Jump to content

ஜனாதிபதி கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 பாராளுமன்ற தேர்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பி.கே.பாலசந்திரன் -

முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார். 

image_be205ee597.jpg

மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு செய்வதில் கோதாபய மிகுந்த அக்கறையாக இருக்கிறார். 

சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 19 ஆம் திருத்தம் பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்களை அதிகரிக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக் குறைத்திருக்கிறது. அதனால் இது அதிகார மையங்களுக்கும் இடையிலான போட்டி களத்தில் பல இடங்களில் குழப்ப நிலையும் முரண் நிலையும் காணப்படுகிறது. 

நீதித்துறை , பொலிஸ் , அரசாங்க சேவை மற்றும் தேர்தல்கள் திணைக்களம் போன்ற அரசின் பல்வேறு பிரிவுகளுக்கும் உயர் பதவி நியமனங்களை செய்வதற்கு 19 ஆவது திருத்தத்தின் வாயிலாக சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிரக்கின்றன. மக்களினால் தெரிவு செய்யப்படாத இந்த ஆணைக்குழுக்களுக்கு இந்த அரசியலமைப்பு திருத்தம் பெருமளவு அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்று அதிகார பீடம் இங்கு ஓரங்கட்டப்படுகிறது. பிரதிநிதித்துவ அரசியல் கோணத்தில் இருந்து பார்க்கும் போது இது ஜனநாயக விரோதமானதாக இருப்பதுடன் தகுதியீனத்தையும் ஊக்கப்படுத்துகின்றது. 

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்புலத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தகுதியீனம் வெளிப்படையாகத் தெரிந்த போதிலும், கூட அவரை பதவி நீக்குவதற்கான அதிகாரம் தனக்கு இருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த கசப்புணர்வுடன் முறையிட்டார். பொலிஸ் திணைக்களத்தின் தலைவரான பொலிஸ் மா அதிபர் தனக்கு கீழ் வருகின்ற உயர் அதிகாரிகளை தெரிவு செய்ய முடியாது. ஏனென்றால் பொலிஸ்துறை சாராத உறுப்பினர்களைக் கொண்ட பொலிஸ் ஆணைக்குழு மாத்திரமே இந்த நியமனங்களைச் செய்ய முடியும். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் இருக்கின்ற போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களில் இருக்கின்ற -மக்களால் தெரிவு செய்யப்படாத நபர்களினாலேயே முக்கியமான நியமனங்கள் செய்யப்படுகின்றன என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ முறையிட்டிருக்கிறார். 

ஜனாதிபதி என்ற வகையில் ஜனவரி 3 ஆம் திகதி முதல் தடவையாக பாராளுமன்றத்தில் கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி கோதாபய ஏற்கனவே 19 தடவைகள் திருத்தத்துக்கு உள்ளான 1978 அரசியலமைப்பை மாற்றியமைக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தார். இன்றைய அரசியல் அமைப்புக்கு செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் பெருமளவு பிரச்சினைகள் உருவாக வழிவகுத்திருக்கிறது. ஏனென்றால் இந்த திருத்தங்களின் விளைவாக அரசியலமைப்பு விளங்கா தன்மையையும் குழப்ப நிலையையும் கொண்டிருக்கிறது என்றும் தனது பாராளுமன்ற உரையில் கோதாபய தெரிவித்தார். 

கூடுதல் அதிகார பரவலாக்கலை செய்வதாக உறுதியளித்து பின்னர் அந்த உறுதி மொழியைக் காப்பாற்றாத அல்லது காப்பாற்ற முடியாமல் போன முன்னாள் ஜனாதிபதிகளை போலன்றி கோதாபய ராஜபக்ஷ கூடுதல் அதிகார பரவலாக்கத்துக்கோ அல்லது சமஷ்டி முறைமைக்கோ தான் ஆதரவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். 

' எனது பதவி காலத்தில் நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்தை எமது அரசியலமைப்பின் பிரகாரம் நான் எப்போதும் பாதுகாப்பேன் ' என்று ஜனாதிபதி உறுதியளித்தார். தமிழர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சமஷ்டி முறைமையை கோரி வந்த போதிலும் 1948 ஆம் ஆண்டு முதலிலிருந்து நீடிக்கின்ற யதார்த்த நிலையையே கோதாபய இவ்வாறு கூறினார். சமஷ்டி முறை இல்லாவிட்டாலும் கூடுதல்பட்ச அதிகார பரவலாக்கலை செய்வதாக உறுதியளித்த ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றவர்களின் அரசாங்கங்களினால் கூட இந்த உறுதி மொழிகளை நிறைவேற்ற முடியாமல் போனது. பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சமஷ்டி முறைக்கும் பெருமளவு அதிகார பரவலாக்கத்திற்கும் எதிரானவர்களாக இருப்பதே இதற்கு காரணமாகும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத எதையாவது கோருவதோ அல்லது உறுதியளிப்பதோ அர்த்தமற்றது என்று கோதாபய ராஜபக்ஷ வெளிப்படையாக கூறுகின்றார். 

பெரும்பான்மை சமூகத்தினதும் சிறுபான்மை சமூகங்களினதும் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவம் குறித்து தனதுரையில் குறிப்பிட்ட ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ' பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். அப்போது மாத்திரமே மக்களின் சுயாதிபத்தியம் பேணி பாதுகாக்கப்படும். ' என்று கூறினார். 

' என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். கிங் மேக்கர் பாத்திரத்தை வகிப்பதன் மூலம் இந்த நாட்டின் அரசியலை சூழ்ச்சித் தனமாக கையாளவும் கட்டுப்படுத்தவும் இனிமேல் எவரினாலும் சாத்தியமாகாது. என்பதை மக்களில் பெரும்பான்மையானவர்கள் நிரூபித்திருக்கிறார்கள் ' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். 

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவினால் மாத்திரமே நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றதையே அவர் இவ்வாறு கூறுகின்றார். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறிய கட்சிகளின் அரசியலுக்கு ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். உறுதியான பெரும்பான்மை எந்தவொரு கட்சிக்கும் கிடைக்காத பாராளுமன்றத்தில் இந்த சிறிய கட்சிகள் கிங் மேக்கர்களாக செயற்பட்டு வந்தன என்பதையே ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலைவரம் தொடர முடியாது என்பதை சிறுபான்மைச் சமூகத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்த பாங்கு இதை வெளிக்காட்டுகின்றது. ' சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசியக் கடமையில் ஒன்றிணையுமாறு அவர்கள் எல்லோரையும் நான் அழைக்கின்றேன் எமது சமூகத்தில் பிரிவினையை விதைக்கும் குறுகிய நிகழ்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியலை நிராகரிக்குமாறும் அவர்களை நான் கேட்டுக் கொள்கின்றேன். ' 

தனது நிகழ்ச்சி திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்கே அதி முதன்மையான இடம் என்றே ஜனாதிபதி கூறினார். ஒரு தேசிய கோணத்தில் இருந்து பாதுகாப்பை நோக்குவதன் மூலம் கோதாபய ராஜபக்ஷ ( இந்தியாவின் வற்புறுத்தலில் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான) 13 ஆவது திருத்த்ததின் ஏற்பாடுகளின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு இருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கோதாபய நிராகரிக்கின்றார். 

விஜயதாசவின் சட்ட மூலங்கள்

அதே வேளை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்புக்கான 21 ஆவது , 22 ஆவது திருத்த சட்ட மூலங்கள் என்ற வடிவில் இரு சட்ட மூலங்களை பிரேரித்திருக்கின்றார். இவ்விரு சட்ட மூலங்களுமே கோதாபயவின் நோக்கங்களுக்கு இசைவானவை. உத்தேச 21 ஆவது திருத்த சட்ட மூலம் தேர்தல்களில் மக்களினால் தெரிவு செய்யப்படுவதற்கு அரசியல் கட்சிகள் மாவட்ட ரீதியில் பெற வேண்டிய குறைந்த பட்ச வீதத்தை 5 வீதத்திலிருந்து 12.5 வீதமாக அதிகரிக்கிறது. இது சிறிய கட்சிகளை இல்லாமல் செய்து பாராளுமன்ற ஆசனங்கள் சிதறடிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதுடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகளை இலகுவாக்குகின்றது. 

22 ஆவது திருத்த சட்ட மூலம் சுயாதீன அரசியலமைப்பு பேரவையின் அதிகாரங்களை துண்டாக்குகின்றது. நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு பிரதம நீதியரசரையும் உச்ச நீதிமன்றத்துக்கான ஏனைய நீதிபதிகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் ஜனாதிபதி நியமிப்பார் என்று அது கூறுகிறது. சட்ட மா அதிபர் , கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் , குறைகேள் அதிகாரி மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரையும் ஜனாதிபதியே நியமிப்பார். இந்த விடயங்கள் சகலதிலும் ஜனாதிபதி பிரதமரிடம் மாத்திரமே ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இருக்கிறது. என்று அந்த சட்ட மூலம் கூறுகிறது. 

இந்த சட்ட மூலம் ஜனாதிபதி முப்படைகளின் பிரதான தளபதி என்ற வகையில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிப்பதற்கும் விதந்துரைக்கிறது. அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் எந்தவொரு அமைச்சையும் ஜனாதிபதியால் தனது பொறுப்பின் கீழ் எடுக்க முடியும். அத்துடன் அரசியல் விலை பேசலை இல்லாமல் செய்யும் ஒரு முயற்சியாக அமைச்சரவை உறுப்பி;னர்களின் எண்ணிக்கையை இந்த திருத்த யோசனை குறைக்கிறது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்த செயற்திட்டங்களை உற்சாகமாக முன்னெடுக்கலாம் என்று நம்புகின்றார். 

தகுதி மற்றும் கல்வி தகைமைகளின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிப்பதற்கான சுதந்திரத்தை அவர் பெறுவார். வெறுமனே அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவு செய்வதற்காக நியமனங்கள் செய்வதை அவரால் தடுக்க கூடியதாக இருக்கும். அவசியமான ஆனால் அதே வேளை மக்கள் செல்வாக்கை பெற முடியாத அரசியல் அல்லது பொருளாதார தீர்மானங்களையும் அவரால் எடுக்க கூடியதாக இருக்கும். அத்தகைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்கள் சிலவற்றில் அவை முறியடிக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு முறியடிக்கப்படும் என்ற பயமின்றி அவரால் தீர்மானங்களை எடுக்க கூடியதாக இருக்கும். 

(நியூஸ் இன் ஏசியா)

https://www.virakesari.lk/article/72766

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.