Jump to content

26 வருட தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில் மரணம்


Recommended Posts

(செ.தேன்மொழி)

மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது,

மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் 50 வருட சிறைதண்டனையும் , ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலே மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

குறித்த கைதி சுகயீனம் அடைந்திருந்ததுடன் , அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்தார். 44 வயதுடைய இவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையியே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் , உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/72450

Link to comment
Share on other sites

தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலேயே உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது - வியாழேந்திரன்

(செ.தேன்மொழி)

தமிழ் அரசியல் கைதிகளை உயிருடன் விடுதலை செய்வதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முழு முயற்சிகளையும் மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த அவர் ஊடகங்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல் கைதியாக 28 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த செல்லபிள்ளை மகேந்திரன் நேற்று உயிரிழந்துள்ளார்.

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரை விடுதலை செய்வதற்காக பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்த போதும் சடலமாகவே மீட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானதை அடுத்து தழில் அரசியல் கைதிகளை அடிக்கடிச் சந்தித்து வந்தேன். இதன்போது மகேந்திரன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்றுக் கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி , பாராளுமன்றத்திலும் அந்த விடயம் தொடர்பில் அறிவித்திருந்தேன். அன்றைய தினமே நீதி அமைச்சரிடமும் இது தொடர்பில் கலந்துரையாடினேன். 

1993 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வைத்து சந்தேகத்தின் பேரிலே மகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டகளப்பு - மொரக்கொட்டானை பகுதியைச் சேரந்த இவரது வயது கைது செய்யப்படும் போது 18 ஆகவே இருந்தபோதும் 19 வயதேகவே வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.  1993 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக 1994 ஆம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் தொடர்ந்தும் விசாரணைகளை இடம்பெற்று வந்ததுடன் , மேன்முறையீடும் செய்யப்பட்டது. இந்நிலையிலே அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

ஆயுள் தண்டனை கைதியான இவர் 18 வயதிலே கைது செய்யப்பட்டுசிறைவைக்கப்பட்டதுடன், தனது உறுவினர்களின் சுகதுக்கங்களில் கூட கலந்துக் கொள்ள முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 46 ஆவது வயதிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் போது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சருடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்திருந்போதும் , அது சாத்தியப்படவில்லை.

சந்தரப்பவாத அரசியலை தமிழ் அரசியல் தலைவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த அரசாங்கம் தமிழ் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சியை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே இருந்தது. அதனை கவனத்திற் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் தெரிவித்திருக்கலாம்.அதனை அவர்கள் முன்னெடுக்க தவறிவிட்டனர்.

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடி , இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளவர்களில் மீண்டும் ஒருவரை சடலமாக மீட்காது , அவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை மகேந்திரனின் சடலம் பிரதே பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , அவரின் சடலத்தை உறவினர்களுக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/72425

Link to comment
Share on other sites

இவரின் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்பொழுது இவரைப்பார்க்க அவர்கள் வந்தார்கள் எனவும், பின்னர் அவர்கள் இந்த பூவுலகை விட்டு சென்ற பின்னர் யாரும் அவரை சிறைக்கு வந்து பார்க்கவும் இல்லை எனவும் கூறுகிறார்கள். 😞

Link to comment
Share on other sites

image_f7f70c72df.jpg

 

தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

அரசியல் கைதியாக சிறையில் 27 வருட காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை வாசியான செல்லப்பிள்ளை மகேந்திரன் (வயது 46) என்பவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.

மகஸின் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், நீரிழிவு நோய்க்குள்ளான மகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மரணமானார்.

1993ஆம் ஆண்டு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்பட்டு, இறக்கும் வரை அரசியல் கைதியாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறைக் கைதியின் சடலம், சிறைச்சாலை நிருவாகத்தால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான முறக்கொட்டான்சேனைக்கு எடுத்து வரப்பட்டு, சனிக்கிழமை (04)  அடக்கம் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமழ-அரசயல-கத-உயரழபப/73-243583

Link to comment
Share on other sites

உயிரழிவை ஏற்படுத்தவல்ல துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் கைது செய்யப்பட்ட செ.மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை + மேலதிகமான 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறைச்சாலையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

27 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அந்த இளைஞனுக்கு அவனது நோய்நிலையை காரணமாக கொண்டு ஜனாதிபதி மன்னிப்பிற்குக்கூட பரிந்துரைக்கப்படவில்லை காரணம் அவன் பல சித்திரவதைகளுக்குப்பின்னான கொலைகளுக்கான கண்கண்ட சாட்சியம். சட்டம் அந்தளவிற்கு இலங்கையில் வலிமையாக இருந்திருக்கிறது.

அதே சட்டமுள்ள நாட்டில்தான், அதே சட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி சரியாக செய்யும் என்ற நம்பிக்கையில் அடுத்தகட்ட அறிவிப்புகளுக்காக காத்துநின்றோம்.

சட்டம் என்பது இலங்கையில் தமிழனுக்கு வேறு சிங்களவனுக்கு வேறு என்பதை நிரூபித்துவிட்டது.

- முகநூல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை எல்லாம் புனர்வாழ்வளித்து விடுவிப்பேன் என்று கோத்தபாய தமிழர் பிரதேசங்களில் பேச்சு மேடைகளில் முழங்கினாரே...! 

ஏன் இன்னும் இந்த அவலம் தொடர்கிறது என்பதை கோத்தாவுக்கு வாக்குக் கேட்டவர்வள்.. வியாழேந்திரன் உட்பட விளக்க முடியுமா..??!

நீங்க கோத்தாவோடு பேசுகிறீர்களோ இல்லையோ.. கோத்தாவும் ஒரு மிகப் பெரிய பொய்யன் என்பதை வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள்.. மக்களை ஆளாளுக்கு ஏமாற்றாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

தான் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை எல்லாம் புனர்வாழ்வளித்து விடுவிப்பேன் என்று கோத்தபாய தமிழர் பிரதேசங்களில் பேச்சு மேடைகளில் முழங்கினாரே...! 

ஏன் இன்னும் இந்த அவலம் தொடர்கிறது என்பதை கோத்தாவுக்கு வாக்குக் கேட்டவர்வள்.. வியாழேந்திரன் உட்பட விளக்க முடியுமா..??!

நீங்க கோத்தாவோடு பேசுகிறீர்களோ இல்லையோ.. கோத்தாவும் ஒரு மிகப் பெரிய பொய்யன் என்பதை வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள்.. மக்களை ஆளாளுக்கு ஏமாற்றாதீர்கள். 

அரசியல் கைதிகளை வியாளேந்திரன் மட்டும் தான் விடுதலை செய்ய வேண்டுமென்று சொல்ல வேண்டுமா ??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியல் கைதிகளை வியாளேந்திரன் மட்டும் தான் விடுதலை செய்ய வேண்டுமென்று சொல்ல வேண்டுமா ??

 

கோத்தாவின் அரசுக் கட்டில் இருக்கும் வியாழேந்திரனும் சொல்லலாம் என்பது தான் இங்கு பேசப்பட வேண்டும்.

ஏனெனில்.. கோத்தாவை.. அவரின் பொய்களோடு தமிழ் மக்கள் முன் மேடையேற்றியோரில் வியாழேந்திரனும் ஒருவர் தானே. 

கோத்தா தான் சொல்வதை செய்பவன் என்று சிங்கள மக்கள் முன் தோற்றம் காட்டி வரும் நிலையில்.. ஏன் தமிழர்களிடம் அவர் சொன்னதைச் செய்யச் சொல்லி அவரைச் சுற்றி உள்ள தமிழர்கள் சொல்ல அஞ்சுகிறார்கள்..??! அதில் வியாழேந்திரனும் ஒருவர் தானே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.