Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

81439149_10213471699180475_7671029500116

 

வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்திய இளம்பிறையனின் அங்கோர் வாட்  அனுபவங்களை வாசித்ததில் இருந்து அங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என எனது மனம் குறித்துக்கொண்டது.

ஆனாலும் பலஆண்டுகளாக என் ஆசை நிறைவேறாமலே இருந்தது. காரணம் என் கணவருக்கு அங்கு செல்வதில் ஆர்வம் இருக்கவில்லை. தெரியாத ஒரு நாட்டுக்குத் தனியாகச் செல்லவும் பயம். அதனால் ஆசையை ஒரு பக்கம் வைத்துவிட்டு என்பாட்டில் இருந்துவிட்டேன். கடந்த ஓகஸ்ட் மாதம் மகளும் நானும் கதைத்துக்கொண்டு இருந்தபோது கம்போடியா செல்லவேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகக் கூற நான் உடனே இருவரும் சேர்ந்து போகலாம் என்று கூறி ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதிவரை பத்து நாட்களுக்கு திட்டமிட்டு விமானச்சீட்டும் தயார் நிலையில். மகளே தங்குமிட வசதியை எல்லாம் ஒழுங்கு செய்ததில் எனக்கு மனதில் பெரும் நின்மதி.

முதல் ஐந்து நாட்கள் சியாம் ரீப்பில் தங்குவதாக முடிவெடுத்து  விமான நிலையத்தில் இறங்கும்போதே கடலும் மரங்களும் மழைநீரினூடே தெரிய இறங்கும்போதே மழையா என்று மனம் துணுக்குற்றது. முதலே ஒன்லைனில் விசா பெற்றுக்கொண்டதால் விரைவாக வெளியே வந்தாலும் பெரும் இடி மின்னலுடன் மழை  சோவெனப் பெய்வதைப்  பார்த்து மனதில் சலிப்பு எழுந்தது. தங்குவிடுதியில் இருந்தே எமக்கு டாக்ஸி ஒழுங்கு செய்வதாகக் கூறியதனால் வெளியில் எம் பெயரைத் தாங்கியபடி யாராவது நிற்கிறார்களா என்று தேடினால் யாரையும் காணவில்லை. மழை பெய்ததனால் வெப்பம் தெரியவில்லை என்பது மனதுக்கு நின்மதிதர மகள் தங்குவிடுதிக்கு போன் செய்தாள். மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாகலாம் என்று அவர்கள் கூற நாம் மேலும் இருபது நிமிடம் காத்திருந்தோம்.

என் கணவரின் பெயரைக் காவியபடி ஒரு இளஞர் வர, மகள் அவரிடம் ஐடி கேட்க அவர் வாகனத்தில் இருப்பதாகக் கூறி எமது சூட்கேஸை இழுத்தபடி கரையோரமாக நடந்து கார் கதவைத் திறந்துவிட்டு ஐடியை எடுத்துக்காட்டினார். அம்மாவுக்குக் காரின் பின்புறம் இருக்க முடியாது. அவ முன்னால்தான் இருப்பா என்று கூற அவரும் முன் சீற்றில் இருந்த அவரின் சில பொருட்களை எடுத்து பின்னால் வைத்துவிட்டு இருக்கும்படி கூறினார். அதற்குள் மழை மீண்டும் பெரிதாகப் பெய்ய ஆரம்பித்தது. கார் கண்ணாடியை இறக்க முடியாமல் மழை பெய்ய, கார் முழுவதும் மூச்சு மூடி  எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. பானைப் போடு என்று நான் அவனுக்குச் சொல்ல, அவன் மிக வேகமாக குளிர் காற்று வரும்படி ஏசியை திருப்பிவிட எனக்கு ஐந்து நிமிடத்திலேயே குளிர ஆரம்பித்தது.

இன்னும் எவ்வளவு நேரம் செல்லும் என்று அவனிடம் கேட்க, சாதாரணமாக 20 நிமிடம் ஆனால் இன்று நாற்பது நிமிடங்களாவது எடுக்கும் போல் தெரிகிறது என்றான். எனக்கு தலை சுற்றல் அதிகமாக உந்த ஏசியை கொஞ்சம் குறை என்றுவிட்டு நான் கண்களை கைகளால் மூடியபடி ஒரு பக்கமாகச் சாய்ந்துவிட்டேன். அம்மா எழும்புங்கள் என்று மகள் தோளைத் தொட்டுக் கூப்பிடத்தான் நான் கண்களைத் திறந்தேன். மழை  விட்டிருந்தது. அவனே எமது சூட்கேஸை இறக்கிக் கொண்டுவந்து வைக்க இன்னொருவர் அவற்றை நம் இருக்கபோகும் அறைக்கு எடுத்துச் செல்கிறார்.

கோட்டல் சிறிதுதான் ஆனாலும் பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. எமது தங்குவிடுதிக்கு அருகிலேயே ஒரு பத்துப் பதினைந்து நிமிட நடை தூரத்தில் அனைத்துக் கடைகள், உணவகங்கள், இரவுச் சந்தை என்பன இருப்பதாக விடுதி பெண் கூறுகிறாள். எனக்குத் தலை சுற்றல் முழுதாக நிக்கவில்லை. அதனால் குளித்துவிட்டு ஒருமணிநேரம் தூங்குங்கள். அதன்பின் வெளியே போகலாம் என்கிறாள் மகள். குளியல் அறை நல்ல சுத்தமாக இருக்கிறது. ஆனால் குளிக்க முடியாதபடி சவர் மேலே இருந்து  நீரைத் தூவுகிறது. எரிச்சலோடு குளிப்பதற்குப் பதில் தோய்ந்துவிட்டு துவாயைச் சுற்றியபடி வெளியே வந்து தலையை நன்றாகக் காய வைத்தபின்  அவர்கள் கொண்டுவந்து தந்த தேநீரையும் குடித்துவிட்டு நன்றாகத் தூங்கிப்போகிறேன்.

மகள் என் தோளைப் பிடித்து உலுப்பி எழுப்ப நேரம் இரண்டு மணியாகிவிட்டதை சுவர் மணிக்கூடு காட்ட, இரண்டு மணிநேரமா தூங்கிவிட்டேன் எனக் கேட்டபடி எழுகிறேன். 

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரிக்கு வரி மறக்காமல் அழகாக எழுதுகிறீர்கள்.

23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவனே எமது சூட்கேஸை இறக்கிக் கொண்டுவந்து வைக்க இன்னொருவர் அவற்றை நம் இருக்கபோகும் அறைக்கு எடுத்துச் செல்கிறார்.

Tip (Trinkgeld) எவ்வளவு கொடுத்தது என்பது பற்றி ஒரு வரி சொல்லியிருக்கலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்....!

அண்மையில் சிலர் போய் வந்தார்கள்..!

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று கூறினார்கள்...!

ஆர்வத்துடன் வாசிக்கின்றேன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடம்தான்.

நான் போகும் போது ஒன்லைன் வீசா இல்லை. ஒன் அரைவல்தானே என போய் இறங்கினால் - வீசா போர்முக்கு ஒரு போட்டோ வேணும் என்றார்கள். உள்ளுக்க ஒரு போட்டோ பூத்தும் இல்லை.

பிறகு ஒரு $20தை என் போட்டோ என கருதி என்னை அனுமதித்தார்கள் 😂.

6 கோவில்களையும் சுற்றி பார்திருப்பீர்கள் என நம்புகிறேன். எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

பிகு: சூர்யவர்மனும் ஜெயவர்மனும் தமிழர் என்பதாக நகைச்சுவை பண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன். 

1 hour ago, Kavi arunasalam said:

வரிக்கு வரி மறக்காமல் அழகாக எழுதுகிறீர்கள்.

Tip (Trinkgeld) எவ்வளவு கொடுத்தது என்பது பற்றி ஒரு வரி சொல்லியிருக்கலம்

மிகவும் ஏழ்மையான நாடு. ஆனால் பிச்சைகாரர் இல்லை. சிறுவர் முதல் பெரியோர் வரை எதையாவது சுற்றுலா வருபவர்களிடம் விறபார்களே ஒழிய கை நீட்டுவதில்லை.

அவர்கள் நாட்டுக் காசே புழக்கத்தில் இல்லை, அரச அலுவலங்கள் உட்பட எல்லா இடமும் டாலர்தான்.

1 டாலரே அவர்களுக்கு பெரிய காசு. மொத்த பில்லில் 5% அளவில் போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கோர் வாட் என்றதும் யாரோ ஆஸ்பத்திரி வாட்டாக்கும் என்று அரக்கபறக்க வந்தால் சுற்றுலா.

கடந்த சுற்றுலா அத்தானுடன் போனபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

இந்த சுற்றுலா ஆரம்பத்திலேயே எரிந்து விழுகிற மாதிரி இருக்கு.

கூல் கூல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

வரிக்கு வரி மறக்காமல் அழகாக எழுதுகிறீர்கள்.

Tip (Trinkgeld) எவ்வளவு கொடுத்தது என்பது பற்றி ஒரு வரி சொல்லியிருக்கலம்

taxi காரனுக்கு 2 டொலர்ஸ் தான் கொடுத்தது.

17 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்....!

அண்மையில் சிலர் போய் வந்தார்கள்..!

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று கூறினார்கள்...!

ஆர்வத்துடன் வாசிக்கின்றேன்...!

பார்க்கவேண்டிய இடம் தான்.ஆனால் கற்பனைகளை வளரவிட்டால் ஏமாற்றம்தான்.

17 hours ago, goshan_che said:

கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடம்தான்.

நான் போகும் போது ஒன்லைன் வீசா இல்லை. ஒன் அரைவல்தானே என போய் இறங்கினால் - வீசா போர்முக்கு ஒரு போட்டோ வேணும் என்றார்கள். உள்ளுக்க ஒரு போட்டோ பூத்தும் இல்லை.

பிறகு ஒரு $20தை என் போட்டோ என கருதி என்னை அனுமதித்தார்கள் 😂.

6 கோவில்களையும் சுற்றி பார்திருப்பீர்கள் என நம்புகிறேன். எழுதுங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

பிகு: சூர்யவர்மனும் ஜெயவர்மனும் தமிழர் என்பதாக நகைச்சுவை பண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன். 

மிகவும் ஏழ்மையான நாடு. ஆனால் பிச்சைகாரர் இல்லை. சிறுவர் முதல் பெரியோர் வரை எதையாவது சுற்றுலா வருபவர்களிடம் விறபார்களே ஒழிய கை நீட்டுவதில்லை.

அவர்கள் நாட்டுக் காசே புழக்கத்தில் இல்லை, அரச அலுவலங்கள் உட்பட எல்லா இடமும் டாலர்தான்.

1 டாலரே அவர்களுக்கு பெரிய காசு. மொத்த பில்லில் 5% அளவில் போதுமானது.

பிச்சைக்காரர்கள் இல்லை என்று கூறமுடியாது.

16 hours ago, Thamarai.k said:

தொடருங்கள்  .வாசிக்க ஆர்வமாய்  இருக்கிறேன் ....

வரவுக்கு நன்றி

 

16 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கோர் வாட் என்றதும் யாரோ ஆஸ்பத்திரி வாட்டாக்கும் என்று அரக்கபறக்க வந்தால் சுற்றுலா.

கடந்த சுற்றுலா அத்தானுடன் போனபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

இந்த சுற்றுலா ஆரம்பத்திலேயே எரிந்து விழுகிற மாதிரி இருக்கு.

கூல் கூல்.

அத்தாருடன் போனது ஒருவித மகிழ்ச்சி என்றால் இது இன்னொருவகை நின்மதி.

பச்சைகளைத் தந்த ஏராளன், ஈழப்பிரியன் அண்ணா, புங்கை, ரதி, கண்மணி அக்கா, கவிஅருணாச்சலம் அண்ணா ஆகிய உறவுகளுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எழுந்து முகம் கழுவி வெளிக்கிட்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்தோம். வீதிக்கு கடைகளில் நல்ல சுவையான உணவுகள் கிடைக்கும். நீங்கள் தான் அவற்றை உண்ண  மாட்டீர்கள் என்று மகள் எனக்குக் கேட்டும் கேட்காததுபோலச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். உமக்கு வேண்டுமானால் வாங்கி உண்ணுமன். ஆனால் எனக்கு வேண்டாம் என்றுவிட்டு நடக்க, சரி சரி உணவகத்துக்கே செல்வோம் என்றபடி ஓரமாய் நடந்தோம். உணவகங்களின் முன் உணவுகளின் படங்கள், பெயர் விபரங்களெல்லாம் இருந்தன. எனக்குப் பசியும் எடுத்துவிட்டது. எனவே பெரிதாக இருந்த உணவகம் ஒன்றினுள் சென்றமர்ந்தோம்.

மெனுவை வாங்கிப் பார்த்து யூசும் உணவும் ஓடர் செய்துவிட்டு காத்திருந்தோம். எல்லா இடமும் சிவப்பு நிறத்தில் அலங்கரித்திருந்தாலும் பார்க்க அழகாகவே இருந்தது உணவகம். உணவு எத்தனை சுவையாக இருந்தாலும் மனத்துக்குப் பிடிக்காத இடத்தில் இருந்து அதை சுவைத்து இரசித்து உண்ண முடியாதுதானே. எனவே ஆரம்பமே எனக்கு மன நின்மதியைத் தர  நாம் ஓடர்செய்த ஒரேஞ்ஜிஞ்சர் யூசுக்குக் காத்திருக்க அவள் வேறொரு கொக்டெயிலை கொண்டு வந்து வைக்கிறாள். நாம் இது ஓடர் செய்யவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டுக் காத்திருக்க, உங்களுக்கு மட்டும் இப்பிடி ஏதாவது நடந்திடுமென்று கூறிச் சிரிக்கிறாள் மகள்.

அவர்கள் நாட்டுப் பணம் பெறுமதி குறைந்ததால் அநேகமாக எல்லா இடங்களிலும் அமெரிக்கன் டொலரே பாவனையிலிருந்து. ஆனால் மிகுதி பணம் தரும்போது அவர்கள் பணத்திலேயே தருவார்கள். எனவே டொ லரில் 1,5,10 என சிறிதாகவும் மாற்றி 200 டொலேர்ஸ்  கொண்டு சென்றிருந்தோம். உணவுகள் $5, $4,$3 என ஒவ்வொரு விலைகளில் இருந்தன. பரவாயில்லை அதிகம் இல்லை என்று கதைத்தபடி இருக்க  ஐந்து நிமிடத்தில் நாம் ஓடர் செய்த யூஸ் வர வாங்கி இரண்டு வாய் குடித்துவிட்டு சாப்பாட்டையும் மாறிக் கொண்டுவந்தால் என்ன செய்வது என்கிறேன். ஒண்டும் செய்ய ஏலாது அம்மா.எதுவானாலும் உண்ண  வேண்டியதுதான். ஏனெனில் எமக்கு அவர்கள் உணவு பற்றித் தெரியாதே என்கிறாள். எதோ ருசியாக இருந்தால் சரி என்றுவிட்டு மேலும் பத்து நிமிடங்கள் காத்திருக்க உணவுகள் மேசைக்கு வருகின்றன.

நாம் எதிர்பார்த்ததை விட உணவுகள் சுவையாக இருக்கின்றன. கோழி இறைச்சியில் ஒரு குழம்புபோல் செய்திருந்தனர். உறைப்பு குறைவாக இருந்தாலும் மிகச் சுவையாக இருந்தது. கச்சான் கடலையை வறுத்து  இருவல்நெருவலாக அதற்குள் போட்டிருந்தனர். இன்றுவரை அந்த சுவை வாயிலேயே நிற்கிறது. என் வீட்டில் செய்த சமையலில் எதகனையோ நாட்கள் நானும் கச்சானைப் போட்டுப் பார்த்துவிட்டேன் சரிவரவே இல்லை. உண்டு முடிய பில் வருகிறது $23 டொலர்கள். நாம் 25 டொலர்களை வைத்துவிட்டு வெளியே வருகிறோம்.

 

 

81198185_10213479207168170_5230768273829

82524474_10213479195527879_8494847915896

81450815_10213479195687883_3516612655236

81311572_10213479195407876_3646465485282

81376397_10213479196167895_5982589482812

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னை இளநீரில் தேங்கி நின்ற கறி👍🏾

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்டு முடிய பில் வருகிறது $23 டொலர்கள். நாம் 25 டொலர்களை வைத்துவிட்டு வெளியே வருகிறோம்.

மீண்டும் 2 டொலர் Tip

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

$23 டொலர்கள். நாம் 25 டொலர்களை வைத்துவிட்டு வெளியே வருகிறோம்.

கசவாரங்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

தென்னை இளநீரில் தேங்கி நின்ற கறி👍🏾

மீண்டும் 2 டொலர் Tip

முதல்நாள் எண்டபடியாத் தான் 😀

1 minute ago, குமாரசாமி said:

கசவாரங்கள் 😎

அதே அவர்களுக்கு கூடத்தான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே ஆனந்தமாக அசத்தலாக இருக்கு ( நீங்கள் எரிச்சல் படுவதுதான் எங்களுக்கு ஆனந்தம்.என்ன செய்வது உங்கள்  கதைகளை படித்து படித்து அப்படியே பழகி விட்டது). தொடருங்கள் சகோதரி.........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணி நேரத்தில் உண்டு முடித்து  வெளியே வந்து மீண்டும் கோட்டலுக்கு நடந்து அங்கு விபரம் கேட்க, அங்கோர்வாட் பார்ப்பதனால் நாளைத்தான் போகவேண்டும். ஆனால் இன்றே போய் டிக்கற் வாங்கிக்கொண்டு வாருங்கள். முன்னால் நிற்கும் ஓட்டோவுக்கு பத்து டொலர்ஸ் கொடுத்தால் போதும். ஆனால் நாளை முழுவதும் திரிய $ 25 கொடுக்க வேண்டும் என்கிறாள் விடுதிப் பெண். சரி என்று போனால் ஸ்கூட்டியில் குதிரைவண்டி போன்ற  ஒன்றைப் பின்னால் பூட்டி அதுதான் வாகனம் என்கிறார்கள். சிரித்த முகத்துடன் ஒரு பொடியன் குட் ஈவினிங் என்றபடி வண்டியை நகர்த்தி எம்மருகில் கொண்டு வருகிறான். சரி என்று அதில் ஏறியமர்ந்து விபரம் சொன்னால் அவன் எம்மைக் கூட்டிக்கொண்டு போய் டிக்கற் எடுக்கும் இடத்தில் எம்மை இறக்கி விட்டுவிட்டு நிற்கிறான்.

அங்கு போனால் இன்னும் பதினைந்து நிமிடத்தின் பின் தான் மூன்று நாட்களுக்கான ரிக்கற் வாங்கலாம் என்று கூறி பெரிய கெடுபிடி. சரி பதினைந்து நிமிடம் ஏன் சும்மா நிற்பான் என்று பக்கத்தில் இருந்த உடைகள் விற்கும் இரண்டு கடைகளுக்கும் போனால் எல்லாம் $10,15 டொலர்ஸ் என்று போட்டிருக்கு. அம்மா சும்மா பாருங்கோ ஒண்டையும் வாங்கிப் போடாதேங்கோ என்று மக்கள் சொல்ல, பத்து நிமிடம் அதற்குள் கடத்திவிட்டு டிக்கற் கவுண்டருக்கு வர எம்மைத் தனித் தனியே படம்பிடித்து ரிக்கற்றில் எமது படத்தையும் பதித்து எதோ அடையாள அட்டை  போல் தருகின்றனர். மூன்று நாட்களும் எல்லாக் கோயில்களுக்கும் போக ஒருவருக்கு $ 62.

அவற்றை வாங்கிக் கொண்டு வரும் வழியில் "ஒரு மியூசியம் இருக்கிறது. அதை இன்று பார்த்துவிடுங்கள்"  என்கிறான் எமது வண்டி ஓட்டி.சரி என்று அங்கு போனால் மணி ஐந்து ஆகி கொஞ்சம் இருட்டவும் ஆரம்பிக்க சரியென்று ஒருவருக்கு மூன்று டொலர்ஸ் கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம். அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஆயிரம் புத்தர்களின் இருப்பிடம் என்று போட்டிருக்கு. பெரிதாக இருக்கும் என்று எண்ணி உள்ளே போனால் ஒரு சிறிய மண்டபம் தான். ஆனால் மிக அழகான வேலைப்பாடுகளுடன் விதவிதமான அளவுகளில் புத்தர் எங்கும் வீற்றிருக்கிறார்.  நான் மூன்று நான்கு படங்களை எடுத்துவிட்டேன். மகள் பெரிய கமராவை எடுத்து ஒரு படம் எடுக்கமுதல் ஒரு பெண் ஓடிவந்து இங்கு படங்கள் எடுக்கக் கூடாது என்கிறாள். ஓ எனக்குத் தெரியாது என்று மகள் சொல்ல, அவள் "வெளியே நீ வாசிக்கவில்லையா" என்கிறாள். படத்தை டிலீட் செய்யச் சொல்லப் போகிறாள் என்று நான் எண்ண, இனி எடுக்கவேண்டாம் என்றுவிட்டு அவள் போய்விட நின்மதிப் பெருமூச்சு வருகிறது.
ஒரு இருப்பது  நிமிடமும் இல்லை பார்த்துவிட்டு வெளியே வர இருண்டுவிட்டது. எம்மைக் கண்டுவிட்டு வாகன ஓட்டி கையைக் காட்டியபடி வருகிறான். எப்படி இருந்தார்கள் புத்தாஸ் என்று கேட்க நன்றாக இருந்தது என்று விட்டு எம்மை கோட்டலுக்குப் போகப் போகிறீர்களா? என்கிறான். இல்லை அண்மையில் இருக்கும் நைற் மாக்காற்றுக்குக்  கொண்டு போய்விடு என்கிறாள் மகள். பயம் இல்லையோ என்கிறேன் நான். எல்லாம் அங்கே டூரிஸ்ட்ஸ் தான். இரவு ஒருமணி வரை கடைகள் இருக்கும் என்று ஒன்லைனில் வாசித்தேன். ஒருமணிநேரம் அங்கு சுற்றிவிட்டு வருவோம் என்கிறாள்.

அங்கு எம்மை இறக்கிவிட்டு நிற்க பத்து டொலரைக் கொடுத்துவிட்டு நாளை காலை வருகிறாயா என்று கேட்க,
நாளை தனக்கு ஒரு சவாரி இருக்கு. மாலை தான் நான் பிறீயாக இருப்பேன் என்கிறான். நாம் நாளை காலை 5.30 இற்கு அங்கோர்வாட் போகவேண்டும். அதனால் நாம் கோட்டலிலேயே ஒழுங்கு செய்கிறோம் என்று மகள் கூற, நாளை மறுநாள் நீங்கள் எங்கு போகவேண்டுமென்றாலும் என்னை அழையுங்கள். கோட்டலுக்குச் சொல்ல வேண்டாம். இருப்பது டொலர்ஸ் ஒரு நாளுக்குத் தந்தாற் போதும் என்றபடி தன் தொலைபேசி இலக்கத்தைத் தர மகள் வாங்கிக்கொள்கிறாள்.

இறங்கி வீதியில் நடந்தால் எங்கும் வெளிநாட்டவரும் ஓட்டோ, சைக்கிள் ரிக்சா என டியூப் லைட் வெளிச்சத்தில் எங்கும் பகல் போல் தெரிகின்றன. ஓட்டோ, ரிக்ஸ்சா எல்லாம் அருகே வந்து வேண்டுமா எனக் கரைச்சல் தருகிறார்கள். யாரையும் பார்த்துப் பதில்கூறாமல் வாருங்கள் என்றுவிட்டு மகள் நடக்கிறாள். கடை களுக்குள் சென்றால் எல்லாம் சரியான விலை சொல்கிறார்கள். அரைவாசி உணவகங்கள். மிகுதி ஆடைகள், மசாச் செய்யும் கடைகள் என வீதி எங்கும் சனக் கூட்டம். உள்ள கடைகள் எல்லாம் ஏறி இறங்கிவிட்டு கடைசியில் மக்கள் ஒரு செட் உடை வாங்க நான் ஒரு பாவாடையை பத்து டொலருக்கு வாங்கிக் கொண்டு வெளியே வந்தால் நேரம் ஏழுமணி ஆகிவிட்டிருந்தது. சாப்பாடு வேணுமோ என்று மகள் கேட்க நான் வேண்டாம் என்கிறேன். மதியம் பிந்தி உண்டதில் வயிற்றில் பசியெடுக்கவில்லை. ஒரு சிறிய கடையில் போய் அமர்ந்து இருவரும் யூஸ் மட்டும் குடித்துவிட்டு மூன்று டொலேர்ஸ் கொடுத்துவிட்டு வெளியில் வந்து இன்னொரு சிறிய சூப்பர்  மாக்கற்றில் சிறிய யூஸ் போத்தல்கள் இரண்டும் பிஸ்கற் பக்கற் இரண்டும் வாங்கி விட்டு கோட்டலுக்கு நடக்கிறோம்.

விடுதியை அடைந்ததும் எமக்கு அடுத்தநாள் காலை ஒரு வாகனம் வேண்டும் என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கால்முகம் எல்லாம் கழுவிவிட்டு படுக்கையில் விழுகிறோம். அடுத்தநாள் என் நீண்ட நாள் கனவான அங்கோர்வாட்டைப் பார்க்கும் மகிழ்விலும் ஒருபெரிய எதிர்பார்ப்புடனும் நின்மதியாககத் தூங்கிப்போகிறேன்.

82506358_10213485479764981_3016505692627

82105016_10213485477884934_5148733135755

81917268_10213485477724930_7192124527600

81394157_10213485467924685_2902072336339

81789140_10213485467764681_8149125154765

81706293_10213485470444748_4809021177060

82035168_10213485471924785_6905347710115

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

ஆரம்பமே ஆனந்தமாக அசத்தலாக இருக்கு ( நீங்கள் எரிச்சல் படுவதுதான் எங்களுக்கு ஆனந்தம்.என்ன செய்வது உங்கள்  கதைகளை படித்து படித்து அப்படியே பழகி விட்டது). தொடருங்கள் சகோதரி.........!  😁

நீங்கள் ஒருவிதமாக எரிச்சல் படுத்தினால் நாங்கள் இன்னொருவிதம் அவ்வளவே. நன்றி அண்ணா வருகைக்கு. 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன பப் ஸ்டீரிடுக்கெல்லாம் விசிட் அடிச்சிறுகிறியள்😂.

உந்த ரோட்டில “எல்லாம்” கிடைக்கும்.

சியாம் ரீப்பில் எல்லா கட்டிடமும் 2 மாடிதான். அதுக்கு மேல் இல்லை.

அங்கர்வட்டை மிஞ்சி உயர்க்கூடாதாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பிறகென்ன பப் ஸ்டீரிடுக்கெல்லாம் விசிட் அடிச்சிறுகிறியள்😂.

உந்த ரோட்டில “எல்லாம்” கிடைக்கும்.

சியாம் ரீப்பில் எல்லா கட்டிடமும் 2 மாடிதான். அதுக்கு மேல் இல்லை.

அங்கர்வட்டை மிஞ்சி உயர்க்கூடாதாம்.

 

முன்னர் அப்படி இருந்திருக்கலாம். இப்ப நிறைய அடுக்கு மாடி விடுதிகள், மியூசியம் எல்லாம் இருக்கின்றனவே கோசான். 

&w=700&h=411&req_w=700&qu=85&crophr=1.10

 

 

angkor-miracle-resort-1-mobile.jpg

 

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி சுவி அண்ணா, அபராஜிதன், குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்னர் அப்படி இருந்திருக்கலாம். இப்ப நிறைய அடுக்கு மாடி விடுதிகள், மியூசியம் எல்லாம் இருக்கின்றனவே கோசான். 

&w=700&h=411&req_w=700&qu=85&crophr=1.10

 

 

angkor-miracle-resort-1-mobile.jpg

 

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி சுவி அண்ணா, அபராஜிதன், குமாரசாமி

உண்மைதான்,

நான்தான் மாடிக்கணக்கில் பிழை விட்டு விட்டேன். 6 மாடி என நினைக்கிறேன். 

நீங்கள் போட்டுள்ள படங்களும் அங்கொர்வாட் கோபுரத்துக்கு மேலே வராதுதானே?

நான் சொல்வது வாய்மொழி கேட்ட தகவல்தான். பிழையாயும் இருக்க கூடும்.

அப்டேட்

நான் சொன்னது சரிதான்👇

https://m.phnompenhpost.com/real-estate/siem-reap-offices-facing-very-different-outlook 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் தொடரட்டும் படங்களையும் இணையுங்கள் அக்கா

Link to comment
Share on other sites

அங்கோர் வாட் இற்கு போக வேண்டும் என்றிருக்கும் என் ஆவலை மேலும் அதிகரிக்கின்றீர்கள் சுமே. விலாவாரியாக எழுதியிருப்பதால் நன்றாக இருக்கின்றது தொடர். நிறைவேறிய கனவு என்று சொல்லாமல் கலைந்த கனவு என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். ஏதும் எதிர்மறையாக நடந்து இருக்குமோ என யோசிக்க தோன்றுகின்றது.

தொடர் எழுதும் முறை அருமையாக இருந்தாலும் சாரதியை, வண்டியை ஓட்டுகின்றவரை அவனே இவனே என ஒருமையில் விளித்து இருப்பது நாம் இன்னும் இப்படியான தொழில் செய்கின்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையையும் உணர்த்துகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

அங்கோர் வாட் இற்கு போக வேண்டும் என்றிருக்கும் என் ஆவலை மேலும் அதிகரிக்கின்றீர்கள் சுமே. விலாவாரியாக எழுதியிருப்பதால் நன்றாக இருக்கின்றது தொடர். நிறைவேறிய கனவு என்று சொல்லாமல் கலைந்த கனவு என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். ஏதும் எதிர்மறையாக நடந்து இருக்குமோ என யோசிக்க தோன்றுகின்றது.

தொடர் எழுதும் முறை அருமையாக இருந்தாலும் சாரதியை, வண்டியை ஓட்டுகின்றவரை அவனே இவனே என ஒருமையில் விளித்து இருப்பது நாம் இன்னும் இப்படியான தொழில் செய்கின்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையையும் உணர்த்துகின்றது.

இல்லை நிழலி .....அவனை சே....அவரை சுமே அவர்கள் தனது தம்பியை , அண்ணனை போல் உரிமையுடன் அழைக்கின்றார் என்று நினைக்கின்றேன்.இல்லையா சகோதரி, இனி நீங்கள் அவரை டேய் என்று கூட அழைக்கலாம்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, suvy said:

இல்லை நிழலி .....அவனை சே....அவரை சுமே அவர்கள் தனது தம்பியை , அண்ணனை போல் உரிமையுடன் அழைக்கின்றார் என்று நினைக்கின்றேன்.இல்லையா சகோதரி, இனி நீங்கள் அவரை டேய் என்று கூட அழைக்கலாம்......!  😂

ம்.....பண்ணியில் பண்ணிப்பாருமன். 🤣

Bildergebnis für no no gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பயணம் தொடரட்டும் படங்களையும் இணையுங்கள் அக்கா

வருகைக்கு நன்றி முனி

12 hours ago, நிழலி said:

அங்கோர் வாட் இற்கு போக வேண்டும் என்றிருக்கும் என் ஆவலை மேலும் அதிகரிக்கின்றீர்கள் சுமே. விலாவாரியாக எழுதியிருப்பதால் நன்றாக இருக்கின்றது தொடர். நிறைவேறிய கனவு என்று சொல்லாமல் கலைந்த கனவு என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். ஏதும் எதிர்மறையாக நடந்து இருக்குமோ என யோசிக்க தோன்றுகின்றது.

தொடர் எழுதும் முறை அருமையாக இருந்தாலும் சாரதியை, வண்டியை ஓட்டுகின்றவரை அவனே இவனே என ஒருமையில் விளித்து இருப்பது நாம் இன்னும் இப்படியான தொழில் செய்கின்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மையையும் உணர்த்துகின்றது.

தொடர்ந்து வாசித்தீர்கள் என்றால் போகப் போகப் புரிந்துகொள்வீர்கள். வருகைக்கு நன்றி

1 hour ago, suvy said:

இல்லை நிழலி .....அவனை சே....அவரை சுமே அவர்கள் தனது தம்பியை , அண்ணனை போல் உரிமையுடன் அழைக்கின்றார் என்று நினைக்கின்றேன்.இல்லையா சகோதரி, இனி நீங்கள் அவரை டேய் என்று கூட அழைக்கலாம்......!  😂

அண்ணன் என்றால் இப்பிடித்தான் இருக்கவேணும். எனக்கே நிழலி எழுதியதை பார்த்து பக் என்றது. நீங்கள் எழுதியதை வாசித்ததும் அப்பாடா எவ்வளவு நின்மதி 😀🤣

47 minutes ago, குமாரசாமி said:

ம்.....பண்ணியில் பண்ணிப்பாருமன். 🤣

Bildergebnis für no no gif

நீங்கள் ஆருக்கு சப்போட் செய்யிறியள் என்று விளங்குதில்லையே குசா ???🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் அதிகாலையில் 4.30 மணிக்கு எழுந்து தோய்ந்து வெளிக்கிட்டு இத்தனை நாட்கள் கற்பனையில் கண்டு கழித்த பிரமாண்டமான அங்கோர்வாட் கோவிலைப் பார்க்கப் போகிறேன் என்னும் மகிழ்ச்சியை விட தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில் என்னும் பெருமிதமும் சேர, நாமே ஊற்றிய தேநீரைக் குடித்துவிட்டு 5.20 க்கு கீழே வருகிறோம். இன்று உங்களுக்கு ஓட்டோதான் வருகிறது என்கிறாள் விடுதி பெண். ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்த ஒருவர் விடுதி வரவேற்பாளரிடம் அவர்கள் மொழியில் எதோ கதைத்துவிட்டு எம்மிடம் வருகிறார். எம்மைக் கூட்டிச் செல்ல இருப்பவர் இவர்தான் என்று புரிய நாமும் எழுந்து வெளியே செல்கிறோம். காலை நேரமாதலால் சாடையான குளிரடிக்கிறது. நான் எப்போதும் ஒரு சால்வை கொண்டு செல்வதால் அதைச் சுற்றிக்கொண்டு ஏறி அமர்கிறேன்.

அதிகாலை என்பதனால் பெரிதாக சன நடமாட்டம் இல்லை.ஒரு ஒரு கிலோமீற்றர் அளவுவரை வீடுகள் கட்டடங்கள் தென்பட்டபின்  வெளிகளும் பெருமரங்களும் ஏரிகளும் கண்ணுக்கு இதமளிக்கின்றன. இடையில் பெரிய வீட்டுமனைகள் இல்லை.  சிறிய கடைகள் அத்துடன் கழிப்பறை வசதிகள் சேர்ந்த இடம். கழிப்பறையை சுத்தமாக வைத்திருக்க வேலையாட்கள் இவ்வளவே. வீட்டுமனைகள் இல்லாமல் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக அப்பகுதிகளைக் காத்து வைத்துள்ளனர். ஆறு மணிக்கு நாம் ஓரிடத்துக்குப் போய்ச் சேர அங்கு அதற்குமேல் போகமுடியாது. நீங்கள் நடந்துதான் போகவேண்டும் என்று ஓட்டுநர் கூற நாம் இறங்குகிறோம்.

நிறையச் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்திறங்கி கூட்டமாகவும் தனித்தும் நடந்து போகின்றனர். சிலர் சுற்றுலா வழிகாட்டியுடன் செல்கின்றனர். வழிகாட்டிகள் பலர் உங்களுக்கு உதவி தேவையா என்றபடி வருகின்றனர். எவ்வளவு என்று கேட்க $10 என்கின்றனர். எமக்குவேண்டாம் என்றுவிட்டு சிறிது தூரம் நடக்க பெரிய ஏரி எம்முன்னே விரிகிறது. கோயில் இன்னும் முழுமையாகத் தெரியாமல் அரைகுறையாகவே தெரிகிறது. மனதெல்லாம் எனக்குப் பூரிப்பு. மனதில் சோழர்கள் படைநடத்தி நாடுகளைக் கைப்பற்றியது பற்றி வாசித்தவை எல்லாம் வந்துபோகின்றன. சதுரமான வலிமையான பிளாஸ்டிக் பலகைகள் போன்ற ஒன்றில் பாலத்தைப் போட்டிருக்கின்றனர். பாலத்தில் நடக்க பாலம் சாடையாக ஆடுகிறது. இவை கழன்றுபோனால் தண்ணீரினுள்ளே விழவேண்டும் என்ற பயமும் எட்டிப் பார்க்கிறது. ஏரியில் அல்லிப் பூக்கள் பல பூத்து அழகாகக் காட்சி தருகின்றன. பாலத்தைக் கடந்து மேலே சில படிகள் எற பெருஞ் சுவர் எதிரே தெரிகிறது.

இன்னும் கோவிலைக் காணவில்லையே என்று எண்ணியபடி இரு நிமிடம் நடக்க கண்முன்னே விரிகிறது அங்கோர்வாட் என்னும் அழகிய கோவில். ஒரு நிமிடம் மனதில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. ஆனாலும் படங்களில் பார்த்து கற்பனையில் மிகப் பெரிதாக நான் எண்ணியபடியால் சிறிது ஏமாற்றமும் எட்டிப் பார்த்தது.  
ஒரு நூற்றைம்பது  பேராவது இருக்கும் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கின்றனர். சூரிய உதயம் மிக அழகாக இருக்குமாம் அம்மா. அதனாலதான் இத்தனை பேரும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்கிறாள் மகள். சரி ஊரோடு ஒத்ததுதானே என்றுவிட்டு நாமும் காத்திருக்க கதிரவனைக் காணவில்லை. ஏனெனில் கருமுகில்கள் மறைத்தபடி இருக்கின்றன. எம்மை நின்மதியாக நிற்கவிடாது நுளம்புகள் கால் கைகளில் கடிக்கின்றன.
நுளம்புக்கான கிறீம், ஸ்ப்ரே எல்லாம் கொண்டு போனதுதான். ஆனால் காலையிலேயே நுளம்பு துரத்தும் என்பது அறியாததனால் நாம் அவற்றைப் பயன்படுத்தவில்லை. எனக்கு முழங்கைக்குக் கிட்ட, கண் இமைக்கு மேலெல்லாம் நுளம்பு கடித்து பெரிதாக வீங்கிவிட்டது. அங்கு நிற்காமல் போவோமா என்று நான் கேட்க வந்தனாங்கள் எதற்கும் கதிரவன் காலிப்பதையும் பார்த்துவிட்டே போவோம் என்று கூற வேறு வழியின்றி நுளம்பைக் கலைத்தபடி நிற்கிறேன்.   

வெள்ளை இனத்தவர் சிலருடன் வழிகாட்டி ஒருவர் வருகிறார். அவர் அவர்களுக்கு எதுவோ சொல்லி விளங்கப்படுத்தியபடி வர சிலர் கோவிலைப் பார்த்து வாயைப் பிளக்கின்றனர். இந்தப் பெரிய கோவிலை எப்படிக் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஏலியன்ஸ் கூடக் கட்டியிருக்கலாம் என்று வழிகாட்டி கூற மற்றவர்களும் எதுவும் கூறாது ஓ என்கின்றனர். நான் உணர்ச்சிவசப்பட்டு இந்தியன் கிங் கட்டியது என்று வரலாறு சொல்கிறதே என்று அவனைப் பார்த்துக் கூற அவன் இருக்கலாம் என்றுவிட்டு அப்பால் நகர்கிறான். மகள் என்னருகில் வந்து அம்மா தயவு செய்து வாயைத் திறக்காதீர்கள். நீங்கள் பிடித்த கைடா அவன் ? என்கிறாள். அதன்பின் நான் எதுவும்பேசாவில்லை. அரை மணி நேரத்தின் பின் கதிரவன் அரைகுறையாகத் தெரிய, பொறுமை இழந்த பலர் கோவிலைப் பார்க்கச் செல்கின்றனர்.

ஒருவர் கேமராவுடன் வந்து மூன்று படங்கள் எடுப்பதற்கு $10 தாருங்கள் என்கிறான். அவன் காட்டிய படங்கள் அழகாக இருக்க எடுப்போமா என ஆசை உந்த அம்மா என்னிடமும் பெரிய கமரா தான் இருக்கு. தேவையில்லாமல் அவனுக்கு காசைக் குடுக்காதேங்கோ என்கிறாள். அவனுக்கு மக்கள் தடுக்கிறாள் என்று விளங்கியது போலும் உடனே $5 கொடு என்கிறான். சரி 5 டொலர் தானே என்றுவிட்டு சரி என்று மூன்று இடங்களில் கோவில் தெரிவதுபோல் வைத்து என்னைப் படம் எடுத்துவிட்டு பத்து நிமிடத்தில் படத்துடன் வருகிறேன் எண்றுவிட்டுப் போனவனை பதினைந்து நிமிடமாகியும் காணவில்லை. நீங்கள் பணம் கொடுக்கவில்லைத்தானே. வாங்கோ போவோம். திரும்ப வரும்போது வாங்கிக்கொள்வோம் என்று கூற உள்ளே செல்கிறோம்.

பனைமரங்கள் நாடு அது இது என்று பலர் அங்கோர்வாட்டைப் பற்றி எழுதியிருந்தாலும் ஆங்காங்கே சில பனைகளைத்தான் பார்க்க முடிந்தது. கோவிலுக்கு முன்னாலும் இரு பக்கமும் சிறிய குளம் காணப்பட்டாலும் நீரின்றி வற்றிப்போய் காணப்பட்டன. கோயிலின் உள்ளே போகத்தான் தெரிந்தது  அது கோபுரங்கள் போன்ற அமைப்புடன் இருந்தாலும் எமது கோவில் போன்று இல்லை. அதை பார்த்ததும் மனதில் ஒரு வெறுமை வந்து சூழ்ந்துகொண்டது. தமிழர்கள் ஏன் இப்படி ஒரு கோவிலைக் கட்டினார்கள்.  தமிழரின் சிற்ப வேலைப்பாடு சிறிதும் இன்றி வேறு வடிவில் கோவில் இருக்க, என் எத்தனையோ வருடக் கனவும் கொஞ்சம்  கொஞ்சமாக என் மனதை விட்டு அகலத் துவங்கியது. கோயிலின் உள்ளே இருந்த பகுதிக்குப் போகும் படிகள் மாயன் இனத்தவரின் கோயில் அமைப்புக்கு ஒத்ததாகக் காணப்பட்டது. அப்படிகள் செங்குத்தாக இலகுவாக எற முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. அதில் யாரும் ஏறாதவாறு சுற்றுலாத்துறை அப்படிகளை அடைத்து ஒரே ஒரு பக்கத்தில் இரும்புப் படிகளை அமைத்திருந்தனர். அதுவும் சும்மா கையாட்டிக்கொண்டு எற முடியாது. பக்கவாட்டுக் கம்பிகளைப் பிடித்தபடிதான் ஏறவேண்டும். வரிசையில் மேலே ஏறுவதற்குப் பலர் காத்திருக்க அதில் நாமும் சென்று நின்றுகொண்டோம். உங்களுக்குப் பயம் என்றால் நில்லுங்கள் நான் போட்டு வருகிறேன் என்று மகள் கூற, நானும் வருகிறேன். இத்தனை தூரம் வந்துவிட்டு இதில் ஏறாமல் போவதா என்று கூறியபடி நானும் நின்றேன். சிற்ப வேலைப்பாடுகள் வித்தியாசமாக இருந்தாலும் கோவிலைச் சுற்றிவர நடக்கும் இடங்கள் எல்லாம் சம தளமாக இல்லாது ஒரு பத்தடி நடந்தால் பின் திட்டு. அதில் ஏறி இறங்கி ஏறி இறங்கி நடக்கவே ஒருவித எரிச்சல் உண்டானது. மேலே இருந்து பார்க்க சுற்றிவர கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரங்களடர்ந்த காடுகள் அழகாக இருந்தன. மூலஸ்தானம் போல் இருந்த இடங்கள் இருண்டுபோய்  சிலவற்றில் புத்தர் வேண்டாவெறுப்பாக அமர்ந்திருந்தார்.

இந்தக் கோவில் கட்டுவதற்கு இந்தப் பெருங் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள் என்று எண்ணவே களைப்பு ஏற்பட்டது. சிலைகள் எல்லாம் அப்சரஸ்கள் நிறைந்திருக்க பெளத்த வழிபாட்டுத் தலம் என்று எண்ணவே மனம் கசந்தது. இடையே சிவலிங்கம் இருந்த ஆடையாளங்கள் இடிபாடுகளூடே தெரிகின்றன. கீழே இறங்கி வர வாசலில் எனது படங்களுடன் ஒரு பெண் நிற்கிறாள். அவளிடம் $5 கொடுத்துப் படங்களை வாங்கிக்கொண்டு வர நேரம் ஒன்பதாகிவிட பசியும் எடுக்க இங்கேயே எங்காவது உண்போமா என்று மகள் கேட்கிறாள். சரி என்று போனால் வழியெங்கும் சிறுமிகள் சிறுவர்கள் மீனுக்கு காட்டைக் காட்டி இந்தக் கடைக்கு வா என்கின்றனர். சிலர் சில பொருட்களை வைத்துக் கொண்டு  வாங்கும்படி கேட்க்கின்றனர். சிலர் நீ எங்களிடம் இவற்றை வாங்கினால் நான் பள்ளிக்கூடம் போகமுடியும் என்கின்றனர். இதுவரை உன்னிடம் யாருமே பொருட்களை வாங்கவில்லையா என்று மகள் சிரித்தபடி கேட்க, அவர்களும் சிரித்தபடி பின்னால் வருகின்றனர். எமக்குப் பின்னால் வராதே. நான் இப்ப உணவு உண்ணப் போகிறோம்.அதன் பின் போகும்போது வாங்குகிறேன் என்றபின் தங்களுக்குள் கதைத்தபடி சிலர் விலகிப் போக சிலர் தொடர்ந்தும் வருகின்றனர். நாம் ஒரு உணவகத்தைத் தெரிவு செய்து அங்கு போய் அமர்க்கிறோம். 

81484054_10213498215443365_7979920636057

81981544_10213498241084006_7109272323538

81587761_10213498240884001_6494251552419

81906202_10213498243604069_7763575118948

 

81628756_10213498243844075_8517719643245

82846497_10213498223643570_8626303150996

82127995_10213498223083556_8719381397313

82458830_10213498224443590_6123306694626

81616311_10213498224603594_6059302984607

81410036_10213498224843600_5666031624089

81951959_10213498225723622_1565903655456

81475588_10213498229483716_5756658857124

81618712_10213498229163708_4940067642942

81565876_10213498229083706_9781408169732

82814597_10213498231163758_4327149099401

82191053_10213498232523792_6450322888909

82151643_10213498233443815_3109896380634

81768395_10213498234483841_5749714784064

81872335_10213498234963853_5217094657032

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்து என்னை ஊக்குவிக்கும் உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவகம் பார்க்க நன்றாக இல்லாவிட்டாலும் வேறுவழியின்றி இருக்கவேண்டியதாகிவிட்டது. ஏனெனில் வெளியே போய் உணவகம் தேடிப் பிடிக்க அரைமணி நேரம் ஆகிவிடும். அதனால் அங்கேயே இருந்தால் ஒரு மெனு காட்டைக் கொண்டுவந்து தந்துவிட்டு அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் போகிறாள். என்ன இவள் வணக்கம் கூடச் சொல்ல மாட்டாளா என அங்கலாய்க்க, அம்மா எங்களைப்போல் எத்தனைபேர் தினமும் இங்கு வருவார்கள். அத்தோடு நாம் நிரந்தர வாடிக்கையாளர்கள் இல்லை அவர்களுக்கு. எமக்கும் வேறுவழியில்லை. உணவைத் தெரிவு செய்யுங்கள் என்கிறாள் மக்கள்.அது சரிஎன்றுபட உணவைப் பார்த்தால் பெரிதாக எதுவுமில்லை. முதலில் கோப்பிக்கு ஓடர் செய்துவிட்டு திரும்பத் திரும்பப் பார்த்தாலும் எதுவும் பிடிக்கவில்லை. இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தெரிவு செய்யவே வேண்டும் என்று மகள் கூற வேறு வழியின்றி நூடில்ஸை ஓடர் செய்கிறேன். மகள் முட்டை ஒம்லட் ஒன்று என்று சொல்கிறாள். முட்டையுடன் சிலமரக்கறிகளை சிறிகாக அரிந்து பெரிய ஒரு ஒம்லட்டை மகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கிறார் அந்தப் பெண். உண்டு முடிய எல்லாமாக 10  டொலர்கள் வருகிறது.

நாம் போக எழுந்ததும் கையில் பொருட்களுடன் சிறுவர்களும் சிறுமிகளும் சொல்கின்றனர். சிலரிடம் சில பொருட்களை வாங்கிவிட்டு நடந்து வெளியே செல்ல ஓட்டுநர் எமக்காகக் காத்திருக்கிறார். காலை உணவு உண்டுவிட்டாயா என்று கேட்க தான் வரும்போதே வீட்டிலிருந்து கொண்டு வந்ததாகக் கூறி கொண்டுவந்த பாத்திரத்தைக் காட்டுகிறார்.

இன்று இன்னும் இரண்டு கோவில்களை நீங்கள் பார்க்கலாம் என்கிறார். மீண்டும் மரங்களடர்ந்த பாதைகளூடாகப் பயணிக்கிறோம். நேரம் 10.30 ஆகிவிட்டதால் வெப்பமாக இருந்தாலும் காலை என்பதனால் பெரிதாக வெய்யிலின் தாக்கம் இல்லை. போகும் வழியில் பார்த்தால் குளம் ஒன்றுக்கு அருகில் ஒரு புளிய மரம். புளியங்காய்களும் பழங்களும் கூடக்  கண்ணுக்குத் தெரிய வாகன ஓட்டுனரை நிறுத்தும்படி கூறிவிட்டு இறங்கி கிடடக் சென்று புளியம்பழம் ஏதும் எட்டும் தூரத்தில் இருக்கிறதா என்று பார்க்கிறேன். ஒன்றுகூட இல்லை. கீழே கூட ஒன்றையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிப் பூக்கள் பூத்திருக்க மக்களையும் இறங்கி வரச் சொல்கிறேன். உங்களுக்குத்தான் உதுகளில் பயித்தியம். நீங்களே ஆறுதலாக நின்று பார்த்துவிட்டு வாருங்கள். நான் ஓட்டோவிலேயே இருக்கிறேன் என்கிறாள். கொக்கத்தடி ஒன்று இருந்தால் ஒரு பூவாவது பிடிங்கலாம் என்ற ஆசை எழுகிறது. எதுவும் நடக்காது என்று தெரிந்து மீண்டும் வந்து அமர்கிறேன்.

82238090_10213523995687855_8098516876511

81998062_10213523996127866_7452480235288

81955228_10213523996447874_8973916891739

 

தொடர்ந்தும் அங்கோர் தோம் என்னும் இடத்துக்குப் பயணிக்கிறோம். ஆற்றின் மேலே கட்டப்பட்டிருக்கும் பெரிய பாலத்தில் சூரன்களைப் போல பெரிய பெரிய உருவங்கள் கற்களினால் செய்யப்பட்டிருந்தன.  சில உடைந்துபோய் இருக்க சிலவற்றைப் புதிய கற்களால் செய்து வைத்திருந்தார்கள். சில தலைகள் மட்டும் புதிய கற்களால் ஆக்கிப் பொருத்தப்பட்டிருந்தன. அங்கங்கே மீளக் கட்டமைக்கப்படுவதற்காக பெருங்கற்கள் இறக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆறுப்படுக்கையும் வீடுகளற்ற பகுதிகளும் பழைமை சிதைந்துபோகாமல் இருக்க உதவுகின்றன. சில மக்கள் இரு மரங்களுக்கிடையே  துணிகளைக் கட்டி அவற்றில் படுத்துக் கிடக்கின்றனர். அவற்றைப் பாரத்துவிட்டு அடுத்த கோவிலை பார்க்கப் போகிறோம்.

 

81787655_10213523996727881_7347407167516

82026885_10213523997287895_7011990682923

82266907_10213523997607903_9266461562539

82605323_10213523997767907_1979271790723

81792768_10213523998327921_1575599488293

82226679_10213523999087940_2395489108509

 

அடுத்தது Ta Pronm கோவில். இதிலும் வழிபாடுகள் நடைபெறமுடியாதவாறு இடிபாடுகளுடன் காணப்படுகின்றன. இந்தக் கோவிலாக இருந்தமைக்கான அடையாளங்களின்றி பெளத்த தலத்துக்குச் செல்வதுபோன்ற உணர்வே அங்கும் ஏற்படுகின்றது. ஆங்காங்கே சில பிக்குக்களும் அமர்ந்திருக்கின்றனர். பல பிக்குக்கள் இலை வயதினராகவே இருக்கின்றனர். பல ஆலமரவிழுதுகள்  கோவில்களை மூடியிருந்தன. இக்கோயில்களில் பல பகுதிகள் உள்ளே போக முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றிவரக் காடுகள் மட்டும் அழகிய பெரு மரங்களோடு அழகாய்க் காட்சியளித்தன.  

 

 

82533523_10213523999287945_5702478248412

81932923_10213523999647954_3467139244781

81890176_10213524000327971_8759379014696

82296571_10213524000687980_2449627338778

82528416_10213524001287995_3924038789147

82405437_10213524002048014_1589889583221

82457560_10213524002688030_4477173836059

82929326_10213524003168042_8789338249832

81854018_10213524005128091_9046852540301

82092019_10213524005528101_2105548102717

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.