Recommended Posts

13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாப் படங்களையும் போட வேண்டாம் என்று எண்ணினேன்.  துல்லியமாக விளக்கம் தர என்னால் முடியாது  என்பதால்.கோசான் உங்களுக்குத் தெரிந்தவற்றை வந்து எழுதுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

82447153_10213570688815154_9055223663489

 

 

 

 

82447130_10213570705935582_2980317513667

 

 

82926619_10213570711415719_1758517571289

 

 

 

புரிந்துணர்வுக்கும் அனுமதிக்கும் நன்றி சுமே.

கஸ்டபட்டு நீங்கள் எழுதும் திரியில் நான் வந்து படங்களை இணைப்பது சரியா என யோசித்தேன். ஆனாலும் உங்களைப் போல சுவாரசியமாக எழுத எனக்கு ஆற்றலும் இல்லை பொறுமையும் இல்லை. இப்படி ஒரு பயணக்கட்டுரையை நான் எழுதபோவதுமில்லை இந்த படங்களை மற்றைய உறவுகள் பார்க்கப்போவது இல்லை.  எனவேதான் இதில் இணைத்தால் எல்லாரும் பார்க்கலாம் என்பதால் இணைத்தேன்.

உங்களின் படங்களில் நான் கோட் செய்துள்ள 3 படங்களை பற்றிய துணுக்குகள்.

1. இது ஒருவகை நாட்காட்டியாம். வரிசைக்கு இருக்கும் இந்த கதவுகள், தாழ்வாங்கள் வழியே வரும் சூரிய ஒளியின் படி கணிக்கப்படும்மாம். இதற்கு மேல் எனது வழிகாட்டிக்குகும் விபரம் தெரியவில்லை.

2. இந்த மரமேறிய கோவில்களை இந்திய அரசு பாரமெடுத்து மராமத்து பணிகள் செய்கிறதது.

3. இது புதிதாக கட்டிய பகுதி என நினக்கிறேன். அங்கொவட்டில் எனக்கு பிடிக்காத ஒரே விடயம் இந்த வகை புதுப்பித்தல். சீமேந்தை கொண்டு ஆனால் பழைய கல்களை போல் வடிவமைத்து புதுபிக்கிறார்கள். கொஞ்சம் காலம் ஓடி மழை பெய்தபின், புதிசு எது பழசு எது என தடுமாறும் அழவுக்கு தத்ரூபமாக புதிப்பிக்கிறார்கள்.

இது எனக்கு பிடிக்கவில்லை. ரோம் நகரில் இருப்பது போல், இடிபாடுகளை அதே வடிவில் (மேலும் கெடாமல்) பாதுகாக்கும் முறையே உண்மையான தொல்லியல் மரபு காத்தலாக இருக்க முடியும்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

.

என் வீட்டுச் சுவரில் கணவரின் கைவண்ணத்தில் சட்டகங்கள் செய்யப்பட்டு அந்த ஓவியம்.

 

82517950_10213573160556946_5205851029651

 

படமும் அழகு, சட்டமும் கைநேர்த்தியாய் உள்ளது. அதை விட பாராட்டுக்குரியது அதை உடனடியாக சட்டம் செய்து சுவரில் ஏற்றிய உங்கள் ஆர்வம்.

எனது ஷெட்டில் இப்படி சில படங்கள் இன்னும் சுருட்டி, குழாயில் வைத்த கணக்கிலேயே உள்ளன.

150 டாலர் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உங்களிடமே 150 டாலரை பெற்றதற்கு அந்த மனிதனுக்கு அது தக்க சன்மானம்தான் 😂

Share this post


Link to post
Share on other sites

அவனவன் இப்படியான இடங்களுக்கு போய் வந்து படங்களோடை பயணக்கட்டுரை/ஆவண கட்டுரை எண்டு புத்தங்கள் எல்லாம் அச்சடிச்சு விக்கிறாங்கள்/வெளியிடுறாங்கள். இஞ்சை என்னடாவெண்டால் அருமந்த படங்களை எந்தவொரு விளக்கங்களும் இல்லாமல் குப்பை மாதிரி ஒட்டி வைச்சிருக்கு.
இப்பிடி வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் பலது கூகிள்ளை தேடினாலும் கிடைக்காது.
இன்னும் பிந்தேல்லை.....ஒவ்வொரு படங்களுக்கும்  விளக்கமும் கருத்துக்களும் எழுதினால் சிறப்பும் பெருமதிப்பும் பெறும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

படமும் அழகு, சட்டமும் கைநேர்த்தியாய் உள்ளது. அதை விட பாராட்டுக்குரியது அதை உடனடியாக சட்டம் செய்து சுவரில் ஏற்றிய உங்கள் ஆர்வம்.

எனது ஷெட்டில் இப்படி சில படங்கள் இன்னும் சுருட்டி, குழாயில் வைத்த கணக்கிலேயே உள்ளன.

150 டாலர் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உங்களிடமே 150 டாலரை பெற்றதற்கு அந்த மனிதனுக்கு அது தக்க சன்மானம்தான் 😂

நன்றாய் கொடுத்தேன் போங்கள்.நான் கொடுத்தது 100 டொலேர்ஸ் தான்.  😂

3 hours ago, goshan_che said:

3. இது புதிதாக கட்டிய பகுதி என நினக்கிறேன். அங்கொவட்டில் எனக்கு பிடிக்காத ஒரே விடயம் இந்த வகை புதுப்பித்தல். சீமேந்தை கொண்டு ஆனால் பழைய கல்களை போல் வடிவமைத்து புதுபிக்கிறார்கள். கொஞ்சம் காலம் ஓடி மழை பெய்தபின், புதிசு எது பழசு எது என தடுமாறும் அழவுக்கு தத்ரூபமாக புதிப்பிக்கிறார்கள்.

இது எனக்கு பிடிக்கவில்லை. ரோம் நகரில் இருப்பது போல், இடிபாடுகளை அதே வடிவில் (மேலும் கெடாமல்) பாதுகாக்கும் முறையே உண்மையான தொல்லியல் மரபு காத்தலாக இருக்க முடியும்.

இப்படிப் பலதை புதுப்பித்துள்ளமை எனக்கே கடுப்பாகத்தான் இருந்தது கோசான். முகங்களைக் கூட நடுவே ஒருகல்லை புதிதாக வைத்து சில மன்னரின் முகங்கள் பார்க்கவே எரிச்சல்தான் வந்தது.

2 hours ago, குமாரசாமி said:

அவனவன் இப்படியான இடங்களுக்கு போய் வந்து படங்களோடை பயணக்கட்டுரை/ஆவண கட்டுரை எண்டு புத்தங்கள் எல்லாம் அச்சடிச்சு விக்கிறாங்கள்/வெளியிடுறாங்கள். இஞ்சை என்னடாவெண்டால் அருமந்த படங்களை எந்தவொரு விளக்கங்களும் இல்லாமல் குப்பை மாதிரி ஒட்டி வைச்சிருக்கு.
இப்பிடி வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் பலது கூகிள்ளை தேடினாலும் கிடைக்காது.
இன்னும் பிந்தேல்லை.....ஒவ்வொரு படங்களுக்கும்  விளக்கமும் கருத்துக்களும் எழுதினால் சிறப்பும் பெருமதிப்பும் பெறும்.

எனக்கு அந்தப் பொறுமை இருந்திருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பன் குமாரசாமி. மகள் அப்பவும் குறிப்பெடுங்கள் அம்மா என்று சொன்னாள். மூன்றுமாதங்கள் போனதில் சில தகவல்கள் மறந்தும் விட்டுது. 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
checked the video

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

நான்காம் நாள் காலை ஏழு மணிக்கு எழுந்தால் மழை சோவெனப் பெய்துகொண்டிருக்கிறது. மழையைப் பார்க்க ஒருபக்கம் மகிழ்வாகவும் மறுபக்கம் எமது பயணம் தடைப்படப் போகிறதே என்ற எண்ணமும் ஒருங்கே எழுந்தது. முதல் நாளே  Prasat Banteay Srei என்னும் ஒரு சிவன் கோவிலுக்குப் போவதாகத் திட்டமிட்டு நாம் எட்டு மணிக்குக் கிளம்பவேண்டும் என்று ஓட்டோ ஓட்டுனரிடம் கூறியிருந்தோம்.  அங்கு போவதற்கு ஒன்றரை மணி நேரம் வேண்டும். 32 கிலோமீற்றர் என்று ஓட்டுனர் கூறியிருந்தார். மழை பெய்வதனால் சிறிது தாமதமாக வரும்படி கூறலாம் என்று எண்ணி ஓட்டுனருக்கு போன் செய்தால் போன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சரி வாறதுபோல் அவன் வரட்டும் நாம் காலை உணவை உண்டுவிட்டு தயாராய் இருந்தால் அவன் வந்ததும் கிளம்பலாம் என எண்ணி ஆடிப்பாடி வெளிக்கிட்டு கீழே சென்று உணவகத்தில் அமர்ந்தால் அங்கு எம்மைத் தவிர யாரும் இல்லை.  மெனுவைப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் பிடிக்கவில்லை. கடைசியில் பிரித்தானியக் காலை உணவை உண்டுவிட்டுக் காத்திருக்க மழையும் விட்டு நேரமும் எட்டுமுப்பதாகிவிட, என்ன இன்னும் வாகன ஓட்டுநரைக் காணவில்லை என்று மீண்டும் போன் செய்தால் போன் நிப்பாட்டியிருப்பதாகத் தெரிய, சரி என்ன பிரச்சனையோ இன்னும் அரைமணி நேரம் பார்ப்போம் என்றுவிட்டு கீழே இருந்த இருக்கைகளில் அமர்ந்து அங்கிருந்த நூல்களைப் பார்த்துக்கொண்டிருக்க, வரவேற்பில் வேலைசெய்யும்  ஒரு பெண் ஏதும் உதவி தேவையா என்று கேட்டபடி வந்தாள்.
நாம் விடயத்தைக் கூறியதும் ஒன்பது மணி வரை பார்த்துவிட்டு அவன் வராவிட்டால் தான் இன்னொருவரை ஒழுங்கு செய்வதாகக் கூறிச் செல்ல, முதல் நாள் எம்முடன் வந்த ஓட்டுனரின் இலக்கம் மகளிடம் இருந்ததால் அவனுக்கு இப்படி ஓரிடத்துக்குப் போகவேண்டும் நீ வருகிறாயா என்று செய்தி எழுதும்படி கூற மக்களும் எழுதினால் , நான் சும்மாதான் நிற்கிறேன். இருபது  நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்றான் அவன். அவனின் கலகலப்பான பேச்சு எமக்கு நன்றாகப் பிடித்திருந்தது ஒன்று. விடுதியே ஒழுங்கு செய்பவர்களுக்கு 8 டொலேர்ஸ் கொமிசன் கொடுக்கவேண்டும் அவர்கள். வீணாக எதற்கு விடுதிக்காரனுக்கு ஒரு பங்கைக் கொடுப்பான். அவனுக்கே முழுதையும் கொடுக்கலாம் என்று எண்ணினோம்.

சொன்ன நேரத்துக்கு முன்பாகவே அவன் மகிழ்வோடு வந்துவிட்டான். நாம் போய் வாகனத்தில் ஏறினால் அவன் எமக்காக சிறிய ஐஸ் பெட்டியில் இரண்டு தண்ணீர் போத்தல்கள் யூஸ் எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு வந்திருந்தான். நாமும் ஏற்கனவே தண்ணீர் போத்தலுடன் தான் போனோம். எனவே அவனுக்கு ஏமாற்றமாகிவிட யூஸையாவது எடுத்துக் குடியுங்கள் எனக் கூற சரி என்று கூறினோமேயன்றி எடுத்துக் குடிக்க சந்தர்ப்பம் வரவில்லை.

ஒரு அரைமணி நேர ஓட்டத்துக்குப் பின் எல்லாமே வயல்வெளிகளாகக் காட்சியளித்தது. தொட்டந்தொட் டமாய்  சில வீடுகள் கண்ணில் பட்டாலும் எல்லாமே சிறிய வீடுகளாய்த்தான் இருந்தன. வயல்கள்  பச்சைப்பசேல் என்று இருந்தாலும் எதோ ஒரு குறை இருப்பது போலவே மனத்தில் பட்டது. இடையிடையே சிறிய தகர மற்றும் ஓலைக் குடிசைகளில் பழங்கள்,  மரக்கறிகள், கைவினைப் பொருட்கள் என்று இருந்தாலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வைக்கப்பட்டிருப்பதுபோல் அதிகமாக இல்லாமல் மிகச் சொற்பமாகவே இருந்தன.

நாம் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது அந்த இடமும் கூட மிகவும் பின்தங்கிய இடமாகக் குடிமனைகள் இல்லாது பாக்க ஒருமாதிரியாகவே இருந்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்காக மலசலகூட வசதியை நன்கு செய்திருந்தது மன நின்மதியைத் தந்தது.  வீடுகள் பலவும் வெள்ளத்தில் இருந்து தப்புவதற்காக நிலத்திலிருந்து சில அடிகள் உயரத்தில் கட்டப்பட்டிருந்தன. அங்கும் வீட்டுத் தூண்களில் கடைகளுக்கு அருகில் இருந்த மரங்களில் ஆங்காங்கே ஏணைகள் போன்று படுப்பதற்கு வசதியாகக் கட்டப்பட்டிருந்தன.
 
அக்கோயில் இரண்டாம் ராஜேந்திரவர்மனின் ஆலோசகராக இருந்த யஜ்னவராஹாவாலும்  அவரது சகோதரனாலும்  பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1914 ம் ஆண்டிலேயே இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டு  1930 பிரான்ஸ்சினால் புனரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டது. அரசர் கட்டிய கோவில்களிலும் பெரிதாக இருக்கக்கூடாது எனச் சிறிதாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றைய கோவில்களைக் காட்டிலும் சிறிது வித்தியாசமாக இருந்தது. தூரத்தில் நின்று பார்க்க நல்ல சிவப்பும் பளுப்புமான நிறத்தில் காணப்பட்டது. பெண்களின் கோட்டை என்று அழைக்கப்பட்டதாம். ஏன் அழைக்கப்பட்டது என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை சொல்லீற்ரன்.
இக்கோவில் சிறிது எமது கோவில்களின் வடிவங்களை உள்பகுதியில் கொண்டிருந்தது மனதுக்கு மகிழ்வைத் தந்தது.

 

82624038_10213589235958821_7802853651432

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

82971747_10213589238638888_5105944824716

82979034_10213589238478884_4076943198298

83359378_10213589239518910_7613097624018

84065724_10213589239998922_6963848763869

 

82910611_10213589240518935_8307655000411

82910162_10213589241118950_8971595337361

82759214_10213589242518985_1884752110432

 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 1/22/2020 at 11:58 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. யூரியூப்பிலை வீடியோக்கள் ஏத்தி பழகுறியளோ? 😀

Share this post


Link to post
Share on other sites

82870248_10213589243679014_3284089929059

82799292_10213589243279004_2691026499636

82846479_10213589244759041_5279424455087

82917761_10213589245719065_5791808482927

82969041_10213589235638813_1871070887248

84260114_10213596139811413_2666276926687

82959080_10213596145211548_2123013157730

83870344_10213596146371577_3567626356927

83311560_10213596148091620_1131559780385

83677932_10213596148571632_3900103103910

83154058_10213596148851639_6363030551951

83225823_10213596149331651_5745621499843

82540252_10213596196372827_6353016831405

 

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

83073385_10213589245359056_2987645475198

83331098_10213589245839068_3505496463830

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றது. தொடருங்கள்........!  👍

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றது. தொடருங்கள்........!  👍

நன்றி சுவி அண்ணா. அப்பப்ப எட்டிப்பாருங்கள்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா

13 hours ago, குமாரசாமி said:

கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. யூரியூப்பிலை வீடியோக்கள் ஏத்தி பழகுறியளோ? 😀

பின்ன வேறே எங்க பழகுறது 😎

Share this post


Link to post
Share on other sites

பச்சைக்கும் வரவுக்கும் நன்றி தமிழினி

Share this post


Link to post
Share on other sites

என்ன கோசான் எட்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறவில்லை. இக் கோவிலுக்குப் போனீர்களா ??

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் படம் போடேக்கை ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் எழுதலாமே? இது கூகிள்ளை எடுத்து ஒட்டுறமாதிரியெல்லே போகுது. இதை நான் என்னத்துக்கு சொல்லுறனெண்டால் நாங்களும் நாலு விசயம் தெரிஞ்சு கொள்ளலாம் எல்லே 😀

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, குமாரசாமி said:

நீங்கள் படம் போடேக்கை ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் எழுதலாமே? இது கூகிள்ளை எடுத்து ஒட்டுறமாதிரியெல்லே போகுது. இதை நான் என்னத்துக்கு சொல்லுறனெண்டால் நாங்களும் நாலு விசயம் தெரிஞ்சு கொள்ளலாம் எல்லே 😀

பார்ரா நீங்கள் எங்க செல்லம் இதுவரைக்கும் போயிருக்கீங்க அந்த கள்ளுக்கொட்டிலுக்க என்று மட்டும் சொல்லக்கூடாது சாமியோவ்😃

Share this post


Link to post
Share on other sites
On 1/24/2020 at 7:15 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன கோசான் எட்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறவில்லை. இக் கோவிலுக்குப் போனீர்களா ??

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி

நான் இந்த கோவிலுக்கு போகவில்லை சுமே. அதனால் எழுத ஒன்றும் இருக்கவில்லை.

ஆனால் உங்கள் வர்ணிப்பும், படங்களும் நேரில் போன உணர்வைத்தந்தன.

நான் அங்கோர்வாட் கோவில் தொகுதியை மட்டுமே போகஸ் பண்ணி இருந்தேன். தவிரவும் போக முன்னம் செய்த ஆராய்சியில் சிறியதும் பெரியதுமாக தென்கிழக்கு ஆசியா எங்கினும் இருக்கும் பல கோவில்களை போலவே இதுவும் எனக்குத் தென்பட்டதால் இதற்கு போகவில்லை. 

கோவில் பார்ப்பதாயின் நீங்கள் போக வேண்டிய இன்னுமொரு நாடு பாலி (இந்தோநேசியா). 

பாலிக்குப் போய் வந்தால் - சைவ சமயம் தமிழர்களின் தொன்மையான மதம் என்ற இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களம் கட்டி எழுப்பிய பிம்பம் சுக்கலாகி விடும்.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, குமாரசாமி said:

நீங்கள் படம் போடேக்கை ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் எழுதலாமே? இது கூகிள்ளை எடுத்து ஒட்டுறமாதிரியெல்லே போகுது. இதை நான் என்னத்துக்கு சொல்லுறனெண்டால் நாங்களும் நாலு விசயம் தெரிஞ்சு கொள்ளலாம் எல்லே 😀

அட பாவியளே. உங்களுக்கு வாழைப்பழத்தை உரித்து தீத்தவேண்டுமா ??? மேலே இத்தனையையும் எழுதியிருக்கிறேன்.அதையும் இதையும் வாசித்து முடிச்சுப்போடாமல் தனித்தனியாவேற எழுதவேண்டுமா ???நல்லா இருக்குப்பா உங்கள் ஞாயம். 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

கோயிலைச் சுற்றிப் பார்க்க ஒரு அரை மணி நேரம் போதுமாக இருந்தது. பின்னால் சென்று வழிகாட்டிப் பலகை கூறியபடி வயல்வெளியின் அழகைப் பார்ப்பதற்காக சில இடங்களை இருக்கைகளுடன் அழகாக மரங்களின் கீழ் அமைத்திருந்தார்கள். அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு வள்ளத்தில் வயல்வெளியில் திரியலாம் என்றும் போட்டிருந்ததைக் கண்டு அதைத்தேடி சிறிதுதூரம் மரங்களால் சூழப்பட்ட இடத்தில் பதினைந்து நிமிடங்கள் தேடியும் இடம் அகப்படவில்லை. ஆங்காங்கே சில கறையான் புற்றுக்கள் காணப்பட பாம்பும் இருக்குமோ என்ற சந்தேகமும் வர , சன நடமாட்டமும் மிகச் சொற்பமாக இருக்க மீண்டும் எமது வாகன ஓட்டி நின்ற இடத்துக்கே வந்து சரி போவோம் என்றவுடன் எங்கு போவது என்றானவன்.முதலில் நீ சியாம் றிப்புக்கு போ. போகும்போது எங்கு போவது என்று முடிவெடுக்கலாம் என்கிறோம்.

மீண்டும் வயல்வெளிகள். மக்களோ வாகனங்களோ இல்லாத பெரிய வீதி. குறுக்கு வீதி ஒன்றின் உள்ளே விடும்படி ஓட்டுநரைக் கேட்க இங்கே ஒன்றுமே இல்லையே என்றான். நான் இந்த ஊரைப்பார்க்கப் போகிறேன் என்றதும் ஐயோ அம்மா. நீங்களும் உங்கள் ஆசையும் என்று சலிப்படைந்தாள் மகள். ஒரு பத்து நிமிடம் வயல் வெளிகளூடே ஓட்டோ ஓடுகிறது ஒன்று இரண்டு குடிசைபோன்ற வீடுகள்.சில கல்வீடுகள்.ஆனால் ஆட்கள் மட்டும் எங்கும் காணவில்லை. சரி திரும்புவோம் என்றதும் அவனும் மகிழ்வாகத் திருப்ப வீதியின் இருமருங்கையும் ஆவென்று பார்த்தபடி கிட்டதட்ட ஒருமணி நேரம் வந்துகொண்டிருக்க, மீண்டும் பெருமரங்களும் சிறு கடைகளும் சிறு கோவிலும் அங்கு நிறுத்தும்படி ஓட்டுனரைக் கேட்கிறோம்.

83828113_10213609064294517_3043561620065

84300770_10213609064534523_9183617939822

83005274_10213609064734528_1227394983389

83945768_10213609068134613_3789115767388

அங்கு நிறுத்தி சிறிது தூரம் நடக்க வரிசையாகப் பல கடைகள் விரிக்கப்பட்டு ஆடைகள், பழங்கள், உணவுப்பண்டங்கள்,  தண்ணீர் போத்தல்கள், திடீர் உணவுகள், நினைவுச் சின்னங்கள் என மனதுக்கு இதமளிப்பதாக இருந்தன. ஒருசில சிறுபிள்ளைகள் சில பொருட்களைக் கொண்டுவந்து வாங்குப்படி கரைச்சல்  தர பெரிய பெண்களோ ஆண்களோ தம்பாட்டுக்கு நின்றுகொண்டிருந்தனர். அதுவே நின்மதியாகவிருந்தது.

அதன் பெயர் நிக் பீன். அது ஏழாம் சூரியவர்மனால் மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவமனை போன்று இது கடத்தப்பட்டதாம். இரு மருங்கும் ஆழம் குறைந்த நீரேரியின் நடுவே பலகையால் பாலம் அமைத்திருந்தனர். தனித்தீவு போல் ஓரிடம் தூரத்தே தெரிய வெய்யிலும் காற்றும் ஒருங்கே எம்மை வதைக்க நடந்து சென்றால் பெரு மரங்கள் சூழ அவ்விடம் அமைந்திருந்தது. பார்க்க மனதுக்கு மகிழ்வைத் தந்தாலும் நாம் எதிர்பார்த்ததுபோன்று பெரிய கோவில்கள் எதுவும் இல்லை. உள்ளே சென்றால் சிறிய ஒரு கோபுரம் போன்ற கட்டுமானம் தண்ணீருக்கு நடுவே இருந்தது. சுற்றிவர பல மரங்களின் வேர்கள் மண்ணரிப்பினால் வெளியே தெரிந்துகொண்டிருந்ததே அழகாகவுமிருந்தது. சில மரங்களில் இருந்து வேர் போன்ற விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்ததும் அழகாகக் காட்சி தந்தது.
இந்த இடத்துக்கு வந்து குளித்தால் பல நோய்கள் தீரும் என்று முன்னர் நம்பிப் பலர் வந்து போனார்களாம். இப்போது சுற்றுலாப்பயணிகள் மட்டுமே வந்துபோகின்றனர் என்று ஒருவர் கூறிக்கொண்டிருந்தார். அரைவாசிப் பகுதியை மட்டுமே பார்வைக்கு விட்டுள்ளனர். தண்ணீருக்கும் யாரும் இறங்காதவாறு தடுப்பும் போட்டிருந்தனர்.

83692979_10213609069014635_6718114967398

82938945_10213609069134638_1228416051734

83778753_10213609071134688_6553347463439

83329154_10213609071814705_6406907568479

83396848_10213609072134713_6702202057731

83365235_10213609135056286_7050357728857

அதை பார்த்துவிட்டு வரும்போது பழங்கள் வைத்திருந்த கடையில் பழங்களை உடனே வெட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். நாம் அன்னாசிப் பழத்தையும் கொய்யாவையும் தெரிவு செய்தோம். அந்த வெய்யிலுக்கு அன்னாசியின் சுவை சொல்லமுடியாதிருந்தது. கொய்யா பெரிதாக எனக்குச் சுவைக்கவில்லை. வாகன ஊட்டியையும் உண்ணும்படி கூற முதலில் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பின் உண்ணத் தொடங்கினான்.

உண்டு முடிய மீண்டும் பயணத்தை ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடம் போயிருப்போம் ஒரு புல்வெளியில் திறந்தவெளி மேடையும் தற்காலிகக் கூடாரமும் அமைக்கப்பட்டு மேடையில் சிலர் நடனமாடுவது தெரிந்தது. உடனே வாகனத்தை நிறுத்தும்படி கூறி நான் இறங்க நான் வரவில்லை. நீங்கள் போய்விட்டு வாருங்கள் என்று மகள் ஓட்டோவிலேயே இருந்துவிட்டாள். போய் அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். பரதநாட்டிய ஆடையில் ஒரு பத்துப்பேர் மாறிமாறி நடனமாடியபடி இருந்தனர். பின்னாலிருந்து என்னருகில் ஒருவர் வந்தமர்ந்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். லண்டனில் இருந்து என்று கூறியதுதான் தாமதம் தான் தான் அங்கோர்வார்ட் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்றும் தன பெயர் நாகேஸ்வரராவ் என்றும் அறிமுகம் செய்தார். ராவ் தமிழ்ப் பெயர் அல்லவே என்று கூற வாய்வரை வந்த சொல்லை வெளியே வர விடாது விழுங்கிவிட்டு நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகள் இருக்கிறீர்கள் என்றேன். இருப்பது ஆண்டுகளாக தான் குடும்பத்துடன் இருக்கிறாராம். உங்களுக்கு ஹாலிடே பக்கேச் ஏதாவது வேண்டுமென்றால் கூறுங்கள் நான் ஒழுங்கு செய்கிறேன் என்கிறார். நாங்கள் வந்து நான்கு நாட்களாகிவிட்டன. இன்னும் ஒரு நாள்த்தான் நிற்போம் என்றது எங்கே நிற்கிறீர்கள் என்கிறார். நான் கூறியவுடன் அதற்கு அண்மையில்த்தான் தனது உணவகம் உள்ளது. அங்கே சென்று உண்ணலாம் என்றவரின் முகத்தை முறிக்காது கட்டாயம் போகிறேன் என்றேன்.
இது என்ன நிகழ்வு என்றதற்கு தாம் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு கலை நிகழ்வை நடத்துவதாகவும் தமிழர்களும் இந்நாட்டுக்கு உரித்துடையவர்கள் என்பதை இந்த அரசுக்கு நிரூபிக்கப் பாடுபடுவதாகவும் கூற தமிழர்களுக்கு எப்படி உரிமை வரும் அந்நிய நாட்டில் என்று நான் கேட்க, தமிழ் மன்னர்கள் இத்தனை ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இத்தனை கோவில்களைக் கட்டியுள்ளனர். நிட்சயம் ஒருநாள் இவர்கள் இது தமிழர்களின் சொத்து என்று அங்கீகரிப்பார்கள் என்கிறார். அவருடன் கதைத்துப் பயன் இல்லை என்று புரிய நான் வருகிறேன் என்றபடி எழுந்து வெளியே வந்து வாகனத்தில் ஏறினேன்.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 5
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 1/24/2020 at 11:22 PM, குமாரசாமி said:

நீங்கள் படம் போடேக்கை ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் எழுதலாமே? இது கூகிள்ளை எடுத்து ஒட்டுறமாதிரியெல்லே போகுது. இதை நான் என்னத்துக்கு சொல்லுறனெண்டால் நாங்களும் நாலு விசயம் தெரிஞ்சு கொள்ளலாம் எல்லே 😀

உண்மை. சுமேரியர் படங்களுக்கான விளக்கங்களையும் தந்தால் கட்டுரை இன்னும் நன்றாக அமையும் என்பது எனது கருத்து. 

இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களுக்கு அது பயன்படலாம்.

உதாரணத்துக்கு,

0-E10-DEF5-89-CD-4-A25-9200-9933-B188109

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த இடத்துக்கு வந்து குளித்தால் பல நோய்கள் தீரும் என்று முன்னர் நம்பிப் பலர் வந்து போனார்களாம்.

இப்போ குளித்தால்  பல நோய்கள் வந்து சேரும்.

 

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ராவ் தமிழ்ப் பெயர் அல்லவே என்று கூற வாய்வரை வந்த சொல்லை வெளியே வர விடாது விழுங்கிவிட்டு நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகள் இருக்கிறீர்கள் என்றேன்.

தமிழ்நாட்டிலே சிவாஜிராவ் என்றொரு தமிழன் பல ஆண்டுகளா இருக்கிறாராம். தெரியாதா உங்களுக்கு?

Share this post


Link to post
Share on other sites

பச்சைகள் தந்த சுவி அண்ணா, ஏராளன், குமாரசாமி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

கவி அருணாச்சலம் அண்ணா, நீங்களும் குமாரசாமியும் கூறுவதைக் கேட்டால் படங்களுக்கு தனித்தனியான விளக்கம் கொடுப்பது நல்லது என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் போட்டவற்றுக்கு இனி எழுத முடியாது. ஏனெனில் எடிட் செய்ய முடியாது. இனிப்பு போடுவதற்கு முயற்சி செய்கிறேன்.  

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

வரவுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் சுமோ  
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.