Recommended Posts

மிக்க நன்றி வருகைக்கும் பச்சைக்கும் ஏராளன், ரதி

Share this post


Link to post
Share on other sites

84109378_10213652630223638_3610608413941

மேடம்! ஒரு கேள்வி
இது சூரியவர்மன் துயில் கொண்ட இடமா? 😎

 • Like 1
 • Haha 4

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

இது சூரியவர்மன் துயில் கொண்ட இடமா? 😎

 கும்ஸ் இது  சுமேரியர் துயில் கொண்ட இடம் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

84109378_10213652630223638_3610608413941

மேடம்! ஒரு கேள்வி
இது சூரியவர்மன் துயில் கொண்ட இடமா? 😎

சூரியவர்மர் எதற்கு தனித்தனிக் கட்டில்கள் எல்லாம் அறையில் வைத்துக்கொள்ளப் போகிறார்???🤓

4 hours ago, Kavi arunasalam said:

 கும்ஸ் இது  சுமேரியர் துயில் கொண்ட இடம் 

அட இந்தக் கும்சும் நல்லாத்தான் இருக்கு 😃

Share this post


Link to post
Share on other sites

பச்சைக்கு நன்றி அபராஜிதன், சபேஷ்

Share this post


Link to post
Share on other sites

நாம் இருந்த இடத்தில் இருந்து ஒரு அரைமணி நேரம் நடந்து போனால் ஒரு திடல்வரும். அங்கே ஒவ்வொரு சனி ஞாயிறில் பல மக்கள் வந்து கூடுவார்கள். பலவிதமான உணவகங்கள், ஆடைகள், நகைகள் என்று எல்லாக் கடைகளும் போடுவார்கள். அத்துடன் பிரபல்யமான பாடகர்களின் இன்னிசை நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுமாம். நாம் ஒரு மணிநேரம் அறைக்குச்சென்று தூங்கிவிட்டு ஐந்து  மணிக்கு வெளிக்கிட்டுக் கிளம்பினால் ஆறுதலாக நின்று எல்லாவற்ரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று கூற அறைக்குச் சென்று அறை பால்கணிக் கதவைப் பெரிதாகத் திறந்து வைத்துவிட்டு  வெளியே புதினம் பார்த்தோம். பெரிதாகப் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லாதபடியால் காற்று வரட்டும் என்று கதவைத் திறந்து திரைச் சீலையை இழுத்து மூடிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தோம். ஏசி இருந்ததுதான் எனினும் எமக்குமுன்னால் இல்லாது ஒரு கட்டிலுக்கு அருகாமையில் திட்டமிடப்படாது பூட்டப்பட்டு இருந்தது. ஒரு கட்டிலில் படுப்பவருக்கு அதிகமாக்க குளிர்ந்தது. அதனால் அதை நிறுத்திவிட்டு கதவைத் திறந்து வைத்தோம்.  

ஒரு அரை மணி நேரம் நான் தூங்கியிருப்பேன். கால்களில் கடிக்கவாரம்பித்தது. கதவைத் திறந்துவிட்டதனால் நுளம்புகள் உள்ளே வந்துவிட்டன அம்மா என்றவாறு மகள் கதவுகளை சாற்ற ஆரம்பித்தாள். நாம் நுளம்புக்கான ஸ்ப்ரே கொண்டு  சென்றபடியால் அவற்றை கால் கைகளுக்கு அடித்துவிட்டு மீண்டும் கட்டிலில் இருந்த துணி விரிப்பினால் போர்த்துக்கொண்டு தூங்க மீண்டும் கடி. என்னடா இது என்று மீண்டும் எழுந்து தங்குவிடுதியின் தொலைபேசியை எடுத்து அவர்களுக்கு விடயத்தைக் கூற நீங்கள் வெளியே செல்ல இருக்கிறீர்களா என்று கேட்க அரை மணியில் செல்கிறோம் என்று கூற, தாம் அதன்பின் மருந்தை அடித்துவிட்டு கதவு யன்னல்களைத் திறந்து விடுவதாகவும். நாம் இரண்டு மணி நேரத்தின் பின்னர் நாம் வந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றும் அவர்கள் கூற இனித்த தூங்கிப் பயனில்லை.அதனால் இப்பவே வெளியே செல்லலாம் என முடிவெடுத்து எமது பொருட்களில் முக்கியமானவற்றை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டோம்.

வீதிகள் சுத்தமாக இருந்தாலும் சில இடங்களில் சில குப்பைப் பொதிகளை போட்டிருந்தார்கள். அவற்றைக் கடக்கும்போதெல்லாம் நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. அதற்கு அண்மையில் கூட சில உணவகங்களில் ஆட்கள் இருந்து உணவருந்தியபடி இருந்ததை பார்க்க அருவருப்பாக இருந்தது.  கடந்து ஒரு பத்து நிமிடங்கள் நடந்தால் ஒரே ஆட்களாக இருக்க நடுவில் ஒரு நதியும் ஓடிக்கொண்டிருந்தது. நதியில் வேகம் இல்லை. அது தேங்கி நிற்கிறதா? அல்லது ஓடிக்கொண்டிருக்கிறதா என்று அந்த மங்கல் ஒளியில் தெரியவே இல்லை. இரு சிறிய கப்பல்கள் பயணிகளைக் காவியபடி அதில் போய்க்கொண்டிருந்தன . போகப் போகக்  கூட்ட நெரிசல் அதிகமானது. வீதியைக் கடக்க முடியாது வாகனங்கள்தான். ஒருவரின் கையை மற்றவர் பற்றியவாறு வேற்றுநாட்டவர் ஒருவர் வீதியைக் கடந்தபோது அவருக்குப் பின்னால் நாமும் கடந்தோம்.  

திருவிழாக் கூட்டம்போல் சனம். வெளிச்ச விளக்குகள். மேடையில் பாடகர்கள் பாடிக்கொண்டு இருக்க இளவயதினர் கீழே நின்று ஆரவாரித்தபடி நடனமாடிக்கொண்டிருந்தனர். சுற்றிவரக் உணவகங்கள் போடப்பட்டு சுடச்சுட உணவுகள் தயாரித்தபடியிருக்க  சிலர் கதிரை மேசையிலும் சிலர் குடும்பமாகவும் கும்பலாகவும் இருந்து ஆங்காங்கே நிலத்திலிருந்து உணவை உண்டுகொண்டுமிருந்தனர். சிறிய பிள்ளைகள்  கீழே விரித்திருந்த பாய் போன்றவற்றில் விளையாடிக்கொண்டுமிருந்தனர்.

நாம் அவற்றைப் பார்த்தபடி அடுத்த பகுதிக்கு நுழைந்தோம். அவையெல்லாம் பொருட்களை விற்பனை செய்யும் பகுதி. இள வயதினர் தான் அதிகமாக ஆடைகளை விலைபேசி வாங்கியவண்ணமிருந்தனர். நாம் கறுப்பின வெளிநாட்டவராக இருந்தாலும் எம்மை எவரும் துவேசத்துடனோ அல்லது முகச் சுளிப்புடனோ பார்க்கவில்லை. ஆயினும் கடைகளில் விலை கேட்டபோது முகத்தில் எவ்வித உணர்ச்சிகளுமற்று வாங்கினால் வாங்கு அல்லது போ என்றதுபோல் தான் பதிலளித்தனர். அனைத்துப் பொருட்களும் விலை அதிகமாயும் பார்வைக்கு பெரிதாய்க் கவராது இருந்தன. தலைமுடிக்குப் போடும் சிலைட் தேடியும் எதுவும் அகப்படவில்லை. ஒரு கடையில் கேட்டால் இங்கு பெரிதாக யாரும் அதை பயன்படுத்துவது இல்லை என்று கூறியபின் தான் பார்த்தால் இளவயதினர் பலரும் றபர்பான்ட் தான் தலைக்குப் போட்டிருக்க சிலர் மட்டும் கொண்டை போன்று போட்டிருந்தனர்.

சரி இங்கு எதுவும் வாங்க முடியாது என்று அதைவிட்டு வெளியே வந்து ஆற்றங்கரை ஓரமாகச் சிறிது தூரம் நடந்தோம்.  ஆற்றங்கரைகளிலும் ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் அமர்ந்து சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்தபடியிருந்தனர். இருப்பதற்கு வசதியாக பல சீமெந்து மற்றும் பலகை இரும்பு இருக்கைகளும் வசதியாகப் போடப்பட்டிருந்தன. மிகச்சசொற்பமான பொருட்களைக் கடைபரப்பியபடியும் சிலர் இருந்தனர். இரண்டு மூன்று வயதுபோன பெண்கள் சில பொருட்கள் புத்தகங்கள், சாம்பிறாணிப் புகையுடன் கைரேகை மற்றும் சாத்திரம் பார்த்துக் கூறியபடியிருக்க வேறு சிலர் சும்மா இருந்து போவோர் வருவோரைப்பார்த்தபடி இருக்க பொருட்களை விற்பனை செய்பவர்கள் எதுவுமே பேசாது மௌனச் சாமியார்கள்போல் எங்கோ பார்த்தபடி இருந்தனர். இவர்கள் எதுவும் பேசாது இருந்தால் எப்படி பொருட்களை மற்றவர் வாங்குவார்கள் என்று எண்ணியபடி நான் கடந்தேன்.

இன்னும் கொஞ்சத்தூரம் நடந்து சென்றால் அதன் பின் இருள் மட்டுமே இருக்க மீண்டும்திரும்பி வந்தவழியே நடந்தோம். கிட்டத்தட்ட இரண்டரை  மணி நேரம் ஆகியிருக்க எனக்கு இனி நடக்க முடியாது என்றேன். சரி வாங்கோ அதில் இருக்கும் கடையில்சென்று ஏதாவது குடிப்போம் என்றபடி மகள் நடக்க நானும் நடந்தேன். அது குளிர்பானங்களும் தேநீர் கோப்பி முதலியவையும் கேக்குகளும் மட்டுமே விற்பனை செய்யும் கடை. கீழே கதிரைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மேல்மாடிக்குச் சென்றால் பலரும் கணணிகளுடன் மேலதிக இடங்களை பிடித்தபடி இருக்க பல சிறு பிள்ளைகள் மேசைகளில் தலைவைத்துப் படுத்திருந்தனர். ஒரே ஒரு மேசையில் இரு முதியவர்கள் அமர்ந்து தேநீர் அருந்தியபடியிருந்தனர். எம் நிலையைப் பார்த்து தமது மேசைக்கு வரும்படி கை காட்ட அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தோம். எங்கிருந்து வருகிறீர்கள் என்று மிக அன்பாய் விசாரித்து அளவளாவினர். ஏன் சிறு பிள்ளைகளை எல்லாம் இப்படி வைத்துள்ளனர் என்று கேட்டதற்கு இங்கு இன்டர்நெட் இலவசம். அதனால் பெற்றோரும் மாணவர்களும் அதிகம் வந்து தமது வேலைகளை முடித்துக்கொண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போவார்கள் என்று கூற எத்தனை வசதியாக வாழ்கிறோம் நாம் என்று மனதில் நின்மதி ஏற்பட்டது.

ஒரு மணிநேரம் போக அவர்களும் நாமும் வெளியே வந்து பாய் சொல்லிவிட்டு எமது தங்குவிடுதி நோக்கிச் செல்கிறோம். அங்கு போனவுடன் கதவைத் திறந்து வித்தியாசமான மணம் ஏதும் வருகிறதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நல்ல வாசனையாக இருக்கிறது அறை. கால்களைக் கழுவிக்கொண்டு கட்டிலில் விழுந்ததுதான். அத்தனை கால்வலி. எப்போ தூங்கினேன் என்று தெரியாதவாறு தூங்கவாரம்பிக்க எத்தனை மணிநேரம் தூங்கினேன் என்று தெரியாது கால் கைகள் எல்லாம் கடி. எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தால் நுளம்பு கடித்ததுபோல் எல்லா இடமும் வீக்கம். என்ன இது நுளம்புக்கு அவர்கள் மருந்து அடிக்க மறந்துவிட்டார்களோ என எண்ணி லைற்றைப் போட்டுவிட்டு எயாகெண்டிசனையும் சாடையாகப் போட்டுவிட்டு தூங்கினாலும் படுக்கும் இடம் எல்லாம் எனக்குமட்டும் கடி. உங்கள் இரத்தத்துக்குத்தான் நுளம்பு கடிக்குதாக்கும். எனக்கு எதுவும் கடிக்கவில்லையே என்று கூறியபடி மக்கள் சிரிக்க அது நுளம்புக் கடி இல்லை என்று என் மனம் சொல்ல நீர் இந்தக் கட்டிலுக்கு வந்து படும் நான் அதில் படுக்கிறேன் என்று கூறியபடி மகள் படுத்திருந்த கட்டிலுக்குச் சென்றுவிட, வேறு வழியின்றி மகள் எழுந்துநான் படுத்த கட்டிலில் போய் படுகிறாள்.

அதன்பின் நான் எழும்பியது காலை ஆறு மணிக்குத்தான். அக்கட்டிலில் எனக்கு எதுவும் கடிக்கவே இல்லை. மகள் தான் முகம் காது கன்னம் கால் கை எல்லாம் சிறு சிறு வீக்கங்களுடன் ஐயோ அம்மா நீங்கள் நல்ல நித்திரை. எனக்கு பெட் பக் எல்லா இடமும் கடித்துவிட்டது. உங்களுக்கும் அதுதான் கடிதத்திருக்கு என்கிறாள். ஏன் என்னை எழுப்பவில்லை என்றதற்கு உங்களுக்குத் சொன்னால் எந்தச் சாமம் என்றும் பார்க்காமல் அறையை மாற்றும்படி சொல்வீர்கள். காலையில் பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன் என்கிறாள்.

குளித்துத் தயாராகி எல்லாப் பொதிகளை தயார்செய்து பூட்டி வைத்துவிட்டு கீழே சென்று முகம் கைகளைக் காட்டி எமக்கு வேறு அறை வேண்டும் என்கிறோம். வேறு எந்தக் கதையுமின்றி உடனேயே வேறு அறை  தருகிறார்கள். மன்னிப்பும் கேட்டு எமக்கு இரண்டு சினிமா டிக்கற்றும் இலவசமாகத் தருகின்றனர். இந்த அறையிலும் கடித்தால் என்ன செய்வது என்று நான் கூற வேறு இடத்துக்குப் போகவேண்டியதுதான். ஆனால் அந்த நிலை வராது என நினைக்கிறேன். இத்தனை பெரிய தங்குவிடுதியில் மிக்க சுத்தமாகவும் கவனமாகவும் தான் செய்வார்கள். எமது கெட்ட காலம் ஒருநாள் தூக்கம் போச்சு என்றபடி காலை உணவு உண்பதற்காக செல்ல ஆயத்தமாகிறோம்.

84469608_10213678682554930_6871573796696

84829804_10213678684714984_4730678095953

84635594_10213678685234997_8656455900178

84293910_10213678685635007_5500881026227

 

85007487_10213678686515029_6456544625778

84835437_10213678672834687_1210848604701

84513044_10213678673674708_5199624207540

85100289_10213678674154720_2277071031887

84334898_10213678674794736_6875054893460

84417143_10213678682394926_6406212612706

84487568_10213678685034992_6082135808142

84493721_10213678683154945_4099591810685

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றி ரதி வரவுக்கும் பச்சைக்கும் 

Share this post


Link to post
Share on other sites

விருந்தினர்கள் வந்திருந்ததால் ஒரு வாரமாகத் தொடர முடியவில்லை. மன்னியுங்கள் உறவுகளே. இன்று மாலை மீண்டும் தொடரும்.

Share this post


Link to post
Share on other sites

இரண்டாம் நாள் அண்மையில் இருந்த அரண்மணையைப் பார்க்கப் போயிருந்தோம். அது பார்க்கவேண்டிய இடமா என்று கேட்பீர்கள். கடடாயம் பார்க்கவேண்டிய இடம் இல்லை. ஆனால் நாம் தங்கியிருந்த விடுதிக்கு அண்மையில் இருந்ததனால் அதையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணி சென்றோம். நடந்து செல்லும் தூரம்தான். அரண்மனைக்கு கிட்டச் செல்லச் செல்ல வழிகாட்டிகள் பேரம் பேசுவது அதிகரிக்க நாமே போய்க்கொள்கிறோம் என்றுவிட்டு ஒருவருக்குப் 10 டொலேர்ஸ் நுழைவுச் சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம். அங்கங்கே ஆட்கள் சுத்தப்படுத்தும் வேலை கட்டடவேலை என்று செய்துகொண்டிருந்தார்கள். அந்நாட்டு ராஜா இறந்துவிட்டார். ராணியார் மட்டுமே இப்போது உயிருடன் இருப்பதாகக் கூறினர். அரண்மனை வளாகத்தினுள் சென்றால் தெற்குப் பகுதியில் சில்வர் பக்கோரா ஏற்று அழைக்கப்படும் பெளத்த விகாரை ஒன்று உண்டு.அதனுள்  தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகள், ஆபரணங்கள் என்பன பேணப்படுகின்றன என்றும் 5000 இற்கும் மேற்பட்ட வெள்ளி ஓடுகளினால் வேயப்பட்ட கூரை அது என்று கூறினாலும் எம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் புத்தரின் முகங்கள் தான்.

அதன் ஒருபுறம் பெரிய ஏரி ஒன்று அமைந்திருந்தாலும் அரண்மனை பெரு மதிலால் சூழப்பட்டுப் பாதுகாப்புடன் இருப்பதனால் ஏரி கண்ணுக்குத் தெரியவில்லை. இன்னொருபுறம் அரசரின் சிம்மாசன அரிகாணப்படுகிறது. தங்கத்தினால் ஆன இருக்கைகள், மின் விளக்குகள், அலங்கார பொருட்களுடன் காணப்படுகின்றது. தூரத்திலிருந்து அவற்றைப் பார்க்க முடியும். மறுபக்கம் போனால் கம்போடியா மன்னரின் உத்தியோகபூர்வ இல்லமான கெமரின் அரண்மனை காணப்படுகின்றது. இன்னொரு பக்கத்தில் சாம்பல் நிறத் தூபிகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றைப் பார்த்தால் தமிழர்களின் கோவில்த் தூபிகளின் அமைப்பைப் போன்றே இருக்கின்றது. சில கோபுர நுனியை பிள்ளையாரே அலங்கரித்தபடி இருந்தார்.  

மதிய நேரம் என்பதால் கொளுத்தும் வெய்யிலில் இருக்கும் சிலமுறை நிழல்களிலும் கட்டட நிழலிலும் பார்வையாளர்கள் ஒதுங்கி நிற்கின்றனர். இரு பெரிய நாகலிங்கப் பூ மரங்கள் பூக்களுடன் மனதை மயக்குகின்றன. மலசலகூடங்கள் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவித் துடைத்தபடி நன்றாகவே இருக்கிறது. அங்கங்கே இளைப்பாறுவதற்கு சில இடங்களை அமைத்திருந்தனர். அங்கு போய் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு உணவகத்துக்குப் போக ஆயத்தமானோம். 

 

1024px-Throne_Hall,_Royal_Palace,_Phnom_

84305902_10213760636923738_7888677990043

 

86501075_10213760637203745_6137408635627

86193170_10213760637563754_4495879337756

Khmer_Throne_Room.png

1024px-Phnom_Penh_Preah_Moha_Prasat_Khem

1280px-Le_Palais_Royal_(Phnom_Penh)_(699

86698231_10213760652444126_8865280057673

86627244_10213760653244146_7750174735085

84451834_10213760650364074_3822521335821

1024px-Phnom_Penh_Preah_Moha_Prasat_Khem

1280px-Le_Palais_Royal_(Phnom_Penh)_(699

1024px-Royal_palace_Cambodia1.JPG

86501075_10213760650804085_7873257038816

86757869_10213760651324098_8571238088259

86672635_10213760651444101_3546876047070

86662720_10213760655964214_4709464625412

84285824_10213760656964239_4010345491240

Royal_Palace_Phnom_Penh_Norodom_Statue.j

85115824_10213760657524253_5661072216763

86707280_10213760658164269_3281586736219

86624129_10213760658524278_5859768708230

86716188_10213760739806310_7548254286547

86488510_10213760750686582_4053110248678

86498081_10213760649724058_5560251570341

86638860_10213760652804135_2656921362634

85152227_10213760655364199_4672799417319

 

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நாகலிங்கப் பூ மரத்தின் கீழ் புத்தர் மிகவும் அழகாய் இருக்கின்றார்......!   💐

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

நாகலிங்கப் பூ மரத்தின் கீழ் புத்தர் மிகவும் அழகாய் இருக்கின்றார்......!   💐

எனக்கே அவரைக் கலைத்துவிட்டு இருக்கவேணும் போல் இருந்தது. அத்தனை அழகு நேரில். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுவியண்ணா. 

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கே அவரைக் கலைத்துவிட்டு இருக்கவேணும் போல் இருந்தது. அத்தனை அழகு நேரில். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுவியண்ணா. 

ஏன் சகோதரி ,அவரே சிவனே என்று தன்பாட்டுக்கு இருக்கின்றார்.அவரை கலைச்சுப்போட்டு நீங்க இருக்க வேணும் என்று நினைக்கிறீங்களே நல்லாவா இருக்கும்.....!   😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எனக்கு  பொறாமையா  இருக்கு?

பிரான்சுக்கு எத்தனை  தடவை  வந்து போன சுமே

ஒரு படம் கூட போடல  

ஓரு  வரி கூட எழுதல

ஏன் இங்க ஒன்றுமே பிடிக்கலையா??

 

சரி  சரி  வாசித்தோம் ரசித்தோம் 

தொடருங்க 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, விசுகு said:

எனக்கு  பொறாமையா  இருக்கு?

பிரான்சுக்கு எத்தனை  தடவை  வந்து போன சுமே

ஒரு படம் கூட போடல  

ஓரு  வரி கூட எழுதல

ஏன் இங்க ஒன்றுமே பிடிக்கலையா??

 

சரி  சரி  வாசித்தோம் ரசித்தோம் 

தொடருங்க 

என் விடயத்தினை நான் எவர் அனுமதியும் இன்றி எழுத முடியும் அண்ணா. ஆனால் மற்றவர் அனுமதியின்றி அவர்களினதை நான் எழுத முடியாதே அண்ணா. போக முதற் தடவை யாழ் உறவுகளை சந்தித்தபோது எழுதியிருந்தேன். நீங்கள் மறந்துவிட்டீர்கள். 

பச்சைக்கு நன்றி ரதி

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உணவகம் சென்று உணவை முடித்துக்கொண்டதும் இனி எங்கு செல்லலாம் என்று மகளைக் கேட்டேன். மதிய வெயிலுக்குள் இடங்கள் பார்க்கப் போய் வேர்த்தொழுகி வராமல் கொஞ்சம் வெய்யில் தணியப்  போவோம். இப்ப கோட்டல் காரர் தந்த இலவச சினிமா டிக்கற் இருக்கு படம் பார்க்கப்போவோம் என்றாள். சரி என்று அங்கு சென்றால் புதிதாக இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த Will Smith நடித்த Gemini man என்னும் ஆக்சன் திரில்லர். அதுவும் VIP க்கள் மட்டும் பார்க்கும் சினிமா என்றாள் டிக்கற் கவுண்டரில் நின்றவள். 1 st கிளாஸ், பால்கனி என்று பார்த்துள்ளோம் தான். இது என்ன VIP சினிமா என்று குழப்பமாக இருக்க சரி உள்ளே போனால் தெரிந்துவிடும் என்று வாசலுக்குச் செல்ல முற்பட இன்னும் சினிமா ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கிறது. அதுவரை அங்கே சென்று இளைப்பாறுங்கள் என்று ஒரு இடத்தைக் காட்டிட அங்கே செல்ல வாசலில் நின்ற பெண் வெல்கம் மேடம் என்று உடல்வளைத்து வணக்கம் சொல்லி ஒரு இருக்கையைக் காட்ட வெளிநாடுகளில் இருப்பது போல் அழகான சோபாக்கள் தென்பட அதில் சென்று அமர்ந்தோம்.

சிறிது நேரத்தில் சிறிய ஸ்னாக்ஸ் அடங்கிய ஒரு தட்டைக் கொண்டுவந்து உண்ணுங்கள் என்றுவிட்டு என்ன குடிக்கிறீர்கள் என்றாள். எமக்குத் தேவையானதைக் குடிப்பதற்கு ஓடர் செய்துவிட்டு இதுதான் VIP சினிமாவின் ஸ்பெசல் என எண்ணியபடி கேக்குகளை உண்ணத் தொடங்கினேன். சுவையாக இருந்ததால் நாமிருவரும் ஒன்றைக்கூட மிச்சம் விடவில்லை. குளிர்பானங்களையும் குடித்து முடிய நீங்கள் இப்ப சினிமா பார்க்கச் செல்லலாம் என்றாள்.
எழுந்து உள்ளே சென்றால் அங்கு எம்மைத் தவிர யாரையும் காணவில்லை .எமது நாடுகளில் இருப்பதுபோல் பிரமாண்டமான சினிமா இல்லாவிட்டாலும் ஐரோப்பாவில் இருபது போன்று சிறியதாகவே காணப்பட்டது. இரு இருக்கைகளை நல்ல வசதியானதாகப் பார்த்து அமர்ந்துகொண்டோம்.

இருக்கைகள் கால் நீட்டிப் படுத்துப் பார்க்கும்படி வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. போர்ப்பதற்கு  ஒரு அழகிய போர்வை தலையணை என இருந்தாலும் நான் அவற்றை எதையும் தொடாது அமர்ந்தேன். நேரம் வந்ததும் விளம்பரங்கள் ஓடத் தொடங்கின. இன்னும் இருவர் வந்து தூரத்தில் அமர்வது தெரிந்தாலும் நாம் திரும்பி அவர்களை பார்க்கவில்லை. நேரம் செல்லச் செல்ல குளிரூட்டியின் அதிக குளிர் காரணமாக எனக்கு நடுங்கத்தொடங்க என்ன இப்பிடிக் குளிருது என்று மகளைக் கேட்டேன். அதற்குத்தான் இந்த போர்வையைத் தந்துள்ளனர் என்றுவிட்டு மகள் போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு திரையில் கவனம் செலுத்த,  ஏசியை எப்படிக் குறைப்பது என்பதில் மனம் ஓடியது. இந்தப் போர்வையை எத்தனைபேர் பயன்படுத்தினார்களோ என்னும் எண்ணம் எழ கதிரையில் இருந்த உதவிக்கு அழைக்கும் அழுத்தியை அழுத்தினேன்.

இரு நிமிடத்தில் ஒருவர் வந்து என்ன மேடம் என்றபடி நின்றார். சரியான குளிராக இருக்கிறது. ஏசியைச் சிறிது குறைக்க முடியுமா என்று கேட்டேன். இதில் போர்வை இருக்கு மேடம் என்று கூறி இன்னுமொரு கதிரையில் இருந்த போர்வையையும் எடுத்துத் தர, எனக்கும் இன்னொன்று வேண்டும் சரியாகக் குளிர்கிறதுதான் என்று மகள் கூறியதும் குறைக்கிறேன் மாம் என்றபடி அவன் நகரப் படம் ஆரம்பித்தது.

அவன் சிறிது குறைத்தான் தான் ஆயினும் என்னால் குளிர் தாங்க முடியாது இருக்க, அம்மா ஊத்தை உடுப்புப் போட்டுக்கொண்டா இங்கு ஆட்கள் வருகிறார்கள். ஆகவும் நுணுக்கம் பாராது போர்த்துக்கொண்டு இருங்கள் என்றதும் இரண்டு போர்வைகளையும் காலிலிருந்து இடுப்புவரை போர்த்தபடி இருக்க தன் பையிலிருந்து மெல்லிய யம்பர் ஒன்றை மகள் எடுத்துத் தர அதை போட்டபடி படத்தைப் பார்க்கவாரம்பித்தேன்.

ஒரு மணிநேரம் கழிய இடைவேளை வர வடிவாகச் சுற்றிப் பார்த்தால் எம்மையும் இன்னும் இருவரையும் தவிர வேறு யாரும் அரங்கில் இல்லை. எமது இருக்கைகளிலேயே குளிர்பானம் மற்றும் பொருட்கள் வைக்க எதுவாக அமைக்கப்பட்டிருக்க இருவர் தட்டுக்களை ஏந்தியபடி வந்து எமக்கு குளிர்பானங்களும் பொப்கோனும் தந்துவிட்டு மற்ற இருவருக்கும் கொடுக்க நகர தேநீர் அல்லது கோப்பி கிடைக்குமா என்கிறேன். சொறி மேடம் இதற்குள் அவை இல்லை. நீங்கள் வெளியில் தான் வாங்கிக் குடிக்கவேண்டும் என்றுவிட்டுப் போக வேறு வழியின்றி ஆறவிட்டு யூஸைக் குடித்து முடித்தேன்.  

படம் மீண்டும் ஆரம்பித்து  ஓடவாரம்பித்தது. பரவாயில்லை நல்ல கவனிப்புத்தான். ஆனால் ஆட்கள் நிறைய வாராததுக்குக் காரணம் விலை அதிகமாக இருக்கும் போல என்று மனதில் நினைத்தபடி படம் பார்த்து முடித்தோம். வெளியே வந்து மீண்டும் கவுண்டரில் சென்று விலையை விசாரித்தால் ஒருவருக்கு 25 டொலர்ஸ் என்கிறார்கள். நாம் ஏதும் தவறாக ரிவியூ எழுதினாலும் என்று நன்றாகத்தான் எம்மை  உபசரிக்கிறார்கள் கோட்டல் நிர்வாகம் என்று கூறிச் சிரித்தபடி வெளியே வந்தால் பயங்கர வெய்யில்.

86738675_10213772165011933_5028263963142

86725424_10213772165411943_2847367299235

86704931_10213772165691950_4961204645885

86314988_10213772165891955_1986208850100

86350823_10213772164611923_8152391382904

86776555_10213772164851929_1160914554708

 

 

 

 

 

 

 

 

 

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கும் பச்சைகளுக்கும் நன்றி தமிழினி

Share this post


Link to post
Share on other sites

அடுத்தநாட்காலை ஒன்பது மணிக்கு அந்நாட்டில் அந்நாட்டு அரசால் அவர்கள் இன மக்களுக்கே நடைபெற்ற படுகொலைகள் Choeung Ek என்னும் இடத்திலேயே அதிகமாக இடம்பெற்றன. அந்த இடத்தையும் புதைக்கப்பட்ட மக்களின் எலும்புகள் மண்டையோடுகள் மற்றும் ஆடைகள் எனச் சேகரித்து ஒரு நினைவிடத்தை அமைத்துள்ளனர். காலை ஒன்பது மணிக்கு மகிழுந்து எமது தங்குவிடுதிக்கே வந்து எம்மை ஏற்றிக்கொண்டு இன்னும் இரண்டு தங்குவிடுதிகளில் எட்டுப்பேரை ஏற்றிக்கொண்டு ஒருமணி நேரத்தில் அவ்விடத்தை அடையும்போது அங்கே பெரு மழை பெய்துகொண்டிருந்தது. மகிழுந்திலேயே எல்லோருக்கும்  வைத்திருந்தனர். குடையைப் பிடித்தபடி கீழே இறங்க ஒருமணி நேரத்தில் மீண்டும் இங்கே சந்திப்போம் என்றபடி மகிழுந்தில் வந்த உதவியாளர் கூறிவிட்டுச் செல்ல நாம் உள்ளே சென்றோம். முன் வாயிலிலேயே 5 டோலோர்ஸ் கொடுத்தால் ஒரு வயர்லெஸ் ஹெட் போன் தருவார்கள். அதை போட்டுக்கொண்டு நடந்தால் அந்தந்த இடங்களில் நடைபெற்ற விடயங்களைக் கூறிக்கொண்டே இருந்தனர்.

கிட்டத்தட்ட 1975-1979 வரையான காலப்பகுதியில் 1.7 தொடக்கம் 2.5 மில்லியன் மக்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமான வதைமுகாம்களில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். பலர் நோயாலும் பட்டினியாலும்  இறந்தனர். அமெரிக்கப் போரினால் இடம்பெயர்ந்த வியட்னாமியர், கம்போடியா மக்களைத் திருமணம் செய்திருந்த தாய்லாந்து மக்கள், சீனர்கள், கிறித்தவ மதத்தவர்கள் எனப் பலரும் அவர்கள் இலக்காகிக் கொல்லப்பட்டனர். 1979ம் ஆண்டில் வியட்னாம் கம்பூச்சியா மீது படையெடுத்து அப்படுகொலைகளை முடிவுக்குக்கொண்டு வந்தது. எமது நாட்டில் நடந்ததிலும் மோசமாக தம்மின மக்களையே ஒரு குழு அழித்து முடித்தது. அவர்கள் கூறிய விடயங்களும் மழையும் சேர்ந்து அந்த இடங்களைப் பார்ப்பதற்க்கே பயமாக இருக்க முடிந்தவரை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

மீண்டும் எம்மை ஏறிக்கொண்டு வதை முகாம் ஒன்றுக்கு கூட்டிச் சென்றனர். அது ஒரு பாடசாலை. அங்கே வகுப்பறைகளை எல்லாம் தம் விருப்பத்துக்கு இடித்து புதிதாக இடைச் சுவர்கள் எழுப்பி சங்கிலிகளால் கட்டி வைத்து வேறுவேறுவிதமாகச் சித்திரவதை செய்ததன் அடையாளங்களும் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சித்திரவதை தாங்கமுடியாத பலர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து இற  ந்ததனால் அதைத் தடுக்க கம்பிவேலிகளும் தடுப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தமை இன்றும் அப்படியே இருக்கிறது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் இணையத்தளத்தில் தேடிப் பெறுங்கள்

86491803_10213781008833023_2741269632655

87166945_10213781009153031_6084529788553

86727970_10213781009513040_8107426567124

87034793_10213781009793047_3275141575151

86848857_10213781010113055_4869888465736

87012022_10213781010433063_1663088448854

87166945_10213781009153031_6084529788553

 

86491477_10213781012073104_7041601304153

86370469_10213781012353111_5825952790031

86809049_10213781012633118_3438817242588

86464599_10213781005712945_2633180213646

86841999_10213781005352936_3336416735396

 

86353780_10213781012793122_729292407284786498633_10213781006792972_5226938339822

 

 

87047951_10213781014273159_1712265098543

 

87006626_10213781016273209_6216614949326

86974978_10213781013153131_7568880025173

86970178_10213781014633168_8510882416087

86864374_10213781015353186_8909764803484

86353780_10213781015633193_1920328393992

86970197_10213781007072979_5484158631190

86871688_10213781007632993_6910336164306

 • Like 3
 • Sad 3

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி தமிழினி

Share this post


Link to post
Share on other sites

கம்போடியாவில் போல் பொற்றின் கம்யுனிச ஆட்சியில் தான் இவ்வளவு கொடுமைகளும் நடந்தது என்பதை உங்களது நல்ல கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கம்போடியாவில் போல் பொற்றின் கம்யுனிச ஆட்சியில் தான் இவ்வளவு கொடுமைகளும் நடந்தது என்பதை உங்களது நல்ல கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கலாம்.

அதுபற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய எழுதலாம். எழுதப் பஞ்சி. உங்களுக்கு அதுபற்றித் தெரிந்திருப்பதனால் இதில் நீங்கள் அங்கு நடைபெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி விரிவாக எழுதுங்கோ.

பச்சைகளுக்கு நன்றி நிழலி, சபேஷ், விளங்க நினைப்பவன்

பச்சைகளுக்கு நன்றி சுவி அண்ணா

 

Share this post


Link to post
Share on other sites

எமக்கு அண்மையிலேயே ஒரு மியூசியமும் இருந்தது. அங்கே ஒவ்வொருநாளும் கலை நிகழ்வுகளும் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன. அதிலும் அப்சரா நடனம் மிகவும் பிரசித்திபெற்றது. இன்று மாலை ஆறு மணி தொடக்கம் எட்டுமணிவரை அதைச்சென்று பார்ப்பதாக முடிவெடுத்துவிட்டு காலையில் தங்குமிடத்திலேயே  காலை உணவை முடித்துக்கொண்டு இன்று மாலை வரை என்ன செய்வது என்று யோசித்தோம்.
நாம் தங்கியிருந்த விடுதிக்கு முன்பாக நான்கு ஓட்டோக்கள் எப்போதும் நிற்கும். எமது வதிவிடத்துக்கு அண்மையிலேயே பார்க்கவேண்டிய அதிக இடங்கள் இருந்ததனால் நாம் நடந்து சென்று எல்லாவற்றையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
ஒவ்வொருதடவையும் நாம் வெளியே செல்லும்போது அவர்கள் நால்வரும் ஓட்டோவில் வருகிறீர்களா என்று கேட்பார்கள். நாமும் வேண்டாம் என்று சிறிததபடி தலையாட்டிவிட்டுச் செல்வோம். அன்றும் வெளியில் வர மற்றைய மூவரும் இதுகளைக் கேட்டுப் பயனில்லை என்று எம்மைப் பார்த்துவிட்டுப் பேசாது நிற்க ஒருவன் மட்டும் வழமைபோல் என் ஓட்டோவில் வருகிறீர்களா என்றான் சிரித்தபடி. வருகிறோம் என்றுவிட்டு போகவேண்டிய இடத்தைக் கூறி ஏறி அமர்ந்தோம். ஒரு அழகிய விகாரையின் முன்பாக ஓட்டோ நிற்க அவனின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிவிட்டு இரண்டு மணி நேரத்தில் வா என்கிறோம்.

Wat Phnom என்று அழைக்கப்பட்ட ஒரு மேட்டில் அமைந்துள்ள ஒரு பெளத்த விகாரை அங்கு அமைந்திருக்கின்றது. பெண் என்னும் விதவைப் பாட்டி ஒருவர் கண்டுபிடித்த மரத்தின் உள்ளே நான்கு வெண்கலப் புத்தர் சிலைகள் காணப்பட்டனவாம்.அச் சிலைகளைப் பாதுகாப்பதற்கு கிராம மக்களால் ஒரு சிறு குன்று அமைக்கப்பட்டு பென் என்னும் அந்தப் பணக்காரப் பெண் அங்கு ஒரு சிறிய கோவிலைக் காட்டினாராம். அதுவே பின் அவர்களின் புனித இடமாக மாறிப் போற்றப்படுகிறதாம்.

படிகளும் பெரிய மரநிழல்களுமாக எம்மைக் கவரக்கூடியதாகவே அச் சூழல் அமைந்திருந்தது. ஆனால் நாம் மேலே சென்று பார்த்தால் ஒரு சிறிய விகாரைத்தான் எனினும் அமைவிடத்தைப் பொறுத்து அழகாகக் காட்சி தந்தது. பலர் குடும்பமாகவும் தனியாகவும் வந்து வணங்கியபடி சென்றுகொண்டிருந்தனர். நாம் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளையும் போவோர் வருவோரையும் சிறிதுநேரம் இரசித்தோம். சுற்றிவர அரைநெல்லி மரம், பாக்கு மரம் புளிய மரம் என்று கண்ணுக்கு அழகையும் சூழலை அழகாகிக்கொண்டுமிருந்தது.

ஒரு கோழியும் அதன் குஞ்சுகளும் அவ்விதத்தில் இரைதேடிக்கொண்டிருந்தன. அதை பார்த்ததும் எம் ஊர் நினைவில் வர மனதை ஒரு வேதனையும் அழுத்தியது. ஊருக்குச் சென்றாலும்கூட இனிமேல் இப்படியான ஒரு காட்சியைப் பார்க்க முடியாது. ஏனெனில் கோழியின் எச்சங்கள் வீடுவளவுகளை அசிங்கப் படுத்துகிறது என்று இப்போதெல்லாம் அங்கு வீடுகளில் கோழிகளை வளர்ப்பதில்லை என்பதை அங்கு சென்றிருந்தபோது பாத்தேன்.
அரை மணி நேரம் அங்கே இருந்தபின் கீழே இறங்கிவந்தால் ஒரு பெரிய கடிகாரம் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. புற்களின் நடுவே புற்களால் அலங்கரிக்கப்பட்டுப் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. கீழே வந்து அதைப் பார்த்தபின் ஓட்டோவுக்குப் போன் செய்ய பத்து நிமிடத்தில் வருவதாகக் கூறி வந்து சேந்தார். மதிய உணவை உண்டுவிட்டு நம் பென்னில் இருந்த பெரிய ஒரு கிடைத்த தெருவுக்குச் சென்றோம். பெரிய ஒரு மண்டபத்திலும் அதைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மத்திய சந்தைக்குச் சென்றால் வழமைபோல் புதியவர்களான எம்மைக் கண்டதும் விலைகள் உச்சமாகக் கூறப்பட்டன. விலை அதிகமாக இருக்கே என்றதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் உங்களுக்கு இது அதிகமா என்ற அலட்சியப் பேச்சு. பல கடைகளில் நாம் போய் கடைக்காரர்கள் வருவதற்காகக் காத்திருந்தாலும் அவர்கள் எம்மை ஏனென்றும் கேட்கவில்லை. அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட என்ன காரணம் என்றும் புரியவில்லை. அதனால் அதிக பொருட்களை வாங்காது சிலதை  மட்டும் வாங்கிவிட்டு தங்குமிடத்துக்குத் திரும்பினோம்.

WatPhnom_PhnomPenh_2005_2.JPG

86935631_10213788559381782_9040026119281

86858055_10213788560341806_5385550288063

86831262_10213788564061899_5893299522204

86697365_10213788564341906_7135810853445

86831303_10213788565301930_1875781770587

86860226_10213788567181977_6609217265608

86991079_10213788559981797_1836684541557

86870212_10213788561141826_3412340358346

86937729_10213788562261854_1587155518709

87033505_10213788562501860_5119274062446

86842031_10213788566141951_8564429418338

87046721_10213788567661989_9115584949183

87027734_10213788555381682_8976618185650

 

86975661_10213788653584137_6764645955888

வீதிகளில் ஆங்காங்கே இப்படிக்கு குவியலாக வயர்கள் காணப்பட்டு நகரின் அழகைக் குலைத்தபடி இருந்தன

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தப் படங்களில் எல்லாம் சுமோ நல்ல கறுத்து போய் நிக்கிறா☺️ 
 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

இந்தப் படங்களில் எல்லாம் சுமோ நல்ல கறுத்து போய் நிக்கிறா☺️ 
 

எதுக்குச் சொல்லிறீங்கள் என்று புரியலையே 🤔

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

இந்தப் படங்களில் எல்லாம் சுமோ நல்ல கறுத்து போய் நிக்கிறா☺️ 
 

மற்றும்படி  சிம்ரன் மாதிரி பால் வெள்ளையோ? :grin:

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

மற்றும்படி  சிம்ரன் மாதிரி பால் வெள்ளையோ? :grin:

வயது போனால் சிம்ரன் வெள்ளையாய் இருந்தும் பிரயோசனம் இல்லை கண்டியளோ 🤪

 

86870101_10213792574082147_4288949058975

86999754_10213792574042146_6614131743282

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.