• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Kavi arunasalam

வாழ்த்தத்தான் நினைத்தார்கள்

Recommended Posts

7-EAA8441-9-B44-468-F-993-A-E46-BD44-FA7
யேர்மனியில் Krefeld
நகரத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நல் வாழ்த்துக்களுடன் 2020 ஆம் ஆண்டை வரவேற்க விரும்பினார்கள். ஆனால் அவர்களது அந்த  விருப்பம் Krefeld மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு  பேரழிவைத் தரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 

2020 புத்தாண்டு தினத்தில் Krefeld நகரில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் இறந்து போயின. அந்த தீ விபத்துக்கான காரணம் இப்பொழுது வெளியே வெளிவந்திருக்கிறது.

அறுபது வயது ஒரு தாயும் அவரின் நடுத்தர வயது இரு மகள்களும்  ஐந்து வெளிச்சக் கூடுகளை இணையத்தளத்தில் வாங்கி புது வருடத்தில் வாழ்த்துக்களை இணைத்து வெளிச்சக் கூடுகளை அவர்கள் வானத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு  வெளிச்சக் கூடு மிருகக் காட்சிச்சாலையின் கூரையில் விழ அந்தக் கட்டிடம் தீப்பற்றிக் கொண்டது. 1975இல் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்துக்கு அபாய எச்சரிக்கைக் கருவிகள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கவில்லை. தாமதமாகவே தீயணைப்பு நிலையத்துக்கு அறிவிப்பு கிடைத்திருக்கின்றது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வரும் போது தீ முற்றாகவே பரவிவிட்டிருந்தது.

33-C54439-39-AE-4-D81-9-A79-499-DAF34-A1

விபத்துக்குப் பின்னர் அந்த மூன்று பெண்களும் தாங்களாகவே பொலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்

இந்த வெளிச்சக் கூடுகள் (Kong-Ming-Laternen) சீன நாட்டின் ஒரு கண்டு பிடிப்பு. 2000ம் ஆண்டுகளுக்கு முன்னர் போர்கள்  நடக்கும் காலங்களில் செய்திகளை படைகளுடன் பரிமாறிக் கொள்வதற்காக சீனா இவ்வகையான வெளிச்சக் கூடுகளைப் பயன் படுத்தியது.

2000ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் இந்த வெளிச்சக் கூடுகள் ஐரோப்பியச் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. 2009 ம் ஆண்டு Nordrhein-Westfalen மாநிலத்தில் உள்ள Siegen என்ற நகரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் ஒரு வெளிச்சக் கூடு விழுந்து கட்டிடம் தீப்பற்றிக் கொண்டதால் பத்து வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். அப்பொழுது விழித்துக் கொண்ட யேர்மனிய அரசு இந்த வெளிச்சக் கூடுகளின் தன்மையை ஆராய்ந்து  இந்த வெளிச்சக்கூடுகளை ஆகாயத்தில் மிதக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதை  முடிவுக்கு கொண்டு வந்தது.

தீ  விபத்துக்கள் மட்டுமன்றி இந்த வெளிச்சக் கூடுகள் 5000 மீற்றர் வரை உயரத்துக்குச் செல்லக் கூடியவை என்பதால் விமானப் போக்குவரத்துக்கும் ஆபத்தானவை என்பதையும் கருத்தில் கொண்டு 2009 இல் இவற்றை வானத்தில் பறக்கவிடுவதற்கு யேர்மனியில் தடை வந்தது.

வெளிச்சக் கூடுகள்  உருளை வடிவமாக இருக்கும் அவை 30 முதல் 40 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட அளவில் வெளிப்புறம் ரிசு (Tissue) கடுதாசியால் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

67-F34-C9-A-2938-41-CE-BA9-C-F829-D75967

 

வெளிச்சக் கூட்டின் உள்ளே எரிபொருள் களிம்பு(Paste)டன் கூடிய விளக்கு பொருத்தப் பட்டிருக்கும். இந்த விளக்கு எரியும் போது கூட்டின் உள்ளே உள்ள காற்று வெப்பமாக வெளிச்சக்கூடு கைட்ரஜன் பலூன் போலே மேல் எழுகிறதுதங்களுடை விருப்பங்களை வெளிச்சக் கூட்டில் வைத்து வானத்துக்கு அனுப்பினால் அந்த விருப்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கையிலேயே இதை  யேர்மனியர்கள் பயன்படுத்தினார்கள்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யேர்மனியில்  வெளிச்சக்கூடுகளை  விற்பனை செய்வது தடைசெய்யப்படவில்லை. ஆனால் அவற்றை வானில் பறக்கவிடத்தான்  அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பொருளை விற்றவருக்கு எந்தத் தண்டனையும் வரப் போவதில்லை. பறக்க விட்ட தாய்க்கும் அவரது  இரு மகள்களுக்கும்தான் தண்டனை கிடைக்கப் போகிறது. அவர்களுக்கு தலா ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கலாம் என சட்ட வல்லுனர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு துயரச் சம்பவம் நடந்த தன் பின்னர் சோகத்தில் மட்டும் வீழ்ந்து விடாமல் அடுத்த நிலைக்கு உடனடியாக வந்து விடுவதற்கு யேர்மனியர்கள் ஒரு சான்று. இழந்து போன உயிர்களைத் திரும்பப் பெற முடியாது என்றாலும், அழிந்து போன மிருக காட்சிச் சாலையை மீண்டும் கட்டி எழுப்ப தொலைக்காட்சிகள், வானொலிகள், தன்னார்வு நிறுவனங்கள்  வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் யேர்மனியர் பெருமளவு நிதி வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Edited by Kavi arunasalam
  • Like 5
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வல்வெட்டித்துறையில் இந்திரவிழாவின்போதும் புகைக்கூண்டுகளைப் பறக்கவிடுவார்கள். அவை கடலுக்குள் போவதால் இதுபோன்ற தீப்பிடிக்கும் பிரச்சினைகள் வருவதில்லை என்று நினைக்கின்றேன்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, கிருபன் said:

வல்வெட்டித்துறையில் இந்திரவிழாவின்போதும் புகைக்கூண்டுகளைப் பறக்கவிடுவார்கள். அவை கடலுக்குள் போவதால் இதுபோன்ற தீப்பிடிக்கும் பிரச்சினைகள் வருவதில்லை என்று நினைக்கின்றேன்.

ஏகாம்பர மாஸ்ரரைத் தெரிகிறது. வல்வெட்டித்துறை புகைக் கூண்டு தெரிகிறது. ஆகவே இப்போ உங்களை எனக்குத் தெரிகிறது

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

வல்வெட்டித்துறையில் இந்திரவிழாவின்போதும் புகைக்கூண்டுகளைப் பறக்கவிடுவார்கள். அவை கடலுக்குள் போவதால் இதுபோன்ற தீப்பிடிக்கும் பிரச்சினைகள் வருவதில்லை என்று நினைக்கின்றேன்.

அங்கு கடற்காத்து சரியான முறையில் வீடுகளை நோக்கி வீசாததால் இருக்கலாம்......!   🤔

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, Kavi arunasalam said:

ஏகாம்பர மாஸ்ரரைத் தெரிகிறது. வல்வெட்டித்துறை புகைக் கூண்டு தெரிகிறது. ஆகவே இப்போ உங்களை எனக்குத் தெரிகிறது

இந்தத் திரியில் எனது ஊரையும், இளவயது பட்டம் விடும் அனுபவங்களையும் முன்னர் எழுதியிருக்கின்றேன். 😎

 

16 minutes ago, suvy said:

அங்கு கடற்காத்து சரியான முறையில் வீடுகளை நோக்கி வீசாததால் இருக்கலாம்......!   🤔

 

புகைக்கூண்டு விடும் நேரத்தைப் பொறுத்து அதன் திசை இருக்கும். ஆனாலும் நான் பார்த்த போதெல்லாம் அவை கடலுக்கு மேலால்தான் போயிருந்தன!

Share this post


Link to post
Share on other sites

தாங்களாகவே நேர்மையுடன் வந்து ஒத்துக்கொண்டதால் அந்தப் பெண்களுக்குத் தண்டனை கொடுக்காது விடவேண்டும். 

Share this post


Link to post
Share on other sites

இந்த நகரம் எனக்கு மிகவும் பழக்கப்பட்டது. ஜேர்மனிக்கு முன்பு வரும் போது நண்பர்களை சந்திக்க வருவதுண்டு. 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this