• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி -  மாவை

Recommended Posts

கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி -  மாவை

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

maay.jpg

முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்றினை அவர் அறிந்திருப்பதாக எமக்குத் தெரியவில்லை.

அரச தலைவர் பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்துள்ள கொள்கை அறிக்கையினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் இந்த நாட்டினுடைய இனப் பிரச்சினையினை முக்கியமாகக் கருதி ஒரு கொள்கை அறிக்கையினை வெளியிடுவார் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடைபெற்றது.

அவர் புதிய சித்தாந்தங்களைச் சொல்கின்றார். இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வரலாற்றினை மாற்றியமைத்து, இந்த நாட்டில் ஒரு இனப் பிரச்சினை இல்லை என்கின்றார். இந்த நாட்டில் அரசியல் அதிகாரஙகளை பகிரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கின்றார்.

சர்வதேச ரீதியாகஇந்தியவுடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகள், ஐ.நா சபையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முப்பது ஒன்று என்ற தீர்மானம், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் வகித்த வகிபாகம், முழுச் சர்வதேசமுமே தலையீடு செய்து இந்த நாட்டின் இனப் பிரச்சினை, இனத்தின் விடுதலை கைதிகளுடைய விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீ்க்கப்படவேண்டும், காணாமல் போனோருக்கான தீர்வு, தமிழர்களுடைய இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற 34தீர்மானங்கள் முழுமையாகவே 30.01.2015ஆம் ஆண்டு 47நாடுகள் ஆதரவுடன், தமிழ்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகளின் வகிபாகத்துடன், உலகிலே ஏகமனதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதை நிராகரிப்போம் என்று சொல்லுகின்றார்.

அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் ஒரு புதிய வார்த்தையினைப் பாவித்திருக்கின்றார்.

பௌத்த சிங்கள நாடு என்பது மாத்திரமல்ல, பௌத்த சிங்கள பெரும்பான்மைத்துவ ஆதிக்கத்தினை நான் கடைப்பிடிப்பேன், நிலைநாட்டுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.

இந்த நாட்டில் வேறு இன மக்கள்இருக்கின்றார்கள் என்றோ, அவரகளும் சமமான உரிமைகள் உடையவர்கள் என்றோ, அந்த மக்கள் சமமாக நடத்தப்படவேண்டுமென்றோ ஒரு வார்த்தையினையும் குறிப்பிடாது, பௌத்த சிங்கள ஆட்சி என்பதற்கு அப்பால், இன்னுமொரு புதிய வார்த்தையினைத் தற்பொழுது கூறியிருக்கின்றார்.

பெரும்பாண்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது மொழி உரிமைக்காகவும், தமது நிலவிடுவிப்பிற்காகவும், தமது விடுதலைக்காகவும் பல இலடசம்பேர் உயிரிழந்திருக்கின்றார்கள், அதைப்பற்றி ஒரு வார்த்தை குறிப்பிடப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு சம அந்தது உண்டு, இந்த மண்ணினை ஆட்சிசெய்வதற்கு உரிமையுள்ளவர்கள். சித்தாந்தத்தினையோ, ஜனநாயக பண்பாடுகளையோ குறிப்பிடாது, பௌத்த சிங்களப் பேரினவாத, பெரும்பாண்மைத்துவ ஆட்சிதான் இந்த நாட்டில் இடம்பெறும் என உறுதி பூணடிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப்பின்னர் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் எங்களுடைய மக்களும் இணைந்து ஒரு புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு உதவியிருக்கின்றனர். அதன் மூலம் இந்த நாட்டில் புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டுமென இலங்கை பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் எடுத்தது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்துக்கட்சிகளையும் இணைத்து, அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டு, புதிய அரசியலமைப்பிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கான இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதை மகிந்த தரப்பினரான பௌத்த தீவிரவாதிகள் எதிர்த்தனர், இந்த அரசியலமைப்பில், சமஸ்டி ஏற்பாடுகள் இருப்பதாகவும், நாடு பிளவுபட்டுவிடும் எனவும் கூக்குரலிட்டனர்.

அதேவேளை முன்னாள் வடக்கின் முதல்வரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனும் அந்த அரசியலமைப்பை எரிக்குமாறும் கூறினர்.

பாராளுமன்றில் 03.01.2020 அன்று கோத்தபாய மற்றும் மகிந்தவை நாம் சந்தித்தோம், எங்களுடைய தலைவர் சம்பந்தன் அவர்களிடம் ஒரு விடயத்தினைக் கூறினார், தென்னிலங்கையில் சிங்கள மக்கள் உங்களுக்கு அதிகமாக வாக்களித்திருக்கின்றனர்.

ஆனால்எங்களுடைய தமிழ் மக்கள் 98வீதமானோர் எமது இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவேணடும்என்பதற்காக வாக்களித்திருக்கின்றனர். நீங்கள் அதை உங்கள் கொள்கை அறிக்கையில் குறிப்பிடவில்லை என கூறியிருந்தார்.

எனவே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக புதிய அரசும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடாத்த புதியஅரசியலமைப்பை உருவாக்கவேண்டும்எனவும் கூறியிருக்கின்றோம் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவில்லை.

கோத்தாபய ராஜபக்ஷ அரசதலைவராக தெரிவுசெய்யப்பட்டவுடன் இந்தியாவின் செய்தி, இந்த பிராந்தியத்தின் ஆதிக்கம் சீனாவின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பது மட்டுமல்ல, நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று  சொல்லியிருக்கின்றது. அதை நாம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தமிழ்மொழியில் தேசியகீதம் பாடக்கூடாது என்பதற்காக நாம் சண்டையிடுவதல்ல, அப்படி தேசியகீதம் இசைத்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என நாம் நினைக்கவில்லை. அதுவல்ல பிரச்சினை, மொழி ஒரு அடையாளம், தமிழுக்கு சம அந்தஸ்த்து இல்லை என்பது தமிழர்களுக்கு சம அந்தஸ்து மறுக்கப்படுவதாகும்.

இந்த ஆட்சியினால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் ஜனநாயகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும் நிறையவே இருக்கின்றன.

எமது இனத்தை அழிக்கின்ற, நிலங்களை ஆக்கிரமிக்கின்ற, எமது மொழி உரிமைகளை முடக்குகின்ற செயற்பாடுகள் தற்போது அதிகம் முனைப்புப் பெற்று வருகின்றன.

ராணுவ அதிகாரிகள்எல்லாம் தற்போது சிவில் நிர்வாகத்தில் இந்த அரசாங்கத்தால் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் சுவாசத்தினை நிறுத்திவிடக்கூடியவகையில் அரச தலைவரின் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெறுகின்றது.

எனவே நாம் எமது இனமும், நிலமும் விடுதலை பெறும்வரையில் ஜனநாயக ரீதியாக தொடர்ந்தும் போராடுவோம். என்றார்.

https://www.virakesari.lk/article/72525

Share this post


Link to post
Share on other sites

இதே முந்திய அரசில் ஒட்டி உறவாடுகையில் அங்கிருக்கும் எஞ்சியுள்ள தமிழ்மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கலாம் அதைவிட்டு தங்கள் தங்கள் சுயநலத்தை மட்டுமே  கொண்டு மாவை சம்பந்தன் சுத்துமாத்து சுமத்திரன் போன்றவர்களின் நடவடிக்கைகள் அமைந்து இருந்தன இம்முறை கோத்தா வந்து இந்த கோடாலி காம்புகளை கண்டு கொள்ளாமல் விட ஓநாய் அழுகை  அழுகின்றனர் .

இவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதும் தமிழ்மக்கள் கைதிகள்  விடுதலைக்கு தெருவில் நின்றனர் இப்போ அதிகாரத்தில் இல்லாதபோதும் அவர்கள் தெருவில்தான் ஒரு வித்தியாசமும் இல்லை .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Quote

இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வரலாற்றினை மாற்றியமைத்து, இந்த நாட்டில் ஒரு இனப் பிரச்சினை இல்லை என்கின்றார். இந்த நாட்டில் அரசியல் அதிகாரஙகளை பகிரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கின்றார்.

போர் குற்றங்களை மூடி மறைக்க/மறக்க கால அவகாசம் கொடுத்தது யார்?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கோதாவிடம் தீர்வை பெற முடியும் எண்டு விக்கி ஐயா சொல்கிறார். நீங்கள் தொடர்ந்து போராடப்போவதாக சொல்கிறீர்கள். அப்படி எண்டால் விக்கி ஐயாவுக்கு இம்முறை ஒரு சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் வழங்கினால் நல்லது என்பது எனது எண்ணம். இருந்தாலும்  சிங்கள பவுத்தம்  இலகுவில் அதிகார பரவலாக்கம் செய்யுமெண்டு எதிர்பார்க்கமுடியாது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு! குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்தோடு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈரானுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஹுபேயில் 65 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும்  பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/kuwait-has-43-confirmed-cases-of-coronavirus-health-ministry/
  • கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்! கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-கொள்ளை-நோயா/
  • புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து! புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இதேவேளை, குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/புனிதப்-பயணிகளுக்கான-விச/
  • பூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு! நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட குறித்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த குறுங்கோள் பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, ‘2006 ஆர்ஹெச்120’ என்ற குறுங்கோள் பூமியைச் சுற்றி வரும் நிலையில், தற்போது அதே போன்ற 2-ஆவது குறுங்கோள் கண்டறியப்பட்டுள்ளது. http://athavannews.com/பூமியை-சுற்றும்-குறுங்கோ/
  • Patrick Koonts wrote about this virus and epidemic in 1980 in his book Eyes of Darkness.  He predicted that it would happen in 2020 and will start in Wuhan.  The virus is called Wuhan 400.  The scientist who defected named Li Chen.   உலகம் ஒரு நாடக மேடை!