Jump to content

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் மாபெரும் அறிவியல் கண்காட்சி.!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..!

Uni-News-22-.png

யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் . இந்நிகழ்வில்

1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி.

2. இலவச மருத்துவ முகாம் (Medical Check-up and Dental Care)

3. இரத்ததான முகாம்

4. Battle ground Competition (For University of Jaffna, Kilinochchi Premises University Students)

5. பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக Z Score பற்றி விளக்கம் மற்றும் தனியார் கற்கை நெறிகள்.

6. பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறை .

7. வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி

என இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

குறித்த கண்காட்சி நிகழ்வு இன்றும், நாளையும் 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாது.

குறித்த கண்காட்சியில் குறைந் செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

https://jaffnazone.com/news/15214

Link to comment
Share on other sites

20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி.

2. இலவச மருத்துவ முகாம் (Medical Check-up and Dental Care)

3. இரத்ததான முகாம்

4. Battle ground Competition (For University of Jaffna, Kilinochchi Premises University Students)

5. பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக Z Score பற்றி விளக்கம் மற்றும் தனியார் கற்கை நெறிகள்.

6. பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறை .

7. வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி

நல்ல முயற்சி. இரத்ததானம் மற்றும் இசை நிகழ்ச்சி ஊடாக சமூகமும் உடனடியாகவே பயனுறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.