Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வர்ஜினியா நிக்கலோய் நின்கி !


Recommended Posts

 
 
 
Image may contain: 2 people, people playing musical instruments, people sitting and indoor
 
 

வர்ஜினியா நிக்கலோய் நின்கி !

இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி, இளையராஜாவின் இசைக்குழுவில் எண்பதுகளில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த இளையராஜாவின் ரெக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்.

வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவர்.

தமிழ் நாட்டை சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களின் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராஜ், ராஜாவுவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிதவர்கள் இருந்தும், இளையராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார்.

அதில் "அலைகள் ஓய்வதில்லை " படத்தில் வரும் "புத்தம் புது காலை வரும்" பாடல், "மூன்றாம் பிறை" படத்தில் சுதாகருடன் சேர்ந்து "பூங்காற்று" என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றார். "ஜானி" படத்தில "ஆசைய காதில தூதுவிட்டு" பாடலில் வாசித்து இருக்கிறார்

ராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் ஆர்டிஸ்ட்களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவரிடம் இருந்து கற்றதாகவும், அந்த நின்கி என்ற female classical flutist வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடையவன் என்றும் ஒரு TV பேட்டியில் சொன்னார் . நின்கி "one of the top 10 Flutists at that time" என்ற "லெவலில் " தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புல்லாங்குழலில் தமிழ்நாட்டில் கலக்கி இருக்குறார்.

நின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெகார்டிங் தொடங்கமுன் ,மற்ற இசைக்கலைஞர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த "நோட்ஸ்" களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தபோது, நின்கி அவரோட புல்லாங்குழல் "ஸ்கோர் நோட்ஸ்" ஐ இளையராஜாவுக்கு உடனையே,அழுத்தம் திருத்தமாக,வாசித்துக் காட்டிவிட்டு,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பார்

நின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய,உயரமான பெண்மணி, மசால் தோசை, சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்பிடுவார் ,இந்திய தமிழ் கலாசாரப்படியே இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி, சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் வருவார்.

நின்கி "தான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்" என்று, இளையராஜாவின் இசைக்குழுவில் வாசித்த இசைகலைஞர்களிடம் சொல்லி சிரிப்பாராம்.

சுருக்கமாக சொன்னால், நின்கி ராஜாவின் இசைக்குழுவில் "புல்லாங்குழல்" வாசித்த புண்ணியவதி !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப்  பார்த்து.....
இது, என்ன... புது வருத்தம் பரவுதோ..... என்று பயந்து விட்டேன். :rolleyes: 
நுணாவிலான்.... நீங்கள்,  வெள்ளிக்கிழமை நாட்களில்...  :D: 
எங்களை... இப்பிடி, பயப்படுத்தக் கூடாது. :grin:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சீனா காலை சுத்தின பாம்பு... அதுவும் மலைப்பாம்பு.... விழுங்கும்.... சிங்களவனை.... வரலாறு திரும்பும்.... இதுக்கு முன்னம், அண்ணன் தம்பிமார் ஆண்டபோது அவையளுக்கு பிரச்னை வரேக்க, மூத்த அண்ணனுக்கு ஆயுத உதவி கடனுக்கு கொடுத்தவன் போர்த்துகேயன். உள்ளேவந்தான்.. அவனை அனுப்ப ஒல்லாந்தன்.... அவனை அனுப்ப பிரிட்டிஷ் காரன்.... சுதந்திரம். இன்றும் அதே அண்ணன் தம்பி கதை... உள்ள வந்து நிக்கிறான் சீனன்....😇
  • ஒரே பாடல் இருவேறு விதமான  பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது  சிலேடை அணி எனப்படுகிறது இந்த சிலேடை அணியில்  அமைந்த பாடல்களை  சிலேடைப் பாடல்கள் என்கின்றனர் காளமேகப் புலவர்  பல சிலேடைப் பாடல்களை  இயற்றி இருக்கிறார் கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்  எட்டின்பன் னாடை யிழுத்தலால் முட்டப்போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்  வேசையென லாமேவி ரைந்து  கொள்ளுகையா னரிற்  குளிக்கையான் மேலேறிக் கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் தெள்ளுபுகழ்ச்செற்றலரை  வென்ற திருமலைரா யன்வரையில் வெற்றிலையும் வேசையாமே 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த  ஒரு தமிழ்ப் புலவர் ஆவார் வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம்  ஆசை கொண்டார் இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த  சைவ சமயத்துக்கு மாறினார்  இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது ஆனாலும் இவர்  பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார்  இவர் பாடிய சிலேடைப் பாடல்களும்,  நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன  சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார் இவர் ஒரு ஆசு கவி ஆவார் திருவானைக்கா உலா,  சரஸ்வதி மாலை,  பரப்பிரம்ம விளக்கம்,  சித்திர மடல் முதலியவை இவர்  இயற்றிய நூல்களாகும் திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர்  (சமையல் செய்பவர்) இருந்தார் திருவானைக்காவில் சிவத் தொண்டு  செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார் அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில்  அவள் வரவுக்காகக் காத்திருக்கையில்  தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார் அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள்  கோவிலும் திருக்காப்பிடப்பட்டது அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில்  ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான் சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன்  (காளமேகத்தின் இயற்பெயர்)  வாயில் உமிழ்ந்துச் சென்றாள் வரதனும் தன் அன்புக் காதலி தான்  அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான் அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே  கவி மழை பொழியத்தொடங்கினான்  அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.