Jump to content

வாட்ஸ்அப் லொக்கேஷன்; செல்போன் சிக்னல் காண்பிக்காத டெக்னிக்!’- சென்னை இன்ஜினீயர் சிக்கியது எப்படி?


Recommended Posts

இன்ஜினீயர் சாய்

இன்ஜினீயர் சாய்

சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாய் என்கிற ராஜா சிவசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரைப் பிடித்தது எப்படி என்பதை போலீஸ் உயரதிகாரி நம்மிடம் விவரித்தார்.

``மாணவியுடன் சாய் கடந்த 10 மாதங்களாக இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தன்னுடைய அம்மாவின் செல்போனில் மாணவி ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். அப்போது அவருடன் சாய் விளையாடியபோது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அந்த மாணவியிடம் சாய், தன்னுடைய பெயரை சஞ்சய் என்றும் போரூரில் உள்ள பிரபலமான பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதை உண்மையென மாணவி நம்பியுள்ளார். அதன்பிறகு இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்துள்ளனர். பின்னர் இருவரும் போனில் பேசி தங்களின் நட்பை வளர்த்துள்ளனர். இந்தச் சமயத்தில் வீடியோ காலில் சாய், மாணவியுடன் பேசியுள்ளார். ஒருகட்டத்தில் சாயின் பேச்சில் மயங்கியுள்ளார் மாணவி. அதனால் சாய் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கியுள்ளார். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடியோ காலில் பேசியுள்ளார் சாய். அப்போதுதான் சாய் கூறியதுபோல மாணவியும் செய்துள்ளார். அந்த வீடியோ காலில் மாணவியின் புகைப்படங்களைச் சேகரித்துள்ளார் சாய்.

இதையடுத்து சாய், தன்னுடைய சுயரூபத்தை மாணவியிடம் காட்டத் தொடங்கியுள்ளார். அதாவது, மாணவிக்கு போன் செய்த சாய், உன்னை நேரில் சந்திக்க வேண்டும். கோயம்பேடுக்கு வா என்று அழைத்துள்ளார். ஆனால், மாணவி நான் வரமுடியாது என்று கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த சாய், உன்னுடைய நிர்வாண போட்டோக்கள் என்னிடம் உள்ளன. நீ வரவில்லை என்றால் அதைச் சமூகவலைதளத்தில் பதிவு செய்துவிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார். அப்போதும் மாணவி, நான் வரமாட்டேன் என்று கூறி போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாய், மாணவியின் அம்மா செல்போன் வாட்ஸ்அப்பிற்கு சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, நடந்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். அப்போது மாணவி, தன்னுடைய அம்மாவிடம் உண்மையைக் கூறியுள்ளார். அதன்பிறகு மாணவியின் அம்மா, தன் கணவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். மகளின் போட்டோ, அறிமுகம் இல்லாத ஒருவரின் கையில் இருப்பதால் அந்தக் குடும்பமே அதிர்ச்சியிலும் அவமானத்திலும் கூனிக் குறுகியது. இந்தச் சமயத்தில் மாணவியின் அப்பாவின் செல்போனில் பேசிய சாய், இதுபோல ஏராளமான போட்டோக்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிடாமலிருக்க 2 லட்சம் ரூபாய் கொடு என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, மகளை அழைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு மாணவியின் அப்பா, அம்மா ஆகியோர் வந்தனர். இன்ஸ்பெக்டர் ராமசாமியைச் சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ராமசாமி, சாயின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தார். இந்தச் சமயத்தில் மாணவியின் அப்பா செல்போனுக்கு லைனில் வந்த சாய், `இன்னும் பணத்தை ரெடி பண்ணவில்லையா. நான் இருக்கும் இடத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் பணத்தோடு அந்த இடத்துக்கு வரவில்லையென்றால் அவ்வளவுதான்' என்று கூறியுள்ளார். எதிர்முனையில் பேசிய இன்ஸ்பெக்டர் ராமசாமி, `நான் மாணவியின் சித்தப்பா, 2 லட்சம் ரூபாய் என்பதால் பணத்தை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறோம். விரைவில் வந்து கொடுத்துவிடுகிறோம். அவசரப்பட்டு போட்டோவை வெளியிட்டுவிடாதீர்கள்' என்று கூறினார்.

இதையடுத்து, சாய் வாட்ஸ்அப்பில் அனுப்பிய முகவரிக்கு போலீஸார் சென்றனர். அப்போது வீடியோ காலில் பேசிய சாய், சென்னை பாரிமுனைக்கு வரும்படி கூறினார். உடனே மாணவியின் பெற்றோருடன் போலீஸாரும் மப்டியில் அங்கு சென்றனர். அடுத்து பேசின் பாலத்துக்கு வரும்படி சாய் மெசேஜ் அனுப்பினார். அங்கு சென்றபோது வீடியோ காலில் பேசியபடி நடந்து சாய் வந்தார். அப்போது அவரை மடக்கிப்பிடித்தோம். வீடியோ காலில் மாணவியின் பெற்றோரிடம் சாய் பேசும்போது, தன்னுடைய செல்போன் சிக்னல் காண்பிக்காத வகையில் டெக்னிக்கைப் பயன்படுத்தினார். இதனால்தான் அவர் ஒவ்வொரு முறையும் இருப்பிடத்தை மாற்றும்போது சாயை எங்களால் பிடிக்க முடியவில்லை.

காவல் நிலையத்தில் சாயிடம் விசாரித்தபோது, அவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 மாதத்தில் குழந்தை இருப்பது தெரியவந்தது. சாயின் மனைவி தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது செல்போன் நம்பர் தொடர்பாக சாயிடம் பேசியபோதுதான் இருவரும் அறிமுகமாகி, பின்னர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். குழந்தையோடு அவர் விருதுநகரில் குடியிருந்துவருகிறார். சென்னையில் தனியாக தங்கியிருந்த சாய், ஆவடி, திருமுல்லைவாயில், மடிப்பாக்கம், சேலையூர், தாம்பரம் ஆகிய இடங்களில் நெட் சென்டர் நடத்திவந்துள்ளார்.
 
நெட் சென்டருக்கு வரும் பெண்கள், தங்களின் அடையாள ஆவணம், செல்போன் நம்பர்களைக் கொடுப்பதுண்டு. அந்த நம்பருக்கு கால் செய்து சாய் அன்பாகப் பேசுவார். அப்போது சாயுடன் தொடர்ந்து போனில் பேசும் பெண்களுடன் நெருக்கமாகப் பழகுவார். அப்போது அந்தப் பெண்களுக்கே தெரியாமல் வீடியோ, புகைப்படங்களை எடுக்கும் சாய், அதை வைத்தே மிரட்டி பணம் பறித்துவந்துள்ளார். இந்தவகையில், 9 பெண்கள் சாயிடம் ஏமாந்துள்ளனர். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆனால், அவர்களுடன் சாய் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் லேப்டாப்பில் உள்ளன. அதை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்" என்றார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லொஜிக்  இடிக்குதே  அம்மாவின் போன் பிள்ளையிடம் இருந்தால் அம்மா வீட்டில்  இல்லாத நேரம் போன் இருக்க கூடாது விகடன் கவனிக்கவில்லையாக்கும் . முதலில் சிறுவர்களுக்கு போன் வாங்கி கொடுப்பதே பிழையான விடயம் அப்படி வாங்கி கொடுத்தாலும் இரண்டாம் தலைமுறை போன் காணும் .இல்லாட்டி இப்படித்தான் கண்ட  எருமையும் இடித்து கொண்டு நிக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.