Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]


Recommended Posts

'நாம் தமிழர் அரசியல் - பாகம் 2' என்ற தலைப்பிலிருந்து அண்மையில் பதியப்பட்ட விளம்பர அறிவிப்புப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • Replies 54
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியின் போக்கு முற்றிலும் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத் திரியாகவும், அக் கட்சியின் காணோளிகள் அனைத்தையும் மீண்டும் மறு பிரதி செய்யும் திரியாகவும் மாறிக் கொண்டு வருகின்

சுவிஸிலிருந்து யாழ் வந்த தலைமை போதகருக்கு கொரோனா! வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை தேடும் பொலிஸார் எனும் திரியில் தலைப்பின் திசையைத் திருப்பும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்படுகின்றது.

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட “13-ம் நம்பரைப் பார்த்து பயப்படணுமா?  ‘வாழைக்கு தாலி’ பரிகாரம் சரியா?” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. தொடர்பான களவிதிகள்: எதுவித அடிப்படையும், உண்மைத்தன

உற‌வுக‌ளே விழிப்புன‌ர்வுட‌ன் இருங்கோ , காணொளி இணைப்பு எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியின் போக்கு முற்றிலும் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத் திரியாகவும், அக் கட்சியின் காணோளிகள் அனைத்தையும் மீண்டும் மறு பிரதி செய்யும் திரியாகவும் மாறிக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இப் போக்கின் உச்சக்கட்டமாக நாம் தமிழர் கட்சியில் எப்படி இணைவது எனும் 100 வீத கட்சி பிரச்சார காணொளியும் நேற்று இணைக்கப்பட்டு எம்மால் நீக்கப்பட்டது.

இந்த திரியில் இனிமேல்

1. நாம் தமிழர் கட்சியின் பிரச்சார காணொளிகள் இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும்
2. தனிமனித துதி பாடும் காணொளிகள், உரைகள், கருத்துகளை தவிர்க்கவும்

இந்த போக்கின் இன்னொரு அம்சமாக "ஈகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" எனும் திரி யாழில் வாழிய வாழிய பகுதியில் இணைக்கப்பட்டு இருந்தது (இப்பொழுது எம்மால் நீக்கப்பட்டு விட்டது). யாழ் உறுப்பினர் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் அல்லாத, மாவீரர்கள் மற்றும் போற்றுதலுக்குரியவர்கள் அல்லாதவர்களின் பிறந்த நாள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு யாழில் வந்து திரி திறந்து வாழ்த்து சொல்வதை தவிர்க்கவும்.

நன்றி

 • Like 2
 • Thanks 2
Link to post
Share on other sites

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு எனும் திரியில் இணைக்கப்படும் தமிழக அரசியல் பற்றிய காணொளிகளின் நம்பகத்தன்மை சந்தேகமாக உள்ளதால் திரி பூட்டப்பட்டுள்ளது. 

 • Confused 1
Link to post
Share on other sites
 • 3 weeks later...

மேதகு திரைப்பட முன்னோட்டம் எனும் திரியில் இருந்து வெளி அமைப்பு ஒன்றுக்கு நிதிசேர்க்க உதவும் நோக்கில் இணைக்கப்பட்ட முகநூல் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வெளி அமைப்புக்களுக்கு பணமீட்ட உதவும் பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

 

 • Thanks 1
Link to post
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீசிலுள்ள தேவாலயத்தில் (Notre-Dame de Nice - Alpes-Maritimes)நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் எமானுவல் பற்றி போல் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. தேவால்ய மலசல கூடத்திற்குள் ஒளிந்திருந்த இஸ்லாமியப் பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான். https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwODQ1OTExNg==.htm
  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன? Bharati    அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில்லை என்பதையும் அது உண்ர்த்தியது.  நேற்றைய தினம் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டை நடத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், சீனா மீது கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தினார். “இலங்கையை, சீனா சூறையாடுகின்றது” என்ற வகையிலான அவரது கருத்து நிச்சயமாக சீனாவுக்குக் கடும் அதிருப்தியையும் – சீற்றத்தையும் கொடுத்திருக்கும். “நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும் சட்ட மீறல்களையும் கொண்டுவந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என பொம்பியோ கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சீனா மீதான தாக்குதலை நடத்தினார்.  இலங்கையில் வைத்து, இலங்கைக்குப் பெருமளவு பொருளாதார கட்டுமாண உதவிகளைச் செய்துவரும் சீனா மீது இவ்வாறான தாக்குதல் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நடத்துவார் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். இலங்கை அரசுக்கு இது பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது.  சீனாவோ இவ்வாறான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருந்தது போல, சில நொடிகளிலேயே அதற்குக் கடுமையான பதிலடி ஒன்றைக் கொடுத்தது. சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட டுவிட்டர் குறிப்பில், “மன்னிக்கவும் இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை மையப்படுத்தி இரு நாடுகளும் இவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபட்டிருப்பதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.  இலங்கை எந்தளவுக்கு நிதானமாக நடுநிலை தவறாமல் நடந்துகொள்கின்றது என்பதில்தான் இதற்கான பதில் அமைந்துள்ளது.  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தாம் வெளிவிவகாரங்களில் நடுநிலை கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயல் படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  “விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது” என்பதை பொம்பியோவுடனான பேச்சின் போது, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். “இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக்காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா தொடர்பில் பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலாகவே ஜனாதிபதியினதும், வெளிவிவகார அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளன. அமெரிக்காவை இந்தக் கருத்துக்கள் திருப்திப்படுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை தம்மால் ஏற்கமுடியாது என்பதை இலங்கை மண்ணில் வைத்தே அமெரிக்கா இந்தளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்  வெளிப்படுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது! https://thinakkural.lk/article/84249
  • பசிலின்  Rs.600 கோடி வேலை செய்கிறது.  பணம் பாதாளம் வரை பாயும். 😀
  • மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல் Rajeevan Arasaratnam    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. https://thinakkural.lk/article/84359
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.