Jump to content

500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் 2 நட்சத்திரங்கள் மோதல்:


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர்
 
 •  
பைனரி நியூட்ரான் நட்சத்திய இணைப்பு குறித்த ஒரு கலைஞரின் கற்பனை ஓவியம்படத்தின் காப்புரிமை NSF/LIGO Image caption பைனரி நியூட்ரான் நட்சத்திய இணைப்பு குறித்த ஒரு கலைஞரின் கற்பனை ஓவியம்

புவியில் இருந்து 500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இறந்து போன இரண்டு அடர் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பேரதிர்வை, அந்த நிகழ்வில் இருந்து வெளியான ஈர்ப்பு அலைகளைக் கொண்டு விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.

அதாவது விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் ஒளி, 500 மில்லியன் ஆண்டுகளுக்கு பயணம் செய்தால் அடைகிற தூரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இணைந்த இந்த இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் மொத்த நிறை சூரியனைப் போல மூன்றரை மடங்கு அதிகம் என்பதும், இந்த மோதலுக்குப் பிறகு அவை அனேகமாக கருந்துளையாக மாறியிருக்கும் என்பது இதில் சுவாரசியம்.

லிகோ-விர்கோ கூட்டமைப்பின் சர்வதேச லேசர் ஆய்வகம், நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் வெளியாகும் ஈர்ப்பு அலைகளை இரண்டாவது முறையாக உணர்ந்துள்ளது.

ஈர்ப்பு அலைகளால் விண்வெளி நேரத்தில் குளத்தில் கல்லெறிவதால் ஏற்படும் அலைகளைப் போல அலைவுகள் ஏற்படும் என்ற கணிப்பை ஐன்ஸ்டீன் தமது சார்பியல் கோட்பாட்டில் வெளியிட்டார்.

இதற்கு முன் ரேடியோ நுண்ணோக்கிகளினால் கண்டறியப்பட்ட, பைனரி நியூட்ரான் நட்சத்திரங்கள் என அழைக்கப்படும் இவை, சூரியனின் நிறையை விட 2.7 மடங்குக்கு மேல் பெரிதாக இருந்ததில்லை.

இந்த இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் இணைந்ததால் கிட்டத்தட்ட நிச்சயமாக ஒரு கருந்துளை உருவாகியிருக்கும்.

அமெரிக்காவின் லூசியானா, வாஷிங்டன் மாகாணங்கள் மற்றும் இத்தாலியின் பைசா நகருக்கு அருகில் என மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ள லேசர் தலையீட்டுமானிகள் இது குறித்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லூசியானாவில் உள்ள லேசர் ஆய்வகம்படத்தின் காப்புரிமை NSF Image caption லூசியானாவில் உள்ள லேசர் ஆய்வகம்

இந்த அமைப்புகள் விண்ணில் நிகழும் பெரும் பிரளயங்களில் இருந்து வரும் அதிர்வுகளை எதிர்நோக்கி பிரபஞ்சத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட இந்த அமைப்புகளின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் கருந்துளை மோதலின் விளைவுகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உணரப்பட்ட ஒரு, ஒரு நியூட்ரான் நட்சத்திர இணைப்பு இவற்றில் விதிவிலக்காக அறியப்படுகிறது.

மூன்று ஆய்வகங்களில் ஒரு ஆய்வகத்தால் மட்டுமே இந்த நிகழ்வை கண்டறிய முடிந்தது. எனவே வானில் எந்த பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பட்டது என துல்லியமாக கூறுவது கடினமாக உள்ளது.

இதற்கு முன்னர் உணரப்பட்டதை விட, தற்போது இணைந்த்து உணரப்பட்ட நட்சத்திரங்களின் மொத்த நிறை அதிகமாக உள்ளது என்பதற்கான யோசனைகளை ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த யோசனைகளில் பெரும்பாலானவை மிக முக்கியமான உருவாக்க சூழல்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆனால், இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ குறைந்த எடையுள்ள கருந்துளையாக இருப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த லேசர் தலையீட்டுமானிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது.

2015-2017 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 11 ஈர்ப்பு அலை நிகழ்வுகள் உணரப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியவுள்ள தற்போதைய ஆய்வுச்சுற்றில், 40-க்கும் அதிகமான முறை இந்த அலைகள் கண்டறியப்பட்டிருக்கலாம்.

ஈர்ப்பு அலைகள்: விண்வெளி நேரத்தில் ஏற்படும் அதிர்வு

 • ஐன்ஸ்டீன் உருவாக்கிய பொது சார்பியல் கோட்பாட்டின் கணிப்பே ஈர்ப்பு அலைகள்.
 • இவற்றை நேரடியாக கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ளது.
 • முடுக்கம் பெற்ற நட்சத்திரங்கள், கருந்துளைகள் போன்றவை ஒளியின் வேகத்தில் பரவும் அலைகளை உருவாக்கும்.
 • இந்த அலைகளின் கண்டுபிடிப்பு, பேரண்டம் குறித்த முற்றிலும் புதிய ஆய்வுகளுக்கு வழிவகுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/science-51025134

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.  சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk
  • தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.       தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,          'தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.         அந்தவகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன்' என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ் குடும்பங்களிடமும், அவர் தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனி தமிழும், தமிழகமும் வெல்லும்.         உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனதில் வைத்து தமிழக அரசு 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.'என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு | Virakesari.lk
  • உங்கள் பதிலில் எந்த இடத்திலும் என்கருத்து பிழையென நிறுபிக்கப்படவில்லை. திருத்தங்களும் செய்யவில்லை மாறாக போராட்டம் பிழை என்கின்றீர்கள் . நான் போராடவில்லை.  எனவே அது பற்றிக் கருத்து கூறமுடியாது 
  • உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம், (Tedros Adhanom)  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.   கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உலக சுகாதார தாபனத்தின் பாராட்டுக்களைத் தெரதிவித்த டெட்ரோஸ், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் கூறினார். முதல் கொவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார்.  இதன் போது உலக சுகாதார தாபனத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் இலங்கையின் வெற்றி குறித்து கலந்துரையாடப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறையும் கொவிட் வைரஸ் பரவுவதை விரைவில் கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை தெரிவித்தது. இரண்டாவது கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 20 மில்லியன் “அஸ்ட்ராசெனகா“ தடுப்பூசிகளுக்கான தேவை உலகளவில் உள்ளது. நாட்டில் அதன் தேவை 600,000 தடுப்பூசிகளாகும். அந்த தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் உதவுமென தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார். “சைனோபார்ம்“ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று டெட்ரோஸ்  குறிப்பிட்டார். அந்த அனுமதியுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சைனோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உலக சுகாதார ஸ்தாபனம் பிராந்திய மட்டத்திலும் அதன் கொழும்பு அலுவலகத்தின் ஊடாகவும் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். மூன்று நாட்களில் “சைனோபார்ம்“ தடுப்பூசிக்கு அனுமதி - ஜனாதிபதி  | Virakesari.lk
  • (எம்.மனோசித்ரா)   இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.  எனினும் தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.  இதனால் வைத்தியசாலைகள் , இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் சிகிச்சை படுக்கை பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 800 இற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.  கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் உள்ளிட்ட சகல கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மேலும் இன்று மேல் மாகாணத்தில் பல பகுதிகள் முடக்கப்பட்டதோடு , வெலிசறை பொருளாதார மத்திய நிலையமும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.   தொற்று நோயியல் பிரிவு   நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் அதே நேரம் , அதற்கு சம அளவிலானோர் குணமடைந்து வீடுகளுக்குச் செல்லவில்லை.  எனவே வைத்தியசாலைகளிலும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கிறது.  இவ்வாறான நிலைமை தொடரும்பட்சத்தில் சிகிச்சைகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.   எனவே இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.   இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்   இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரை 1914 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 121 338 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 101 763 பேர் குணமடைந்துள்ளதோடு , 18 013 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் 745 ஆக அதிகரித்துள்ளது.   இன்று காலை 810 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 74 தனிமைப்படுத்தல் நிலையங்ககளில் 6705 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனர்.   கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி   கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நிமோனியா நிலை உள்ளிட்ட ஏனைய பாதிப்புக்களும் ஏற்படும். இது சிசுவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்குவது பாதுகாப்பானது என விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.   நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவற்றை பகுப்பாய்வு செய்து , தடுப்பூசி வழங்குவது பொறுத்தமானதென இனங்காணப்பட்டால் அதற்கான நடவடிக்கை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.     மேல் மாகாணத்தில் மேலும் பல பகுதிகள் முடக்கம்   கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6.30 மணி முதல் 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.  கம்பஹா மாவட்டத்தில் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய கிழக்கு , சூரியபாலுவ தெற்கு, சூரியபாலுவ வடக்கு, கீழ் கரகஹமுன மற்றும் மேல் கரகஹமுன ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டன.   கொழும்பு - பிலியந்தலை பொலிஸ் பிரிவில் ஹல்பிட்ட, கெஸ்பேவ கிழக்கு, மாக்கந்தன மேற்கு, நிவுன்கம மற்றும் பொல்ஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , களுத்துறையில் அகலவத்த பொலிஸ் பிரிவில் பிம்புர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மத்துகம பொலிஸ் பிரிவில் யட்டியன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.   தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்   களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவில் மொரபிட்டி மற்றும் பொல்லுன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் கீழ் ஹெசெஸ்ஸ தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.   வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு   கடந்த தினங்களில் வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொவிட் தொற்றாளர்கள் 28 பேர் இனங்காணப்பட்டனர். எனவே வெலிசறை பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் - இலங்கையின் கொரோனா நிலைவரம் ! | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.