Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜிம்மிக்கு நன்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3-DD82003-E86-B-406-E-A125-D6-EC00-B94-C

நாங்கள் புது வருடத்தை மகிழ்ச்சியாக  கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீயணைப்புப் படைப் பிரிவு, அவசரகால சேவை, காவல்துறை போன்ற பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தூக்கம் மறந்து ஓடியோடி வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

எப்படியோ புது வருடம் பிறக்கும் போது அங்கொன்று இங்கொன்றாக வீடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறும்.

புது வருடக் கொண்டாட்ட மயக்கத்தில் வீட்டில் வசித்தவர்களும் விருந்துக்கு வந்தவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது யேர்மனி  Niedersachsen மாநிலத்தில் உள்ள Mueden/Aller. என்ற நகரத்தில் உள்ள வீடு ஒன்று  தீப்பிடித்துக் கொண்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று  இன்னமும் அறியப்படவில்லை.

வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட  வீட்டின் உரிமையாளரது ஜிம்மி என்ற நாய் இடைவிடாது குரைத்து வீட்டின் கீழ்த் தளத்தில் தனது கர்ப்பிணி மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்த விருந்தினரை  எழுப்பியிருக்கிறது. நிலமையை உணர்ந்த அவர் மாடிக்குச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஏழு பேரையும் எழுப்பி வெளியே வந்து தீயணைப்புப் பிரிவுக்கு அறிவித்திருக்கிறார்

வீட்டின் மேல்மாடி முழுவதும் தீயில் எரிந்து போயிற்று. இழப்பு மட்டும் 200,000 யூரோக்கள்.

பணத்தை விடுங்கள். வீட்டில் இருந்த ஒன்பது பேரை மட்டுமல்ல விருந்தினர் வயிற்றில் இருந்த கருவையும் சேர்ததல்லவா ஜிம்மி காப்பாற்றி இருக்கிறது.

 

  • Like 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரின் உயிர்களை நன்றியுள்ள நாய்கள் பலதடவைகள் காப்பாற்றியுள்ளன.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் நித்திரையில் இருக்கும் போது..... வீடு  தீப்பற்றி எரிந்தால்,
அந்த புகை வாசனையை.... மனிதர்களால், நித்திரையில்... அறிய முடியாதாம்.
நெருப்பின் வெப்பத்தில்... மனிதர் விழித்து எழும் போது, 
தப்பிச் செல்ல வாய்ப்புகள், மிகவும் குறைவாகவே காணப்படுவதால்...
உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக, என்னுடன் வேலை செய்யும்....  
பகுதி நேர தீயணைப்பு  வீரர் தெரிவித்தார்.   

உண்மையில்... 9 உயிர்களை காப்பாற்றிய அந்த ஜிம்மி, மிகவும் பாராட்டுக்குரியது.

  • Like 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மனிதர் நித்திரையில் இருக்கும் போது..... வீடு  தீப்பற்றி எரிந்தால்,
அந்த புகை வாசனையை.... மனிதர்களால், நித்திரையில்... அறிய முடியாதாம்.
நெருப்பின் வெப்பத்தில்... மனிதர் விழித்து எழும் போது, 
தப்பிச் செல்ல வாய்ப்புகள், மிகவும் குறைவாகவே காணப்படுவதால்...
உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக, என்னுடன் வேலை செய்யும்....  
பகுதி நேர தீயணைப்பு  வீரர் தெரிவித்தார்.   

உண்மையில்... 9 உயிர்களை காப்பாற்றிய அந்த ஜிம்மி, மிகவும் பாராட்டுக்குரியது.

இது உண்மயாகதான் இருக்கும் தமிழ் சிறி.

சில வருடங்களுக்குய் முன்பு கள உறவு சசி அவர்களின் ந‌ண்பர் குடும்பம் ஒன்று நியூசிலாந்தில் இவ்வாறு தூக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மரணித்து போனது நினவிருக்கலாம்.  இவ்வாறூ பல சம்பவங்கள் நடந்துள்ளன.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.