குமிக்கதாக இருக்கிறது? அந்த ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட ஒவ்வொரு பெண்ணும் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதுதானே உண்மை!

ஓர் ஆண் எதற்காகப் போராட வேண்டும்? யாரை எதிர்த்து, எதிலிருந்து அவன் விடுபட வேண்டும்?

பெண் என்றோர் அட்டைப்பெட்டியை உருவாக்கி, அதற்கென்று சில கறாரான பண்புகளை நிர்ணயித்து அதற்குள் ஒவ்வொரு பெண்ணையும் தூக்கிப்போட்டு அடைப்பதுபோல ஆணுக்கும் ஓர் அட்டைப்பெட்டி சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் ஒவ்வோர் ஆணும் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறான். அதற்குள் அடங்கி இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறான்...

...அறிவியலால் தீர்க்கமுடியாத பெரும் குழப்பம் ஒன்று உண்டு என்பார் சிக்மண்டு ஃபிராய்டு. ஆண்மை என்றால் என்ன? பெண்மை என்றால் என்ன? 'ஒரு தெளிவான கோட்பாட்டு விளக்கத்தை அறிவியல் இதுவரை அளிக்கவில்லை' என்கிறார் அவர்.

'ஒருவர் என்னவாகப் பிறக்கிறார் என்பதற்கும் அவர் தன்னை என்னவாக உணர்கிறார் என்பதற்கும் தொடர்பு இருக்கவேண்டிய அவசியமில்லை' என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு பெண்ணாக இருப்பதற்கும் பெண்மைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதுபோல ஓர் ஆணாக இருப்பதற்கும் ஆண்மைக்கும்கூட எந்தத் தொடர்புமில்லை. ஆண்மை என்பது ஒரு கருத்தாக்கம். சமூகத்தின் கூட்டுக்கரங்கள் அதைக் கட்டமைக்கின்றன. அந்தக் கட்டுமானத்தை ஏற்று, அதற்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் ஆண், ஆண்மையுள்ள ஆணாக அங்கீகரிக்கப்படுகிறான்.

'எனக்குச் சமையல் பிடிக்கும்' என்றோ, 'நான் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போகிறேன்' என்றோ, 'என் மனைவி என்னைவிட அதிகம் படித்தவர்' என்றோ ஓர் ஆணால் நெருடலின்றி, இயல்பாகத் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா?

முடியாது! அவ்வாறு செய்தால் தனது ‘ஆண்மை’ கேள்விக்குள்ளாக்கப்படும் என்பது அவனுக்குத் தெரியும். தீராத மன உளைச்சலுக்கு அவன் ஆட்படுகிறான். ஓர் ஆணால் தன் இயல்பான உணர்வுகளைக்கூடப் பல நேரங்களில் வெளிப்படுத்தமுடியாமல் போகிறது. 'இது, அவனை மட்டுமல்ல; அவனுடன் இருப்பவர்களையும் சேர்த்தே பாதிக்கிறது' என்கிறார்கள் உளவியலாளர்கள்...

...இனவெறுப்பை அதிகம் உமிழ்பவர்கள் ஆண்கள். வெறுப்பு அரசியலை அதிகம் முன்னெடுப்பவர்கள் ஆண்கள். மாற்று சாதியினரை, மாற்று மதத்தினரை, அயல் நாட்டினரைத் தாக்குபவர்களில் அதிகம் பேர் ஆண்கள். வீதி தொடங்கி இணையவெளிவரை எல்லா இடங்களிலும் மோசமான நடத்தையை வெளிப்படுத்துபவர்களில் அதிகம் பேர் ஆண்கள். தன்னைக் காதலிக்க மறுத்ததற்காக ஒரு பெண்ணைத் துன்புறுத்துபவர்கள், கொல்பவர்கள் பட்டியலில் ஆண்களுக்கே முதலிடம். ஒரு பெண்ணைச் சீண்டுவது பெரும் குற்றமல்ல என்று வாதிடுபவர்கள் ஆண்கள். 'பிரச்னை என்னிடம் இல்லை' என்று மற்றவர்களை நோக்கி கை நீட்டுபவர்கள் ஆண்கள்.

 

அவர்களால் சிலவற்றை வாய் திறந்து சொல்ல முடிவதே இல்லை. குறிப்பாக, பெண்களிடம். 'எனக்குச் சில பிரச்னைகள் இருக்கின்றன. என்னால் இதைச் செய்ய முடியவில்லை. எனக்கு அங்கே செல்ல பயமாக இருக்கிறது. எனக்கு இந்தப் பாடம் புரியவில்லை, விளக்குவாயா... என்னைவிட நீ நன்றாக எழுதுகிறாய், பாடுகிறாய், பணியாற்றுகிறாய். இதை எப்படி இயக்குவது என்று எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா... நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னிப்பாயா?'

...'நீ காலம் காலமாக அடங்கி நடப்பவள், அமைதியாக இரு' என்று இன்றும் சொல்கிறது பெண் பெட்டி. 'வரலாற்றில் நீ என்றென்றும் முதல் பாலினமாக இருந்து வந்திருக்கிறாய். வேட்டையாடியிருக்கிறாய். போர் தொடுத்திருக்கிறாய். எதிரிகளை அடிமைப்படுத்தியிருக்கிறாய். பல நாடுகளை ஆண்டிருக்கிறாய். எங்கெங்கும் நீயே அதிகாரமிக்கவன்' என்று இன்னமும் போலிப் பெருமிதங்களை ஊட்டிக்கொண்டிருக்கிறது ஆணின் பெட்டி.

இந்தப் பெருமிதங்களிலிருந்து ஒவ்வோர் ஆணும் விடுபடவேண்டியிருக்கிறது. ஆண்மை என்னும் கருத்தாக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டம் ஒன்றை அவன் முன்னெடுக்கவேண்டியிருக்கிறது. வலிமை, துணிவு, அதிகாரம், ஆதிக்கம், முதல் பாலினம் போன்ற பண்புகளைத் தீவிர மறுவாசிப்புக்கு உட்படுத்தி அவற்றையெல்லாம் களையவேண்டியிருக்கிறது.

ஆண் என்னும் பெட்டியிலிருந்து ஒவ்வோர் ஆணும் வெளியில் வந்தால்தான் பெண் என்னும் பெட்டியிலிருந்தும் பெண்களால் வெளிவர இயலும். முதலாவது நடக்காமல் இரண்டாவது நடக்கப்போவதில்லை.

https://www.vikatan.com/lifestyle/women/gender-inequality-occurs-even-for-freedom

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கருத்துருவாக்கத்துக்கான விதையை யாழில் விதைத்த போது சந்தித்த விளைவுகளை இப்ப சிந்தித்துப் பார்க்க முடிகிறது. அன்று வசை பாடியவர்களில்.. பலர் இன்று யாழில் இல்லை. இருந்திருந்தால்.... இதைப் படித்துச் சிந்தித்துப் பார்த்திருப்பர்.. தாம் கடந்து வந்து பதிந்த கருத்துக்களை.

ஆண்களுக்கு எதிரான பலதரப்பட்ட சமூக அழுத்தங்கள்.. பெண்களால் இழைக்கப்படும் வன்முறைகள்.. சமூகத்தால் திணிக்கப்படும் வேலைப்பளுக்கள்.. பொறுப்புக்கள்.. என்று எத்தனையோ.. விடயங்கள் ஆண் என்பதற்காக.. ஆண் தனியொருவனாக சுமக்க வேண்டி இருப்பது கூட ஆண் விடுதலைக்கான அடிப்படை சிந்தனையோட்டத்தின் ஆரம்பமாகும். 

வரவேற்கத்தக்க சிந்தனை ஓட்டம். 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

பெரும்பாலான ஆண்கள் தமது இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் விடுவதால் அது அந்த ஆணை மட்டுமல்ல அந்த ஆணை சார்ந்தோரை எந்தளவு தூரம் பாதிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள்?

நல்லதொரு பகிர்வு..

Share this post


Link to post
Share on other sites

எந்த பெண்ணாவது ஆணை பத்து மாதங்களுக்கு மேல் அடக்கி வைத்திருந்திருக்கிறாளா......அதுக்கு மேலேயும் நான் பெண்ணிடம் அடிமையாய்த்தான் இருப்பேன் என்று அடம்பிடித்தால் அது யார் குற்றம்.......!   🤔

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பத்து மாதம் இல்லை பரலோகத்தில் இருக்குமட்டும் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என என்னும் பெண்களும் இருக்கிறார்கள்.. அப்படியானவர்களிடம் இருந்து வெளியே வரமுடியாமல், “சமூக அந்தஸ்து, பிள்ளைகள்” , என்ற பெட்டிக்குள் சிக்கி இருப்பவர்களை பற்றி எங்களுக்கு தெரிவது இல்லை ஏனெனில் அவர்கள்(அந்த ஆண்கள்) இதைப்பற்றி வெளியே சொல்லமுடியாமல் அவர்களுடைய இயல்பும், சமூகம் அவர்களுக்கு கொடுத்த “ ஆண், ஆண்மை” என்ற தோற்றமும் தடுத்துவிடுகிறது.

Share this post


Link to post
Share on other sites

ஆண், ஆணாக😉 இல்லாத விடத்து பெண்ணிடம் அடிமையாய்த்🙁 தான் இருக்க வேண்டும்...யாரில் பிழை😐 

 

Share this post


Link to post
Share on other sites

இருக்கலாமே.. அடிமைப்பட்ட பெண்ணிடம் போலியாக ஒரு முகம், தனக்காக இன்னொரு முகம் கொண்டு வாழலாம். 

ஆனால் இந்த பிரச்சனைகளை முறையான ஆலோசனை/ உதவிகளை  “ஆண்” எனபதற்காக நாடாதவிடத்து வேறு விதமான பழக்கங்களுக்கு அடிமையாகி, மன உளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு நோயாளி ஆகி  சிறுவயதிலேயே(40 -50 வயது) மரணமடைவார்கள், இல்லை தற்கொலை செய்வார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த ஆணை சார்ந்தவர்கள் மட்டுமே. 

அதனால்தான் ஆண்களது விடுதலையும் அவசியமாகிறது.

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this