Jump to content

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு

Recommended Posts

Tamil_News_Dec27_2019__96172511577607.jpg

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2  இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு  சென்றனர்.
மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=552279

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

Link to comment
Share on other sites

2 hours ago, Kavi arunasalam said:

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

யார் தவறு....? தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதியை சிறீலங்காவிற்கு கொடுத்தது யார்...? தமிழ்நாடு கொடுக்கவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

ஜெகதாபட்டினத்தையும் இலங்கைக்கு தாரை வார்த்தாகிவிட்டதா..?

சொல்லவே இல்லை..! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

யார் தவறு....? தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதியை சிறீலங்காவிற்கு கொடுத்தது யார்...? தமிழ்நாடு கொடுக்கவில்லையே.

Paanch,

நிலத்தை இன்னுமொரு நாட்டுக்குத் தாரை வார்ததுக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. மத்திய அரசு கச்சதீவை சிறிலங்காவிற்கு கொடுத்த போது மாநிலத்தில் முதல்வராக இருந்தது கலைஞர் மு.க.கருணாநிதி.

1 hour ago, ராசவன்னியன் said:

ஜெகதாபட்டினத்தையும் இலங்கைக்கு தாரை வார்த்தாகிவிட்டதா..?

பயந்து விடாதீர்கள் ராசவன்னியன். ஜெகதாபட்டினம் அங்கேயே இருக்கிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது சிறீலங்கா கடல்எல்லைக்குள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் வந்ததால் ஒருவேளை குழம்பி விட்டீர்களோ  என்று தெரியவில்லை ராசவன்னியன்.

இங்கே நான் இணைத்திருக்கும் படம் 2014இல் வரைந்தது

7-BCAC3-CB-84-AE-4946-9-B00-2-E97357-E9-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

....

பயந்து விடாதீர்கள் ராசவன்னியன். ஜெகதாபட்டினம் அங்கேயே இருக்கிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது சிறீலங்கா கடல்எல்லைக்குள்

மீனவர்கள் கைது செய்யப்பட்டது இலங்கையின் கடல் எல்லைக்குள் என்பதை எப்படி நிறுவுவீர்கள்..?

இலங்கை அரசு சொல்வதை வைத்துதானே..?

அப்படி பார்த்தால் மரணித்த பல்வேறு போராளிகள் அனைவரும் 'பயங்கரவாதிகள்' என இலங்கை அரசு சொல்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே..?

இதுவரைக்கும் 'ஈழத்தில் கொடுமைகளே நடக்கவில்லையென' இலங்கை அரசு சர்வதேசத்திற்கு சொல்லி வருகிறது.. ஏன் மறுக்கிறீர்கள்..?

பொந்திய அரசும், இலங்கை அரசும் இதுவரை சொல்லிவரும் செய்தியான 'தமிழர்கள் யாரும் இலங்கையில் கொல்லப்படவில்லை, இறந்தது பயங்கரவாதிகள்தான்' என அவர்கள் சொல்வதை தமிழக தமிழர்களாகிய நாங்களும் அப்படியே நம்பலாமா?

13 hours ago, Kavi arunasalam said:

... அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

அடுத்தவன் எல்லை என்கிறீர்களே..? அடுத்தவன் நாட்டில் வன்முறையில், குற்றங்களில் ஈடுபட்டோரை சிறையிலடைத்தால் ஈழத்தமிழர்களுக்கு, தமிழகம் துரோகம் செய்துவிட்டது என விசனப்படுகிறீர்கள்.

என்ன உங்களின் மனநிலை?

சந்தர்பத்திற்கு/அனுகூலத்திற்கு ஏற்றவாறு கருத்து சொல்லப்படாது..! 🤪😡

பல்வேறு சமயங்களில் இலங்கை கடற்படை ராமேஸ்வரம் கடல் எல்லைக்குள்ளும், பொந்திய கடல் எல்லைக்குள்ளும் தமிழக மீன்வர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது.

வரலாற்று தவறுகளில், பொந்தியா இலங்கைக்கு தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது பெரிய இழப்பும், பின்னடைவும் ஆகும். பொந்தியாவிடம் தமிழகத்தின் பகுதிகள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல!

கையாலாகாத, வக்கற்ற தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் cool..cool.. எதுக்கு இப்போ கோபம்?

அரசியலில் பேசுவதற்கு பல இருக்கிறது. அதைப் பற்றி பேச இது இடமல்ல. இங்கு சந்தர்ப்ப வாதமும் துளியும் இல்லை.

முதலில் ஒன்றை மட்டும்  சொல்லிவிடுகிறேன் தமிழகத்திற்கு மட்டும் கச்சதீவு சொந்தமானது என்பது தவறு.

இந்தியா கச்சதீவை மட்டுமல்ல நேபாளத்தில் இருந்த புத்தரின் பல்லையும் சிறிலங்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது.

2 hours ago, ராசவன்னியன் said:

கையாலாகாத, வக்கற்ற தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இப்படிச் சொன்னீர்களே ராசவன்னியன்அது ஓரளவுக்குச் சரி.

கச்சதீவைகொடுக்கும் போதே தமிழக மக்கள் கிளர்ந்து எழவில்லேயே அங்கே தவறு தொடங்குகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வரும் போது அதை ஓட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்ககவில்லையே என்பது வேதனையானது. ஜல்லிகட்டு தடைக்கெதிராக மெரினாவை முற்றுகையிட்ட தமிழக மக்களுக்கு மீனவர்களுக்காக ஏன் ஒரு பாரிய போராட்டத்தை நடத்த முடியவில்லை என்பது ஒரு கேள்வி.

ரோலர்களைக் கொண்டு ஆழ்கடல் மீன்களை பிடிப்பதால் மீன்கள் அற்றுப் போவதுடன் அது தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் ஈழத்தமிழனையும் பாதிப்புக்கள்ளாக்குகிறதே. அவனின் மீன்பிடி தொழில் பாதிப்படைகிறதே. அவனின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறதே. ஈழத் தமிழ் கடலில் ஒரு பக்கம் தென் இலங்கை சிங்களவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிக்கிறார்கள். மறு புறம் தென்னகத் தமிழர் என்றால் அவன் என்ன செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

ரோலர்களைக் கொண்டு ஆழ்கடல் மீன்களை பிடிப்பதால் மீன்கள் அற்றுப் போவதுடன் அது தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் ஈழத்தமிழனையும் பாதிப்புக்கள்ளாக்குகிறதே. அவனின் மீன்பிடி தொழில் பாதிப்படைகிறதே. அவனின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறதே. ஈழத் தமிழ் கடலில் ஒரு பக்கம் தென் இலங்கை சிங்களவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிக்கிறார்கள். மறு புறம் தென்னகத் தமிழர் என்றால் அவன் என்ன செய்ய முடியும்

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய செய்திதான் ஆனாலும் இணைப்பதில் தவறில்லை

இழுவை மீன்பிடி, இந்திய மீன்பிடிக்கு எதிராக யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வட பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்களினதும், உள்ளுர் மீனவர்களினதும் இழுவைப் படகு மீன்பிடி தொழிலைத் தடைசெய்யக் கோரியும், வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கக் கூடாது எனக் கோரியும் வடமாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

160712074617_srilankafishermenjaffna_640

வடமாகாண மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு எதிரில் கூடிய வடமாகாண மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய மீனவர்களின் வருகையை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்குரிய தீரமானம் ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வடமாகாண சபை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் வடமாகாண ஆளுனர் சிறிசேன குரே, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160712_fishingsrilanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kavi arunasalam said:

...முதலில் ஒன்றை மட்டும்  சொல்லிவிடுகிறேன் தமிழகத்திற்கு மட்டும் கச்சதீவு சொந்தமானது என்பது தவறு..

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.

கச்சதீவு இந்திய உரிமை என்பதற்கு சான்று:

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

விக்கிப்பீடியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும்

அப்படியான  நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மீன் பிடிப்பவர்கள் எதற்காக சுற்றி சுற்றி இலங்கையின் எல்லைக்குள்ளேயே வருகிறார்கள்?
இந்திய மீனவர்கள் தங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசை கொண்டு எதற்காக கேட்க வேண்டும்?

14 minutes ago, Kavi arunasalam said:

இது ஒரு பழைய செய்திதான் ஆனாலும் இணைப்பதில் தவறில்லை

யாழ் மீனவர்கள் நிலைமை இப்போதும் துயரம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய மீனவர்கள் தங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசை கொண்டு எதற்காக கேட்க வேண்டும்?

விதைத்தவர்  அவர்கள் என்று நினைக்கிறார்கள் நீங்களும் அவர்கள் போல் செய்ய அவர்கள் வாதம் அடிபட்டு போகும் அல்லவா ?

புலிகள் காலத்தில் உள்  கடலில் ரோலர் போட  தடை இருந்தது இப்போது அந்த முறை ஏன் இல்லை ?

கொஞ்சம் விளங்குக்குங்க  ராசா மாரே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

நன்றி ராசவன்னியன்.

இந்தத் தகவல்களை நான் தெரிந்திருக்கிறேன். பழையதை எல்லாம் பார்க்கப் போனால் ஈழத்தை சோழ வாரிசுகளுக்கு நாம் கொடுக்க வேண்டிவரும்.

கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

ஆனால்  முழுமையாக இலங்கைக்கு இந்தியா கச்சதீவை கையளித்தபின் அங்கே இந்தியா உரிமையை இழந்து விடுகிறது என்பதுதானே உண்மை.

கொடுத்ததை திரும்பப் பெற  இந்தியாவால் முடியாது என்ற நிலையில் அது தமிழக மாநில அரசினூடாக தமிழக மீனவர்களுக்கு  மாற்றுவழியைக் காண்பிக்க வேண்டும். வெறுமனவே இலங்கை கடற்படை தாக்குகிறது, கைது செய்கிறது, சுடுகிறது என்று மீனவர்களை புலம்ப விட்டு கை கட்டிக் கொண்டு நிற்பதில்  எதுவுமே நடக்கப் போவதில்லை. மற்றும்படி இந்த நிலையை பெரிதாக்கி  கடல், நீர்பபறவை போன்ற  சினிமாப் படங்களை உருவாக்கி காசு பார்கக மணிரத்தினம், சீனு ராமசாமி போன்றோர்களுக்குத்தான் பயன்படும்.

திரு.கவி ஐயா,

மன்னிக்கவும், தங்களின் 'அணுகுமுறை சரியாக இல்லை'யென எனது தாழ்மையான அபிபிப்ராயம்.

"தமிழகத்தின் கச்சத்தீவு உரிமைக்கான வரலாற்று உண்மைகளை மறுத்து புறந்தள்ளி, கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தாகிவிட்டது மறந்துவிடுங்கள்" என தாங்கள் சொல்வதென்றால்,

இப்படியும் சொல்லலாம்தானே? vil-ddispute.gif

"இலங்கையில் ஈழத்தமிழர்களின் பல்லாண்டு கால தாயக உரிமையை புறந்தள்ளி, ஆங்கிலேயர்கள் ஈழத்தை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டார்கள், அதனால் ஈழத்தமிழர்கள் தனி தாயகத்தின் உரிமையை இழந்துவிடுகிறார்கள் என்பதும்,  நீங்கள் அவர்களிடமே வாழ்ந்துகொள்ளுங்கள் தனிநாடு கேட்காதீர்கள்" என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

'கொடுத்ததை திரும்ப பெறமுடியாது, சிங்கள அரசினூடாக ஏதாவது மாற்று வழிகளை தேடுங்கள், தமிழர்களே..! சிங்களவர்கள் எங்களை தாக்குகிறார்கள், எங்களை இரண்டாம்தர குடிகளாக நடத்துகிறார்கள்' என ஈழத்தமிழர்கள் புலம்புவதிலும் அர்த்தம் இல்லைதானே?

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தையும் தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், கவி ஐயா..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

..கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

இந்த ஒழுங்கும் ஒப்பந்தப்படி தமிழக தமிழர்களுக்கு நிரந்தரமில்லை.

ஒப்பந்தம் கையெழுத்தான வருடத்திலிருந்து பத்து வருடங்களுக்கு மட்டுமே 'தமிழக தமிழர்களுக்கு கச்சத்தீவில் மீனவர்கள் பொதுவாக பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது' என படித்த ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இலங்கையில் ஈழத்தமிழர்களின் பல்லாண்டு கால தாயக உரிமையை புறந்தள்ளி, ஆங்கிலேயர்கள் ஈழத்தை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டார்கள், அதனால் ஈழத்தமிழர்கள் தனி தாயகத்தின் உரிமையை இழந்துவிடுகிறார்கள் என்பதும்,  நீங்கள் அவர்களிடமே வாழ்ந்துகொள்ளுங்கள் தனிநாடு கேட்காதீர்கள்" என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

ராசவன்னியன், உங்கள் பதில் குழப்புகிறது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த போது அது இலங்கையில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒருங்கே கிடைத்தது. அப்பொழுது ஆட்சியில் பிரதிநிதித்துவ உரிமை ஐம்பதுக்கு ஐம்பது என்ற ஒரு கருத்து தமிழர் தரப்பால் வைக்கப்பட்டது. ஆனால் இன விகிதாசார அடிப்படையில் அது 68:32 என்றானது. இது ஆட்சியில் மட்டுமே. நாங்கள் எங்கள் நிலத்தில் இருந்து சேர்ந்து வாழவே விரும்பினோம். மற்றும்படி தமிழர்கள் நிலத்தை ஆங்கலேயர்கள் சிங்களவர்களிடம் எடுத்துக் கொடுத்துவிடவில்லை. பின்னாளில் சிங்களவர்கள்தான் எங்களது நிலங்களை ஆக்கிரமித்தார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில் கை வைத்தார்கள், அரசியல் பலம் கொண்டு நசுக்கினார்கள். அதனால் எங்கள் நிலத்திற்காகவும் உரிமைக்காகவும் எங்கள் நிலத்திலேயே நின்று போராட வேண்டிய சூழல் எங்களுக்கு உருவானது. இந்தப் போராட்டத்தை  இந்தியா எப்படி பயன்படுத்திக் கொண்டது என்பது கண்கூடு. அந்த விவகாரம் இங்கு தேவையில்லை. சமீபத்தில் கூட பிரித்தானியப் பிரதமர்   ஈழத்தமிழர் உரிமை பற்றி பேசி இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

ஈழத்தையும், கச்சதீவையும் நீங்கள் ஒப்பிடுவது வேடிக்கை. மீண்டும் சொல்வேன் கச்சதீவைஏன் இலங்கைக்குக் கொடுத்தீர்கள்?” என்று நீங்கள் கேட்க வேண்டிய இடம் இந்தியா. அது கூட பலன் தராது. முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்து எதிர்மறையான முடிவையே பெற்றார்.

கச்சதீவு பூர்வீகமாக இந்தியாவுக்குச் சொந்தம் என்றாலும் சட்டப்படி அதை இலங்கைக்குக் கொடுத்தாயிற்று. இனி அது எங்களுடையது என்று அடம் பிடிப்பது அழகல்ல. மேலும் நீங்கள் குறிப்பிட்ட பத்து வருட ஒப்பந்தம் முடிந்து கச்சதீவை இலங்கைக்கு முழுமையாகக் கொடுத்த பின்னரே அவர்களது ஆட்டம் அங்கே ஆரம்பமானது.

ஒரு நிலத்தை ஒருவருக்கு இனாமாகவோ அல்லது பணத்துக்காகவோ சட்டப்படி எழுதிக் கொடுத்துவிட்டு இது எங்கள் பாட்டன் சொத்து ஆகவே என்னுடையதுதான் என்று எப்படி உரிமை கொண்டாட முடியாதோ அதுபோல்தான் இதுவும்.

ராசவன்னியன், இந்த விடயத்தில் வாதாட என்னைப் பொருத்தவரையில் எதுவும் இல்லை. உங்களைப் போல் எனக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது.

விடை பெறுகிறேன்.

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Iஇந்திய மீன்பிடி முறைகள் முற்றுமுழுதாக மீன்வளத்திற்குமே அழிவைத் தருவது. அவர்களின் மீன்பிடி முறைகளில் முழுமையான மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இவ்வாறான பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வை தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

பெருமாள்,

உங்கள் கருத்தது சற்று  தெளிவில்லாமல் இருக்கிறது. 

1] இந்திய மீனவர்கள் ஏன் இலங்கை கடற்பரப்பில் தமது மீன்பிடிப்பை செய்ய முனைகின்றனர் ? அங்கே மீன்வளம் குறைவாகவும் இங்கே அதிகமாக இருப்பதுதானே காரணமாக இருக்க முடியும்.

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்க அனுமதித்தல் இப் பிரச்சனைக்கு தீர்வாக முடியும் என கருதுகிறீர்களா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

அவர்கள் மீன்கள் இனப் பெருக்க காலத்தில் தங்கட பக்கம் மீன் பிடிக்க மாட்டார்கள் ...எல்லை தாண்டி வந்து இங்கால பக்கம் தான்  மீன்  பிடிப்பார்கள் 
மீன் வளம் அழியுது....மீனவர்கள் வறுமை கோட்டுக்குள் இருந்து கொண்டு கஷ்டப் படுகிறார்கள்...மீன் பிடிக்க நவீன வசதிகள் கூட எங்கட மீனவருக்கு இல்லை...அதை பற்றி சிலருக்கு அக்கறை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

..உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.😏

சரி, அடுத்த திரியில் பேசலாம்..

வாழ்த்துக்களுக்கு நன்றி,

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிவருவதற்கான காரணம் என்ன ? அங்கே போதிய மீன் வளம் இல்லை என்பதுதான் காரணம். 

அப்படி மீன் வளம் இன்மைக்கான அல்லது அழிந்ததற்கான காரணம் என்ன ? 

இந்தக் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையிலேதான் அமைந்துள்ளன. அப்படி இருக்கயில் ஏன் தென் இந்திய கண்டமேடையில் மட்டும் மீன் வளம் இல்லை ?

உண்மையில் இதற்கான விடையில்தான்  பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது.

இந்திய கண்ட மேடையில் மீன்வளம் அருகியது , அழிந்தது  குறிப்பாக இந்திய மீனவர்களின் பேராசைதான் காரணம்.

It's a man made disaster . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

👍

உண்மை காரணத்தை தெரிவிக்கும் கருத்து.
இந்திய மீனவர்கள் பேராசைகாரணமாக தங்களது கடல் வளந்தை அழித்த பின்பு ஏழை ஈழத்து மீனவர்களின் வயிற்றில் அடிக்க எல்லை தாண்டி இங்கே வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

உண்மை காரணத்தை தெரிவிக்கும் கருத்து.
இந்திய மீனவர்கள் பேராசைகாரணமாக தங்களது கடல் வளந்தை அழித்த பின்பு ஏழை ஈழத்து மீனவர்களின் வயிற்றில் அடிக்க எல்லை தாண்டி இங்கே வருகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) இந்திய மீனவர்களின் சமூகச் சூழலும் அதனோடிணைந்த அவர்களின் சிந்தனை முறைகளும். 

அவர்களது சமூகம்  கல்வி அறிவு குறைந்த, வெளித்தொடர்புகள் குறைந்த அதன் காரணமாக நவீன வளர்ச்சி, நவீன தொழில் நுட்ப அறிவு குறைந்த, சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வம் குறைந்த அல்லது அக்கறை அற்ற சமூகமாக உள்ளது . அதனால் அவர்களுக்கு அவர்களின் தொழில் முறையில் அக்கறை இல்லை.

2) அவர்களின் தொழில்  முறைமையும் அவர்கள் உபயோகப்படுத்தும் தொழில் நுட்பமும்.

எங்எகள் எல்லோருக்கும் மீன்பிடி என்றவுடன் மனதில் வருவது கடலில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும்தான். அது பெருமளவு உண்மைதான். ஏனென்றால் இலங்கையின் மீன்பிடி முறை மிகப் பெரும்பான்மையாக மீன், இறால் மற்றும் கடலட்டையுடன் (மிகக் குறைந்த அளவில்) நின்றுவிடுகிறது. ஆனால் தென் இந்திய மீன்பிடி முறை இவற்றிற்கும் மேலதிகமாக சங்கு, சிப்பி (Oysters ) போன்றவற்றிற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. இவை மீன்களின் பெறுமதியைவிட அதிகம பெறுமதி மிக்கவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடலட்டைகள் சுழியோடுதலின் மூலமாகவே பிடிக்கப் படுகிறது. ஆனால் தென் இந்திய மீனவர்கள் கடலட்டை, சங்கு மற்றும் சிப்பி போன்றவ்ற்றிற்கு இழுவைப் படகுகளைப் பாவிப்பர்.  இந்த முறையை பிரயோகிப்பதால் கடலில் உள்ள பவளப் பாறைகள் முற்றுமுழுதாக அழிவடைந்து விடுகின்றன.  மீன்களின் இனப் பெருக்கத்திற்கு பவளப் பாறைகள் இன்றியமையாதனவென்று எல்லோருக்குமே தெரியும். 

இதனை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஓர் இரவில் சராசரியாக 300 - 500 வரையிலான இழுவைப் படகுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும்,  இரவு முழுவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்து , மிகவும் சக்தி மிக்க  (6-12 valves Engine ) இழுவைப் படகின் உதவியுடன் மீன் பிடித்து (றோளர் அடித்தல்) விடிந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று விடுகிறார்கள்

அவர்கள் ஏற்படுத்தும் அழிவின் அளவு என்ன ?

அவ்விடத்தில் ஏதேனும் மிஞ்சுமா ?

அப்பிரதேசத்தில் பாரம்பரிய முறைப்படி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நிலை என்ன ? 

தென் இந்திய மீனவர்களிடம் எத்தனை ஆயிரம் இழுவைப் படகுகள் உள்ளன ?

வருடத்தில் ஆகக் குறைந்தது ஒன்பது மாதங்களும் தொடர்ச்சியாக, இத்தனை ஆயிரம் இழுவைப் படகுகளும் தென் இந்திய கட்ற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவின் அளவு என்ன ?

இதனை எவ்வாறு அழைப்பீர்கள் ?

பகற் கொள்ளை ?

சூறையாடல் ?

கற்பழித்தல் ?

உண்மையில் இவர்கள் கடலை கற்பழித்த பின்னர் (கடலின் கற்பை அழித்த பின்) படுகொலை செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.