• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

இருபது இருபது இளையவரே வருக வருக.

Recommended Posts

இருபது இருபது

இளையவரே வருக வருக..

இன்பம் தந்து துன்பம் தொலைத்து

இனிதாய் வருக வருக.

 

இனி ஒரு காலை

இவ்வவனியில் புதிதாய் உதிக்க வருக வருக

இவ்வையகம் வெப்பம் தாழ்ந்து

இனி குளிர் கண்டு

இன்புற்றே நிற்க வருக வருக.

 

இனிப் பல்லினமும்

இன்பமாய்ப் பெருகி

இச்சை கொள் பச்சை தந்து

இவள் பூமகள்

இனிதே வாழ வருக வருக.

 

இழிசெயலாய் நெகிழிகள் பெருகி

இனி இந்த தேசம்

இருக்காது எனும் நிலை தொலைத்து

இவ்வையகம் வாழ்வாங்கு வாழ

இலைகுழை தான் போல் உக்கும் வகைகள்

இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. 

 

இல்லை எனி நல்லார்

இந்த நிலை இன்றி

இங்கு இல்லை எங்கும்

இருப்போர் நல்லோர் எனும் நிலை காண

இனிதே வருக வருக. 

 

இருபதின் இரட்டையில் வரும்

இளையஞரே மிலேனியத்தின் மிடுக்கரே

இனியனாய் நேசம் பொங்க

இவள் பூமி மகள் மீது

இச்சை கொண்டு வாரும்

இனி இங்கு சர்ச்சைகள் வேண்டாம் 

இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.. வருக வருக.! 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

இருபது இருபதின்...  முதலாவது கவிதை அழகு... நெடுக்ஸ். 🥰
இருபது இருபதின்.... முதலாவது  பதிவும் இது. :grin:
இருபது இருபதின்.... முதலாவது கருத்தும் இது. :)

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, தமிழ் சிறி said:

புது வருடம் பிறக்கும் போது... சாமி கும்பிடாமல். வெடி கொழுத்தாமல்  யாழ். களத்தில்  நின்றவர்கள்

மறைவில நின்றாக்கள்.. உந்த வரிசையில் வரமாட்டினமெல்லோ. 😂

இனிய இருபது இருபது.. புத்தாண்டு வாழ்த்துக்கள் சிறியண்ணா மற்றும் எல்லாக் கள உறவுகளுக்கும். 

Share this post


Link to post
Share on other sites

இழிசெயலாய் நெகிழிகள் பெருகி

இனி இந்த தேசம்

இருக்காது எனும் நிலை தொலைத்து

இவ்வையகம் வாழ்வாங்கு வாழ

இலைகுழை தான் போல் உக்கும் வகைகள்

இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. .....!

 

நெகிழிகள் இல்லாத உலகமே இனி நல்லுலகம் ஆகும்.....!   👍

நல்ல கவிதை நெடுக்ஸ்.....!  😁

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு அதிர்ச்சி தோல்வி By Mohamed Shibly -     இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் புதன்கிழமை (22) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,  மன்செஸ்டர் யுனைடட் எதிர் பர்ன்லி மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபர்டில் பர்ன்லி அணிக்கு எதிராக 2-0 என அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்தது. பர்ன்லி ஓல்ட் ட்ரபர்டில் ப்ரீமியர் லீக்கில் பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும்.  லிவர்பூலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-0 என தோல்வியுற்ற மன்சஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை நெருங்கும் வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் 6 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சொந்த ரசிகர்களுக்கு முன் சிறந்த ஆரம்பத்தை பெற்றபோதும் ஆரொன் வான் பிசிக்கா பரிமாற்றிய இரண்டு கோல் வாய்ப்புகளை அன்தோனி மார்ஷல் மற்றும் ஜுவான் மார்டா வலைக்குள் செலுத்த தவறினர்.  இந்த வீணடிப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பர்ன்லி 39 ஆவது நிமிடத்தில் வைத்து ஆஷ்லி வெஸ்ட்வுட்டின் ப்ரீ கிக்கை கிறிஸ் வூட் கோலாக மாற்றனார்.   தொடர்ந்து இரண்டாவது பாதியின் 56 ஆவது நிமிடத்தில் மேல் மூலையில் இருந்து ஜே ரொட்குஸ் அபார கோல் ஒன்றை பெற்று பர்ன்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.   1962 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடட்டை  5-2 என தோற்கடித்த பின் ஓல்ட் டிரபர்ட்டில் பர்ன்லி அவ்வணிக்கு எதிராக பெறும் முதல் வெற்றியும் இதுவாகும். டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் நோர்விச் சிட்டிி ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விச் சிட்டி அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வெற்றி வழிக்கு திரும்பியுள்ளது.  கடைசி நான்கு லீக் போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய டொட்டன்ஹாம், கடைசி மூன்று போட்டிகளில் ஒரு கோலைக் கூடப் பெறாத நிலையில் கடைசி நிமிடங்களில் சொன் ஹியுங் மின் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஹரி கேன் காயமுற்று ஆடாத நிலையில் கோல் ஒன்றை பெற போராடி வரும் ஹொட்ஸ்பர் அணி சார்பில் டெலி அலி முதல் பாதியில் கோல் ஒன்றை பெற்றார். 2020 ஆம் ஆண்டில் அந்த அணி பெற்ற முதல் லீக் கோலாக இது இருந்தது.    எனினும், இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி ஒன்றை கோலாக மாற்றிய டீமு புக்கி நோர்விச் அணிக்கு பதில் கோல் திருப்பினார்.  இந்நிலையில் 79 ஆவது நிமிடத்தில் நெருக்கமான தூரத்தில் இருந்து அலி பரிமாற்றிய பந்தை கொண்டு சொன், ஹொட்ஸ்புரின் வெற்றி கோலை பெற்றார்.  இந்த வெற்றியுடன் ஹொட்ஸ்புர் 24 போட்டிகளில் 34 புள்ளிகளை பெற்று 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.  http://www.thepapare.com/international-football-roundup-for-22nd-of-january-2020-tamil/
    • ஹொங்கொங் செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad -   ஹொங்கொங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நான்கு நாடுகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்னையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார்.   உலக தரநிலைப்படுத்தும் வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேர்வுப் போட்டிகள் நேற்று (22) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.  இறுதியாக நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் மற்றும் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர்களில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் 15 பேர் கொண்ட இந்தக் குழாத்தில் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.    இதில், அண்மைக்காலமாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக விளையாடிவரும் வடக்கின் நட்சத்திர வீராங்கனையும், இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களைப் போட்டு சாதனை படைத்தவருமான தர்ஜினி சிவலிங்கம் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.  இந்த நிலையில், வடக்கின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலவருக்கு இந்தத் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  எனினும், தயார்நிலை வீராங்கனைகள் பட்டியலில் அவரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனையான திசாலா அல்கம, நீண்ட இடைவெளியின் பிறகு இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் வரவேற்பு அணியான ஹொங்கொங், இலங்கை, தாய்லாந்து மற்றும் கென்யா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.  இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் 
    • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும அவர் சாடியுள்ளார். சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முன்வருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன் அண்மையில் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்புக்கு பதில் அளிக்கும் வகையிலேயே தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=124891  
    • 5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்!   அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார். இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நேற்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார். அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=124864&mode=lead
    • ’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’     “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (23) கருத்துரைத்த வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, “நல்லாட்சிமூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்துநிறுத்தியுள்ளது.தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுதிட்டங்களும் முடங்கியுள்ளன. குறிப்பாக கண்டி அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களில் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர். அதுமட்டுமல்ல ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது.நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும். இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கிவருகின்றனர். ஆட்சிமாறலாம் ஆனால், மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டுவருகின்றது. படிப்பது தேவாரம் இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல், வெளியில் நல்லமுகத்தை காட்டிக்கொண்டு அடிமட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கல்கள் இடம்பெற்றுவருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும்நிலை உருவாகியுள்ளது.அடுத்த பொதுத்தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைகூட இதன் ஓர் அங்கமாகும்.” என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/படபபத-தவரம-இடபபத-சவன-கவல/175-244456