• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் அழைப்பு

Recommended Posts

யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.

DSC_0242.JPG

வடமாகாண ஆளுநராக இன்று  உத்தியோக பூர்வமாக கடமை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வவுனியா மாவட்டத்தில் இருந்து அரசாங்க அதிபராக வெளியேறியபோது லேசான இதயத்துடன் வெளியேறியிருந்தேன். ஏனெனில் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவாக செய்தே வெளியேறியுள்ளேன்.பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் அதன் மகிழ்ச்சி மனதை இலோசாக்கியிருந்தது. இன்று வவுனியா மாவட்டத்தின் ஆரம்ப இடத்தை மிதித்திருந்தபோது மக்கள் காட்டிய அன்பும் அவர்களின் ஆதங்கமும் மனதில் இருந்த பல கவலைகளும் அவர்கள் காட்டிய ஆதரவும் அதேபோல் ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தபோது எதிர்பார்த்திருக்காத அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவர் முதல்வர் மற்றும் உங்களது வரவேற்பு என் இதயைத்தை கனமாக்கியுள்ளது. 

ஆளுநர் பதவி இலேசான பதவியல்ல கடந்த ஒன்றரை மாத காலமாக புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் இருந்து பல போராட்டம் இடம்பெற்று வருகின்றது இதனை ஊடகங்கள் ஊடாக நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பலர் தொலைபேசி ஊடாக இது உண்மையாகவா இது நடக்குமா எனக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெறவில்லை. அண்மையில் கிடைக்கப்பெற்ற பதவியின் பொறுப்புக்களை ஆரம்பித்திருந்தேன் எனவே ஆளுநர் பதவி என்ற விடயத்தில் அரச அதிகாரியாக நிதானமாக சிந்திக்கவேண்டிய தேவை இருந்தது ஏறக்குறைய 35 வருட அரச சேவையில் இருந்த நான் கடைசிக்காலத்தில் நிறைவேற்றாது வெளியேறுவது என்பது எவ்வாறு இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பலனாக எனக்குரிய அத்தனை விடயங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக என்னுடைய சேவைக்கான நன்மைகளைப் பாதுகாத்துக்கொண்டு எனக்கு இந்தப் பதவியை தந்துள்ளார். ஏன் இந்தப் பதவி என்பது எனக்காக மட்டுமன்றி அல்லது நான் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல வடக்கு மாகாண மக்களின் உணர்வுகளுக்காக மக்களின் தேவைகளுக்காக ஏக்கங்களுக்காக ஜனாதிபதியால் தரப்பட்ட பதவியாகத்தான் இதனைப் பார்க்கின்றேன். 

எனவே நான் பதவியேற்றபோது எனக்குக் கூறப்பட்ட விடயம் வடமாகாண மக்கள் நிறைய வேதனைகளுடனும் வலிகளுடனும் காயங்களுடனும் இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்தவேண்டிய தேவைதான் இருக்கின்றது.அந்த மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ இது வரை என்ன கிடைக்காமல் உள்ள விடையங்களை அவற்றைஎல்லாம் செய்து முடிப்பதற்கான அதிகாரத்தையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி செயலகம் செய்யும் என்ற உத்தரவாதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போல இந்த மண்ணின் நாடித்துடிப்புக்களை .மக்களின் உள்ளங்களை அறிந்து வைத்துள்ளேன் அரசாங்க உத்தியோகத்தர்களின் சிக்கல்களை அறிந்துள்ளேன்.

வவுனியா மாட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மூன்றரை இலட்சம் மக்களையும் வவுனியா மாவட்ட மக்களையும் சேர்த்து நான்கரை இலட்சம் மக்களை அந்நியோன்னியமாகப் பார்த்திருக்கின்றேன். எனவே இந்த மாகாணத்தில் இருக்கின்ற பலருக்கு என்னைத் தெரியும் எனக்கும் பலரைத் தெரியும் அப்படியிருந்தும் கடந்த எட்டரை வருடங்களாக இந்த மாகாணத்திற்கோ அல்லது வவுனியா மாவட்டத்திற்கோ என்னால் வரமுடியாது போய்விட்டது. அதற்கான தேவை இருந்தபோதும் கடமையின் நிமித்தம் வரமுடியாது இருந்தது. சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நான் விரும்பாமலே அந்தப் பதவி தரப்பட்டது. வருமானத்தின் 67 வீத வருமானத்தை பெறக்கூடிய சுங்கத்திணைக்களத்தில் 2019 ஆம் ஆண்டு சுங்கத்திணைக்களத்தின் வரலாற்றில் 975 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டிக்கொடுத்த அதேநேரம் என்னை இடமாற்றுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதற்கு எதிராக வீதியில் இறங்கிய என்னுடைய உத்தியோகத்தர்கள் நான் தடுத்தும் அதனைக்கேளாது போராட்டங்களில் ஈடுபட்டு கொழும்பு மாநகரையே ஸ்தம்பிதநிலைக்குக் கொண்டு வந்து மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வழிசமைத்து மீண்டும் அப்பதவியில் என்னை அமர்த்தினார்கள் இப்போது இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது உங்களுக்கான பதவி உயர்வு என்பதாலேயே நாங்கள் அமைதியாக உங்களை அனுப்பி வைக்கின்றோம் என்றார்கள். 

பின்னர் அமைச்சின் செயலாளராக பதவி ஏற்ற நிலையில் ஜனாதிபதியின் செயலாளர்களில் எத்தனையோ செயலாளர்கள் இருக்கும் நிலையில் எனக்கேன் இந்தப் பதவியைத் தந்தீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான ஆளைத்தான் நியமித்துள்ளார். இதைப்பற்றிக் கதைப்பதற்கு ஒருவரும் இல்லை என்றார்.

குறித்த பதவியை ஏற்று நான் அங்கு சென்றபோது மருத்துவர் சங்கம் ஒரு புறம் தாதியர் சங்கம் ஒரு புறம் என பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்கு அவற்றில் 70 வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிட்டுத்தான்.இங்கு வந்துள்ளேன் அதில் ஒருரே ஒரு வேதனை தற்போது அமைச்சரவை அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிகக்ப்பட்டுக்கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப்பிரிவு வவுனியா முல்லைத்தீவு மன்னார் வைத்தியசாலைகளுக்கான கட்டட வசதிகள் போன்றவற்றை முழுமைபெறச் செய்யமுடியாத நிலைக்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன் 

எனினும் அங்குள்ளவர்கள் நீங்கள் இங்கு இல்லாது விட்டாலும் நாங்கள் இதனை செய்து முடிப்போம் வடக்குமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியுள்ளார்கள் ஜனாதிபதியின் செயலாளர் கூறிய முக்கிய விடையம் வடக்கு மாகாணம் மட்டுமன்றி எந்த மாகாணத்தில் ஆவது முதல் நிலையில் இருக்கும் வைத்தியசாலையின் தேவைகள் கல்வித் துறையின் குறைபாடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கான பனிப்புரையை விடுத்துள்ளார்கள். குறித்த வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு குறித்த அதிகாரிகளுடன துணையாக இருப்பேன்.

அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கொள்கைகளுக்க அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமன்றி இந்த மாவட்டத்தின் மாகாணத்தின் ஒருவராக இருந்து செயற்படுவேன்.

இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த நான் பிறந்து வளர்ந்து பெற்றோரின் தொழில் வாய்ப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கும் சென்று யாழ்.பல்கலைகக்ழகத்தில் படித்து நிர்வாக சேவையில் இணைந்து கொண்டேன் ஆனால் எனது சேவைக்காலத்தில் எனது சொந்தமாவட்டத்தில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனை நான் கூறிவருவேன் ஆனால் சேவையைமுடித்துக்கொண்டு சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உங்கள் அத்தனை பேருடனும் இணைந்து எத்தகைய விடையங்கள் செய்வது என்று ஜனாதிபதி செயலகத்துடனும் கலந்துரையாடி அதனை முடித்து வைப்பதற்கு இயலுமான வரை நடவடிக்கைகளை எடுப்பேன். 

உங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இங்குள்ள மக்களும் அங்குள்ளமக்களுக்கு ஒருஇணைப்புப் பாலமாக நான் செயற்படுவேன் அங்குள்ள அத்தனை உத்தியோகத்தர்களும் வடக்கு மாகாணத்தில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு எங்களுடை ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள் பெரும்பான்மையின அரச அதிகாரிகள் கவலையுடன் இருக்கின்றார்கள் எப்போது வடக்கு மக்களுக்கு உதவி செய்வோம் என்று அளுத்தங்கள் விமர்சனங்களுக்குஅப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயற்படுவீர்கள் என உறுதியளித்துள்ளீர்கள் இதைத்தான் நானும் எதிர்பார்க்கின்றேன் 

உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் நான் இங்கு வந்திருப்பது யாரையும் குறை செல்வதற்கு யாரையும் எனக்காக மாற்றிக்கொள்ள விமர்சிப்பதற்கும் அல்ல தள்ளி வைப்பதற்கும் அல்ல உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கவேண்டும் மாகாணத்திற்கு சேவையாற்றத்தான் வந்திருக்கின்றேன்.

பிள்ளைகள் கொழும்பில் படிக்கின்றார்கள் வேலை செய்கின்றார்கள் வயதான தாய் என்னுடன்இருக்கின்றார் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் நான்இ தனை ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய குடும்பத்தில் பல சுகங்களை அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துத்தான் இங்கு வந்துள்ளேன் உங்களது ஆலோசனைகள் அறிவுரைகள் ஆதரவு நிச்சயமாகத்தேவை இந்த மாவட்டத்தை நேசிக்கின்றேன் எனது பெற்றோர் உறவினர் பெற்றோரின் பெற்றோர்கள் உறவினர்கள் இந்த மண்ணுக்காக நிறையபோராடியிருக்கின்றார்கள் 

அவர்களின் தியாகங்களுக்கு தலைவணங்கி இந்த மாகாணத்திற்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன் இந்த உறவுப் பாலத்தைப் பயன்படுத்தி 30 வருட யுத்த்தில் இழந்தவற்றையும் கடந்தகாலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன் இதற்காகத்தான் ஜனாதிபதி ஒன்றரை மாத காலத்திற்கு பின்னர் இதனைச் செய்துள்ளார் ஆதரவு எங்களுக்குத் தேவை என்றார்.

https://www.virakesari.lk/article/72391

Share this post


Link to post
Share on other sites

வடமாகாணத்தைப் பொறுத்து நெடுங்காலமாகவே வைத்திய துறை தவிர்ந்த ஏனைய துறைகளில் நிர்வாக திறமை இன்மை பிரச்சினையாக உள்ளது. இதனை செம்மைசெய்யக்கூடிய நிர்வாக ஆற்றலை கடந்த   கடந்த மாகாண சபையோ முதலமைச்சரோ வெளிப்படுத்தவில்லை. காலம் காலமாக நிர்வாக திறமையின்மையால் சிக்குப்பட்ட  நூல்பந்துகள் போலவே வடகிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த சூழலில் தேர்ந்த நிர்வாகியான உங்கள் வரவு மிகுந்த உங்களை அறிந்த எல்லோருக்கும் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

வடமாகாணத்தில் சமூக நல்லிணக்கம், சமூக பொருளாதார கலாச்சார அபிவிருத்தி, பொருளாதார வளற்சி ,நீராதாரம் மண் மணல் காடு என சூழல் பாதுகாப்பு போன்ற குறை விருத்தி அடைந்த பல்வேறு துறைகளை மீண்டும் முழு அளவில் செயல்பட வைப்பது உங்களைப்போன்ற நிர்வாகி ஒருவருக்கு மட்டுமே சாத்தியமான பணியாகும்.

நமது மாகாண நலன் கருதி  நாமெல்லோரும் அரசியலுக்கு அப்பால் சகோதரி சாள்ஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும் என விண்ணப்பிக்கின்றேன்.  

Share this post


Link to post
Share on other sites

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது வரவேற்கத்தக்க விடயம் : செல்வம் அடைக்கலநாதன்  

(எம்.நியூட்டன்)

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது என்பது வரவேற்கத்தக்க விடையம் அரச நிர்வாக அதிகாரியாக இருந்து எத்தகைய உயர்நிலை பதவிகளில் இருந்தீர்களே அத்தகைய ஆளுமைகளைக் கொண்டு எமது மாகாணத்தையும் முன்கொண்டுவரவேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் புதிய ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமையிட்டு கர்வமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். 

எங்களுடைய புதிய ஆளுநர் எங்களுடைய மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் வடமாகாணத்தில் பெண் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டு அதனைக் கூறினேன்.

மாகாண மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்த அத்தனை மக்களையும் வவுனியா வரவேற்றது. அத்தனை மக்களையும் பசி தாகம் இன்றி இருப்பதற்கு முக்கிய கடமையாற்றியவர் மிகவும் துணிச்சலும் சேவை உணர்வும் கொண்டவர்.

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது என்பது வரவேற்கத்தக்க விடையம் அவரை இந்த நேரத்தில் பாராட்டுவதுடன் நாங்களும் உங்களுடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம் எங்கள் மக்களுக்குத் தேவையான விடையங்களை சிறப்பாக செய்யவேண்டும்.  உங்கள் பணி பல துறைகளிலுமே சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள் அத்தகைய சிறப்பான பணிகளும் இந்த மாகாணத்திற்கு கிடைக்கவேண்டும்.

 பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் மாவட்டங்களிலுள்ள அரசாங்க அதிபர்களும் அனைவரும் உங்களுக்கான ஒத்துழைப்பை வழங்குவோம் எங்கள் மக்களின் வாழ்வு வளம் பெற அனைத்து விதத்திலும் உதவிகளை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/72399

Share this post


Link to post
Share on other sites

TNA யின் பதிலை இன்னும் காணோம் ? ஏதேனும் குறைபிடிக்க ஆயத்தம் செய்கின்றனரோ ?

Share this post


Link to post
Share on other sites

ஆளுனர் சகோதரி சரோஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வடக்கின் ஆளுனராக உங்கள் முன் உள்ள பணி மிகப் பெரியது, சச்சிதமாகவும் சமயோசித புத்தியுடன் நிறைவேற்றவேண்டியதும்கூட. உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நீங்கள்  தைரியத்துடன் ஏற்று நேர்த்தியாக செய்து முடிப்பவர் என்று செய்திகள் மூலம் அறிகின்றோம். அந்த கோணத்தில் பார்க்கும்போது உங்கள் முன்னால் சென்றவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டு சென்றுவிட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் தேவைக்காக வடக்கில் புதிதாக நிறுவவேண்டிய வாழ்வாதாரங்கள்  ஒருபுறம் இருக்க அங்கு செப்பனிடவேண்டியவையே மிக அதிகம். மக்களுக்கு சுகாதாரம், பொது வாழ்வு, சட்டதிட்டம் என்பனவற்றிற்கான விழிப்புணர்வை  ஊட்டவேண்டியதும் யாழ் நகரத்தையும் இதர வாழ்விடங்களையும் சுகாதார சீரழிவுகளில் இருந்து காக்கவேண்டியதும் அவசியம். 

Share this post


Link to post
Share on other sites

இவர் வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய காலத்தில் அகதியாக வந்த மக்களை பராமரிக்கும் பெரும் பொறுப்பை செய்து முடித்தவர்.

ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தர இவர் மீது அப்போதே நல்மதிப்பு கொண்டிருந்தார். அதனாலதான் இவருக்கு புதிய அரசில் செயலாளர் பதவியை வழங்கினார்.

இருந்தாலும் இப்போது இவருக்கு பாரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் எதிர்கால நன்மையான செயட்பாடுகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

சிங்கள பெளத்த பேரினவாத மத்திய அரசின் முகவராகச் செயற்படும் ஒருவரால் தமிழர்களின் உண்மையான வேதனைகளை புரிந்துகொண்டு செயற்படக்கூடிய அதிகாரமோ வல்லமையோ இருக்கப்போவதில்லை. அப்படித் தமிழரின் வேதனைகளை உண்மையாகவே புரிந்துகொண்டு செயற்பட விரும்பும் ஒருவரைச் சிங்களமும் தனது ஏஜெண்ட்டாக நியமிக்கப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை, முத்தையா முரளீதரன் எனும் கோடரிக் காம்பிற்கு வழங்கப்பட்ட இப்பதவி, அவன் வேண்டாம் என்று சொன்னதால் இவவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முரளீக்கும் இவவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

வெறுமனே அபிவிருத்தி அபிவிருத்தி என்று பேசுவதன் மூலம் தாம் செய்த போர்க்குற்றங்களை மறைக்கப் பார்க்கிறான் கோத்தா. அவனுடைய எண்ணத்தைத்தான் இவவும் பழையனவற்றை மறந்து நாட்டை கட்டியெழுப்புவோம் வாங்கோ என்று வழிமொழிந்திருக்கிறா. 

Edited by ரஞ்சித்

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரஞ்சித் said:

சிங்கள பெளத்த பேரினவாத மத்திய அரசின் முகவராகச் செயற்படும் ஒருவரால் தமிழர்களின் உண்மையான வேதனைகளை புரிந்துகொண்டு செயற்படக்கூடிய அதிகாரமோ வல்லமையோ இருக்கப்போவதில்லை. அப்படித் தமிழரின் வேதனைகளை உண்மையாகவே புரிந்துகொண்டு செயற்பட விரும்பும் ஒருவரைச் சிங்களமும் தனது ஏஜெண்ட்டாக நியமிக்கப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை, முத்தையா முரளீதரன் எனும் கோடரிக் காம்பிற்கு வழங்கப்பட்ட இப்பதவி, அவன் வேண்டாம் என்று சொன்னதால் இவவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முரளீக்கும் இவவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

வெறுமனே அபிவிருத்தி அபிவிருத்தி என்று பேசுவதன் மூலம் தாம் செய்த போர்க்குற்றங்களை மறைக்கப் பார்க்கிறான் கோத்தா. அவனுடைய எண்ணத்தைத்தான் இவவும் பழையனவற்றை மறந்து நாட்டை கட்டியெழுப்புவோம் வாங்கோ என்று வழிமொழிந்திருக்கிறா. 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சட்டத்தரணி உருத்திரகுமாரன்தான் வட மாகாண ஆளுனராக நியமிப்பதற்குத் தகுதியானவர் போல தோன்றுகிறது.😀

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • „நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்” இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற  Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான். 19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது  இன்னும் ஒரு  அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன்  தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் வீதிகளில் ஊர்வலம் வருவார்கள். இந்த விழாவில் பெரியவர்களும் சிறியவர்களுமாக மாறி மாறி   ஆடிப்பாடிக் கொண்டாடி குதூகலிப்பார்கள். அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் விதமாக கேலியான பொம்மைகளை வடிவமைத்து  வாகனங்களில் வைத்து ஊர்வலம் வருவார்கள். பார ஊர்தியில் தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை வைத்துக் கொண்டு யேர்மனிய நிறுவனங்களின் முதலாளிகளும் தொழிலாளர்களும் கையசைத்து வருவார்கள். அப்படி அவர்கள் வரும் போது  வீதியில் நிற்பவர்களுக்கு  வாகனங்களில் இருந்து இனிப்பு மழை பொழிவார்கள். இந்த இனிப்பு வகைகளைச் சேகரிப்பதற்ககாகவே சிறுவர்கள்  Rosenmontagஇல் நடைபெறும் ஊர்வலங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். நேற்று Hessen மாநிலத்தில் இருக்கும்  Volkmarsen என்ற சிறிய நகரில் Rosenmontag வீதி விழாவில் வாகனங்களில் இருந்து அள்ளி வீசப்படும் இனிப்புவகைகளைச் சிறார்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது  அந்தச் சிறார் கூட்டத்தின் மீது வேகமாக வந்து மோதியது Maurice இன் கார். இந்தத் தாக்குதலில், முதற் கட்டமாக30 பேர் வரையில் காயப்பட்டதாக அறிவித்த Frankfurt காவற்துறை இன்று காயப்பட்டவர்களது எண்ணிக்கை 50 பேருக்கு மேல் என்றும் அதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. வேகமாக கார் ஓட்டி வந்த Maurice நிறைந்த போதையில் இருந்ததாகவும், மோதலின் போது அவனது தலையில் ஏற்பட்ட காயத்தால் அவனிடம் முழுமையான விசாரணையை இன்னமும் நடத்த முடியவில்லை எனவும் கிடைக்கப் பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விபத்து வேண்டும் என்றே நடத்தப் பட்டிருக்கின்றது என்பது தெரிகிறது  எனவும் காவற்துறையின் அறிக்கை சொல்கிறது. Hanau நகரில் குர்தீஸ் இளைஞர்களின் மீதான தாக்குதலுக்கு வலதுசாரி இனவாதிகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹம்பேர்க் மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும் பின்னடைவு அடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப் பட்டும் தீவிர இனவாதக் கட்சியான AFD, அந்தத் தேர்தலில் சென்ற முறையைவிட 0,88வீத வாக்குகளை குறைவாகப்பெற்றதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். Rosenmontag அன்று நடந்த தாக்குதலுக்கு தாக்குதல்தாரி ஒரு மனநோயாளி என்றுதான் அறிக்கை வெளிவரப் போகிறது. இனவாதிகள், மனநோயாளிகள் நடுவேதான் இப்பொழுது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அதற்கிடையில், “கொரோனா வைரஸ் இத்தாலியில் தாக்கி இருக்கிறது. அது யேர்மனிக்கு வர அதிக  காலம் பிடிக்காது. தயாராக இருங்கள்" என யேர்மனிய சுகாதார அமைச்சர் Jens Spahn நேற்று தொலைக்காட்சியில் வந்து பயத்தை இன்னும் அதிகரித்துவிட்டுப் போயிருக்கிறார்.
  • நல்லாய்தான் கதைக்கிறியள்.  இப்பிடியான பிரச்சனையளுக்கு  தாயின்ரை பங்கு மிக முக்கியம் கண்டியளோ? தகப்பன் பிசியாய் வேலை வேலை எண்டு திரியேக்கை தாய்  பிள்ளையளுக்கு சொல்லி  காரணங்களை சொல்லி வளர்க்க வேணும். தகப்பன் என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்யுறார் எண்டு...தாய் முதலில் கணவனுக்கு மரியாதை குடுக்க வேணும். அதை பார்த்து பிள்ளையளும் பார்த்து மரியாதை குடுப்பினம்.அதே மாதிரித்தான் தகப்பனும் தாய்க்கு மரியாதை குடுக்க வேணும். ஒரு நேரமாவது குடும்பமாய் கூடியிருந்து கதைத்து பேசி உணவு உண்ண வேண்டும்.கூடுதலான குடும்பங்களிலை தாய் கணவனுக்கு மரியாதை குடுப்பதேயில்லை. பிள்ளையள் விடயத்தில் தாயே எல்லா இடத்திலும் முடிவெடுக்கிறார்.இந்த இடத்தில் அப்பாவையும் கேட்க வேணும் என்று தாய் பிள்ளைகளுக்கு சொல்லுவதேயில்லை.இதனால் தகப்பனின் முக்கியத்துவம் பிள்ளைகளுக்கு தெரியாமலே போகின்றது.சில இடங்களில் பிள்ளைகளுக்கு தகப்பன் வீட்டுக்கு வீட்டுக்கு வருவதும் தெரியாது.போவதும் தெரியாது.ஏன் சில தாய்மாருக்கும் தெரியாது. இன்னுமொரு முக்கியமான விடயம் வீட்டுக்குள் ஆன்மீகம் முக்கியம்.
  • நட்சத்திர வீரர்களுக்கான ரி-20 தொடர்: ஆசிய- உலக பதினொருவர் அணிகள் விபரம் அறிவிப்பு!     by : Anojkiyan ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாடவுள்ள இரு அணிகளின் விபரங்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கான ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில், ஆறு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா பதினொருவர் அணியில் பெயரிடப்பட்ட ஆறு இந்திய வீரர்களில் விராட் கோஹ்லியும் உள்ளார். கே.எல்.ராகுலும் ஒரு போட்டியில் பங்கேற்க உள்ளார். ஷிகர் தவான், ரிஷாப் பந்த், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஆசிய பதினொருவர் அணியில், இலங்கை அணியின் வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார். தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணியில், முஸ்தாபிஸூர் ரஹ்மான், தமீம் இக்பால், முஷ்பிகூர் ரஹீம், லிட்டன் தாஸ், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முஜிப் உர் ரஹ்மான், நேபாளத்தின் சந்தீப் லமேச்சேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்த அணிக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. …………… உலக பதினொருவர் நட்சத்திர அணியை பொறுத்தவரை அணித்தலைவராக தென்னாபிரிக்காவின் டு பிளெஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோனி பேயர்ஸ்டொவ், அடில் ராஷித் ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான, கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், கிரன் பொலார்ட், செல்டோன் கொட்ரெல், ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்து அணியில் மிட்செல் மெக்லிகனும், தென்னாபிரிக்கா அணியில் லுங்கி ங்கிடியும், சிம்பாப்வே அணியில் பிரெண்டன் டெய்லரும் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரி-20 போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ரி-20 போட்டி 22ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் நாடானது 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவாகுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் தனி மனிதனாகும். 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் பங்களாதே{க்கு தனியான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு 1975ஆம் ஆண்டு தனது 55 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அடுத்த வருடம் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் சுதந்திர போராட்ட வீரர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. எனவே 100 ஆண்டுகள் நிறைவு நிகழ்வை மிகவும் கோலாகலமான முறையில் நடாத்துவதற்கு பங்களாதேஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவும். அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிய பதினொருவர் அணி என்பது, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஆசிய அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான், நோபளம் போன்ற அனைத்து அணிகளிலிருந்தும் திறமைவாய்ந்த 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும் அதே போன்று உலக பதினொருவர் அணி என்பது சர்வதேச கிரிக்கெட் சபையினுடைய அந்தஸ்து கொண்டுள்ள ஆசிய அணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளினுடைய 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும். டெஸ்ட், ஒருநாள், ரி-20, ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான ரி-20 தொடர், 10 ஓவர்கள் கொண்ட போட்டி என பல்வேறு போட்டிகளை பார்த்து இரசித்த இரசிகர்களுக்கு, இப்போட்டித் தொடர் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கவுள்ளது. http://athavannews.com/நட்சத்திர-வீரர்களுக்கான/
  • சிரியாவில் கிளர்ச்சியார்கள் மீது உக்கிர தாக்குதல்: மூன்று பகுதிகளை கைப்பற்றியது அரசுப்படை!     by : Anojkiyan சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கிய பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கியப் பகுதிகளான அல் நக்யார், அர நபியா, அல் டையிர் ஆகிய பகுதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சிரிய அரசுப் படைகளால் தங்கள் வசம் உள்ள பகுதிகள் கைப்பற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மீதமுள்ள ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் மேற்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் சிரிய படைகள் வலுவடைந்துள்ளன. முன்னதாக, சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில், கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. http://athavannews.com/சிரியாவில்-கிளர்ச்சியார/
  • யாழ் பல்கலைகழக பகிடி வதை விசாரணை  அறிக்கை தொடர்பாக - வ.ஐ.ச.ஜெயபாலன் ’ யாழ் பல்கலைக் கழக கிழிநொச்சி வளாகத்தில் 2020ம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் பகிடி வதையும்  குற்றச் செயல்மட்டத்துக்கு சீர்குலைத அதிற்ச்சிதரும் செய்திகள் 06.02.2020 அன்று வெளியாகி நமக்கெல்லாம் பேரதிற்சியை ஏற்படுத்தியது. மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணை ஆரம்ப அறிக்கை யாழ் பல்கலைக் கழப் பதிவாளரால் 24.02.2020 வெளியிடபட்டுள்ளது.  விசாரணைகள் யாழ் பல்கலைக்ழக மாண்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதிக்கும் அதேசமயம் சம்பந்தபட்ட  மாணவர்களின் திருந்திய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. இதற்க்காக பழைய மணவன், முன்னைநாள் மாணவர் தலைவன் என்கிற வகையில் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிக்கிறேன்.   யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகம் மிகுந்த பொறுப்புணர்வோடும் நிதானத்தோடும் விசாரணைகளை நடத்துவது நிம்மதி தருகிறது. பாதிக்கப் பட்ட மாணவ மாணவிகளின் நலன்களை கவனத்தில் கொண்டு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளை விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டு செயல்படுவது சரியான நடைமுறையாகும்.  சந்தேகத்துக்கிடமில்லாமல் தவறு நிரூபிக்கப் படுகிற இடத்து தண்டனைகள் வளங்கபடும். எனினும் மாணவர்களுக்கு  தண்டணைகள் வளங்கும்போது  ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக வளங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பல்கலைக் கழக பகுடிவதைக் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துக்கு நிறைவேற்றபடும் தண்டனையைவிட ஒத்திவைக்கபட்ட தண்டணைகளே பெரியும் பயனுள்ளதாக அமையும். இதனையும் பல்கலைக்கழக விசாரணைக்குழு கவனத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகிறேன்.  ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் தவறு செய்த மாணவர்களுக்கு கால்கட்டாகவும் அதேசமயம் மீண்டும் தவறிளைத்தால் தப்பமுடியாது என்ற  கடுமையான எச்சரிக்கையாகவும் அமையும்.  அதே சமயம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நல்வழிப்படவும் கல்வியை பூர்த்தி செய்யவும் நல்ல குடிம்மகனாக மேம்படவும் ஒரு வாய்ப்பளிப்பதாகவும்  அமையும். பாதிக்க பட்ட மாணவ மாண்விகளுக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தாத தீர்பாகவும் ஒத்திவைக்கபட்ட தண்டனைகள் அமையும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். யாழ் பல்கலைக் கழகத்துக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன்