• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
tulpen

ஜக்கி வாசுதேவுக்கு கண்டனம்

Recommended Posts

ஈஷா மையம் என்ற மிகப்பெரிய நிருவனத்தலைவரும், கார்ப்பரேட் சாமியார்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்களில் ஒருவருமான ஜக்கி வாசுதேவ் எனும் சத்குருக்கு கண்டனம் தெரிவிக்கும் பதிவு. இது அரசியல் சார்ந்த பதிவல்ல மதம் சார்ந்த குழப்பங்களுக்கு கண்டனம்.

கிரகண காலத்தில் உணவு உண்ணலாமா என்ற கேள்விக்கு (நிகழ்ந்த சந்திர கிரகணம் சமயத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு) சந்திர கிரகணம் நடக்கும் முழு  நிலவு நாளில் பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கும் அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கும் குறிப்பிட்ட கிரகண காலத்திலேயே நடக்கிறது அதனால் உணவு ஒரே நாளில் 28 நாட்கள் பழமையடைகிறது நஞ்சாகிவிடுகிறது என்பது போல் ஒரு அறிவார்ந்த பதிலை கொடுக்கிறார்.

கேள்வி :-

 1. சர்வ வல்லமை பொருந்தியவர் கடவுள் என்று சொல்லிவிட்டு கிரகண காலத்தில் ஏன் கோயில்களை பூட்டிவைக்க வேண்டும் எனபதற்கும் ஏதாவது கதை கட்டுவாரா?
 2. சந்திர கிரகணத்துக்கு இவ்வளவு சுவையான கதை சொன்னவர் சூரிய கிரகணத்துக்கு காலை மாலை இரவு மீண்டும் காலை என்று கதை கட்டுவாரா?
 3. மேலே இணைக்கப்பட்டுள்ள யூ டியுப் லிங்கில் சாம்பாரை வைத்து ஆராய்ச்சி செய்கிறேன் என்று காட்டுகிறார், இதனையே ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாக வெளியிட இயலுமா? அல்லது கிரகண காலத்தில் உணவு உட்கொண்டால் என்னவாகும் என்று விஞ்ஞானிகளை கொண்டு ஆராய்ச்சி செய்து நிரூபித்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் உணவருந்தாமல் இருப்பார்களே!
 4. உணவு பொருள் நஞ்சாகிவிடும் என்று அறிவார்ந்த கதை சொல்லும் இவர், இன்றைய வர்த்தக உலகம் (சமைத்த, சமைக்காத )பல உணவு பொருட்களை  தயாரித்தே வைத்துள்ளது அதனைத்தான் நாம் உண்ணுகிறோம், கிரகணத்தால் அப்படிப்பட்ட உணவுகளும் கெட்டுவிடும். எனவே வாங்காதீர்கள் அல்லது அழித்து விடுங்கள் என்று சொல்லுவாரா இவர்?

பெண்கள் மாதவிடாய் மந்தரம் காலத்தில் மந்த்ரம் சொல்லலாமா? கோயிலுக்கு ஏன் செல்லக்கூடாது?  என்ற கேள்விக்கு. மாதவிடாய் என்ற ஒன்றில்லையேல் நீயும் நானும் இவ்வுலகில் வந்திருக்க மாட்டோம் என்று அறிவோடு பேசிவிட்டு, மந்த்ரங்களின் ஆற்றல் அதிகம் என்பதால் அவ்வாற்றலை பெண்களால் தாங்க முடியாது, பெண்கள் பொதுவாக ஓய்வில் இருப்பதற்காக மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டில் அடைத்து வைக்கபட்டிருந்தனர், முன்பெல்லாம் இன்று போன்று மனிதர் மிருகங்களை விட்டு தனித்து வாழவில்லை அக்காலத்தில் மாதவிடாய் கொண்ட பெண்களை மிருகங்கள் நுகர்ந்துவந்து தாக்கிவிடும் என்று ஒருகதையும் சொல்லுகிறார், அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான கோயில் வாசலில் புலிய மரம் உண்டு அங்கு பேய்கள் வந்து வழிபடும் ஆகையால் மாதவிடாய் காலத்தில் கோயில் வாசலில் உள்ள புலிய மரத்தில் உள்ள பேய்கள்(எதிர்மறை ஆற்றல்) அப்பெண்களை பிடித்தாட்டிடும் என்று தன் பின் வருவோரை முட்டாள் ஆக்குகிறார்

கேள்வி:-

 1. பெண்கள் மந்த்ரம் சொன்னால் கருச்சிதைவு ஏற்படும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் மந்த்ரம் சொன்னால் உடல் தாங்காது என்று கூறும் ஜக்கி போன்ற மடையர்கள் காயத்ரீ மந்த்ரம் போன்று உயர்ந்த மந்த்ரம் இல்லை என்று சொல்லுவும் செய்வார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் காயத்ரீ ஸாவித்ரீ ஸரஸ்வதீ ஸவிதா போன்ற பெண் கடவுளர்கள் பெண்களே இல்லையா அல்லது பெண் தன்மையே இல்லையா?
 2. வேத சாஸ்திரத்தின் படி பெண்களுக்கு எந்த ஒரு சடங்கு செய்வதற்கும் அனுமதி இல்லை. ஆகையால் பெண்கள் மந்த்ரம் சொன்னால் பாவம் தீட்டு என்று அச்சப்படுத்துவதற்காக சொன்ன கதையையே இன்று ஜக்கியும் சுவைப்படும்படி சொல்லி பெண் அடிமைத்தனத்தை தொடரவைக்கிறார்கள்
 3. ஊரில் சொல்லும் கதைகளை சுவைப்பட சொல்லும் இவர் இன்றும் ஊர் வழக்கில் இறைச்சி எடுத்துச் சென்றால் குருதி வாசம் பிடித்து பேய் பின்னாலேயே வரும் அல்லது பிடித்துவிடும் ஆகையால் ஒரு கரித்துண்டை கையில் எடுத்துச்செல்ல சொல்வார்கள். அப்படி ஒரு கரித்துண்டை மாதவிடாய் காலத்தில் பெண்கள் எடுத்துகொண்டு கோயிலுக்கு போகச் சொல்லலாமல்லவா?

சமீபமாக சபரிமலைக்கு மக்கள் செல்லுவது  போல்,தன் மடத்திற்கு மக்களை ஈர்க்க 42 நாட்கள் கொண்ட ஒரு நிகழ்ச்சியை துவக்கியிருக்கிறார். இதில் சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக   விரதமிருந்து புகைப்பிடிக்ககூடாது, மது அருந்துதக்ககூடாது, இறைச்சியுணவு உண்ணக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக இது ஆண்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

கேள்வி:

 1. மேலே கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் சிந்தித்தால் பெண்களுக்கு ஏன் இந்த நிகழ்ச்சியில் அனுமதியில்லை என்பது புரிந்துவிடும்
 2. இறைச்சி பாவமென்றால் ”பொன்னார் மேனியனே புலித்தோலை அறைத்திசைத்தவனை” ஏன் வணங்க வேண்டும். அதுவும் பாவம் தானே
 3. புலி தோலிலும் மான் தோலிலும் அமர்ந்து இருக்கும் கடவுளர்களை சித்தர்களை மகான்களையும் பாவம் என்று சொல்லிடுவாரா இவர்?
 4. அஹோபில மடம் என்னும் வைணவ மடத்திற்கு புதிய மடாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட விழாவில் யானை தந்தங்கள் அவர் அமர்ந்த ஆசனத்தில் இருந்தது இது பாவமில்லையா?. பிறாமணர்கள் செய்யும் யாகத்தில் ஆடுகள் வெட்டப்படுவது பாவமில்லையா?

ஆண் பெண் என்ற வேறுபாடின்றி ஜக்கிக்கு பின் செல்கின்றனர், அவர் சொல்வதை கண்மூடித்தனமாக ஏற்கின்றனர், அவர் சொல்லித்தருவதை செய்கின்றனர். இருந்தும் ஜக்கிக்கு தன் மீது மக்கள் வைத்துள்ள இந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செய்யவேண்டிய செயல்களை செய்ய மனம் ஏனோ வரவில்லை. குறிப்பாக சமுதாயத்தில் புரையோடியுருக்கும் பல பழக்கவழக்கங்களுக்கு எதிராக இன்றுவரை குரல் கொடுக்காதவராக மட்டுமில்லை புரையோடிய பழக்கவழக்கத்தை நியாயப்படுத்தி மக்களுக்கு நவீன கதைகளை சொல்லி வழிநடத்தி செல்கின்றார்.

ஜக்கி வாசுதேவ் என்ற இந்த கார்ப்பரேட் சாமியார் மட்டும் இவ்வேலையை செய்யவில்லை இதனையே அனைத்து கார்ப்பரேட் சாமியார்களும் சுயநலத்திற்காக செய்துவருகின்றனர்.

எம்மதத்தை எடுத்துக்கொண்டாலும் சாமியாருக்கு பஞ்சமில்லை இல்லை என்ற நிலையில் தன் மதத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் பல சாமியார்களும் தன் சொத்து மதிப்பினை பலமடங்கு வளர்த்துகொண்டு அரச வாழ்வை வாழுகின்றனர். சாமியார்கள் வாழவைப்பதற்காகவே மக்கள் பலர் தன் உடலுழைப்பை நல்குகிறார்கள். இப்படி வளர்ந்த எந்த சாமியாராவது ஒரு பாழடைந்த, பூசைக்கு பணமில்லாத கோயில்களை புதுவாழ்வு அளித்துள்ளனரா என்று சாமியாருக்கு பின் செல்லும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

https://kuthoosi.wordpress.com/2020/01/03

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für ராஜீவ் காந்தி கொலை ----- சந்திரா சாமி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,   விசாரிக்கப் படாத...  சந்திரா சாமி.

 

Bildergebnis für bangalore ravi shankar

பெங்களூர் சாமியார்.. ரவி சங்கர்.

 

Bildergebnis für ஜக்கி வாசு தேவ்

Ähnliches Foto

ஜக்கி வாசு தேவ்...  யாருடன், உறவாடுகின்றார்  என்று தெரியுமா?
அவரின்.. பூர்வீகத்தை, எழுத வெளிக்கிட்டால்...
எனக்கு, விசர் பிடிக்கும்.

############     ############   ############   ###########

ருல்ப்பன், அவர்களே....
ஜக்கிவாசு தேவ்... என்பவன்,  இந்திய  மத்திய அரசின்,  கைக் கூலி
"ரா" என்னும், புலனாய்வு பிரிவில் உள்ளவராகவுகும்  இருக்கலாம்.
ஜக்கியின்... இடத்தில்,  நடக்கும், கூத்துக்களை பார்க்க, 
அப்படித்தான்.. தெரிகின்றது. 

காங்கிரஸ் ஆட்சியில்.... ரவி சங்கர் என்ற, பெங்களூர் சாமியார் இருந்தவர்.
அவர், எமது உக்கிரமான ஈழப் போராட்டக்  காலத்தில், கிளிநொச்சி வரை வந்து,
தேசியத் தலைவர் பிரபாகரனை, சந்திக்க விரும்பினாராம்.
அதற்கு... அவரது, மெய்ப் பாதுகாவலர்கள் அனுமதிக்க வில்லை.

தனது, வெள்ளை  சால்வையை.... கொடுக்கும்  படி,  கேட்ட  போதும்,  
அதற்கு... ஒருவரும்,  சம்மதிக்கவில்லை.

இந்தியாவில்... ஒவ்வொரு கட்சியின் ஆட்சியிலும், 
ஒவ்வொரு.. சாமியார்கள் இருப்பார்கள்.
பிரச்சினை  முடிந்தவுடன் காணாமல் போய் விடுவார்கள்.

டிஸ்கி:  ப்ளீஸ்...  வெள்ளிக்கிழமை நாளில், எனக்கு  "ரென்சன்" ஏத்த வேண்டாம். 🤔

Share this post


Link to post
Share on other sites

தமிழ் சிறீ அவர்களே வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு  சாமியார்கள்  தோன்றுவதும் காணாமல் போவதும் இங்கு பிரச்சனை அல்ல. இவர்களின் மூடத்தனமான பிரசங்களை  நம்பி எமது தமிழ் மக்கள் தமது வளங்களை தலைமுறை தலைமுறையாக இழப்பது தான் கவனத்திற்குரியது. அதற்கான விழிப்புணர்வையே நாம் செய்ய வேண்டும்.  திருநீற்றுப்பட்டையுடன் யார் எப்படி பத்தாம் பசலி மூடக்கதைகளை சொன்னாலும் ஆராய்ந்து பார்ககாமல் உண்மை என நம்பி அதனை முகப்புத்தகத்தில் Share பண்ணும் எம்மவர்கள் திருந்தினால் இப்படிப்பட்ட சாமியார்க் கும்பல்  உருவாவதை தடுக்க முடியும். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this