Jump to content

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர்.

macotta.jpg

மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

01-mallacoota-australia-fire-exlarge-169

பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

malcoota.jpg

மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ்  தன்னுடைய வணிக வளாகத்தில் 45 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

mala5.jpg

அனைத்து பகுதிகளிலும் தீயைகாணமுடிகின்றது,முக்கிய வீதியில் தீயை காணமுடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல குழந்தைகள்சுவாசிக்கமுடியாமல் அவஸ்தைப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலகுட்டாவில் இன்னமும் எஞ்சியுள்ள மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள படங்கள் கடுமையான சிவப்பு நிறத்தில்  புகை மண்டலம் நிரம்பிய வானத்தினை காண்பித்துள்ளன.

-02-mallacoota-australia-fire-exlarge-16

  நகரின் மிகவும் பிரபலமானகடற்கரைபகுதியில் பெருமளவு மக்கள் காணப்படுவதையும் இந்த படங்கள் காண்பித்துள்ளன.

சிலர் முகக்கவசங்களை அணிந்துள்ளதை இந்த படங்களில் காணமுடிகின்றது.

சுமார் 4000ற்கும் மேற்பட்ட  மக்கள் கடற்கரையில் தஞ்சம்புகுந்துள்ளனர் என விக்டோரியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் ஒருபோதும் இல்லாத ஆபத்தும் மக்கள் வெளியேற்றமும் காணப்படுவதாக தெரிவித்துள்ள ஓய்வு பெற்றகாவல்துறை அதிகாரியொருவர் பாரியகாஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த காஸ் சிலின்டர்களே வெடித்திருக்கலாம் இது நல்ல விடயமல்லஎன அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு வெளியாகியவண்ணமுள்ளது,அபாய அறிவிப்பும் வெளியாகின்றது என உள்ளுர் வானொலி அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும்பயங்கரமானநிலை காணப்படுகின்றது,கடும் காற்று வீசுகின்றது,நாங்கள் சிகப்பு நிற வானத்தினால் சூழப்பட்டுள்ளோம், மோசமான புழுதியும் புகையும்  நெருப்பும் நகரத்தின் மீது விழுந்துகொண்டிருக்கின்றன நாங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/72188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பயங்கரமானநிலை அவுஸ்ரேலியாவில் இருக்கும் போது அந்த அரசு பிரமாண்டமான வாண வேடிக்கைகள் நடத்தி வெடி கொழுத்தி புது வருடம் கொண்டாடுவது விசித்திரமாக உள்ளது.தொலைகாட்சியில் காட்டினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவ்வளவு பயங்கரமானநிலை அவுஸ்ரேலியாவில் இருக்கும் போது அந்த அரசு பிரமாண்டமான வாண வேடிக்கைகள் நடத்தி வெடி கொழுத்தி புது வருடம் கொண்டாடுவது விசித்திரமாக உள்ளது.தொலைகாட்சியில் காட்டினார்கள்.

விற்பனைக்கு வந்து, வாங்கிய வெடிகளை....  
வீட்டிலோ, பாதுகாப்பில்லாத இடங்களிலோ...
சேமித்து வைப்பதும், ஆபத்தானது என நினைத்து...
வருடப் பிறப்பு அன்றே... கொழுத்த அனுமதித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவ்வளவு பயங்கரமானநிலை அவுஸ்ரேலியாவில் இருக்கும் போது அந்த அரசு பிரமாண்டமான வாண வேடிக்கைகள் நடத்தி வெடி கொழுத்தி புது வருடம் கொண்டாடுவது விசித்திரமாக உள்ளது.தொலைகாட்சியில் காட்டினார்கள்.

நகரங்கள் தூரமாக இருக்கலாம்  

1 hour ago, தமிழ் சிறி said:

விற்பனைக்கு வந்து, வாங்கிய வெடிகளை....  
வீட்டிலோ, பாதுகாப்பில்லாத இடங்களிலோ...
சேமித்து வைப்பதும், ஆபத்தானது என நினைத்து...
வருடப் பிறப்பு அன்றே... கொழுத்த அனுமதித்திருப்பார்கள்.

ம் இருக்கலாம் 

Link to comment
Share on other sites

ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

200102135758-aus-funeral-fire-3-exlarge-

ஜெஃப்ரி கிட்டன் என்ற 32 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கிட்டனின் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் கிட்டனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கிட்டனுக்கு உயரிய கெளரவ பதக்கம் அணிவித்து அவுஸ்திரேலிய தீயணைப்பு பிரிவினர் பெருமைப்படுத்தியது.

தனது தந்தையின் இழப்பை அறியாத, ஹார்வே கிட்டன் தீயணைப்புத் துறை தலைமை அதிகாரியிடமிருந்து பதக்கத்தைப் பெற்ற காட்சி இறுதிச் சடங்கில் இருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. இச் சடங்கில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

busfire.JPG

200102134705-aus-fire-funeral-2-exlarge-

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் காணாமல்போயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/72404

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5e0e49ae954bda751b46bc67.jpg

அவுஸ்ரேலியாவினை அச்சுறுத்தும் காட்டுத் தீ – அவசர நிலை பிரகடனம்!

அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ காரணமாக சில இடங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தென் கடற்கரைப் பகுதியில் காட்டுத் தீயின் தீவிரம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் உள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக இதுவரை ஆயிரத்து 300 வீடுகள் இரையாகியுள்ளன.

சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

அத்துடன், அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள தென் கடற்கரைப் பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகி வருவதால் வெப்பம் அதிமாகும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய பிரதமர்,

‘காட்டுத் தீயை அணைக்க அனைத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத் தீயை அணைக்கப் போராடுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதே சிறந்த வழி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அவுஸ்ரேலியாவினை-அச்சுறு/

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மாரிசனை முட்டாள் என வசைபாடிய சம்பவத்தால் பரபரப்பு

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசனை முட்டாள் என வசைபாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொபார்கோ (Cobargo) நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் பார்வையிடச் சென்றார்.

அப்போது மக்கள் காட்டுத் தீயால் அவதியுற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் சிட்னி துறைமுகத்தில் வாண வேடிக்கைகளை தனது சொகுசு இல்லத்தில் இருந்து பார்வையிட்டதாக குற்றம்சாட்டிய ஒருவர், அடுத்த முறை இங்கிருந்து நீங்கள் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது நண்பரே ஏனென்றால் நீங்கள் ஒரு முட்டாள் என்று கூறினார்.

பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு தீயணைப்பு வீரர் ஒருவர் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

https://www.polimernews.com/dnews/95353/ஆஸ்திரேலியாவில்-பிரதமர்ஸ்காட்-மாரிசனை-முட்டாள்-எனவசைபாடிய-சம்பவத்தால்பரபரப்பு

Link to comment
Share on other sites

உலகில் மாறிவரும் கால நிலையின் தாக்கங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த நிகழ்வு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

தனிநபராக ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த மாற்றங்களை செய்யாவிட்டால் பாரிய அழிவுகள் தொடரும்.

ஆகக்குறைந்தது நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை குறைப்பது நன்று. இவ்வாறான முயற்சிகளை ஒரு 2020 குறிக்கோளாகவும் கொண்டு செயல்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மாரிசனை முட்டாள் என வசைபாடிய சம்பவத்தால் பரபரப்பு

ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசனை முட்டாள் என வசைபாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொபார்கோ (Cobargo) நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் பார்வையிடச் சென்றார்.

அப்போது மக்கள் காட்டுத் தீயால் அவதியுற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் சிட்னி துறைமுகத்தில் வாண வேடிக்கைகளை தனது சொகுசு இல்லத்தில் இருந்து பார்வையிட்டதாக குற்றம்சாட்டிய ஒருவர், அடுத்த முறை இங்கிருந்து நீங்கள் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது நண்பரே ஏனென்றால் நீங்கள் ஒரு முட்டாள் என்று கூறினார்.

பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு தீயணைப்பு வீரர் ஒருவர் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

அவுஸ்திரேலியா பிரதமரை... முட்டாள்  என திட்டிய நபர், எதிர்க் கட்சியை, சேர்ந்தவராக இருக்கலாம்.
அந்தத் தீயை, பிரதமரா.. சென்று அணைக்க வேண்டும்.  

இயற்கை அனர்த்தாலோ, யாரும் 🔥 "கிறில்"  🔥 பண்ணி சாப்பிட்டு விட்டு...  
நெருப்பை அணைக்காமலோ சென்றதற்காக... ஏற்பட்ட  அனர்த்தத்திற்காக.
பிரதமர், எப்படி பொறுப்பாளியாக முடியும்?
இதில் மக்களின்... விழிப்புணர்வும் அவசியம் 

அவுஸ்திரேலியா, கலிபோர்னியா, கிரீஸ்  போன்ற இடங்களில்...
காட்டுத் தீ.... ஒவ்வொரு வருடமும்,  வருவதாக, செய்திகளில் படிக்கின்றோம்.

மற்ற நாடுகளில் உள்ள மக்களைப்  போல்,
இவர்களால்... விழிப்புணர்வாக இருக்க முடியாதாம்.
அனால்... பிரதமரை, முட்டாள் என திட்டுவார்களாம்.
இது என்ன... நியாயம்.  

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியா பிரதமரை... முட்டாள்  என திட்டிய நபர், எதிர்க் கட்சியை, சேர்ந்தவராக இருக்கலாம்.
அந்தத் தீயை, பிரதமரா.. சென்று அணைக்க வேண்டும்.  

இராமாயணத்தில் தீ வைத்ததை போன்று ... இருக்கலாம் அல்லவா 😄

Image result for australia wildfires

https://time.com/5753584/bushfires-australia-catastrophic-fire-alert/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ampanai said:

இராமாயணத்தில் தீ வைத்ததை போன்று ... இருக்கலாம் அல்லவா 😄

Image result for australia wildfires

அட.... நாடே, பத்தி எரியுது. 🙄
எமது.. யாழ்.கள  அவுஸ்திரேலிய  உறவுகளான...
புத்தன், புங்கையூரான்,  ரஞ்சித், சுண்டல், உடையார், பிரபா சிதம்பரநாதன்... எல்லோரும்,
பாதிக்கப் படாமல், நலமாக... இருக்க, வேண்டும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருவிடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்.

முதலாவது, சிட்னியில் இடம்பெற்ற புதுவருட வான வேடிக்கை. இது பலராலும் விவாதிக்கப்பட்ட ஒருவிடயம். நாடே காட்டுத்தீயில் அமிழ்ந்திருக்கும் நிலையில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலும், ஏலவே இருக்கும் வெப்பமான காலநிலையை அதிகரிக்கும் வண்ணமும், முற்றான நெருப்புத் தடுத்தல்  (complete fire ban) நிலையிலும், இக்கேளிக்கை நிகழ்வுக்குச் செலவாகும் சுமார் ஆறு மில்லியன் டாலர்களை  தன்னார்வத் தீயணைப்பு படை வீரர்களுக்கு வழங்கக்கூடிய நிலையிருந்தும் எதற்காக இக்கேளிக்கை நிகழ்வினை நடத்த வேண்டும்  என்று பலரும் கேள்வி கேட்டிருந்தனர். 

ஆனால், இந்த கேளிக்கை நிகழ்வு இடம்பெறும் இடம் கடலில் அல்லது நீர் நிலையொன்றிற்கு மிக அருகில் இருப்பதால் இந்நிகழ்வினால் ஏற்படக்கூடிய தீயினை இலகுவாக அணைத்துவிடமுடியும் என்றும், இந்நிகழ்வினால் அன்றிரவு மட்டும் நியு சவுத் வேல்ஸ் அரசிற்கு வரவிருக்கும் சுமார் 130 மில்லியன் வருவாயில் ஒரு பகுதியை தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கி உதவிடமுடியும் என்றும், வருடம்தோறும் நடைபெறும் இந்த முக்கிய கேளிக்கை நிகழ்வினை தடையின்றித் தொடர்வதன் மூலம் சுற்றியெரியும் தீயினால் சோர்வடைந்திருக்கும் மக்களுக்கு ஓர் தற்காலிக ஆறுதலை வழங்கமுடியும் என்கிற காரணங்களை முன்வைத்தே நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

அடுத்ததாக ஆஸி பிரதமருக்கு தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த வரவேற்பு.

ஸ்கொட் மொறிஸன் அரசு பதவியேற்றது முதல் பல்வேறான செலவீனங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்திவருகிறது. அதிலொன்றுதான் Rural Fire Services  எனப்படும் நாட்டுப்புற தீயணைப்பு சேவைகளுக்கான வருடாந்த நிதியொதுக்கலில் இவர்கள் செய்த நிதிக்குறைப்பு. கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னர், இலையுதிர் காலத்தில் செய்யப்படும் ஆயத்தப்படுத்தல் நடவடிக்கையான Back burning ( காய்ந்துபோயிருக்கும் புற்களை சருகுகளை கட்டுப்பாடான வகையில் எரித்துவிடுவதன் மூலம் கோடைகாலத்தில் தீ பரவுவதைத் தடுக்கும் முறை இது) செய்வதற்கு நிதி போதாமையினால் தாம் ஆயத்த நடவடிக்கைகளை செய்ய முடியவில்லை என்று  நியுசவுத் வேல்ஸ் மாநில RFS கமிஷனர் வெளிப்படையாகவே மத்திய அரசை விமர்சித்துவருகிறார். 

மேலும் உலக வெப்பமாதல் நிகழ்வினை ஒரு முற்றான அபத்தம் என்றும், அதற்காக தாம் நடவடிக்கை எதையுமே செய்யப்போவதில்லையென்றும் தொடர்ந்தும்         விடாப்பிடியாக ஸ்கொட் மொறிஸன் அரசு கூறிவருவதும் மக்கள் இவர்மீது கொதிப்படைய மற்றொரு காரணம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவுஸ்த்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீ பற்றியெரிந்துகொண்டிருந்த நிலையில் ஸ்கொட் மொறிஸன் அவரது குடும்பத்துடன் ஹவாய் நாட்டிற்கு உல்லாசப் பயணம் ஒன்றினை மேற்கொண்டு சென்றது. மக்கள் தீயினால் அல்லற்பட்டு உயிர்களையும் உடமைகளையும் இழந்துகொண்டிருந்த நிலையில், நாட்டின் தலைவர் இவையெல்லாவற்றையும் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் தனதும் தன் குடும்பத்தினதும் உல்லாச விடுமுறை பற்றியே சிந்தித்துச் செயற்பட்ட விதம் அவரது ஆதரவாளர்கள் உற்பட பலரையும் சினம்கொள்ள வைத்திருந்தது. நாடு அவசரகால நிலைமையில் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தேவையான தலைமையைக் கொடுக்கால், தீயிலிருந்து தான் மட்டும் தப்பித்தால்ப் போதுமென்று ஹவாய்க் குளிரில் உல்லாசம் அனுபவித்ததை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆகவே, இவருக்கெதிரான விமர்சனத்தை வெறும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் கருத்தென்று ஒதுக்கிவிடுவது சரியல்ல.

குறிப்பு : ஸ்கொட் மொறிசன் பதவியில் இருக்கும் லிபரல் கொன்ஸர்வேட்டிவ் கட்சியினர் பழமைவாதிகள் என்பதுடன், அகதிகளுக்கு எதிரான கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடிப்பபவர்கள். குறிப்பாக இலங்கை அகதிகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசிற்கு ரோந்துக் கப்பல்கள் மற்றும்  பண உதவி என்று பல உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருபவர்கள். உலக வெப்பமாதலை பிடிவாதமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இக்கட்சி , தனக்கு முன்னிருந்த தொழிற்கட்சி கொண்டுவந்திருந்த உலக வெப்பமாதலைத் தடுக்கும் சிறப்புத் திடங்களையும் குப்பையில் தூக்கிக் கடாசியிருந்தது. முதலாளிகளின் கட்சியென்று பெயர்பெற்ற இக்கட்சி புதிய வரிகள், சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கல்களில் வெட்டு போன்றவற்றின் மூலம் திறைசேரியை நிரப்ப முயன்று வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 5:32 AM, தமிழ் சிறி said:

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள தென் கடற்கரைப் பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகி வருவதால் வெப்பம் அதிமாகும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது மன்னன் வயலின் வாசித்து கொண்டிருந்தானாம் என்பது போல அவுஸ்ரேலியா பிரதமரின் புது வருட வாண வேடிக்கைகள்,செயற்பாடுகள் உள்ளன.

On 1/1/2020 at 9:04 AM, தனிக்காட்டு ராஜா said:

நகரங்கள் தூரமாக இருக்கலாம் 

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி துறைமுகத்தில் தான் பிரமாண்டமான வாண வேடிக்கைகள் கொண்டாடபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

உலகில் அதிகளவு கரியமில வாயுவை வெளிவிடும் இல்லை உற்பத்தி செய்யும் நாடுகளில் அவுஸ் முன்னிலை வகிக்கின்றது. 

தைலமர மரங்களை (eucalyptus) அதிகம் கொண்ட அவுசில் அதன் இலைகள் இலகுவாக தீ பற்றி கொள்ளும் எனவும் கூறுகிறார்கள். இந்த தைல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதனை உறிஞ்சிவிடும் எனவும்  கூறுகிறார்கள்.   

அதேவேளை ஆயுதங்களை பல நவீன வகைகளில் உற்பத்தி செய்யும் நாடுகள் இந்த இயற்கை அன்னையின் சீற்றத்திற்கு எந்த தீர்வும் இல்லாது உள்ளார்கள்.  

அடிப்படையில் உலகத்தில் நான் உட்பட நான், எனது குடும்பம், எனது சமூகம் மற்றும் எனது நாடு பொருளாதார ரீதியில் வலுவாக இருந்தால் காணும், மற்றையவர்கள் பற்றிய கவலை இல்லை என்ற அணுகுமுறையும் உலக அரசியல் வாதிகள் தமது ஆளும் காலத்தில் இந்த பிரச்சனையை  தீர்க்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள், காரணம் அந்த தேவை மக்கள் மத்தியில் இருந்து வருவதும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

இங்கே இருவிடயங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்.

முதலாவது, சிட்னியில் இடம்பெற்ற புதுவருட வான வேடிக்கை. இது பலராலும் விவாதிக்கப்பட்ட ஒருவிடயம். நாடே காட்டுத்தீயில் அமிழ்ந்திருக்கும் நிலையில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலும், ஏலவே இருக்கும் வெப்பமான காலநிலையை அதிகரிக்கும் வண்ணமும், முற்றான நெருப்புத் தடுத்தல்  (complete fire ban) நிலையிலும், இக்கேளிக்கை நிகழ்வுக்குச் செலவாகும் சுமார் ஆறு மில்லியன் டாலர்களை  தன்னார்வத் தீயணைப்பு படை வீரர்களுக்கு வழங்கக்கூடிய நிலையிருந்தும் எதற்காக இக்கேளிக்கை நிகழ்வினை நடத்த வேண்டும்  என்று பலரும் கேள்வி கேட்டிருந்தனர். 

ஆனால், இந்த கேளிக்கை நிகழ்வு இடம்பெறும் இடம் கடலில் அல்லது நீர் நிலையொன்றிற்கு மிக அருகில் இருப்பதால் இந்நிகழ்வினால் ஏற்படக்கூடிய தீயினை இலகுவாக அணைத்துவிடமுடியும் என்றும், இந்நிகழ்வினால் அன்றிரவு மட்டும் நியு சவுத் வேல்ஸ் அரசிற்கு வரவிருக்கும் சுமார் 130 மில்லியன் வருவாயில் ஒரு பகுதியை தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கி உதவிடமுடியும் என்றும், வருடம்தோறும் நடைபெறும் இந்த முக்கிய கேளிக்கை நிகழ்வினை தடையின்றித் தொடர்வதன் மூலம் சுற்றியெரியும் தீயினால் சோர்வடைந்திருக்கும் மக்களுக்கு ஓர் தற்காலிக ஆறுதலை வழங்கமுடியும் என்கிற காரணங்களை முன்வைத்தே நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

அடுத்ததாக ஆஸி பிரதமருக்கு தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த வரவேற்பு.

ஸ்கொட் மொறிஸன் அரசு பதவியேற்றது முதல் பல்வேறான செலவீனங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்திவருகிறது. அதிலொன்றுதான் Rural Fire Services  எனப்படும் நாட்டுப்புற தீயணைப்பு சேவைகளுக்கான வருடாந்த நிதியொதுக்கலில் இவர்கள் செய்த நிதிக்குறைப்பு. கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னர், இலையுதிர் காலத்தில் செய்யப்படும் ஆயத்தப்படுத்தல் நடவடிக்கையான Back burning ( காய்ந்துபோயிருக்கும் புற்களை சருகுகளை கட்டுப்பாடான வகையில் எரித்துவிடுவதன் மூலம் கோடைகாலத்தில் தீ பரவுவதைத் தடுக்கும் முறை இது) செய்வதற்கு நிதி போதாமையினால் தாம் ஆயத்த நடவடிக்கைகளை செய்ய முடியவில்லை என்று  நியுசவுத் வேல்ஸ் மாநில RFS கமிஷனர் வெளிப்படையாகவே மத்திய அரசை விமர்சித்துவருகிறார். 

மேலும் உலக வெப்பமாதல் நிகழ்வினை ஒரு முற்றான அபத்தம் என்றும், அதற்காக தாம் நடவடிக்கை எதையுமே செய்யப்போவதில்லையென்றும் தொடர்ந்தும்         விடாப்பிடியாக ஸ்கொட் மொறிஸன் அரசு கூறிவருவதும் மக்கள் இவர்மீது கொதிப்படைய மற்றொரு காரணம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவுஸ்த்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீ பற்றியெரிந்துகொண்டிருந்த நிலையில் ஸ்கொட் மொறிஸன் அவரது குடும்பத்துடன் ஹவாய் நாட்டிற்கு உல்லாசப் பயணம் ஒன்றினை மேற்கொண்டு சென்றது. மக்கள் தீயினால் அல்லற்பட்டு உயிர்களையும் உடமைகளையும் இழந்துகொண்டிருந்த நிலையில், நாட்டின் தலைவர் இவையெல்லாவற்றையும் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் தனதும் தன் குடும்பத்தினதும் உல்லாச விடுமுறை பற்றியே சிந்தித்துச் செயற்பட்ட விதம் அவரது ஆதரவாளர்கள் உற்பட பலரையும் சினம்கொள்ள வைத்திருந்தது. நாடு அவசரகால நிலைமையில் தவித்துக்கொண்டிருக்க அதற்குத் தேவையான தலைமையைக் கொடுக்கால், தீயிலிருந்து தான் மட்டும் தப்பித்தால்ப் போதுமென்று ஹவாய்க் குளிரில் உல்லாசம் அனுபவித்ததை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆகவே, இவருக்கெதிரான விமர்சனத்தை வெறும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் கருத்தென்று ஒதுக்கிவிடுவது சரியல்ல.

குறிப்பு : ஸ்கொட் மொறிசன் பதவியில் இருக்கும் லிபரல் கொன்ஸர்வேட்டிவ் கட்சியினர் பழமைவாதிகள் என்பதுடன், அகதிகளுக்கு எதிரான கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடிப்பபவர்கள். குறிப்பாக இலங்கை அகதிகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசிற்கு ரோந்துக் கப்பல்கள் மற்றும்  பண உதவி என்று பல உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருபவர்கள். உலக வெப்பமாதலை பிடிவாதமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இக்கட்சி , தனக்கு முன்னிருந்த தொழிற்கட்சி கொண்டுவந்திருந்த உலக வெப்பமாதலைத் தடுக்கும் சிறப்புத் திடங்களையும் குப்பையில் தூக்கிக் கடாசியிருந்தது. முதலாளிகளின் கட்சியென்று பெயர்பெற்ற இக்கட்சி புதிய வரிகள், சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கல்களில் வெட்டு போன்றவற்றின் மூலம் திறைசேரியை நிரப்ப முயன்று வருகிறது.

எதற்காக அவுஸ் மக்கள் அவரை பிரதமராய் தெரிவு செய்தார்கள்?

Link to comment
Share on other sites

1213618471767904256``தீயால் அழிந்துவரும் பாட்லோவ் நகரம் தற்போது இருக்கும் நிலையை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அங்கு நான் பார்த்த காட்சி இதயத்தை நொறுக்கும் விதமாக இருந்தது. அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்வதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், அங்கு நடப்பதைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் இந்தச் சம்பவத்தை உலகம் நிச்சயம் அறிய வேண்டும்” என வீடியோவை பதிவிட்டவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா காட்டுத்தீ தொடர்பாகவும் கோலாக்கள் தொடர்பாகவும் வெளியான வீடியோ, புகைப்படங்கள் போன்றவை மொத்த உலகத்தையும் உறையவைத்துள்ளன.

https://twitter.com/ABCcameramatt/status/1213618471767904256

பாட்லோவ் (Batlow) ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. நகரத்தையும் பாட்லோவையும் இணைக்கும் ஒரே ஆதாரமாக இருக்கும் நெடுஞ்சாலை வழியாகப் பயணித்த ஆஸ்திரேலியா ஊடகத்தைச் சேர்ந்த ஒருவரின் கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் வானம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டத்துடன் உள்ளது, கீழே தரையில் நூற்றுக்கணக்கான கறுப்பு நிற கருகிய உடல்கள் கிடக்கின்றன. அவை அனைத்தும் கங்காரு, கோலா கரடிகள் மற்றும் செம்மறி ஆடுகளின் உடல்கள். காட்டுத் தீயின் கோரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் இவை சாலை வரை வந்து உயிரிழந்துள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 9:23 PM, தமிழ் சிறி said:

அட.... நாடே, பத்தி எரியுது. 🙄
எமது.. யாழ்.கள  அவுஸ்திரேலிய  உறவுகளான...
புத்தன், புங்கையூரான்,  ரஞ்சித், சுண்டல், உடையார், பிரபா சிதம்பரநாதன்... எல்லோரும்,
பாதிக்கப் படாமல், நலமாக... இருக்க, வேண்டும்.    

காடு/ வீடு எரியிறதெல்லாம் அங்கை நோர்மலாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 7:23 AM, தமிழ் சிறி said:

அட.... நாடே, பத்தி எரியுது. 🙄
எமது.. யாழ்.கள  அவுஸ்திரேலிய  உறவுகளான...
புத்தன், புங்கையூரான்,  ரஞ்சித், சுண்டல், உடையார், பிரபா சிதம்பரநாதன்... எல்லோரும்,
பாதிக்கப் படாமல், நலமாக... இருக்க, வேண்டும்.    

நன்றி......தமிழ் சிறி.....!

நெருப்பினாலும்.....நீரினாலும்...ஏற்படும் அனர்த்தங்கள்..இங்கு ஒவ்வொரு வருடமும் நிகழ்வது சாதாரணமானது எனினும்....இந்த வருடம் போன்று முன்பு ஒரு போதும் இருந்ததில்லை என்றே இங்கு பலர் கூறுகின்றார்கள்!

இந்த அழிவுகளுக்கு முகம் கொடுத்து....ஐம்பதினாயிரம் வருடங்களுக்கும் மேலாக அபோரிஜின மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்..! அவர்கள் கருத்தின் படி...நிலம் மனிதனுக்குச் சொந்தமானது இல்லை.....மனிதன் தான் நிலத்துக்குச் சொந்தமானவன்...! அவர்கள் நிரந்தர வீடுகளில் வசிப்பதில்லை..! வேலிகள் போட்டு எல்லைக் கோடுகள் வரைவதில்லை!

அவர்களை முட்டாள்கள் எனக் கூறிய அதி புத்தி சாலிகள் அழுது கொண்டிருக்கையில்......ஏதோ ஒரு மரத்தடியில்...ஒற்றைக் காலில் நின்று சிரித்துக் கொண்டிருப்பார்கள்..!

கொதித்த கொடும் வெயிலில்....பார்த்துக் கொண்டிருக்கும் போதே....மரத்தின் இலைகள் கருகிப் போவதைக் கண்களினூடகக் காண நேர்ந்தது..!எல்லாமே ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள். நிகழ்ந்து முடிந்து விட்டது...!

இயற்கை...சினக்கும் போது மனிதனால்....சிலநிமிடங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன்...!

கதிரவனுக்கு நன்றி  கூறத் தான் தமிழன் பொங்கலிட்டான் என்று இது வரை எண்ணியிருந்த நான்.....பயத்தினால் தான்..அவனுக்குப் பொங்கலிட்டான் என்று  இப்போது கருதுகிறேன்...!

குளிரெண்டால்....குறுகிப் போயாவது படுத்து உறங்கலாம் ! ஆனால் வெயிலெண்டால்...கோவணத்துண்டு கூடக் கட்ட முடியாது..! 

தாங்கள் வளர்த்த  ஆடு...மாடு....பன்றி...குதிரை..கோழி என அனத்துக்குமே....தங்கள் கைகளாலேயே மருந்து பருக்கிக் கொலை செய்யும்...விவசாயிகளின் நிலை....எவருக்குமே....இனி மேல் ...வரக்கூடாது என்பது தான்...இப்போதைக்கு எனது பிரார்த்தனை எல்லாமே!  

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பற்றி எரியும் நெருப்பில் சிக்கி கோடிக்கணக்கான உயிரினங்கள் பலியாகி உள்ள நிலையில் மனிதர்களில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்களுடன் ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நெருப்பில் சிக்கியும், மூச்சுத் திணறியும், நீர் கிடைக்காமலும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியின் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான கங்காருகளும், டிங்கோ எனப்படும் காட்டு நாய்களும், மான்கள், ஆடுகள் உயிரிழந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்த ஆட்கள் இல்லாததால் தொற்று நோய் பரவும் ஏற்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/95614/ஆஸ்திரேலியாவில்-காட்டுத்தீயில்-சிக்கி-உயிரிழந்தோர்எண்ணிக்கை-24-ஆக-உயர்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 7:17 AM, ரதி said:

எதற்காக அவுஸ் மக்கள் அவரை பிரதமராய் தெரிவு செய்தார்கள்?

சிஸ்டம் சரியில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

சிஸ்டம் சரியில்லை

தேர்தல்  அண்மிக்கும் நேரம் வரும் பொழுது  மக்கள் வரிப்பணத்தை உபயோகித்தே...விளம்பரங்களை  அதிகம் செய்வார்கள்....!

எங்களால்  தான் எமது தேசத்தின் எல்ல்லைகளைக் காக்க முடியும்.....!

அவுஸ்திரேலிய பொருளாதாரத்தை ...லிபரல் கட்சியால் மட்டுமே...கட்டிக்காக்க முடியும்..!

லேபர் வந்தால்....படகுகளில் வருபவர்களாலேயே...அவுஸ்திரேலியா நிரம்பி விடும்...!

பயங்கர வாதிகளின் தலைமைக் காரியாலயமாக அவுஸ் மாறி விடும்..!

லேபர் வந்தால்....வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கும்....நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும்...!

இவ்வாறு செய்து மக்களை ஒரு பயப்பிராந்தியில்...வைத்திருப்பார்கள்..!  

அதனால்....மக்களும் வேறு தெரிவின்றி...இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்..!

காட்டுத் தீயினால்...நாடு எரிந்து நாசமாகிக் கொண்டிருந்த போது....விடுமுறையிலிருந்த பிரதம மந்தி ...நாடு திரும்பியதும் .....சில செயல் பாடுகளை...அறிவித்த...அடுத்த நிமிடமே....பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து...தொலைக்காட்சி விளம்பரமும்....செய்த  செயல்...மக்களுக்கு  மிகவும் கடுப்பேத்தியுள்ளது..!

எனினும்...வழக்கம் போல....இன்னல் முதலில் முடியட்டும் என்று  காத்திருக்கின்றார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and people walking

Image may contain: one or more people, outdoor and nature

Image may contain: plant, outdoor and nature

Image may contain: people standing and outdoor

Image may contain: outdoor and nature

Image may contain: fire and outdoor

படங்களைப் பார்க்க... மனது கனக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

தேர்தல்  அண்மிக்கும் நேரம் வரும் பொழுது  மக்கள் வரிப்பணத்தை உபயோகித்தே...விளம்பரங்களை  அதிகம் செய்வார்கள்....!

எங்களால்  தான் எமது தேசத்தின் எல்ல்லைகளைக் காக்க முடியும்.....!

அவுஸ்திரேலிய பொருளாதாரத்தை ...லிபரல் கட்சியால் மட்டுமே...கட்டிக்காக்க முடியும்..!

லேபர் வந்தால்....படகுகளில் வருபவர்களாலேயே...அவுஸ்திரேலியா நிரம்பி விடும்...!

பயங்கர வாதிகளின் தலைமைக் காரியாலயமாக அவுஸ் மாறி விடும்..!

லேபர் வந்தால்....வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கும்....நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும்...!

இவ்வாறு செய்து மக்களை ஒரு பயப்பிராந்தியில்...வைத்திருப்பார்கள்..!  

அதனால்....மக்களும் வேறு தெரிவின்றி...இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்..!

காட்டுத் தீயினால்...நாடு எரிந்து நாசமாகிக் கொண்டிருந்த போது....விடுமுறையிலிருந்த பிரதம மந்தி ...நாடு திரும்பியதும் .....சில செயல் பாடுகளை...அறிவித்த...அடுத்த நிமிடமே....பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து...தொலைக்காட்சி விளம்பரமும்....செய்த  செயல்...மக்களுக்கு  மிகவும் கடுப்பேத்தியுள்ளது..!

எனினும்...வழக்கம் போல....இன்னல் முதலில் முடியட்டும் என்று  காத்திருக்கின்றார்கள்..!

இதற்கு காரணம் இந்த மக்கள்தான் எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுண பிழையாக இருக்க வேணும் மிகவும் துவேசம் உள்ள மக்கள் அதனை இந்த கட்சி இலகுவாகப்பயன்படுத்துகிறது , இலங்கையில் நில உச்சவரம்பு சட்டம் மூலம் தமிழ் மக்களது நிலங்களை  பறித்து சிங்களவர்களுக்கு கொடுத்தது போல எங்கோ இருந்து வந்து 50000 ஆண்டுகளாக இருந்த மக்களின் நிலத்தில் கொடியேற்றிவிட்டு உரிமை கொண்ட்டாடுகிறார்கள் , சொந்த நிலத்தில் அந்த மக்களை சிறுபான்மையினராக்க ஆரம்பத்தில் வெள்ளையினத்தவர்களை மட்டும் குடியேற்றினார்கள் , இலஙகையில் மே 17 சிறப்பு நாளாகக்கொண்டாடுவது போல தமது ஆக்கிரமிப்பு நாளான தை 26 இனை அவுஸ்திரேலிய நாளாகக்கொண்டாடுகிறார்கள்.

https://www.smithsonianmag.com/history/how-indigenous-australians-are-still-fighting-their-lands-25-years-after-landmark-court-case-180963893/

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா - புதர்த் தீ நிவாரண உதவிக்காக ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

ஆஸ்திரேலியாவில் புதர்த் தீ நிவாரண உதவிக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

அந்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதர்த் தீ பற்றி கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதர்த் தீயால் ஏற்பட்ட பொருளாதார சேதம் குறித்து இதுவரை மதிப்பிடவில்லை என்றும் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் தேசிய புதர்த்தீ மீட்பு நிறுவனம் மூலம் 2 ஆண்டுகளில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.

https://www.polimernews.com/dnews/95689/ஆஸ்திரேலியா---புதர்த்-தீநிவாரண-உதவிக்காக-ரூ.14-ஆயிரம்கோடி-நிதி-ஒதுக்கீடு

ஈவு, இரக்கமில்லா காட்டுத்தீ.! கருகும் உயிரினங்கள்.. "Pray for Australia"

ஆஸ்திரேலியாவில் 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டு தீ, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ ஓய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்ற கோரிக்கையுடன் "Pray for Australia" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

கபளீகரம் செய்யும் காட்டுத்தீ:

ஆஸ்திரேலிய மாகாணங்களான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ  இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயில் இருந்தது தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை துறந்து வேறு வேறு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதுவரை சுமார் 60,000 சதுர கி.மீ அளவிலான வனங்கள் மற்றும் பூங்காக்களை காட்டு தீ கபளீகரம் செய்துள்ளது.

கருகும் உயிர்கள்:

3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீயில் சிக்கிப் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் இ ஆஸ்திரேலிய நாட்டில் மட்டுமே உள்ள பல தனித்துவமான காட்டு விலங்குகள் கருகி மடிந்துள்ளன. காட்டு தீயின் கோரப்பசிக்கு மனிதர்களும் தப்பவில்லை. இதுவரை சுமார் 24 பேர் வரை தீயில் கருகி பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

எகிறும் வெப்பம்இ பாதிக்கும் சுற்றுசூழல்:

பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக தென் கிழக்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் வெப்ப நிலை 104 டிகிரியை கடந்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்து வரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் அடர் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. சுற்றுப்புற சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் வரவைக்கும் காட்சிகள்:

கொடும் காட்டு தீயில் சிக்கி பலியாகிவிடாமல் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கங்காருஇ கோலா கரடிகள் உள்ளிட்ட பல விலங்குகளின் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவரின் கண்களில் கண்ணீர் பெருக வைக்கிறது. காட்டு தீயின் தணலில் சிக்கி தவித்து வெளியேற இயலாமல்இ தீ-க்கு உணவாகியுள்ளன பல லட்சக்கணக்கான உயிரினங்கள்.

காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி டீயவடழற . இங்கிருக்கும் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒருவரின் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் காண்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில் அடர்ந்த புகைமூட்டத்துடன் கூடிய வானம்இ கீழே தரையிலோ நூற்றுக்கணக்கான கருகிய உடல்கள். கங்காருஇ கோலா கரடிஇ செம்மறி ஆடுகள் காட்டு தீயிலிருந்து தப்பிக்க முயன்று சாலை வரை வந்து உயிரிழந்துள்ளன.

திணறும் அரசு:

தொடர்ந்து வறண்ட காணப்படும் வானிலை மற்றும் அதிகரிக்கும் காற்றின் வேகம் உள்ளிட்ட முக்கிய காரணிகளால்
மளமளவென பற்றி கொண்டே செல்லும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது ஆஸ்திரேலிய அரசு.

தொற்று நோய் அபாயம்:

காட்டு தீயில் கருகியும்இ தீ காரணமாக ஏற்பட்டுள்ள கடும் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியும்இ நீர் கிடைக்காமலும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான கங்காருகளும்இ காட்டு நாய்கள் இ மான்கள்இ செம்மறி ஆடுகள் உள்ளிட்ட பல பலியாகி கிடக்கின்றன. உயிரிழந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த ஆட்கள் இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
Pray for Australia:

காட்டு தீ கோரத்தாண்டவமாடும் நிலையில் உலக மக்கள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் என அனைவரின் கவனமும் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியுள்ளது. அதுவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மக்களை வெகுவாக பாதித்துள்ளன. சுமார் அரை பில்லியன் விலங்குகள் கருகி உயிரிழந்துள்ள நிலையில் ட்விட்டரில் #prayforaustralia என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கி மனிதர்கள், விலங்குகள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் பலியாகி வரும் நிலையில் நாமும் ஆஸ்திரேலியாவிற்காகவும், காட்டு தீ கட்டுக்குள் வர வேண்டும் என்றும் பிரார்த்திப்போம். 

https://www.polimernews.com/dnews/95700/ஈவு,-இரக்கமில்லாகாட்டுத்தீ.!-கருகும்உயிரினங்கள்..-"Pray-for-Australia"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.