Jump to content

பெரும்­பான்­மை­வாதம் தொடர்­வது பேரா­பத்து; தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் கூட்டாக எச்­ச­ரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்­பான்­மை­வாதம் தொடர்­வது பேரா­பத்து; தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் கூட்டாக எச்­ச­ரிக்கை!

ஆர்.ராம்

ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் பிர­தி­ப­லிப்­புக்­களை அடி­யொற்றி தொடர்ந்தும் பெரும்­பான்மை வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­னது இனங்கள் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தப்­படும் பேரா­பத்­தையே தோற்­று­விக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன. 

நாட்டின் சுபீட்­சத்­தையும், எதிர்­கா­லத்­தி­னையும் கருத்­திற்­கொண்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் மன­நி­லை­யிலும் அவ­ரது போக்­கிலும் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்றும் அத்­த­ரப்­புக்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. 

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்~ நேற்று முன்­தினம் ஆற்­றிய அக்­கி­ரா­சன உரை­யின்­போது, குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுத்­த­வர்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆகவே பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை என்றும் மதிக்க வேண்டும். அப்­போது தான் மக்­களின் இறை­யாண்­மையை பாது­காக்க முடியும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் ஒற்றை ஆட்­சியை பாது­காப்பேன் என்றும் பௌத்த சம­யத்­திற்கு முதன்­மைத்­தா­னத்­தினை காப்பேன் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

gotabaya.jpg

இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத்  பதி­யுதீன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பழனி திகாம்­பரம் ஆகியோர் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர். அவர்கள் கருத்­துக்கள் வரு­மாறு, 

சுமந்­திரன் எம்.பி கூறு­கையில்,
இனம் சார்ந்த  கொள்­கை­யுடன் செயற்­பட்டு வரும் அர­சியல் கட்­சிகள் இந்த நாட்டில் பிரி­வி­னையை தோற்­று­விக்­கின்­றன என்ற நிலைப்­பாட்­டினை ஜனா­தி­பதி தனது உரையில் வெளிப்­ப­டுத்­து­கின்றார். 

அத்­துடன் இனம்­சார்ந்து செயற்­படும் அர­சியல் கட்­சிகள் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற தொனி­யுடன்  அவர்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவும் சித்­த­ரித்­துள்ளார். 

இலங்கை பாரம்­ப­ரிய பல்­லினக் குழு­மங்­களைக் கொண்ட நாடாகும். அவ்­வா­றான பன்­மைத்­துவ நாட்டில் தனக்கு வாக்­க­ளித்த பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­பினை நிறை­வேற்றும் வகை­யி­லேயே அனைத்து இனக்­கு­ழு­மங்­களும் செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை எடுப்­பது பொருத்­த­மா­ன­தொன்­றல்ல.

இவ்­வா­றான நிலைப்­பா­டா­னது பேரி­ன­வாத சிந்­த­னையின் வெளிப்­பா­டா­கவே இருக்­கின்­றது. ஆகவே அந்­தக்­க­ருத்­தினை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. இத்­த­கைய நிலைப்­பா­டுகள் தொட­ரு­கின்ற போது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான விரி­சல்கள் மேலும் அதி­க­ரித்துச் செல்லும் நிலை­மையே ஏற்­படும் என்­பதை ஜனா­தி­பதி புரிந்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார். 

ரவூப் ஹக்கீம் எம்.பி கூறு­கையில், புதிய ஜனா­தி­பதி ஆட்­சிப்­பொ­றுப்­பினை ஏற்ற நாள் முதல் தற்­போது வரையில் பெரும்­பான்­மை­யின ஆத­ரவு என்ற மன­நி­லை­யி­லேயே தான் அனைத்து விட­யங்­க­ளையும் அணுகி வரு­கின்றார். ஆரம்­பத்­தி­லே­யி­ருந்­தான இந்த அணு­கு­மு­றையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. 

ஜன­நா­யக விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் மக்­களின் தீர்ப்­பினை மதிக்க வேண்­டி­யது அர­சியல் தலை­மை­யொன்றின் கட­மை­யா­கின்­றது. அவ்­வா­றி­ருக்க அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி புஷ்ஷின் நிலைப்­பாட்­டினை ஒத்­த­வாறு, தனக்கு வாக்­க­ளிக்­கா­த­வர்கள் அனை­வரும் தனக்கு எதி­ரா­ன­வர்கள் என்ற மன­நி­லையில் செயற்­ப­டு­வது இந்த நாட்­டிற்கு பொருத்­த­மற்­ற­தொரு செயற்­பா­டாகும். மேலும் இந்த மன­நி­லைப்­போக்­கினை வர­லாறு நிச்­ச­ய­மாக பொய்ப்­பிக்கும் என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

தனக்கு வாக்­க­ளிக்­காத மக்­களின் அபி­லா­ஷை­களை உணர்ந்து அவர்­க­ளையும் தன்­னுடன் அடுத்­து­வரும் காலத்தில் எவ்­வாறு அர­வ­ணைத்துச் செல்­வ­தென்­பது பற்றி சிந்­திக்கும் மன­நிலை தற்­போது வரையில் உரு­வா­கது இருக்­கின்­ற­மை­யா­னது ஆரோக்­கி­ய­மான விட­ய­மொன்­றல்ல. தேர்தல் வெற்­றிக்குப் பின்­னரும், இனம்­சார்ந்து செயற்­படும் அர­சியல் தரப்­புக்­களை தீவி­ர­வா­திகள் என்று முத்­தி­ரை­யி­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­வி­ட­ய­மாகும். 

தமது இனம் சார்ந்து செயற்­படும் சிறு­பான்மை தேசிய இனங்கள் இன­வாதக் தரப்­புக்கள் என்றால் பெரும்­பான்மை இனம்­சார்ந்து செயற்­படும் கட்­சி­களை எவ்­வாறு அழைப்­பது என்ற கேள்­வியும் இங்கு எழு­கின்­றது. இத்­த­கைய போக்­குகள் மக்கள் மத்­தியில் பீதி­யான மன­நி­லை­யையே தோற்­று­விக்­கின்­றன. 

ஆகவே ,ஜன­நா­யக முடி­வு­களை ஏற்­றுக்­கொள்­ளாது எதி­ரா­ளிகள் என்ற போக்­கிலும் மொழி, மதம், இனம் என அனைத்­திலும் பெரும்­பான்­மை­வாத எண்­ணப்­போக்கில் தலை­வர்கள் பிர­தி­ப­லிக்­கின்­ற­மை­யா­னது பல்­லி­னங்கள் வாழும் இந்த நாட்டில் அவற்­றுக்­கி­டையில் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தல்­க­ளையே அதி­க­ரிக்கச் செய்யும். அவ்­வா­றான நிலை­மைகள் மோச­மான பின்­வி­ளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும் என்றார். 

ரிஷாத்   பதி­யுதீன் எம்.பி கூறு­கையில்,
முஸ்­லிம்கள் என்­றுமே வன்­மு­றையை விரும்­பி­ய­வர்கள் கிடை­யாது. பிரி­வி­னையை ஏற்­றுக்­கொள்­ளவும் இல்லை. ஐக்­கிய இலங்­கைக்குள் தலை­நி­மிர்ந்து வாழவே விரும்­பு­கின்­றார்கள். ஆகவே அவர்­களின் விருப்பு வெறுப்­புக்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு சகல உரித்தும் அவர்­க­ளுக்கு உள்­ளது. தமது ஜன­நா­யக கட­மையில் அவர்­களின் வெளிப்­பா­டு­களை நாட்டின் எதிர்­காலம் பற்­றிய கரி­ச­னை­கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி தவ­றாக புரிந்­து­கொள்­வதே தவ­றாகும்.

மேலும் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்~  இன­வாத அர­சி­யலை கைவி­டு­மாறு தமது இனம் சார்ந்து செயற்­படும் சிறு­பான்மை தரப்­புக்­களை இலக்­காக வைத்து கூறு­கின்றார். ஆனால் பெரும்­பான்மை தேசிய கட்­சி­களின் வெளிப்­பா­டு­க­ளையும் அவர் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மா­கின்­றது. 

இந்த நாட்­டினை பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற்­ற­ம­டையச் செய்ய வேண்டும் என்­ப­தையே இலக்­காக கொண்­டி­ருப்­ப­தாக கூறும் ஜனா­தி­பதி, அதற்­கான அடிப்­ப­டை­க­ளையே முதலில் மேற்­கொள்ள வேண்டும். சிங்­கப்பூர், மலே­ஷியா போன்ற பல்­லின நாடுகள் அபி­வி­ருத்­தியில் மேலோங்கித் திகழ்­வ­தற்கு அடிப்­ப­டை­யாக இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கமே காணப்­ப­டு­கின்­றது. 

ஆகவே வாக்களிப்பினை மையப்படுத்திய மனநிலையில் செயற்படுவதானது இனங்களுக்கிடையில் மேலும் இடைவெளிகளையே ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 

திகாம்பரம் எம்.பி கூறுகையில்,
உள்நாட்டுப்போரை வெற்றி கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வினால் சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடிந்திருக்கவில்லை. இதன் காரணத்தினாலேயே அவருடைய ஆட்சி சரிந்தது. 

இந்நிலையில் அவருடைய சகோதரராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவாவது சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக பெரும்பான்மையின சிந்தனையில் செயற்பட விழைவதானது இனங்களுக்கு இடையிலான விரிசல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றார். 

 

https://www.virakesari.lk/article/72534

Link to comment
Share on other sites

"ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் பிர­தி­ப­லிப்­புக்­களை அடி­யொற்றி தொடர்ந்தும் பெரும்­பான்மை வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­னது இனங்கள் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தப்­படும் பேரா­பத்­தையே தோற்­று­விக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன"

சிறுபான்மை மக்கள் ஒன்றுபடாமல் இருந்தமையும் (குறிப்பாக முஸ்லீம் தலைவர்கள் என்றுமே தமிழ் தலைமைகளை ஏற்று முழுமனதுடன் பயணிக்க விரும்பியதில்லை) அவர்களை பிரித்தாழுவதில் பெரும்பான்மை கண்டுவரும் இலகு அணுகுமுறைகளும் தான் இந்த நிலைமைக்கு காரணம். 
 

Link to comment
Share on other sites

இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களுடன் ஒரு நாளுமே கை கோர்த்தது கிடையாது. அப்படி எதாவது செய்வார்களாக இருந்தால் ஏதும் தங்கள் சுய நலனுக்காகவே அப்படி செய்வார்கள்.

 தமிழர்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியுமென்றால் சேர்ந்து கேட்பர்கள். வென்றவுடன் தொப்பி பிரட்டிவிடுவார்கள். 

இப்போதும்கூட இந்த அரசு ஒரு மந்திரி பதவி தருகிறோம் என்றால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு ஓடிப்போய் இணைந்து கொள்வார்கள்.

 காவிகள் இவர்களை மிகவும் தீவிரமாக எதிர்ப்பதால்தான் ஒன்றுமே செய்ய முடியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தபடி இவர்களை நம்பக்கூடாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.