Jump to content

லெபனானுக்கு தப்பிச் சென்ற நிஸான் கார் நிறுவன முன்னாள் தலைவர்


ampanai

Recommended Posts

நிதி முறைகேடு வழக்கில் சிக்கி, ஜப்பானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிஸான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன்,(Carlos Ghosn) லெபனானுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

நிஸான் மோட்டார் மற்றும் ரெனால்ட் கார் நிறுவனத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கார்லோஸ் கோஷன். நிஸான் பங்குதாரர்களிடம் தவறான தகவல் அளித்து அவர் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை ஜாமினில் விடுவித்த ஜப்பான் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் துருக்கி வழியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கார்லோஸ் கோஷனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லெபனானில் அவருக்கு குடியுரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/95017/லெபனானுக்கு-தப்பிச்-சென்றநிஸான்-கார்-நிறுவன-முன்னாள்தலைவர்

 

 

Link to comment
Share on other sites

Ousted Nissan Chairman Carlos Ghosn confirms he’s left Japan, says he ‘escaped injustice and political persecution’

  • Carlos Ghosn, the ousted chairman of Japanese automaker Nissan, said in a statement on Tuesday that he’s left Japan and is now in Lebanon. 
  • Ghosn was awaiting trial on criminal charges in Japan.

“I am now in Lebanon and will no longer be held hostage by a rigged Japanese justice system where guilt is presumed, discrimination is rampant, and basic human rights are denied, in flagrant disregard of Japan’s legal obligations under international law and treaties it is bound to uphold,” Ghosn said in a statement.

“I have not fled justice — I have escaped injustice and political persecution. I can now finally communicate freely with the media, and look forward to starting next week,” he added.

https://www.cnbc.com/2019/12/31/ousted-nissan-boss-carlos-ghosn-says-he-escaped-injustice-left-japan.html

Link to comment
Share on other sites

ஜப்பானில் இருந்து கார்லோஸ் லெபனானுக்கு தப்பியது எப்படி?

நிதி மோசடி வழக்கில் சிக்கி ஜப்பானில் சிறை வைக்கப்பட்ட நிஸான் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன், அங்கிருந்து தப்பியது  குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடும் நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் இருந்த அவர் லெபனானுக்கு தப்பிச் சென்றார். கடந்த 29 ஆம் தேதி டோக்கியோவில் இருந்து புல்லட் ரயில் மூலம் அவர் ஒசாகா சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அன்றைய தினமே தனியார் ஜெட் விமானத்தின் சரக்குப் பெட்டியில் ஒளிந்து இஸ்தான்புல்லுக்கு சென்று விட்டதாக ஜப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இஸ்தான்புல்லில் இருந்து வேறு விமானத்தில் அவர் பெய்ரூட்டை அடைந்த தாகவும் அது கூறியுள்ளது. 

கார்லோஸ் தப்ப உதவியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜப்பான் நீதித்துறை அமைச்சர் மசாகோ மோரி ((Masako Mori)) தெரிவித்துள்ளார்

https://www.polimernews.com/dnews/95713/ஜப்பானில்-இருந்து-கார்லோஸ்லெபனானுக்கு-தப்பியதுஎப்படி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.