Jump to content

13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமற்றன…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமற்றன…

January 6, 2020

DSC4672.jpg?resize=800%2C484

அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06.01.20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து    அறிந்துகொள்வதில் தூதுக்குழுவினர் ஆர்வமாக இருந்த நிலையில் அவர்களுக்கு மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி,

உதாரணமாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றன என்றும் குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் மாற்றுத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும்  காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டால், அது காவல் பணிகளை அரசியல்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால்  காவல் நிலையப் பொறுப்பதிகாரி வரையான பதவிகளுக்கு மாகாணத்தின் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிலிருந்து நியமிப்பது மிகவும் நடைமுறைச் சாத்தியமானது என்றும் இது மொழித்திறன் மற்றும் கலாச்சார வேறுபாடுகளால் எழும் சிக்கல்களைத் தீர்க்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்தாலி தூதரகத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி, ருமேனியாவின் தூதுவர் கலாநிதி விக்டர் சியுஜ்தியா, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் ஜெர்மனியின் தூதுவர் ஜோன் ரோட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தூதுவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக முதலில் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

DSC4675.jpg?resize=800%2C514

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றியும் சாதகமாக கருத்துக்களை முன்வைத்த அவர்கள், பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையையும் பாராட்டினர்.

முதலீட்டுக்கான ஒரு மையம் என்ற வகையில் இலங்கையை சாதகமாக பார்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிடமும் ஜனாதிபதி  இதன்போது கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கை பற்றி விளக்கிய ஜனாதிபதி, இலங்கை போன்ற சிறிய நாடுகளை உலகின் ஏனைய பகுதிகளைப் போலவே அதே வேகத்தில் அபிவிருத்தி செய்வதற்கும் நகர்த்துவதற்கும் உதவுவது பிராந்திய மேலாதிக்கத்தை முறியடிப்பதற்கான சிறந்த வழியாகும் என்று தெரிவித்தார்.

இலங்கையின் விவசாயத்துறையை பாதிக்கும் ஒரு முக்கிய சவால் காலநிலை என்று ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டார். எனவே பச்சை வீடு போன்ற முறைகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதை இலங்கை கண்டறிய வேண்டும் என்றும் இரசாயன உரத்திலிருந்து சேதன உரங்களுக்கு இலங்கை செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார். இது வித்தியாசமான சந்தை வாய்ப்புகளை ஈர்க்கக் கூடியதாக அமையும். மேலும், இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகள் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணியாகவுள்ள அதேநேரம், எமது நீர் நிலைகளை மாசுபடுத்துவதாகவும் இருப்பதால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நெதர்லாந்து தூதுவர் கோங்க்க்ரிஜ்ப், சேதன விவசாயம் தொடர்பாக இலங்கையில் ஏற்கனவே நெதர்லாந்து அரசு ஆரம்பித்துள்ள ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விளக்கினார். இந்த மாற்றம் வெற்றியளிக்க விவசாயிகளுக்கு நிர்வாகத்துறை அதிகாரிகளின் ஆதரவு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

DSC4687.jpg?resize=800%2C459

ஊவா மாகாணத்தில் பெண் விவசாயிகளுக்காக இத்தாலிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாசனைத் திரவிய விவசாய திட்டம் குறித்து இத்தாலிய தூதுவர் குறிப்பிட்டார். தற்போது சுமார் 400 விவசாயிகள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், தொழிற்திறன் மற்றும் தகுதிக்கு வெகுமதி அளிப்பதற்குமான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து தூதுக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஒரு நம்பகமான மற்றும் நீண்ட கால பங்காளர் என்ற வகையில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனவே, ஐரோப்பிய ஒன்றிய பங்காளர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் நேர்மையானதும் வினைத்திறனானதுமான நிர்வாகம் முக்கிய அங்கமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்
 

http://globaltamilnews.net/2020/135874/

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு ஒரு முக்கியமான விடயம். எனவே தமிழ் தரப்புகள் இலங்கை அரசுடன் மட்டுமல்லாமல் வெளி நாட்டு ராஜதந்திரிகளுடனும் தொடர்ச்சியாக பேச்சு நடத்தி விரைவில் ஒரு முடிவை காண வேண்டும்.

ராஜபக்ஷவினரினால்தான் ஒரு முடிவை காணமுடியும். ஏன் என்றால் இவர்களுக்கு பவுத்த சிங்கள மக்களின் ஆதரவு உண்டு , அத்துடன் மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். ரணில் போன்றவர்கள் ஒரு தீர்வு திடத்தை கொண்டு வரும்போது , அதுவும் ஒன்றுக்கும் உதவாத தீர்வாக இருந்தாலும் சிங்களவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் ரணில் வந்தால்தான் தீர்வு எண்டு இருந்தால் அது பகல் கனவாகவே இருக்கும். இருந்தாலும் நமது தமிழ் தலைமைகள் (?) ஒற்றுமையாகும் வரையும் இது ஒரு சிக்கலான விடயமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 வது திருத்தச் சட்டம் ஹிந்திய - சொறீலங்கா 1987 உடன்படிக்கையின் பிரகாரம் முளைத்த ஒன்று எனலாம்.

அது ஒரு தீர்வுத்திட்டம் கிடையாது. அது ஒப்பந்தத்தின் அடிப்படையில் தானாகவே அமுலாக வேண்டிய ஒன்று. 

அதனை அமுல்படுத்த வேண்டிய கடமை ஹிந்தியாவுக்கும் சொறீலங்காவுக்கும்..  உள்ளது.

அன்று ஹிந்திய - சொறீலங்கா உடன்படிக்கையை எதிர்த்தவர்கள் யாரும் இன்றில்லை என்றாக்கப்பட்ட நிலையில்..

ஹிந்தியா ஏன் அதனை இன்னும் முழுமையாக அமுல்படுத்த சொறீலங்காவை கோரவில்லை.

ஆக ஹிந்திய - சொறீலங்கா உடன்படிக்கை என்பது தமிழ் மக்களை ஏமாற்றவும் தன்னை பிராந்தியத்தில்.. குறிப்பாக சொறீலங்காவின் பால் இறுகப் பிணைத்துக் கொள்ளவும் ஹிந்தியா மேற்கொண்ட சதி தானே...???! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.