-
Tell a friend
-
Topics
-
2
By nunavilan
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
ஆரம்பித்த வேகத்திலேயே நிறைவுக்கு வந்த இங்கிலாந்து - இந்திய அணிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்தது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்சமயம் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனிலையில் இருந்தது. இந் நிலைியல் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சுக்காக 112 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் பதிலுக்க துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இந் நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 13 ஓட்டங்களினால் பின்தங்கியிருந்த இந்தியா மொத்தமாக 53.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னங்சின் முடிவில் 33 ஓட்டங்களினால் பின் தங்கியது. அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியாவின் ‘சுழல்’ சூறாவளியில் சிக்கியது. அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பெயர்ஸ்டோவ் (0) போல்டாக, ஓட்ட கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் சிப்லேயும் (7), அக்சர் ‘சுழலில்’ சிக்கினார். வழக்கம் போல ஸ்டோக்சை (25) பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். அக்சரிடம் ஜோ ரூட் (19) வீழ்ந்தார். ஆர்ச்சரை(0) ஆட்டமிழக்கச் செய்தார் அஷ்வின். அந்த ஆட்டமிழப்பினால் டெஸ்ட் அரங்கில் 400 ஆவது விக்கெட் என்ற மைல்கல்லையும் அஷ்வின் எட்டினார். போக்சை (8) வெளியேற்றிய அக்சர், தனது 5 ஆவது விக்கெட்டை பெற்றார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அக்சர் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். பின்னர் 49 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது. ரோகித் சர்மா 25 ஓட்டங்களுடனும், சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயனாக அக்சர் படேல் தெரிவானார். https://www.virakesari.lk/article/101211
-
By கிருபன் · பதியப்பட்டது
முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கெடெர்ட்டின் தனது உயிரை மாய்த்துக் கொண்ட பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘ஃபியர்ஸ் ஃபைவ்’ என அழைக்கப்படும் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். கெடெர்ட் 2012 இல் பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் தலைவராக இருந்தார் மற்றும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை துஷ்பிரயோகம் செய்த அணி மருத்துவர் லொறி நாசருடன் நெருக்கமாக பணியாற்றினார். 250 க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக நாசருக்கு 2018 இல் 300 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/101221 -
By கிருபன் · பதியப்பட்டது
மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறை முகாமாக இருக்கலாம் என்று அவரது வழக்கறிஞரும் உரிமை அமைப்பின் உறுப்பினரும் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னி, இந்த மாத தொடக்கத்தில் பரோல் மீறல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய மனித உரிமைகள் ரஷ்ய நீதிமன்றின் இத் தீர்ப்பானது சட்டவிரோதமானது என்று கூறி விமர்சித்துள்ளதுடன், காவலில் இருக்கும் நவல்னியின் உயிருக்கு ஆபத்துக்கள் இருப்பதைக் காரணம் காட்டி, அவரை விடுவிக்க ரஷ்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. எனினும் அந்த கோரிக்கையை ரஷ்யா மறுத்துவிட்டது. நவல்னிக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தடுப்புக்காவலில் இருக்க நேரிடும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான வாடிம் கோப்ஸேவ் டுவிட்டரில், நவல்னி மொஸ்கோ சிறையிலிருந்து மாற்றப்பட்டதாகக் கூறினார், பின்னர் நவல்னியை அடையாளம் தெரியாத சிறை முகாமுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார். 44 வயதான நவல்னி, ஜேர்மனியில் இருந்து திரும்பிய பின்னர், மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்துழைப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், நவல்னியின் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது, ரஷ்யா முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களை வீதிகளில் இறக்கியது. அதிகாரிகள் சுமார் 11,000 பேரை தடுத்து வைத்தனர். அவர்களில் பலருக்கு ஏழு முதல் 15 நாட்கள் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நவல்னியின் தடுப்புக்காவல் ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்கும் மொஸ்கோவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அரசியல் பதட்டங்களை எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/101207 -
By புங்கையூரன் · Posted
அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...! வாழ்வின் விழுமியங்கள் அனைத்தையும்...இதிகாசப் பெட்டிகளுக்குள் பூட்டி வைத்து விட்டுத் திறப்புகளைத் தொலைத்து விட்டார்கள்! இந்த இருவருக்கும் கொடுக்கப் போகும் தண்டனையானது ...எல்லா இந்திய வம்சாவளியினருக்கும் மறக்க இயலாத ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது அவா! என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..! -
By புங்கையூரன் · Posted
எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...! சுதந்திரம் என்பது இயற்கையானது! கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..! முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே ஓடுகின்றன! ஒரு நாயைக் கட்டி விட்டுப் பாருங்கள்...! தன்னை யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்! அதே போலத் தான்...எமது போராட்டமும்...! ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து கொண்டேயிருக்கும்...! இறுதி முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.