-
Tell a friend
-
Topics
-
Posts
-
களியோடு கலக்கும் கருவாட்டுக் குழம்பு.பாடுபட்ட உடம்பு வலியெல்லாம் பறந்து போகும்.......! 👌
-
உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை. ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். பாரியளவில் நடந்த விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்! நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்!
-
படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், மேலே கதையைப் பார்த்தால் நான் பார்த்த Borderland என்ற பின்லாந்து கிரைம் திரில்லர் தொடரில் வந்த ஒரு கதை போல இருக்கிறது! இன்ஸ்பிரேசனா அல்லது முழுதாகச் சுட்டார்களா என்பதைப் பார்த்த பின் சொல்ல முடியும்!
-
பிரபா, நீங்கள் வாசித்த கட்டுரையை எழுதியவர்கள் குறிப்பிடாத விடயங்கள் சில இருக்கின்றன: புலிகளால் அழிக்கப் பட்ட இயக்கங்களில் இடதுசாரிவாதம் இருந்தது. புலிகளிடம் தேசியவாதம் மட்டுமே இருந்தது. அந்த இயக்கங்களை ஸ்தீரி லோலன்களாக மட்டுமே சுட்டிக் காட்டும் வரலாறு மட்டுமே புலிகளின் சார்பானவர்களால் இன்று எழுதப் படுகின்றன. நான் நினைக்கிறேன் 1984/85 வரை யாழில் மேதின ஊர்வலம் நடத்தி வந்த இடது சாரிகளை "சிவப்புக் கொடியை இனி மடிச்சு வைச்சு விட்டு, புலிக் கொடியைத் தூக்கிப் பிடியுங்கோ!" என்று புலிகள் சொன்னதோடு வடக்கில் இடது சாரிகள் மௌனமாகி விட்டனர். எனவே, "இடது சாரிப் பரதேசிகள்" என்ன செய்தார்கள் என்று கேட்போர், குறைந்த பட்சம் முதலில் நூலகம் சென்று தேடிப் பார்த்து விட்டு அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.
-
நன்றி சகோ இங்கே எம் போன்றோரை அமைதியாக்கும் வேலை தான் நடக்கிறதே தவிர செயற்பாடு ஏதுமில்லை இங்கே உங்களது செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும் சுட்டிக்காட்டுவதல்ல சகோ.... அப்படி ஏதாவது இருந்தால் நல்லது என்பதே.... அவர்கள் எம்மை கேள்வி கேட்கலாம் நாம் உங்களது செயற்பாடுகள் பற்றிக்கேட்டால் அது தனி நபர் சார்ந்ததாக்கி விடுவார்கள் வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை தட்டினன் சத்தமாக இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்
-
Recommended Posts