• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்

Recommended Posts

Image may contain: outdoor and nature

அவுஸ்திரேலிய சுதேச பறவைகள், சில காட்டுத்தீயை பரப்புவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். கழுகு இனத்தை சேர்ந்த Whistling Kites, Black Kites மற்றும் Brown Falcons ஆகிய பறவைகளே... இதை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

எரியும் கொள்ளியை... பாதுகாப்பாக தூக்கிச்சென்று,  வெகு தூரத்தில் உள்ள புல்வெளியில் போட்டு அதன் காரணமாக வெளியில் ஓடி வரும்,  எலி போன்ற பிராணிகளை இவை வேட்டையாடுவது விஞ்ஞானிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இப்பறவைகள் காட்டுத்தீயை அணைப்பதற்கு பெரும் இடையூறாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. 

Kumaravelu Ganesan

Share this post


Link to post
Share on other sites

https://www.dailymail.co.uk/news/article-7843527/The-native-Australian-bird-making-bushfire-crisis-worse-spreading-flames.html

இந்த டெய்லி மெயில்  வர வர மித்திரன் பேப்பர் போல் கதை விட தொடன்கிட்டான் .

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text

 

பைரோகுமுலோனிம்பஸ் "இடிமுழக்க மழை" (pyrocumulonimbus thunderstorm) என்றால் என்ன?

வழக்கமான இடியுடன் கூடிய மழையைப் போலவே... காற்று மற்றும் வெப்ப நிரலால் ஏற்படும் மேற் காவுகை காற்றின் மூலம் பைரோகுமுலோனிம்பஸ் இடிமுழக்க மழை உருவாகிறது. 
வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவு காரணமாக புகை ஆபத்தான புயல் மேகங்களாக மாறுகிறது. 
இது நீர் சொட்டுகளுக்கு பதிலாக வானத்திலிருந்து கீழே விழும் நெருப்புத்தணல்களை கொண்டுவருகிறது.

நெருப்பின் வெப்பத்தால் உருவாக்கப்பட்ட மேற்காவுகை காற்றானது நீர் மற்றும் சாம்பலை வானத்தில் உறிஞ்சும்போது இந்த மேகங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இந்த மேகங்கள் மேலும் உயரும்போது, அது குளிராகிறது. இதன் விளைவாக, ஒரு "தீ மேகம்" உருவாகி, வழக்கமான... இடிமுழக்க மழை போன்று நெருப்பு மழை பெய்யும்.
இந்த பைரோகுமுலோனிம்பஸ் அடிக்கடி மின்னலை உருவாக்குகிறது. 
இது ஒரு பெரிய சிக்கலை விளைவிக்கிறது: இது வீசும்போது, மின்னலால் உருவாகும் மின்சாரம் புதிய நெருப்பை உருவாக்கி, காட்டுத்தீயை அணைக்கமுடியாதபடி மேலும் பரப்புகிறது.

Kumaravelu Ganesan

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, vasee said:

இதற்கு காரணம் இந்த மக்கள்தான் எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுண பிழையாக இருக்க வேணும் மிகவும் துவேசம் உள்ள மக்கள் அதனை இந்த கட்சி இலகுவாகப்பயன்படுத்துகிறது , இலங்கையில் நில உச்சவரம்பு சட்டம் மூலம் தமிழ் மக்களது நிலங்களை  பறித்து சிங்களவர்களுக்கு கொடுத்தது போல எங்கோ இருந்து வந்து 50000 ஆண்டுகளாக இருந்த மக்களின் நிலத்தில் கொடியேற்றிவிட்டு உரிமை கொண்ட்டாடுகிறார்கள் , சொந்த நிலத்தில் அந்த மக்களை சிறுபான்மையினராக்க ஆரம்பத்தில் வெள்ளையினத்தவர்களை மட்டும் குடியேற்றினார்கள் , இலஙகையில் மே 17 சிறப்பு நாளாகக்கொண்டாடுவது போல தமது ஆக்கிரமிப்பு நாளான தை 26 இனை அவுஸ்திரேலிய நாளாகக்கொண்டாடுகிறார்கள்.

https://www.smithsonianmag.com/history/how-indigenous-australians-are-still-fighting-their-lands-25-years-after-landmark-court-case-180963893/

இதில் மனிதர்களை விட  விலங்குகளும்,பறவைகளும் தான் பாவம் 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

இதில் மனிதர்களை விட  விலங்குகளும்,பறவைகளும் தான் பாவம் 

உண்மைதான் மண்ணிற்கு சொந்தமான விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும்தான் பாவப்பட்டவர்கள் 

Share this post


Link to post
Share on other sites

படங்களையும்,செய்திகளையும் பார்க்கவே மனம் பதறுகின்றது. இயற்கையின் ஒரு நிமிட சீற்றத்தையே மனிதனால் உயிரினங்களால்  தாங்க முடியாதுள்ளது .....இதில் என்ன வீராப்பு வேண்டிக்கிடக்கு.......! 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

பாவம் வாயில்லா விலங்குகள். புத்தனின் சத்தத்தையும் காணவில்லை. பாதுகாப்பாக இருக்கிறீர்கள் தானே அனைத்து ஆஸ்திரேலிய உறவுகளும்.

Share this post


Link to post
Share on other sites
On 1/4/2020 at 7:23 AM, தமிழ் சிறி said:

அட.... நாடே, பத்தி எரியுது. 🙄
எமது.. யாழ்.கள  அவுஸ்திரேலிய  உறவுகளான...
புத்தன், புங்கையூரான்,  ரஞ்சித், சுண்டல், உடையார், பிரபா சிதம்பரநாதன்... எல்லோரும்,
பாதிக்கப் படாமல், நலமாக... இருக்க, வேண்டும்.    

மிகவும் நன்றி சிறி அண்ணா..

இங்கே இது சாதாரணம் என்றால் கூட இம்முறை பாதிப்பு அதிகமே.

சில காட்டு தீ, ஐந்தறிவு படைத்த மனித விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டவையாகும். விழிப்புணர்வு நடவடிக்கைகள், முன்னைய பாதிப்பில் இருந்த கற்ற பாடம் எதுவுமே இங்கே பயனளிக்கவில்லை என்பதே கவலையான விடயம்

On 1/7/2020 at 9:53 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாவம் வாயில்லா விலங்குகள். புத்தனின் சத்தத்தையும் காணவில்லை. பாதுகாப்பாக இருக்கிறீர்கள் தானே அனைத்து ஆஸ்திரேலிய உறவுகளும்.

மிகவும் நன்றி சுமோ அக்கா..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this