Jump to content

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா


Recommended Posts

அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து - ஈரான்

அணு ஆயுத உற்பத்தி நிறுத்துவதாக 2015ம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது தொடர்பாக , அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா இங்கிலாந்து ஆகிய ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள  ஜெர்மனியுடன் ஈரான் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டது. 

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2018ம் ஆண்டு அறிவித்தார். இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் உருவானது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

அண்மையில் ஈரான் தளபதி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. எந்த விதமான நிர்ப்பந்தங்களும் தங்களை கட்டுப்படுத்தாது என ஈரான் அரசு அறிவித்துள்ளது. 

https://www.polimernews.com/dnews/95639/அணு-ஆயுத-ஒப்பந்தம்-ரத்து--ஈரான்

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரான் அறிவிப்பு: "அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை"- இனி என்ன நடக்கும்?

"அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை": இரான் அறிவிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அணு ஒப்பந்தம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை என இரான் அறிவித்துள்ளது.

அணு ஒப்பந்தம்

P5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை 2015ல் இரான் ஏற்றுக்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்குப் பதில் இரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறைத்துக்கொள்ளப் போவதில்லை

இரான் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், யுரேனிய செறிவூட்டல் திறனை தாங்கள் குறைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி உள்ளது.

தெஹ்ரானின் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரான் அரசு.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரானின் சக்திமிக்க புரட்சிகர காவல் படையின் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ இராக்கின் பாக்தாத் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.

இது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது.

இப்படியான சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளது இரான்.

Presentational grey line

தொடர்புடைய செய்திகள்

Presentational grey line

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

இதனிடையே பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு மத்தியில், இராக் நாடாளுமன்றம் வெளிநாட்டுத் துருப்புகள் இராக்கைவிட்டு வெளியேற வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஏறத்தாழ 5000 அமெரிக்க துருப்புகள் இராக்கில் உள்ளது. ஐ.எஸ் அமைப்பைக் கட்டுப்படுத்த சென்றவர்கள் இவர்கள்.

திரும்ப தாக்குவோம்

காசெம் சுலேமானீ பலியானதற்கு பதில் தாக்குதல் இரான் தொடுத்தால், அமெரிக்காவும் திரும்ப தாக்கும். அந்த தாக்குதல் வீரியமானதாக இருக்கும் என கூறி உள்ளார் அதிபர் டிரம்ப்.

Presentational grey line

தொடர்புடைய செய்திகள்

இரான் அணு ஒப்பந்தம்

"அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை": இரான் அறிவிப்புபடத்தின் காப்புரிமைAFP

அணு ஆற்றல் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015இல் ஓர் ஒப்பந்த செய்து கொண்டது இரான்.

இரான் அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு அறிவித்தார். புதிய ஒப்பந்தம் ஒன்றைத் தாம் ஏற்படுத்த இருப்பதாகவும் அப்போது கூறி இருந்தார்.

இரான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 2018ஆம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கத் தொடங்கியது இரான்.

இப்படியான சூழலில்தான் 2015ஆம் ஆண்டு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூறி உள்ளது.

அணுகுண்டு செய்யுமா இரான்?

தங்கள் அணுசக்தி கொள்கை அமைதிக்கானது என பலமுறை இரான் கூறி உள்ளது. ஆனால், அந்நாடு அணு ஆயுதம் தயாரிக்கிறது என அமெரிக்க சந்தேகிக்கிறது.

"அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை": இரான் அறிவிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

யுரேனிய செறிவூட்டல் திறனை அதிகரிக்கும்பட்சத்தில் இரானால் சில மாதங்களில் அணு ஆயுதம் தயாரிக்க முடியும்.

உலகநாடுகள் என்ன சொல்கின்றன ?

ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சிலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.

அதில் இரான் தனது முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.

https://www.bbc.com/tamil/global-51004134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் முழுவதும் அவர்களும் நிம்மதியாய் வாழ்வதில்லை

அடுத்தவனையும் நிம்மதியாய் இருக்கவிட்டதில்லை.

எங்கு தொட்டாலும் எதை தொட்டாலும் ...மதம் மதம் மதம்..

நாங்கள்தான் புனிதம் என்பார்கள்.

சரி அடுத்தவனைவிட நாம் புனிதம் என்றால், எந்த வகையில் அடுத்தவனைவிட நாங்கள் புனிதமாயிருக்கிறோம் என்று அவர்களால் நிரூபிக்க முடியாது.

ஏனென்றால் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டே பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரேஞ்ச் உடை அணிவித்து கைகளை பின்னால் கட்டி கழுத்தை அறுத்து தலையை தனியாய் துண்டிக்கும் இவர்களிடம்  எங்கே புனிதம் ஒட்டிக்கொண்டிருக்கிறது?

கேட்டால் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை, இஸ்லாம் அமைதியை போதிக்கிறது என்பார்கள்.

அது உண்மையென்றானால் அந்த படுபாதக செயலுக்கு எதிராக உலக மக்களுடன் சேர்ந்து அமைதியை நேசிக்கும் முஸ்லீம்கள் அனைவருமே குரல் கொடுத்திருக்க வேண்டுமே, செய்தார்களா?

தாம் அடுத்தவனுக்கு கொடுமை விளைவிக்கும்போது இரண்டே இரண்டு வழிகளை இவர்கள் கடைபிடிப்பார்கள் ..

ஒன்று

அதெல்லாம் அமெரிக்கா இஸ்ரேல் சதி என்று சுலபமாக அடுத்தவன்மேல் பழி சுமத்துவார்கள்.

அடுத்தது

எதுவுமே பேசாது மெளனமாய் இருப்பார்கள்.

ஆக குற்றவாளியை மனமுவந்து காப்பாற்றும் இவர்கள் எப்படி அமைதியை போதிக்கும் வழியில் வாழ்பவர்கள்?

கடல் கடந்து பல எல்லைகள் கடந்து  கண்ணீர் வடித்தபடியே ரொம்ப அப்பாவிகள்போல் லட்சக்கணக்கில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் நோக்கி வருவார்கள்..

வந்து அங்கு நிரந்தர வதிவுரிமை கிடைத்ததும் தேவாலயங்களை கடந்துபோகும்போது துப்புவார்கள்,

கோவில்களை கடந்துபோகும்போது துப்புவார்கள்,

தம் குழந்தைகளுக்கும் அதை கற்று கொடுப்பார்கள்..

வாழ்வு தந்த நாட்டுக்காரனையே அல்லாஹு அக்பர் என்று கூவியபடி.

கத்தியால் குத்துவார்கள், லொறி ஏத்தி நசுக்குவார்கள்,காரினால் மோதுவார்கள்,சரமாரியாக சுட்டு கொல்வார்கள், குண்டு வைப்பார்கள்...

ஆனால் தமக்கு அடுத்தவன் ஏதாவது சுண்டுவிரலில் காயம் வர பண்ணினால்கூட உடனே  ...

உலகத்தில் பல மூலைகளிலிருந்து கிழம்பி வந்து..

இஸ்லாத்தை  அழிக்க பார்க்கிறார்கள், இஸ்லாமியர்களுக்கு கொடுமை விளைவிக்கிறார்கள்,

இதை கேட்பதற்க்கு யாருமில்லையா, இறைவன் இவர்களுக்கு தக்க பதிலளிப்பான் என்று புலம்புவார்கள்.

ஒன்றுமேயில்லாத உங்கள் ஒண்ணரையணா மதத்துக்காய் 

அடுத்த மதத்தவனை கொத்து கொத்தாய் கொன்று என் மதம் புனிதம் என்று நீங்கள் கொடூர மகிழ்ச்சி கொள்ளுவது சரியென்றால்...

உங்களின் அஸ்திவாரத்தையே அடியோடு புடுங்கி எறியவேண்டும் என்று பிற மதக்காரன் ஆவேசபடுவதில் என்னதான் தவறிருக்கிறது?

அவர்களின் அனுமதியில்லாமலயே அமெரிக்கா செய்யும் புனிதபணிக்கு இஸ்லாமியரால் பாதிக்கப்படும் உலகின் எந்த மனித இனமும் கண்ணீர் வடிக்காது!

அமெரிக்காவும் இஸ்ரேலும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம்  இஸ்லாமியம் தவிர்ந்த உலகில் உள்ள அனைத்து மதத்தவர்களையும் முழங்காலில் நிற்க வைத்து நெற்றி பொட்டில் சுட்டு கொல்லும், அல்லது வரிசையாய் நிற்க வைத்து கழுத்தை அறுத்து மகிழும்.

சீனா சொல்வதுபோல் பொருளாதாரம் பிராந்திய தலையீடுகள் என்பவற்றில் அமெரிக்கா உலக பொலிஸ்காரனாக செயல்படுகிறதுதான் , ஆம் ஒரு வகையில் அது உண்மைதான்..

ஆனால்...

கொடூர மதவெறி கொண்ட இஸ்லாமியர்களிடமிருந்து தமது நாட்டின் இராணுவத்தை பலிகொடுத்து உலகை பாதுகாப்பதும் அவர்களே.

அதற்கும் பொலிஸ்காரன் என்றுதான் அர்த்தம்!

சுலைமானேயின் இறப்பு...அல்லாவின் பேரை வைத்து உலகை மிரட்டலாம் என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு அபாய ஒலி..

நேற்று ஐ எஸ் தலைவர்... இன்று நீங்கள்...

நாளை...

உலகை உங்கள் மதத்தை வைத்து மிரட்டலாம் என்று நினைக்கும் உங்களில் ஒருவர்..;

வாழ்க அமெரிக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலைமானி

உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி இறுதிச்சடங்கால் அமெரிக்கா பீதி!

அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்த போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் கூறுகிறார்கள்.

இதையடுத்து நேற்று சுலைமானி உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டு வரப்பட்டது. ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து

லட்சம் பேர்

அதேபோல் பல லட்சம் பேர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 15 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் எத்தனை

மொத்தம் 30 கிமீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்டு இருந்தது. இந்த கூட்டம் எவ்வளவு தூரம் இருந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது . இவ்வளவு மக்கள் அந்நாட்டு அரசுக்கு ஆதரவு தருவது, அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தத்க்கது. இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அதிகாரம் மிக்கவராக திகழ்ந்தார். சிரியா போர் வர இவரும் ஒரு வகையில் காரணம். இவரை பலமுறை இப்படி கொல்ல சதி நடந்து இருக்கிறது.

1998ல் இருந்தே இவர் அந்த ராணுவ ஜெனரல் பொறுப்பில் இருந்தார். சுலைமானி நினைத்தால் ஈரானிலும், ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஈரானை வலிமையாகியவர்களில் இவரும் முக்கியமானவர்.

மக்கள் கூட்டம்

அதனால்தான் இவரின் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு மக்கள் கூடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தை பார்த்த ஈராக், அமெரிக்காவுடன் உறவை முறித்துக்கொள்ளும். அமெரிக்க படைகளை ஈராக் வெளியே அனுப்பும் என்றும் கூறுகிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/massive-crowds-mourn-for-iran-quad-force-military-general-qassim-soleimani-us-upsets-373373.html

Link to comment
Share on other sites

சுலைமானி கொலைக்கு பழி வாங்க நடவடிக்கை எடுக்கப்படுமென புதிய தளபதி அறிவிப்பு

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள இஸ்மெயில் கானி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ தளபதி மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 2015 போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தம் கைவிடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

https://www.polimernews.com/dnews/95726/சுலைமானி-கொலைக்கு-பழி-வாங்கநடவடிக்கை-எடுக்கப்படுமெனபுதிய-தளபதி-அறிவிப்பு

 

Link to comment
Share on other sites

டிரம்ப் தலைக்கு ரூ.576 கோடி: ஈரான் விலை

டெஹ்ரான்: அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஈரான் முக்கிய படைத் தளபதி குவாசிம் சுலைமானி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.576 கோடி பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்தது. அதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் சமீபத்தில் தீவிரமடைந்தது. ஈரான் ராணுவத்தின் குத்ஸ் படைப் பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, சமீபத்தில் ஈராக் சென்றிருந்தார். அப்போது அமெரிக்க படைகள், ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் எனவும் எச்சரித்தது.

இந்நிலையில், சுலைமானி உடல், அஹ்வாஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், தெஹ்ரானில் உள்ள என்கேலாப்-இ-எஸ்லாமி (இஸ்லாமிய புரட்சி) சதுக்கத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சுலைமானியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது.

அப்போது பெயர் வெளியிடப்படாத மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 8 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசாக வழங்கப்படும். ஈரானில் 8 கோடி மக்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து தலா 1 டாலர் வீதம் 8 கோடி டாலர் பெற்று பரிசு வழங்கப்படும், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2451755

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முட்டாளது சுயநலத்தால் போர் வர போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தின் மீது இவ்வளவு மக்கள் போவதை பார்க்க பயமாக உள்ளது , பொதுவாக பாலத்தின் மீது சாதாரண இராணுவ அணிவகுப்பு கூட நிறுத்தி நடந்து போவார்கள் காரணம் பரவதிர்வினால் பாலம் இடிந்துவிடும் 

Link to comment
Share on other sites

மெலிந்தோரை வலிந்தோர் தாக்குவார்.

அமெரிக்க நாடு சீனாவையோ இல்லை உருசியாவையோ தாக்கது. ஆனால், ஈரானை தாக்கும். 

ஈரான், பதிலுக்கு அமெரிக்காவை தாக்காது. இஸ்ரேலை இல்லை சவூதியை தாக்கலாம். அதுவும் நேரடியாக இல்லை, ஒட்டுக்குழுக்கள் ஊடாக. 

இதுதான் இன்றைய போர் விதிமுறைகள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஒரு முட்டாளது சுயநலத்தால் போர் வர போகுது 

சரி பிழைகளுக்கு அப்பால்.....அமெரிக்காவின் பொலிஸ்காரன் விளையாட்டு  ஒரு சில இடங்களுக்கு தேவையானதாகவே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலேமானீ இறப்பு : கண் கலங்கிய இரான் அதிஉயர் தலைவர்

கண்கலங்கிய இரான் அதிஉயர் தலைவர்படத்தின் காப்புரிமைAFP

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பெயரில் இராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுலேமானீ கொல்லப்பட்டார்.

இரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா காமேனி பாரம்பரிய முறைப்படி நடந்த தொழுகைக்கு தலைமை தாங்கினார். ஒரு கட்டத்தில் அவரும் அழ துவங்கினார்.

சுலேமானீயின் மரணத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என இரான் உறுதியளித்துள்ளது. மேலும் 2015ம் ஆண்டு கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்தும் இரான் பின்வாங்கியது.

62 வயதான சுலேமானீ மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். மேலும் அமெரிக்க நாட்டை பொறுத்தவரை சுலேமானீ பயங்கரவாதியாக கருதப்பட்டார்.

ஆனால் சுலேமானீயின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட காட்சிகளை இரானின் ஊடகங்களில் காணமுடிகிறது.

கண்கலங்கிய இரான் அதிஉயர் தலைவர்படத்தின் காப்புரிமைREUTERS

''அமெரிக்காவிற்கு மரணம்'' என்ற முழக்கங்களோடு , இரான் மக்கள் இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளாக கலந்துக்கொள்கின்றனர் .

என் தந்தையின் மரணத்தோடு அனைத்துமே முடிந்துவிட்டது என நினைத்து கொள்ளாதீர்கள் என அதிபர் டிரம்புக்கு, சுலேமானீயின் மகள் சீயிநாப் சுலேமானீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப் என்ன பதிலளித்துள்ளார்?

இரான் தக்க பதிலடி கொடுப்பதாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவை இலக்கு வைத்தால், மேலும் இரானின் 52 பாரம்பரிய தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுலேமானீ இறப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மற்ற உலகத் தலைவர்கள் நிதானத்தை வலியுறுத்துகின்றனர்.

இரானின் முக்கியமான பாரம்பரிய தங்கள் என்னென்ன?

இரானின் பாரம்பரிய தலங்கள் தாக்கப்படும் என டிரம்ப் விடுத்த எச்சரிக்கை, இரானியர்கள் மற்றும் பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சர்வதேச சட்டத்தின்படி அவ்வாறான செயல்கள் போர் குற்றமாக கருதப்படும்.

யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டஜன் உலக பாரம்பரிய தலங்களை இரான் கொண்டுள்ளது.

இரானை ஆட்சி செய்த குவாஜார் மன்னர்களின் கொலெஸ்டான் அரண்மனை, இஸ்ஃபாஹான் நகரத்தில் உள்ள 17ம் நூற்றாண்டின் நக்ஷ் இ ஜஹான் சதுக்கம், மற்றும் 518கி.மு வில் கட்டப்பட்ட பெர்ஸ் போலீஸ் கட்டடம் என பல பாரம்பரிய தலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் யுனஸ்கோவின் பட்டியலில் இடம்பெறாத முக்கியமான பல கலாசார முக்கியத்தும் வாய்ந்த இடங்களும் இரானில் உள்ளன.

https://www.bbc.com/tamil/global-51010488

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

பாலத்தின் மீது இவ்வளவு மக்கள் போவதை பார்க்க பயமாக உள்ளது , பொதுவாக பாலத்தின் மீது சாதாரண இராணுவ அணிவகுப்பு கூட நிறுத்தி நடந்து போவார்கள் காரணம் பரவதிர்வினால் பாலம் இடிந்துவிடும் 

விழுந்தால் நல்லது .

மதம் மதம் என்று  நஞ்சை விதைப்பவர்கள் அல்லாஹ்விடம் போய் சேரட்டும் .

Link to comment
Share on other sites

ஈரான் தளபதி இறுதிச் சடங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பாக்தாதில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி காஸிம் சுலைமானியின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்ந ஊரான கெர்மான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35  பேர் பலியானதாகவும், இறந்தவர்களின் உடல்கள் சாலை ஒரங்களில் காணப்பட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, பழிவாங்கும் நடவடிக்கையாக,அமெரிக்க போர் வீரர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/95859/ஈரான்-தளபதி-இறுதிச்-சடங்குகூட்ட-நெரிசலில்-சிக்கி-35பேர்-உயிரிழப்பு

Link to comment
Share on other sites

அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றுக்கு பெண்டகன் மறுப்பு

ஈரான் நாட்டிலுள்ள கலாச்சார மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பை, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் மறுத்துள்ளது.

ஈரான் நாட்டின் முக்கிய தளபதி குவாஸிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த எண்ணினால் அந்நாட்டின் 52 கலாச்சார மையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

அவரதுக் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், அமெரிக்க படைகளின் தாக்குதல் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஈரானின் கலாச்சாரத்தை மதிப்பதாகவும், சர்வதேச போர் விதிமுறைகளை மீறி, கலாச்சார மையங்கள், குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/95872/அமெரிக்க-அதிபர்-டிரம்பின்கூற்றுக்கு-பெண்டகன்மறுப்பு

Link to comment
Share on other sites

அமெரிக்க ராணுவத்தினர் 'பயங்கரவாதிகள்': ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான்: ஈரான் ராணுவ படைத்தளபதி குவாசிம் சுலைமானியை கொன்றதற்காக அமெரிக்க ராணுவம், அதிபர் டிரம்ப் ஆகியோர் பயங்கரவாதிகள் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி அறிவித்துள்ளார்.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து அமெரிக்கா, ஈரானுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் ராணுவத்தின் குத்ஸ் படைப் பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் சென்றிருந்தபோது, அமெரிக்க படைகள், ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையே போர் உருவாகும் சூழல் நிலவியது.

இந்நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி கூறுகையில், சுலைமான் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான பழியை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

இதனால் அமெரிக்காவுக்கு எதிராக முன்னர் கொண்டு வந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளோம். சுலைமான் மரணத்திற்கு காரணமான அமெரிக்க ராணுவம், படை தளபதிகள், டிரம்ப் என அனைவரும் பயங்கரவாதிகளாக கருதப்படுவர், எனக்கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2452548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சரி பிழைகளுக்கு அப்பால்.....அமெரிக்காவின் பொலிஸ்காரன் விளையாட்டு  ஒரு சில இடங்களுக்கு தேவையானதாகவே தெரிகின்றது.

இப்படி நீங்கள் எல்லாம் உசுப்பேத்துறதால் தான் அமெரிக்கா தான் நினைக்கிறது ,செய்யிறது எல்லாம் சரி என்று நினைக்கிறது...அவர்கள் செய்வதற்கு பின்னால் அவர்கள் சுயநலமின்றி வேறொன்றுமில்லை...நாளைக்கு எங்கட நாட்டிலும் இப்படித் தான் செய்வார்கள்  

Link to comment
Share on other sites

மக்களுக்குள் மிதிபட்டு 56 பேர் இது வரை இறந்துள்ளார்கள். பலர் காயப்பட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பத்து வரையானா எவுகணையினை அல் அசாட் விமானத்தளத்தின் மேல் செலுத்தியுள்ளது.

 

ஊடகங்கள் எவற்றிலும் இது தொடர்பாக செய்தி வரவில்லை , தவறான செய்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, vasee said:

ஈரான் தனது 2ம் கட்ட பழிவாங்கும் தாக்குதலை சற்று முன்னர் தொடங்கியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

As President Trump confers with his top advisers tonight at the White House, aides are making urgent preparations at this hour for him to address the nation after Iran fired missiles at US forces in Iraq.

The specific timing of the address is still to be determined — and could be delayed, as information is being gathered — but two officials tell CNN that a speech is being prepared and plans are being made for Trump to speak tonight from the Oval Office.

https://www.cnn.com/middleeast/live-news/us-iran-soleimani-tensions-intl-01-07-20

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.