• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

செல்போனை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுங்கள் - போப் பிரான்சிஸ்

Recommended Posts

157776895895013.jpg

செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகையே கைக்குள் அடக்கிவிட்ட உணர்வை தரும் செல்போனை பயன்படுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், செல்போனை தூர வைத்துவிட்டு குடும்பத்திடருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதுடன் ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள் காட்டினார்.

இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோர் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள்.

மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும் போப் கூறியுள்ளார்.

"தந்தைகள், பெற்றோர்கள், குழந்தைகள், தாத்தா, பாட்டி, சகோதர, சகோதரிகளே, ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசும் புனித செயலை உடனே மேற்கொள்ளுங்கள் என போப் அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/95013/செல்போனை-தவிர்த்துவிட்டுகுடும்பத்தினருடன்மனம்விட்டு-பேசுங்கள்---போப்பிரான்சிஸ்

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும் போப் கூறியுள்ளார்.

இது என்னவோ நூறு வீதம் (99.9999%) சரியாக தெரிகின்றது.

Share this post


Link to post
Share on other sites

நீங்க வேறை, டாய்லெட்டிற்கும், துணையுடன் கட்டிலுக்கும் செல்போனுடன் செல்லும் இளசுகளே இப்பொழுது அதிகம்.

இருபது வருடங்களுக்கு முன்பு, விமான நிலையதில் காத்திருக்கும்போதோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ சக பயணிகளுடன் பேசி உறவாட, நட்புடன் மனிதம் வளர வாய்ப்பிருந்தது.

இப்பொழுது  குதிரைக்கு கடிவாளம் கட்டிவிட்ட மாதிரி யாரும் எவரோடும் அருகில் உட்கார்ந்தாலே பேசுவதில்லை. பெரும்பாலும் அனைவரும் காதில் எயர் போனுடன் செல்போனில் அரட்டை அல்லது மும்முரமாக நோண்டிக்கொண்டிருப்பது. செகிட்டில் ஓங்கி அறையலாம் போல் தோன்றும்..!

என்ன மின்னெந்திரத்தனமான வாழ்க்கை..?

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் ஆங்கில மொழி ஊடான கலந்துரையாடலை வானொலியில் கேட்ட பொழுது ஒரு தகப்பனார் சொன்னார் தனது மகளின் ஆண் நண்பரை விருந்துக்கு அழைத்து அவர்கள் உணவு உண்டு மகிழ்ந்தார்கள். தான் கூறிய ஒரே ஒரு வேண்டுகோள் உங்களின் செல்லிடைதொலைபேசிகளை மேசைக்கு கொண்டுவர வேண்டாம் என்பதாகும்.

அதையும் மீறி அந்த ஆண் நண்பர் இரகசியமாக மேசைக்கு கீழே அதை பாவித்ததாகவும் தான் அவரை வீட்டை விட்டு வெளியேற கேட்டதாயும் அதன் பின்னர் அவர் 'மாறி விட்டதாயும்' கூறினார்.

 

Share this post


Link to post
Share on other sites

இந்த... செல்போன்  வியாதி, மனிதரை... எங்கு கொண்டு போய் விடப் போகுதோ.... :shocked:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பிறகு வாறதை பிறகு பார்த்துக்கொள்ளுவம் 😎 மனிசன் வீட்டில நிண்டால் புதுசு புதுசா ரெசிப்பி சொல்லியே என்னை ஒரு வழி  பண்ணிப்போடுவார். உங்கட வீட்டு நிலவரம்  பற்றி இதில சொல்லுறது சரி இல்லை அண்ணா 😃 ஆண்  மருமக்களுக்கும் மாமிமாருக்கும் நல்லா ஒத்துப்போகும் யாயினி. அந்தப் பெண்கள் தான் ....
  • உம்மை போல மாறணுமே இயேசையா
 நான் உம்மை போல மாறணுமே -2
 உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே 
உம்மை போல பரிசுத்தம் தாருமே
 பரிசுத்த ஆவியால் நிரப்பியே 
பரிசுத்த பாதையில் நடத்துமே
 அன்புள்ள மனதுருக்கம் தாருமே 
உம்மை போல அன்பாக மாற்றுமே
 அன்புள்ள ஆவியால் நிப்பியே
 அழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமே 
உம்மை போல மன்னிக்க உதவுமே
 ஞானத்தின் ஆவியால் நிரப்பியே 
பரலோக பாதையில் நடத்துமே
 ஜெபத்தின் ஆவியை தாருமே
 உம்மை போல ஆத்ம பாரம் தாருமே
 மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே
 உந்தனின் பாதையில் நடத்துமே  
  • அவர்கள் செய்வார்கள் காரணம் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லா நடவடிக்கைகள் ஐந்து நாளில் 80 கூட்டம்களுக்கு சென்ற சுமத்திரனால் நவாலி படுகொலை நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்க போக முடியவில்லையாம் நம்புங்கள் மக்களே இவர்தான் ஜனநாயகவழியில்  போராடி தீர்வு பெற்றுத்தர போகிறாராம் அப்ப  கடந்த பத்து வருடமாய் என்ன செய்தவர் என்று கேட்க்க கூடாது  கேட்டால் செம்புத்தவளைகளுக்கு கோபம் வந்துவிடும் ஒருவேளை 2010 தொடக்கம் 2020 வரை  வன்னி காட்டில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்தவரோ ?😁
  • ஹாங்காங்கில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிப்பு ஹாங்காங், சீனாவை தொடர்ந்து அதன் அண்டை நாடான ஹாங்காங்கிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இதனையடுத்து சீனாவுடனான எல்லையை மூடிய ஹாங்காங் அரசு, ஊரடங்கு விதிமுறைகளையும் கடுமையாக அமல்படுத்தியது. மேலும் வைரஸ் பரவலால் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இந்த துரித நடவடிக்கை காரணமாக ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. அத்துடன் ஹாங்காங்கில் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு வைரஸ் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 34 பேர் பயணத்தொடர்பு எதுவும் இன்றி உள்நாட்டிலேயே பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு மேலும் அதிகாரிக்காமல் தடுக்க அங்கு திறக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10172742/Announcement-in-Hong-Kong-that-schools-will-be-closed.vpf  
  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை: கிம்மின் சகோதரி திட்டவட்டம் அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 10,  2020 17:28 PM சியோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங். இதுகுறித்து  கிம் யோ ஜாங் கூறியதாவது:- அமெரிக்காவுடன் மீண்டும்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தரப்பின் பெருமைக்காக மட்டுமே இருக்கும்.தனது நாட்டுக்கு அமெரிக்காவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை இந்த ஆண்டு தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே மற்றொரு சந்திப்பு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் நடக்கக்கூடும். அணுசக்தி மயமாக்கல் சாத்தியமில்லை என்று அர்த்தமல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் ஆனால் நாங்கள் சொல்வது என்னவென்றால், இந்த நேரத்தில் அது சாத்தியமில்லை. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு சிறிய நோக்கமும் எங்களுக்கு இல்லை, அவர்கள் எங்களை தனியாக விட்டுவிட்டு, எங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் செய்யாவிட்டால் எல்லாம் சீராக நடக்கும். டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்களிடமிருந்து தொடர் மோதல் மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் கலவையான செய்திகள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா அல்லது ஜனாதிபதியின் அதிகாரத்தின் பிடியின் விளைவாகவா என்பது தெளிவாக தெரியவில்லை. டிரம்பிற்கு வாழ்த்துக்களை அனுப்பவும், அவரது பணியில் வெற்றி பெற வாழ்த்துக்களை அனுப்பவும் தனது சகோதரர் அறிவுறுத்தினார்.ஆனால் தலைவர்களுக்கிடையிலான உறவு நன்றாக இருந்தாலும், அமெரிக்கா விரோதப் போக்கிற்குத் திரும்பும், டிரம்பைத் தவிர வேறு தலைவர்களுக்கான தனது கொள்கைகளை வடகொரியா வடிவமைக்க வேண்டும் என்று கிம் யோ ஜாங் கூறினார்.  வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10172833/North-Korea-Says-If-US-Summit-Held-It-Will-Be-Used.vpf