Jump to content

சபதம் ஏற்றால் தானே அது புத்தாண்டு.! உற்சாகமாய் அடியெடுத்து வைப்போம்


Recommended Posts

இளைஞர்கள், வாலிபர்கள், நடுத்தர வயதினர் என அவரவருக்கு ஏற்ப புத்தாண்டு சபதங்கள் வேண்டுமானாலும் மாறுமே தவிர, சபதம் ஏற்பதை பெரும்பாலும் மறைத்து, பொது வெளியிலோ அல்லது நண்பர்களிடமோ சொல்லாதவர்கள் கூட எதாவது ஒரு தீர்மானம் மனதளவில் செய்து கொண்டிருப்பீர்களே இந்நேரம்.!

 

புகையும்.. தண்ணீரும்:

பெரும்பாலும் பணத்தை புகையும்(சிகரெட்), தண்ணீருமாய்(மது) செலவழிபவர்களே புத்தாண்டு சபதம் என்றாலே நம் கண் முன் வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் சபதம் அலாதியானது தான். இனி அப்பழக்கத்தை சிறிது சிறிதாக அவர்கள் குறைக்க எடுக்கும் ஆண்டாண்டு காலமான சபதங்கள், காற்றில் கரைந்து அண்டவெளி எங்கும் பரவி உள்ளது. கண்டிப்பாக மது மற்றும் புகை பழக்கத்தை குறைக்க எடுக்கும் சபதம் உண்மையில் மிக நல்லதே. அப்பழக்கத்தில் உள்ளவருக்கு மட்டும் அல்ல, அவரை சார்ந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்குமே இது பெரிய மகிழ்ச்சியை அளிக்க கூடியது.

மேற்கண்ட இருபழக்கங்களை கொண்டவர்கள் சுயநலமாக யோசித்தாலே போதும். அல்லது ஒரு வேளை உணவிற்கு கஷ்டப்படுபவர்கள் இருக்கையில், சர்வசாதாரணமாக பணத்தை கொட்டி உடல்நலக்கேட்டை வாங்குகிறோமே என்ற உணர்வு மேலோங்கினால், இப்பழக்கங்களை அரிதாக்கி கொள்ளலாம்.

https://www.polimernews.com/dnews/95043/சபதம்-ஏற்றால்-தானே-அதுபுத்தாண்டு.!-உற்சாகமாய்அடியெடுத்து-வைப்போம்

 

வெல்கம் ஜிம் பாய்ஸ்:

வந்துருச்சு ல நியூஇயர்.. எடுடா வண்டிய.. விடுடா ஜிம்முக்கு வகையை சேர்ந்தவர்களே உங்க புத்தாண்டு சபதம் எவ்வளவு உன்னதமானது தெரியுமா? சுவர் இன்றி சித்திரம் இல்லை. உங்க தன்னம்பிக்கையை வளர்க்கும் மிக பெரிய ஆயுதம் உடல்நலன். நீங்கள் சாதரணமாக இருப்பதை விட, உற்சாகமாக இருக்கும் போது பெரிய பெரிய விஷயங்களை கூட பதற்றமில்லாமல் செய்வீர்கள். உடலும் உள்ளமும் உற்சாகமாக இருக்க உடல் வலு என்பது மிகமுக்கியம். இயந்திர வாழ்க்கையில் நினைத்தால் கூட ஜிம்மிற்கு வழக்கமாக செல்ல நேரம் இல்லாதது ஒரு பக்கம், சோம்பேறித்தனம் மறுபக்கம் என அல்லாடுவதை எளிய உடற்பயிற்சிகள் மூலமே தவிர்க்கலாம்.

காலையில் வழக்கமாக எழும் நேரத்தை விட ஒரு அரை மணி நேரம் முன்பாக எழுந்து, உங்கள் உடல் நலனை மேம்படுத்தும் எளிய பயிற்சிகள், மற்றும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றுங்கள். நீங்க புத்துணர்ச்சியாக இருந்தால், உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும்.

 

 

அரட்டை அடிங்க:

அரட்டை அடிப்பது எல்லாம் ஒரு சபதமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அலுவலகத்தில், வெளியிடங்களில் என நண்பர்களுடன் அரட்டை அடித்து தள்ளும் நாம், வீட்டில் உள்ளவர்களுடன் அது மாதிரி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக செலவிடுகிறோம் என யோசித்தால் அந்த நேரம் மிக குறைவே என்பதை உணர முடியும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பின், அனைவரும் ஒரு சேர உட்கார்ந்து சாப்பிட்டு, மனம் விட்டு பேசும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளலாம்.

 

கூடவே இருக்கும் எதிரியை கட்டுப்படுத்துங்க:

நாம சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காது, வாய் சும்மா இருந்தாலும் நாம சும்மா இருக்க மாட்டோம். இதுதானே உலக வழக்கம். கண்டிப்பாக வெளியே நாம் பல எதிரிகளை சம்பாதிக்க, கூடவே இருக்கும் நாக்கை கட்டுப்படுத்தாததும் காரணம். வார்த்தைகளை அளவாக பேசினால் நமக்கு வரும் பாதி பிரச்சனைகள் குறையும்.

நாம் பழகும் ஒரு ஒரு மனிதர்களின் இயல்பையும் நம்மால் மாற்ற முடியாது. ஆனால் அவர்களுடன் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் மோதல்களை நாம் நினைத்தால் தவிர்க்கலாம். நாம் பேசுவது சரியாக இருந்தாலும், எதிர்தரப்பு நான் பேசுவது தான் சரி என கூறும். அப்போது மேலும் விவாதிக்காமல் நாக்கை கட்டுப்படுத்தி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள். மல்லுக்கட்டி நிற்காமல் விலகி செல்வதால் நமக்கு நேரமும், ஆற்றலும் மிச்சமாகும்.

செலவும், சேமிப்பும்:

தேவையற்ற செலவை குறைத்து, சேமிப்பை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்களுக்கு மட்டுமே பணத்தை தாராளமாக செலவு செய்வது, அத்தியாவசியமில்லாத பொருட்கள் வாங்க காசை வாரி இறைக்க போவதில்லை என்ற சபதத்தை செயல்படுத்துங்கள். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டு, புத்தாண்டில் வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

மனதில் உறுதி வேண்டும்... கனவு மெய்ப்பட வேண்டும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபதம் என்றில்லை. இந்த ஆண்டு இந்த திட்டத்தை நிறைவு செய்ய எல்லா வகையிலும் முயற்சி செய்வேன்.. என்று செயற்படுவது அவசியம்.

கடந்த ஆண்டில்.. சில திட்டங்களை செய்து முடிக்கனும் என்ற உறுதிப்பாட்டோடு.. செயற்பட்டு செய்து முடித்த திருப்தி.. இந்த ஆண்டுக்கான செயற்திட்டங்களை தீட்டவும் செயற்படுத்த முயற்சிக்கவும் தெம்பாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎1‎/‎2020 at 12:41 PM, nedukkalapoovan said:

சபதம் என்றில்லை. இந்த ஆண்டு இந்த திட்டத்தை நிறைவு செய்ய எல்லா வகையிலும் முயற்சி செய்வேன்.. என்று செயற்படுவது அவசியம்.

கடந்த ஆண்டில்.. சில திட்டங்களை செய்து முடிக்கனும் என்ற உறுதிப்பாட்டோடு.. செயற்பட்டு செய்து முடித்த திருப்தி.. இந்த ஆண்டுக்கான செயற்திட்டங்களை தீட்டவும் செயற்படுத்த முயற்சிக்கவும் தெம்பாக இருக்கிறது. 

உங்கட ரிசேஜ் எல்லாம் எப்படி போகுது?  
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.