Sign in to follow this  
கிருபன்

தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!

Recommended Posts

தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!

இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத் தளங்களில் பலரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களைப் பாராட்டி மகிழ்வதைக் கண்டிருப்பீர்கள். இது நல்ல ஒரு விடயம்தான்.

ஆனால் அவர்களைவிடவும் இந்த நேரத்தில் ஊக்கப்படுத்த வேண்டியது பல்கலைகழகம் நுழையத் தவறியவர்களைத்தான். அவர்களுள்தான் எமது  எதிர்கால ஆசிரியர்கள், தொழில் முனைவர்கள், தாதிகள், உற்பத்தியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள், நிர்வாகிகள், சமூக சேவகர்கள் போன்றோர் இருக்கிறார்கள். 

அவர்களின் திறமைகளை விரைவாகவும் முறையாகவும் வெளிக்கொணர என்ன பொறிமுறையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்? Career Guidance மற்றும் Mentoring போன்ற சேவைகள் எவ்வளவு தூரம் இலங்கை போன்ற நாடுகளில் வளர்ச்சியடைந்துள்ளன? Paid placement மற்றும் unpaid Placement போன்ற வாய்ப்புகளும் இலங்கையில் போதுமான அளவு இல்லை என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும்.

இவ்வாறான சேவைகளை வளப்படுத்தி மாணவர்களை காலம் தாழ்த்தாது உரிய பாதையில் செல்ல வழிகாட்டுவதற்கு முக்கியமான தடையாக இருப்பது எமது “கல்விச் சமூகத்தின் தவறான முன்மாதிரிகளால்” பிழையாக வழிநடத்தப்பட்டு வரும் பெற்றோரே. ஏனைய தடைகளெல்லாம் இலகுவாகத் தகர்க்கக் கூடியவையே.

எமது பிள்ளைகள் தாமே தமது துறையைத் தெரிவுசெய்யவும் அவர்களின் கனவை நனவாக்கவும் எமது பங்களிப்பை வழங்கத் நாம் தயாராகும்வரை உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி, எமது சமூகம் தொடர்ந்தும் பெற்றோரின் கனவை பிள்ளைகள்மேல் திணிக்கும் சமூகமாகவே இருக்கப்போகிறது. 

பிள்ளைகளும் முட்டி மோதிக் காலத்தையும் பணத்தையும் வீணடித்துத்தான் தொழிற்சந்தையில் தம்மை நிலைநிறுத்தப் போகிறார்கள்.

இதன் மறுபக்கத்தில் இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்கள் உயர் கல்வியை பெறும் பொருட்டு அல்லது  தொழில் தேவைகளை கருதி இலங்கையை விட்டு இடம்பெயர்ந்து செல்லுவதும் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. 

இது சிறுபான்மைச் சமூகமான எமது மனிதவளத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு Brain Drain என்று சொல்லப்படும் அறிவாளிகளின் வெளியேற்றம் தொடரத்தான் போகிறது. தேசியம், தமிழர் தாயகம் என்று பேசுவோர் முதலில் இதுபற்றிக் விரைவாகக் கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

https://www.facebook.com/101881847986243/posts/114852020022559/?d=n
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

எமது பிள்ளைகள் தாமே தமது துறையைத் தெரிவுசெய்யவும் அவர்களின் கனவை நனவாக்கவும் எமது பங்களிப்பை வழங்கத் நாம் தயாராகும்வரை உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி, எமது சமூகம் தொடர்ந்தும் பெற்றோரின் கனவை பிள்ளைகள்மேல் திணிக்கும் சமூகமாகவே இருக்கப்போகிறது. 

உண்மை

Share this post

Link to post
Share on other sites

அது என்ன தமிழ் கல்விச் சமூகம். யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

Share this post

Link to post
Share on other sites
On 1/2/2020 at 8:23 PM, Kapithan said:

அது என்ன தமிழ் கல்விச் சமூகம். யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

தமிழர்களில் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்கள்,  கல்வித் திணைக்கள அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக சிந்தனையுடைய தனிநபர்கள் என்று பலரையும் அடக்கலாம்.

சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கினைத் தெளிவாக்கி அதனை மேலும் தரமுயர்த்தவும், சமூக விளைவுகளுக்கு தகுந்த கற்றலை ஊக்குவிக்கவும் முயல்பவர்கள். தனியே எஞ்சினியர்கள், டொக்டர்கள், அக்கவுண்டண்ட்கள் மாத்திரம் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியாது என்பதனை உணரச் செய்பவர்கள்!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

அப்படி ஒர் தெளிவான நோக்கை எமது கல்விச் சமூகம் கொண்டிருந்ததா அல்லது கொண்டிருக்கிறதா ? தெளிவாகக் கூறுங்கள்.

தமிழ் கல்விச் சமூகம் பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

On 1/1/2020 at 4:18 PM, கிருபன் said:

மாணவர்களை காலம் தாழ்த்தாது உரிய பாதையில் செல்ல வழிகாட்டுவதற்கு முக்கியமான தடையாக இருப்பது எமது “கல்விச் சமூகத்தின் தவறான முன்மாதிரிகளால்” பிழையாக வழிநடத்தப்பட்டு வரும் பெற்றோரே.

கல்வியில் சிறந்து விளங்கும் யாழ் மக்கள் என்று சொல்லபடுகிறவர்களை  வழிநடத்தி வருபவர்கள்   இவர்கள் தானா?:rolleyes: 

Tution master  பிள்ளைகளுக்கு வைத்திருக்காத ஈழத்து பெற்றோர்களை, வெளிநாடானாலும் இலங்கையானாலும் காண்பது மிகவும் குறைவு. tution master ராக இருப்பது வருமானம் மிகவும் அதிகம் பெற கூடிய தொழில்.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
20 hours ago, Kapithan said:

அப்படி ஒர் தெளிவான நோக்கை எமது கல்விச் சமூகம் கொண்டிருந்ததா அல்லது கொண்டிருக்கிறதா ? தெளிவாகக் கூறுங்கள்.

இல்லை. பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களையும், சாதனை படைத்தவர்களையும் மெச்சுவதோடு நின்றுவிடுகின்றார்கள். பல்கலைக் கழகங்களிக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு மேற்படிப்புக்கும், தொழில்சார் கற்றல்களுக்கும், சுயதொழிலில் ஈடுபடவும் தேவையான செயற்பாடுகளைச் செய்வதில்லை. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத  18-19 வயது இளையோர் ஒரு cliff edge இல் நிற்கவைக்கப்படுகின்றார்கள்.

சுயமுயற்சியும், ஊக்கமும் உள்ளவர்கள் படிப்பைக் கைவிடாது திறந்த பல்கலைக்கழகம், மென்பொருள் துறை என்று சென்று நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். எனது நண்பர்களில் சிலர் தமது துறையில் விடாமுயற்சியுடன் முன்னுக்குவந்து இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆயினும் 22- 25 வயதுகளில் முடிக்கவேண்டிய கல்வியை 20களின் இறுதியிலேயேதான் முடித்தார்கள். சரியான வழிநடத்துதல் இருந்தால் இந்த நீண்டகால கல்விச்செயற்பாட்டைக் குறைத்து வேலையை 25 வயதுக்கு முன்னரே ஆரம்பிக்கலாம்.

18 hours ago, விளங்க நினைப்பவன் said:

Tution master  பிள்ளைகளுக்கு வைத்திருக்காத ஈழத்து பெற்றோர்களை, வெளிநாடானாலும் இலங்கையானாலும் காண்பது மிகவும் குறைவு. tution master ராக இருப்பது வருமானம் மிகவும் அதிகம் பெற கூடிய தொழில்.

உண்மைதான். தரப்படுத்தல் முறை மூலம் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதில் பாகுபாடு காட்டப்பட்டதால் படிப்பில் போட்டி ஏற்பட்டது. பலகலைக் கழகம் போகாவிட்டால் எதிர்காலமே இல்லையென்ற நிலையும் இருந்தது. இவைதான் தனியார் வகுப்புக்கள் பிரபலமாகக் காரணம். இப்போது மாற்றங்கள் உருவாகி இருந்தாலும் பாடசாலைக் கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற்ரோரிடம் வரவில்லை.

Edited by கிருபன்

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

இல்லை. பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களையும், சாதனை படைத்தவர்களையும் மெச்சுவதோடு நின்றுவிடுகின்றார்கள். பல்கலைக் கழகங்களிக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு மேற்படிப்புக்கும், தொழில்சார் கற்றல்களுக்கும், சுயதொழிலில் ஈடுபடவும் தேவையான செயற்பாடுகளைச் செய்வதில்லை. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத  18-19 வயது இளையோர் ஒரு cliff edge இல் நிற்கவைக்கப்படுகின்றார்கள்.

சுயமுயற்சியும், ஊக்கமும் உள்ளவர்கள் படிப்பைக் கைவிடாது திறந்த பல்கலைக்கழகம், மென்பொருள் துறை என்று சென்று நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். எனது நண்பர்களில் சிலர் தமது துறையில் விடாமுயற்சியுடன் முன்னுக்குவந்து இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆயினும் 22- 25 வயதுகளில் முடிக்கவேண்டிய கல்வியை 20களின் இறுதியிலேயேதான் முடித்தார்கள். சரியான வழிநடத்துதல் இருந்தால் இந்த நீண்டகால கல்விச்செயற்பாட்டைக் குறைத்து வேலையை 25 வயதுக்கு முன்னரே ஆரம்பிக்கலாம்.

உண்மைதான். தரப்படுத்தல் முறை மூலம் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதில் பாகுபாடு காட்டப்பட்டதால் படிப்பில் போட்டி ஏற்பட்டது. பலகலைக் கழகம் போகாவிட்டால் எதிர்காலமே இல்லையென்ற நிலையும் இருந்தது. இவைதான் தனியார் வகுப்புக்கள் பிரபலமாகக் காரணம். இப்போது மாற்றங்கள் உருவாகி இருந்தாலும் பாடசாலைக் கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற்ரோரிடம் வரவில்லை.

எங்கள் தமிழ் சமூகத்தின் கல்வி செயற்பாடு அல்லது கல்வி கொள்கை , கொழுத்த சீர்தனம் மற்றும்  அரசாங்க வேலை (ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்ட ) இரண்டையும் மட்டுமே இலக்காகக் கொண்டது. தமிழ் கல்விச் சமூகம் இந்த இரண்டு இலக்குகளுக்குமே சேவை செய்வதாக நான் நம்புகிறேன்.

நீங்கள்  ?

Share this post

Link to post
Share on other sites
On 1/5/2020 at 1:31 PM, Kapithan said:

எங்கள் தமிழ் சமூகத்தின் கல்வி செயற்பாடு அல்லது கல்வி கொள்கை , கொழுத்த சீர்தனம் மற்றும்  அரசாங்க வேலை (ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்ட ) இரண்டையும் மட்டுமே இலக்காகக் கொண்டது. தமிழ் கல்விச் சமூகம் இந்த இரண்டு இலக்குகளுக்குமே சேவை செய்வதாக நான் நம்புகிறேன்.

நீங்கள்  ?

இது காலங்காலமாக மாறாமல் உள்ளதுதான்! ஆனால் மாற்றவேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this