Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இயற்கையில் இதுவரை கண்டிராத புதிய வகை கனிமம் கண்டுபிடிப்பு


Recommended Posts

விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=552943

 

The Wedderburn meteorite contains edscottite, which occurs in iron smelting. But it has never occurred in nature until now, when researchers sliced the meteorite open and found it hidden there.

 

It might have formed in space

Researchers Chi Ma of Caltech and Alan Rubin at UCLA examined a slab of the meteorite and were surprised to find edscottite under an electron microscope.
 
Just how it formed is still unclear. Geoffrey Bonning, a planetary scientist at the Australian National University who was not involved with the study, speculated to The Age that it was blasted out of the core of another planet.
 
The hypothetical planet, he said, formed when asteroids clumped into one big planet. The planet heated up during its formation, and hot metal dripped into its core.
 
"This meteorite had an abundance of carbon in it. And as it slowly cooled down, the iron and carbon came together and formed this mineral," Mills said.
Eventually, the planet might've been struck by another astronomical body and destroyed, flinging the debris across the solar system.
 
The debris, Bonning posited, became the Wedderburn meteorite. The edscottite might've been created when all that metal heated up in the former planet.
 
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.
  • கோசன் இது தாரேன்று தெரிகிறது வாப்பா.   ஐசே கோசன் நாங்கள் 1960 ‍, 1970 களில் படிக்க சுட்டி வந்தம் வா. எங்களை உட்டுடிங்கள்.. எந்த கொட‌கரீல சேர்ப்பிர்கள்?
  • உங்கள் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விடைகள் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களா இல்லை இந்தியர்களா என்றால் இரட்டை நிலைதான். அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களா இல்லை தமிழர்களா என்றால் அதுவும் இரட்டை நிலைப்பாடுதான். இரண்டு இடத்திலும் தமிழர்கள் என்ற வரையறுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்குள் ஏக மக்களும் வந்திருந்தால் தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்கும் அதுபோல் ஈழமும் தனிநாடாக இருந்திருக்கும். ஒரு தரப்பு மக்களிடம் இருக்கும் இனம் சார்ந்த உணர்வை முன்வைத்து இவற்றை தீர்மானிக்கவும் முடியாது. ஏக மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வாதரா உறவுகள் இந்திய இலங்கை மத்திய அதிகார மையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை பொறுத்துதான் இவற்றுக்கான பதில்கள் அமையும். ஒரு உதராணத்திற்கு ஈழப்போராட்ட தொடக்க காலத்தில் இருந்து முடியும் வரை வடகிழக்கில் இருந்த பள்ளிகள் ஆசிரியர்கள் என்னும் பலதரப்பட்ட அரச உத்தியோகத்வர்கள் இலங்கை அரச பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டு வழ்ந்தார்கள். மாணவர்கள் பலர் போராடி மடிந்தார்கள். போராட்டம் முடிந்த பின் அரசின் பொன்சன் பணத்தில் தொடர்ந்து வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் போரடி மடிந்தவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் ஒரே பெறுமதியாக இருக்காது.  சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான்.   
  • ஹார்ட் அட்டாக் போல உணரச்செய்யும் ஆங்சைட்டி அட்டாக்... யாருக்கு, எப்போது, ஏன் ஏற்படுகிறது? மா.அருந்ததி Anxiety ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது ஆபத்து குறித்து அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிந்தனை ஆங்சைட்டி அட்டாக்காக மாற வாய்ப்புள்ளது. கோபம், பயம், வெறுப்பு, பதற்றம் போன்ற உணர்வுகள் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடியவையே. சில நேரங்களில் இவை ஓவர் லோடு ஆகும்போது நமக்கு ஒருவித படபடப்பும் மயக்கமும் ஏற்படலாம். சிலருக்கு நெஞ்சுவலியும் ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறிகளை இதய நோய்க்கான எச்சரிக்கையாக நினைத்து இதய பரிசோதனைக்காக நாடிச் செல்வோர் பலர்.   Anxiety attack ஆனால், இந்த அறிகுறிகளுக்கும், இதய நோய்களுக்கும் தொடர்பில்லை. இவை மனஅழுத்தத்தின் உச்சநிலையான `ஆங்சைட்டி அட்டாக்'காக இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். சமீபத்தில் வெளியான `சூரரைப் போற்று' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் அதீத கோபத்துக்கோ, பயத்துக்கோ உள்ளாகும்போது தன்னிலை இழப்பதைக் காட்டியிருப்பார்கள். தன்னிலை மறந்த இந்தப் பதற்றம்தான் `ஆங்சைட்டி அட்டாக்'.     ஆங்சைட்டி அட்டாக் யாருக்கு, எப்போது, எதனால் ஏற்படுகிறது... என்ற கேள்விகளோடு உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவியை அணுகினோம்.   ஆங்சைட்டி அட்டாக் என்றால் என்ன? ``ஒருவர் அதிகமாக அச்சமுற்றாலோ, ஆவேசப்பட்டாலோ தன்னிலை இழந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டே மயங்கி விழுவதையும், பேச்சு மூச்சின்றி கிடப்பதையும் கவனித்திருக்கலாம். இதற்கு உளவியலில் `ஆங்சைட்டி அட்டாக் (Anxiety attack)' அல்லது `பானிக் அட்டாக் (Panic attack)' என்று பெயர். ஏன் ஏற்படுகிறது? ஒருவருக்கு ஆங்சைட்டி அட்டாக் மூன்று வகைகளில் ஏற்படுகிறது.   முதல் வகை: இது அனைவருக்கும் சில பொதுவான காரணங்களால் திடீரென வரக்கூடிய பயமும் பதற்றமும் ஆகும். ஒருவரின் அருகில் திடீரென ஒரு பாம்பினை தூக்கிப்போட்டால் வரக்கூடிய பயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும், பல புற காரணங்களால் இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்படலாம். இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இரண்டாம் வகை: இது ஆழ்மனதிலிருந்து வரக்கூடிய ஒருவித தவிப்பால் ஏற்படுவது. அவமானம், குற்றவுணர்ச்சி போன்றவற்றை இதற்கு காரணமாகக் கூறலாம். இந்த உணர்வுகள் அதிகரிக்கும்போதும் ஒருவரின் மனநிலை சீரற்றதாகி ஆங்சைட்டி அட்டாக் ஏற்படும். இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட ஒருவரின் மனநிலையே முழுக்க முழுக்க காரணம். முதல் வகையில் சொன்ன பாம்புபோன்ற புறக் காரணிகளால் இது ஏற்படுவதில்லை.   Anxiety attack Also Read ``இந்த 3 காரணங்களைத்தான் `பேய் பிடித்துவிட்டது' என்கிறார்கள்!" - விளக்கும் மனநல மருத்துவர் மூன்றாம் வகை: இந்த வகை ஆங்சைட்டி அட்டாக் உளவியல் மற்றும் நரம்பியலுடன் தொடர்புடையது. ஒருவர் கோபத்தால் தன்னை இழக்கும் நிலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். `வாழ்க்கையில் தான் அனைத்தையும் இழக்கப்போகிறோம்' என்று தோன்றும் எண்ணத்தால் ஏற்படும் பதற்றத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். யாருக்கு ஏற்படும்? எப்போதும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவோர்க்கு ஆங்சைட்டி அட்டாக் எளிதில் ஏற்படலாம். ஏற்கெனவே உளவியல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகும்போது இதனால் பாதிக்கப்படலாம். ஏதேனும் ஒரு பிரச்னை அல்லது ஆபத்து குறித்து அதிக நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிந்தனை ஆங்சைட்டி அட்டாக்காக மாற வாய்ப்புள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கும் இது ஏற்படலாம்.   என்ன செய்ய வேண்டும்? ஆங்சைட்டி அட்டாக்கால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு இதய பிரச்னை உள்ளதென நினைத்து இதய மருத்துவரை நாடிச் சென்று, பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இது ஏற்கெனவே நமக்கிருக்கும் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும். `ஆங்சைட்டி அட்டாக்' ஏற்படும் அனைவருக்கும் இதய பிரச்னை இருக்காது. உங்களுக்கு ஆங்சைட்டி அட்டாக் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். மனநல மருத்துவரையோ, உளவியல் ஆலோசகரையோ அணுகி உங்கள் பிரச்னையைக் கூறி தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது.   Mental Health pixabay ஆங்சைட்டி அட்டாக் வராமல் தடுக்க மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தச் சூழலிலும் அதிகமாக உணர்ச்சிவசப் பட வேண்டாம். பிரச்னைகளையோ, மனதுக்குள் பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களையோ பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். மனம் பதற்றமடையும்போது கண்ணை மூடி சிறிது நேரம் எதையும் யோசிக்காமல் அமர்ந்திருங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். யாருடனாவது மனம் விட்டுப் பேசுங்கள். உடல்நலம்போல் மனநலமும் பாதுகாப்பட வேண்டியது" என்கிறார் உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி.   https://www.vikatan.com/health/healthy/psychologist-explains-about-anxiety-attack-and-its-reasons
  • திடீரென வைகையில் பொங்கிய நுரை... அதிர்ச்சியில் மதுரை மக்கள்! செ.சல்மான் பாரிஸ்ஈ.ஜெ.நந்தகுமார் நுரை பொங்கிய வைகை ரசாயனக் கழிவுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வைகை நதி. மதுரையில் பெய்த மழையின் விளைவால் நகருக்குள் ஓடும் வைகை ஆற்றிலும் செல்லூர் கண்மாயிலும் 10 அடி உயரத்துக்கு நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து நுரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.   வைகை ஆறு ஏற்கனவே மதுரைக்குள் ஓடும் வைகை ஆற்றுப் பாதையிலும், அதை சார்ந்த கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், வீடுகள், தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றில்தான் கலந்து வருகின்றன.     இதற்கிடையே நகர வளர்ச்சிக்காக கரையோரங்கள் குறுக்கப்பட்டு இருபக்கமும் இரட்டை வழி சாலை போடப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை வைகை செல்லும் பாதை அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் புகார் எழுப்பி வருகிறார்கள். வைகையை பாதுகாக்க உயர்நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.   வைகை ஆறு இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பெய்த மழையின் விளைவால் நேற்று வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நீர் செல்லூர் கண்மாயில் சேரும் இடத்திலும், மீனாட்சிபுரம் பாலத்திலும் 10 அடி உயரத்துக்கு வெண்ணிற நுரை எழும்பியதால் அப்பகுதி முழுவதும் சின்ன பனிமலை போல் காட்சி அளித்தது. இதைப் பார்க்க மக்கள் கூட ஆரம்பித்தார்கள்.   பின்பு தீயணைப்புத் துறையினர் வந்து நுரையை கலைக்கும் வகையில் நீரை பீய்ச்சி அடித்தார்கள். வைகை ஆற்றையும் கண்மாய்களையும் ஒட்டியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவு நீர் வைகையாற்றில் கலப்பதால்தான் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து வைகையின் நீரோட்டத்தை தடுத்ததால் தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோட ஆரம்பித்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.   பார்வையிட்ட செல்லூர் ராஜூ அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பகுதிக்கு வந்து ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். வைகை ஆற்றில் அபாயத்தை உண்டாக்கும் ரசாயன கழிவுநீரைத் தடுக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.   https://www.vikatan.com/social-affairs/environment/toxic-foam-forms-in-vaigai-river-due-to-industrial-pollution
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.