• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்?

Recommended Posts

இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்?

36.jpg

-இலக்குவனார் திருவள்ளுவன்

ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும் பொழுது அச்சொல்லின் வெளிப்படையான பொருளுக்கு முதன்மை அளிக்காமல் சொல்ல வரும் உண்மைப் பொருளையே நாம் காண வேண்டும்.

இத்தகைய மரபுத்தொடர்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தமிழில் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால், நூற்றுக்கணக்கில்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தமிழ் மரபுத்தொடரைப் பார்க்கும் முன்னர் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.(சிலருக்கு ஆங்கிலத்தில் சொன்னால்தானே புரிகிறது!) Kicked a bucket என்றால் வாளியை உதைத்தான் என்று பொருள் அல்ல. இந்த மரபுத் தொடர் இறந்துவிட்டதைக் குறிக்கிறது. பொருளாக இருந்தால் அப்பொருள் சீர்கெட்டுப் பயனற்றதாகி விட்டது என்பதைக் குறிக்கிறது. இப்படி எல்லா மொழிகளிலும் சூழலுக்கேற்ப வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருளும் உணர்த்தும் பொருளும் வெவ்வேறாக இருப்பதே இயற்கை. இனித் தமிழுக்குச் செல்வோம்.

 

’வாலைச்சுருட்டிக் கொண்டு போ’ என்றால் கேட்பவனுக்கு வால் இருப்பதாகவும் அதனைச் சுருட்டிக் கொள்ளச் சொல்வதாகவும் பொருளல்ல. ’எதுவும் பேசாமல் போ’ என்றுதான் பொருள்.

‘வாயைக் காட்டாதே’ – அவன் முன்பு போய் வாயைக் காட்டாதே என்பதுதான் நேர் பொருள். மருத்துவர் முன் வாயைக்காட்டுவது இயற்கை. இங்கே. வாயிலிருந்து இனி எதிர்ச்சொல் வரக்கூடாது என்பதைக் குறிக்கும் வகையில் எதிர்த்துப் பேசாதே எனப் பொருள்.

‘பூசி மெழுகுகிறான்’ என்றால் தரையைப் பூசி மெழுகுவதாகப் பொருளல்ல. நிகழ்ந்ததை மறைத்தல் அல்லது குற்றத்தை மறைத்தல் என்றுதான் பொருள்.

 

‘தேர்வை எப்படி எழுதினாய்’ எனக் கேட்டால் ’வெளுத்து வாங்கி விட்டேன்’ என்றால் துணியை வெளுத்ததாகப் பொருளல்ல. நன்றாக எழுதியுள்ளதாகப் பொருள். நன்றாகச் செய்வதைக் குறிப்பதால் சில இடங்களில் நன்றாக அடித்துவிட்டதாகவும் பொருள் வரும். அடிப்பதை அடி பின்னிவிட்டான் என்றும் சொல்வதுண்டு. இங்கே எதையும் பின்னவில்லை.

‘அரசாங்கம் வாய்ப்பூட்டு போடுகிறது’ என்றால் ஒவ்வொருவர் வாயிலும் பூட்டு போடுவதாகவா பொருள்? பேச்சுரிமையத் தடுக்கும் வகையில் பேசவிடாமல் செய்கிறது என்றுதானே பொருள்!

‘நாக்கு நீளுகிறது’ என்றால் ஏதோ மாய மந்திர வித்தையில் நாக்கு நீண்டுவிட்டதாகவா பொருள். அதிகமாகப் பேசுவதாகப் பொருள். ‘என்னிடமா காது குத்துகிறாய்?’ என்றால் என்ன பொருள்? ‘என்னை ஏமாற்றப் பார்க்காதே’ எனப் பொருள்.

‘இன்றோடு உனக்குத் தலை முழுகி விட்டேன்’ என்றோ ‘கை கழுவி விட்டேன்’ என்றோ சொன்னால் தொடர்பை விட்டு விட்டதாக அல்லது கை விட்டு விட்டதாகப் பொருள்.

‘அவளையே திருமணம் செய்கிறேன் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றான்’ என்றால் விடாப்பிடியாக நிற்கிறான் - உறுதியாக இருக்கிறான் எனப் பொருள். ‘பல்லைக்கடித்துக் கொண்டு சமாளித்தேன்’ என்றால் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டதாகப் பொருள்.

 

‘ஏனடா மென்னியைத் திருகுகிறாய்’ என்பதற்கு என்றைக்காவது, ’மென்னியை நெரித்தது போதும்’ என்றா சொல்கிறார்கள். மென்னி என்றால் குரல் வளை. குரல் வளையையோ குரல் வளை உள்ள கழுத்துப்பகுதியையோ திருகுவதாகவோ நெரிப்பதாகவோ பொருளல்ல. ‘இன்னல் தந்தது போதும். விட்டு விடு’ என்று பொருள்.

‘நேரம் காலம் பார்க்காமல் வந்து என் கழுத்தை அறுக்காதே’ என்கிறோம்.அப்படியானால் நேரம் பார்த்து வந்து கழுத்தை அறுக்கலாமா? ஓய்வில்லாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யாதே என்பதைத்தான் இப்படிச் சொல்கின்றனர்.

‘என் தலையை உருட்டியது போதும்’ என்றால் இதுவரை தலையை வெட்டி எடுத்து பந்து விளையாடுவதுபோல உருட்டி விளையாடுவதாகவா பொருள்? குறிப்பிட்ட செய்தி அல்லது பொருண்மையில் அவரைப்பற்றிப் பேசியது போதும் என்கிறார்.

‘தலை இருக்க வால் ஆடலாமா?’ என்பது எந்த வால் ஆட்டத்தையும் குறிக்கவில்லை. பணியிலோ அகவையிலோ மூத்தவர் இருக்கும் பொழுது தானாக முந்திக்கொண்டு செயலில் இறங்குவதை அல்லது கருத்து சொல்வதைக் குறிப்பிடுவது.

‘ஈரக்குலையைப் பிடுங்கிடுவேன்’, ‘நெஞ்சில் ஏறி மிதித்து விடுவேன்’, ‘குடலை உருவி மாலையாகப் போடுவேன்’’ என்றெல்லாம் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஈரக்குலையைப் பிடுங்குவதாகவோ நெஞ்சில் ஏறி மிதிப்பதாகவோ குடலை உருவுவதாகவோ பொருளல்ல. செல்வாக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி வெற்றி பெறுவேன் எனப் பொருள்.

‘வயிற்றில் அடித்துவிட்டான்’ என்றால் உணவு வரும் வழிக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் வருவாய் வரும் வழியைத் தடுத்து விட்டான் எனப் பொருள்.

‘சாட்டையை எடுத்தால்தான் சரி வருவான்’ என்பார்கள். ‘அம்மா இருந்திருந்தால் இந்நேரம் சாட்டையை எடுத்திருப்பார்கள்’, ‘ஆணையர் சாட்டையைச் சுழற்றுவாரா?’ – இவை செய்திகளில் இடம் பெற்றவை. வன விலங்குகளை அடக்கவா அல்லது அடிமையை மிரட்டவா சாட்டையை எடுக்கப் போகிறார்கள். தவறான நடவடிக்கைகள் அல்லது குற்ற நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்குவதைத்தான் இங்கே குறிக்கிறது.

‘புத்தகத்தைக் கரைத்துக் குடித்து விட்டான்’ என்கிறோம். அப்படிச் செய்தால் வயிற்று வலிதான் வரும். ‘புத்தகத்தை முழுமையாகவும் நன்றாகவும் படித்து முடித்து விட்டான்’ என்றுதான் பொருள்.

‘நெஞ்சு உடைந்து விட்டான்’ என்றால் இதயம் உடைந்ததாகப் பொருளல்ல. மிதமிஞ்சிய வேதனை அடைந்து விட்டான் என்று பொருள். காரணம் கேட்ட பொழுது மனம் உருகி விட்டது என்றால் மனம் பனியல்ல உருகுவதற்கு அல்லது வெண்ணெய் போல் சூட்டில் உருகும் பொருளுமல்ல. கேட்போர் மனம் இரங்கும் வகையைத்தான் குறிக்கிறது.

’தாளம்போடாதே, ஒத்து ஊதாதே’ என்பனவெல்லாம் நடுவுநிலையின்றி தவறு என்று தெரிந்தும் ’ஒருவர் சொன்னதை எல்லாம் சரி என்று சொல்லாதே’ என்பதாகும்.

‘பொடி வைத்துப் பேசாதே ‘ என்றால் ‘உட்பொருளை மறைத்து வைத்துப் பேசாதே’ எனப் பொருள்.

சோலி என்பது மார்பாடையைக் குறிக்கும் அயற்சொல். எனினும் வேலை என்றும் பொருள் உண்டு. ’உனக்கு வேறு சோலியே இல்லையா?’ என்றால் ‘எனக்குப் பேசித் தொந்தரவு கொடுக்கிறாயே உனக்கு வேறு வேலை இல்லையா?’ எனக் கேட்பதாகப் பொருள்.

‘போதும்! போதும்! உன் சோலியை முடி!’ என்றால் ‘சொன்னது போதும். நிறுத்து’ எனப் பொருள்.

‘இந்தத் தேர்தலுடன் அவன் சோலியை முடித்துவிட வேண்டும்’ என்றால் , ‘அவன் மீண்டு எழாதவாறு இத்தேர்தலில் அவனைத் தோற்கடிக்க வேண்டும்’ எனப் பொருள்.

‘அவன் சோலியை முடித்து விடுவோமா’ என்றால் ’செயல்பாட்டை நிறுத்தி விடுவோமா’ எனக் கேட்பதாகப் பொருள். அதே நேரம், அடியாளிடம் ‘அவன் சோலியை முடித்து விடு’ என்றால் செயல்பாட்டிற்கு அடிப்படையான, ‘உயிரை எடுத்து விடு’ என்றுதான் பொருள். ஆனால், ‘அவன் சோலியை முடித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றால், தனக்கு எதிரானவனை அல்லது நல்லெண்ணத்திற்கு எதிராகவும் அரச வன்முறையைப் பயன்படுத்தியும் துன்புறுத்துபவனை அல்லது மக்களுக்கு எதிரானவனை அரசியலில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று பொருள்.

சரி. சரி. நம் சோலியை இத்துடன் முடித்துவிடுவோம்.
 

 

https://minnambalam.com/k/2020/01/03/36

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கு கா.ஆ.உறவுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு மகஜர்   by : Litharsan வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை வடக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிசேலா பஸ்லெற் யெறியாவுக்கு இன்று மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில், “மேற்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடியும் வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டமைக்குக் காரணமான சிறீலங்கா அரசாங்கத்திடமிருந்து எமக்கு நீதி கிடைக்காது என்பதனை நன்குணர்ந்துள்ள நிலையில் நாம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, ஐ.நா. பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்தே நீதியை எதிர்பார்த்து நிற்கின்றோம். கடந்த 16-12-2019இல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி ‘காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதுடன், குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துச் சிந்திக்க முடியும்’ என்றும் அவர்களை திரும்பக் கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளார். ஜனாதிபதியின் மேற்படி கருத்தினை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனாதிபதி கூறுவது போன்று எமது உறவுகள் காணாமல் போகவில்லை. மாறாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினராலும், அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டும், உறவினர்கள் முன்னிலையில் சரணடைந்தவர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்றால் இராணுவமும் அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக இறுதி யுத்தத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் என்ற அடைப்படையில் தற்போதய ஜனாதிபதியும் பொறுப்புக் கூற வேண்டியவரே. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பங்கள் கேட்டறியப்படாமல் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களது சம்மதம் இல்லாமல் ‘காணாமல் போனவர்களுக்கான’ அலுவலகம் திறக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளானது மேற்படி காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு உள்ளக விசாரணைக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியவர்களும் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதனை நியாயப்படுத்தியவர்களும் எப்போதும் மறைமுகமாகத் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு. எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் தாம் செய்த குற்றங்களுக்கு தம்மைத் தாமே தண்டிக்கப் போவதில்லை. எனவே சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றின் மூலமாகவே எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அந்த வகையில் தங்களிடம் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். (1). பொறுப்புக்கூறல் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். (2). இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, யுத்தக் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப் பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேண்டும். (3). வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும். (4). இலங்கைக்கான விசேட ஐ.நா. அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், வடக்கு கிழக்கில் நிலைவரத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும், உறுதுணையாகவும் இருக்க ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஒன்றை வடக்கு கிழக்கில் நிறுவவேண்டும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்” என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/1059926-2/witter   
    • ரிசார்ட் இந்த அரசுக்கு கடந்த கால நிகழ்வுகளின்போது ஆதரவளித்திருந்தால் இப்படி நடந்திருக்காது। இப்போது இவரின் ஆதரவை கேட்பதில்லை எண்டு தீர்மானித்ததால் அவரை அரசுடன் சேர்க்கவில்லை। அங்குள்ள தமிழர்களின் ஆதரவை பெறுவதட்காக நடக்கும் நாடகம் இது। பணத்தின்மூலம் இவன் விரைவில் வெளியே வந்துவிடுவான்। 
    • போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் றிப்கான் பதியுதீனை பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.     போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.     கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   https://www.madawalaenews.com/2020/01/6_23.html    
    • ஆற்று மீன் அறுசுவைக்கு தயாராகின்றது......!   🐋
    • உண்மைதான் கவிஞரே......, 1968 ல் பாலியாறு நகர்ந்தது,  2009 ல் பல்லாயிரமாய் பலி கொண்டு சென்றது.....! அன்று களி தரும் கவிதையிது  இன்று கிலி தரும் கவிதையிது.......!   🤔