Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புது வருடத்தில் நுளையும் போதுஐயையோ எனக்கு ஒரு வயது கூடப் போகிறதேஎன வருத்தப்படும் சில வயதுக்கு வந்த பெரியவர்களைப் பார்த்திருக்கிறோம்

ஆனால் ஐப்பானில் ஒரு பெண் தன் வயது ஏற ஏற பெருமிதம் கொள்கிறார்.

C028-C46-B-D232-4-E41-B313-7-F46-BF7-D4-

Tanaka  என்ற ஒரு  பெண்ணுக்கு இந்த வருடம் ஜனவரி இரண்டாம் திகதி 117 வயதாகி இருக்கிறது. இவர்தான் இன்றைய நிலையில் உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தில் இருக்கிறார்.

எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாக 1903ம் ஆண்டு பிறந்த Tanka 1922இல் திருமணம் செய்து தனது கணவனுடன் நூடுள்ஸ்-அரிசி விற்கும் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். தனது கணவணின் மறைவுக்குப் பின்னர் தனியாகவே அந்தக் கடையை இவர் நடத்தி வந்திருக்கிறார். இன்று ஓய்வூதியம் பெறும் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான Tankaவுக்கு ஐந்து பேரப்பிள்ளைகளும் எட்டு  பூட்டப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்

 

காலையில் ஆறு மணிக்கு எழுந்து இரவில்ஒன்பது மணிக்கு படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக கொண்ட  Tanka 2019  மார்ச் இல் இருந்து “உலகத்தில் வயது கூடிய மனிதர்” என்ற இடத்தில் இருக்கிறார்

 

Edited by Kavi arunasalam
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன் தாயே........ இன்னும் சில வருடங்களில் (என்ன ஜஸ்ட் 50 வரை இருக்கலாம்) நான் வயதுக்கு வரும்போது நீங்களும் இருக்க வேண்டும் அம்மா.....!   💐

 • Like 1
Link to post
Share on other sites

"காலையில் ஆறு மணிக்கு எழுந்து இரவில்ஒன்பது மணிக்கு படுக்கைக்குச் செல்வதை வழக்கமாக கொண்ட  Tanka 2019  மார்ச் இல் இருந்து “உலகத்தில் வயது கூடிய மனிதர்” என்ற இடத்தில் இருக்கிறார்"

ஆரோக்கியமான நித்திரை வாழ்வின் சொர்க்கம் !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யப்பானியர்கள்தான் அதிகமாக நூறு வயதுக்கும் மேல் வாழ்வதாகக் கணித்துள்ளார்கள். 

ஒருவர் தும்மினால் நூறு, நூற்றாண்டு என்று சொல்லி அவர் நூறு வயதுவரை வாழுமாறு நாங்கள் ஆசீர்வதிக்கிறோம். 

யப்பானியர்கள் எப்படி ஆசீர்வதிக்கிறார்களோ…??

 

 

 • Like 1
Link to post
Share on other sites

உலகில் 100 வயதுக்கு மேல் வாழ்பவர்களில் யப்பானியர்கள் தான் முதலிடம் என நினைக்கிறேன்.

Link to post
Share on other sites

என்னதான் இருந்தாலும் ஜப்பான் சனத்தொகையில் வேகமாக குறைந்தது வரும் நாடு. அதிகநாள் வாழ்ந்தாலும் இந்தியர்கள் போன்று இளவயதில் 'பிசியாக' 😁 இல்லை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

என்னதான் இருந்தாலும் ஜப்பான் சனத்தொகையில் வேகமாக குறைந்தது வரும் நாடு. அதிகநாள் வாழ்ந்தாலும் இந்தியர்கள் போன்று இளவயதில் 'பிசியாக' 😁 இல்லை .

இள வயது  "பிஸி" என்றால், என்ன  என்று... விரிவாக விளக்குங்களேன்.  :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

இள வயது  "பிஸி" என்றால், என்ன  என்று... விரிவாக விளக்குங்களேன்.  :grin:

இள வயது பிசி என்றால்... அதிகமாகப் உடற்பசி எடுக்கும் இந்திய இளைஞர்கள் ஒரு வீட்டைக் கைப்பற்றி அங்கு உண்டு பசியாறியதும் உண்ட வீட்டையே அழித்து எரித்துக் கும்மாளமடித்தல்.  

Link to post
Share on other sites
38 minutes ago, தமிழ் சிறி said:

இள வயது  "பிஸி" என்றால், என்ன  என்று... விரிவாக விளக்குங்களேன்.  :grin:


தங்களின் தனிநபர் மின்னஞ்சலுக்கு விரிவாக, ஆதாரங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:


தங்களின் தனிநபர் மின்னஞ்சலுக்கு விரிவாக, ஆதாரங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

அம்பனை ஏன் இந்த வஞ்சனை..... இது அநியாயம் இல்லையா.....நீங்கள் மிக மிக நல்லவர் என்று நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோமே, அது தப்பா......டெல் மீ  ப்ளீஸ்....!  😂

Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

அம்பனை ஏன் இந்த வஞ்சனை..... இது அநியாயம் இல்லையா.....நீங்கள் மிக மிக நல்லவர் என்று நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோமே, அது தப்பா......டெல் மீ  ப்ளீஸ்....!  😂

உண்மை. ஒருவரையும் நம்பி நடவாதீர்கள்🤩. ஆனால், நம்ப நடவுங்கள் 🤣

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனீவா வருடாந்த திருவிழா உங்க, ஜெனீவால வருசா, வருசம் ஒரு கோடி ஏத்தி, திருவிழா நடக்கிறதெல்லே... உந்த முறை, இந்தியன் மேளம் அடிக்க மாட்டினம் எண்டு, காசோடை, டெல்லிக்கு ஆள் போயிருக்கு. இவங்களை தப்ப விட்டால், ஒரு வருசத்திக்கிடையில, சீனாவோட சன்னதம் கொண்டாடுவாங்கள் எண்டு டெல்லி வாலாக்கள் நினைத்தாலும், போனவர், கொடுக்கிற இடத்திலை, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நடக்க வேண்டியது, நடக்கும் என்று, சிரிச்சுக் கொண்டு அலுவல் பார்க்கிறாராம். நம்மடை பொறுக்கி, சுப்புரமணிய சுவாமி தான், முதலிலை ஆவெண்டவர் போலை கிடக்குது.  ராஜபக்சேக்களை நம்பலாம். ஆக்கள் தங்கப்பவுன் எண்டு கொண்டு நிக்குதாம் மனிசன். ஜெனீவாவிலை, எல்லா உதவிகளையும் செய்யோணும். மகிந்தா எண்ட மச்சான் எண்டு நிக்கிறாராம். அவையள், அலுவல் பார்க்க, சீனாவை தான் சுத்துகினம், இந்தியாவை இல்லை எண்டுதாம் மனிசன். பாகிஸ்தான் மேளம், அடிக்கும் எண்டு சொல்லிப்போட்டு போய் இறங்கின கையோட, அவர் ஆட்சிக்கே சிக்கலாம். டொனால்டு காலத்திலை எட்டத்திலை வச்சிருந்த, நாட்டினை, பைடேன் காலத்திலை, கிட்ட கொண்டு போகவேணுமெண்டால், சீனா காரன் நிண்டாடுற, இலங்கைப்பக்கம், நிக்கிறது சரிவராது எண்டு ஒரு கதையாம் அங்கை. ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம், தங்களோடை எண்டு, சிங்களம் நினைக்க, மாலாவி நாட்டினை மடக்கி தங்கட பக்கம் இழுத்து போட்டினம், பிரிட்டிஷ்க்காரர் எண்டு, கொழும்பிலை கொஞ்சம் கொதியாம். இண்டைக்கு, பிரிட்டிஷ் எம்பசிக்கு முன்னாலை, தமிழ், சிங்களம், முஸ்லீம், பொது மக்கள் எண்டு ஒரு 10 -15 பேர், புலிகள் கடத்தின, தங்கட பிள்ளையளை தேடி தாருங்கோ எண்டு போராடி இருக்கினம். எங்க, விமல் அய்யாவை உதுகிலை காணவில்லை எண்டு, கமெண்ட் போட்டு நக்கல் அடிச்சிருக்கினம். அடுத்த இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடலாம் எண்டு, இனவாதம் கக்குறார், ஆனந்த வீரசேகர.... இந்தியா அப்பப்ப 13 பத்தி, கதைக்கும், அதை சீரியஸா எடுக்காமல், மாகாணசபை தேர்தலும் வேணாம், மாகாண சபைகளும் வேணாம். எல்லாத்தையும் கடாசி விடவேணும் எண்டு அந்தாள் சொல்ல, அடோய்.... அடோய்....ஜெனீவா  நிலைமை புரியாம கத்தாத  என்று மகிந்தா மூலக் கொதிக்காரர் மாதிரி கத்திப் போட்டாராம்.  உவருக்கு போட்டியா, சரத் ஆரம்பத்திலை கதைக்க வெளிக்கிட்டவர். ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில், தனக்கு, அது, தமிழ் பேசும் மக்களின் வாக்குகளுக்கு ஆப்படிக்கும் எண்டு, மனோ கணேசன் சொன்னதை கேட்டு, சஜித் அவரை ஆப் பண்ணிப் போட்டாராம். ஆக, உந்த திருவிழாவுக்கு, புது மேளக்காரர், வருகினமோ, அல்லது இந்தியன் மேளம் போடுற, சுப்பிரமணிய சுவாமி சொல்லுற மாதிரி வந்து, தலைகீலா நின்னு அடிக்கிற அடியிலை, மேளம் தெறிச்சு உடையுமோ, தெரியேல்ல. ஏதாவது தகவல் வந்தா சொல்லி அனுப்புங்கோ. ஆனாலும், கொரோனா போயிடும் எண்டு நினைக்கிறன். அடுத்த வருசம் நேரில போய், திருவிழாவை பார்க்கலாம்.
  • இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் மேலதிக தரவு:  சந்தோஷம் / சினேகம் முதல் நீக்கின் குற்றம் நடு நீக்கின் வறுமை கடை நீக்கின் உடலில் ஒரு உறுப்பு கடையிழந்து நிற்கின்றது, ஆண்களைவிட பெண்கள் இந்த பகுதியில் ஆதீத கவனம் செலுத்துவார்கள் சிறுவயதில் இருந்தே😁
  • தூய விண்ணரசித் தாயே அம்மா  
  • மூவரிலும் குற்றமே, பெற்றோர் கவனமாக அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டும், நாட்டு நடப்புகளை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும், மகள் - தன் விருப்பங்களை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், அளவுக்கு மீறிய ஆசை ஆபத்தானது, அந்தரங்களை படமெடுத்து அனுப்புமளவுக்கு அறிவில்லையா, ஆண் - ஒருவரின் பலவீனத்தை பயன்படுத்தி இப்படிப்பட்ட செயலை செய்பவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.