Jump to content

500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் 2 நட்சத்திரங்கள் மோதல்:


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர்
 
 •  
பைனரி நியூட்ரான் நட்சத்திய இணைப்பு குறித்த ஒரு கலைஞரின் கற்பனை ஓவியம்படத்தின் காப்புரிமை NSF/LIGO Image caption பைனரி நியூட்ரான் நட்சத்திய இணைப்பு குறித்த ஒரு கலைஞரின் கற்பனை ஓவியம்

புவியில் இருந்து 500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இறந்து போன இரண்டு அடர் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பேரதிர்வை, அந்த நிகழ்வில் இருந்து வெளியான ஈர்ப்பு அலைகளைக் கொண்டு விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.

அதாவது விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் ஒளி, 500 மில்லியன் ஆண்டுகளுக்கு பயணம் செய்தால் அடைகிற தூரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இணைந்த இந்த இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் மொத்த நிறை சூரியனைப் போல மூன்றரை மடங்கு அதிகம் என்பதும், இந்த மோதலுக்குப் பிறகு அவை அனேகமாக கருந்துளையாக மாறியிருக்கும் என்பது இதில் சுவாரசியம்.

லிகோ-விர்கோ கூட்டமைப்பின் சர்வதேச லேசர் ஆய்வகம், நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் வெளியாகும் ஈர்ப்பு அலைகளை இரண்டாவது முறையாக உணர்ந்துள்ளது.

ஈர்ப்பு அலைகளால் விண்வெளி நேரத்தில் குளத்தில் கல்லெறிவதால் ஏற்படும் அலைகளைப் போல அலைவுகள் ஏற்படும் என்ற கணிப்பை ஐன்ஸ்டீன் தமது சார்பியல் கோட்பாட்டில் வெளியிட்டார்.

இதற்கு முன் ரேடியோ நுண்ணோக்கிகளினால் கண்டறியப்பட்ட, பைனரி நியூட்ரான் நட்சத்திரங்கள் என அழைக்கப்படும் இவை, சூரியனின் நிறையை விட 2.7 மடங்குக்கு மேல் பெரிதாக இருந்ததில்லை.

இந்த இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் இணைந்ததால் கிட்டத்தட்ட நிச்சயமாக ஒரு கருந்துளை உருவாகியிருக்கும்.

அமெரிக்காவின் லூசியானா, வாஷிங்டன் மாகாணங்கள் மற்றும் இத்தாலியின் பைசா நகருக்கு அருகில் என மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ள லேசர் தலையீட்டுமானிகள் இது குறித்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லூசியானாவில் உள்ள லேசர் ஆய்வகம்படத்தின் காப்புரிமை NSF Image caption லூசியானாவில் உள்ள லேசர் ஆய்வகம்

இந்த அமைப்புகள் விண்ணில் நிகழும் பெரும் பிரளயங்களில் இருந்து வரும் அதிர்வுகளை எதிர்நோக்கி பிரபஞ்சத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட இந்த அமைப்புகளின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் கருந்துளை மோதலின் விளைவுகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உணரப்பட்ட ஒரு, ஒரு நியூட்ரான் நட்சத்திர இணைப்பு இவற்றில் விதிவிலக்காக அறியப்படுகிறது.

மூன்று ஆய்வகங்களில் ஒரு ஆய்வகத்தால் மட்டுமே இந்த நிகழ்வை கண்டறிய முடிந்தது. எனவே வானில் எந்த பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பட்டது என துல்லியமாக கூறுவது கடினமாக உள்ளது.

இதற்கு முன்னர் உணரப்பட்டதை விட, தற்போது இணைந்த்து உணரப்பட்ட நட்சத்திரங்களின் மொத்த நிறை அதிகமாக உள்ளது என்பதற்கான யோசனைகளை ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த யோசனைகளில் பெரும்பாலானவை மிக முக்கியமான உருவாக்க சூழல்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆனால், இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ குறைந்த எடையுள்ள கருந்துளையாக இருப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த லேசர் தலையீட்டுமானிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது.

2015-2017 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 11 ஈர்ப்பு அலை நிகழ்வுகள் உணரப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியவுள்ள தற்போதைய ஆய்வுச்சுற்றில், 40-க்கும் அதிகமான முறை இந்த அலைகள் கண்டறியப்பட்டிருக்கலாம்.

ஈர்ப்பு அலைகள்: விண்வெளி நேரத்தில் ஏற்படும் அதிர்வு

 • ஐன்ஸ்டீன் உருவாக்கிய பொது சார்பியல் கோட்பாட்டின் கணிப்பே ஈர்ப்பு அலைகள்.
 • இவற்றை நேரடியாக கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ளது.
 • முடுக்கம் பெற்ற நட்சத்திரங்கள், கருந்துளைகள் போன்றவை ஒளியின் வேகத்தில் பரவும் அலைகளை உருவாக்கும்.
 • இந்த அலைகளின் கண்டுபிடிப்பு, பேரண்டம் குறித்த முற்றிலும் புதிய ஆய்வுகளுக்கு வழிவகுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/science-51025134

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நிலத்திற்கு கீழ்... ஐந்து மாடி உள்ளது. அங்கு சைக்கிள், கார், பேரூந்து தரிப்பிடம் எல்லாம் உள்ளதாம். 🤣
  • குருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது.! குருந்தூர் மலை பகுதிக்கு இன்றைய தினம் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் சென்றுள்ளதோடு, பணிக்கு தேவையான உபகரணங்கள் பலவும் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, 28.01.21 முதல் தொடர்ச்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்யப் போவதாக, குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக சென்றிருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் இதேவேளை, இன்றைய தினம் அவர்கள் கொண்டு சென்ற அகழ்வாராய்ச்சிகான பொருள்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தூண்கள் போடுவதற்கும் பயன்படுத்துகின்ற தூண் பெட்டிகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2021/156116/
  • கள்வன் என்று கருதுபவனையும் ஐயா என்று அழைக்கும் உங்கள் பண்பு போற்றுதற்கு உரியது. 🙏
  • பாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை ? இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு இராஜதந்திர நகர்வுக்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் பிரதிமைகள் இலங்கைக்கு இலாபகரமானதாக அமையுமா அல்லது நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வியுடன் அது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை வருகைக்குப் பின்னர் அதீதமான மாற்றங்கள் இலங்கைப் பரப்பில் ஏற்படத் தொடங்கியுள்ளதாக கடந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு பதிலளிக்கும் விதத்தில் உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் இயங்க ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு நகர்வாகவே பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக தெரிகிறது. அதனை பற்றியதாகவே இக்கட்டுரையும் அமையவுள்ளது. பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை வருகையை இலங்கை ஆட்சியாளர்கள் முதன்மைப்படுத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயம் பொருளாதார அடிப்படையைக் கடந்து இராணுவ விடயங்களிலும் அரசியல் ரீதியிலும் அதிக கரிசனையுடையதாக அமைய வாய்ப்பு அதிகமுண்டு. காரணம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் முதன்மையான நாடு கிடையாது. அது இராணுவ ஆட்சியிலும் அரசியல் ரீதியில் இந்தியாவுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும் நோக்கப்படும் நாடு என்பது கவனத்திற்குரியதாகும். இலங்கை ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தும் நாடு மட்டுமன்றி சட்டத்தின் ஆட்சிக்குள் இயங்குவதற்கு அதிகம் முயற்சிக்கும் தேசமாக விளங்குகிறது. அதற்காக சுதந்திரத்திற்கு பிந்திய காலத்தை அதிகம் செலவிட்டுள்ளது.. தற்போது மட்டுமே அதிலிருந்து விலகுவதாக அதிக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனாலும் அவ்வப் போது இராணுவ ஆட்சிக்கான முனைப்புக்களை வெளிப்படுத்திய போதும் பிராந்திய சர்வதேச அழுத்தங்களால் அதற்கான வாய்ப்புகளிலிருந்து தவறியுள்ளது. ஆனால் சமகாலத்தில் ஆட்சியிலுள்ள சக்திகள் இராணுவத்தின் பங்கினை வலுவானதாக மாற்றிக் கொண்டு செல்வதென்பது ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்தகைய சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும் வி-தத்தில் பாகிஸ்தான பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் அமையலாம் என்ற நோக்கில் பார்க்கப்படுகிறது. காரணம் கொவிட்-19 மற்றும் கடந்த முப்பது வருடம் வடக்கு கிழக்கு மீதான போர் என்பன இலங்கை இராணுவத்தின் வலுவை அதிகரித்துள்ளது. அதன் செல்வாக்கு அரசியலில் பதிவாகும் காலமாக கொவிட்-19 அமைந்துள்ளது. இது உலகத்தில் அனேக நாடுகளில் நிகழ்ந்து வருகிறது. ஆனால் இலங்கையில் சற்று அதிகமானதாக காணப்படுகிறது. இதன் விளைவு இராணுவ தேசமாக மாற்'றிவிடுமா என்ற எண்ணத்தைர வலுவானதாக ஆக்கக்கூடியதே. பாகிஸ்தானின் அனுபவம் அவ்வாறானதாகவே அமைந்திருந்தது. யாஸாயாக் ஹான் முதல் பர்வேஸ் முஸாராப் வரை பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகளே காரணமானவர்களாக காணப்பட்டனர். அதிலும் முன்னாள் பிரதமர் அலி பூட்டோ இராணுவத்தில் 11வது நிலையிலிருந்த உல் ஹக்கை இராணுவத் தளபதியாக்கியதன் விளைவே பூட்டோ தூக்கிலிடப்பட்டார் என்பது கவனத்திற்குரிய செய்தியாகும். தென் பூகோள நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகம் சார் அரச கட்டமைப்புகளை விட அதிகாரம் சார் கட்டமைப்புக்களின் வளர்ச்சியே முதன்மையானதாக காணப்படுகிறது. அனேகமான நாடுகள் அதிகாரப் போட்டிக்காகவே ஆட்சி அதிகாரத்தை நாடுகின்றனர். அத்தகைய அரச கட்டமைப்புகளும் அதிகார வர்க்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆட்சியாளரைப்பற்றியும் அவர்களது பாதுகாப்பு மற்றும் அதிகார அளவீடுகள் பற்றியதாகவே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.தென் பூகோள நாடுகளின் அனேக அரசியலமைப்புக்கள் பொருளாதாரக் கொள்கையற்று சமூக நோக்குநிலையற்று விளங்குகின்றன. இதனாலேயே இந்நாடுகளது பொருளாதார வளர்ச்சி சாத்தியமற்றதாக அமைந்துவிடுகின்றன. அது மட்டுமன்றி ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்படும் மோதல் இராணுவத்தின் பிரசன்னத்தை நோக்கிய நகர்வை சாத்தியமாக்குகின்றது. கண்டியர் ஆதிக்கம் வீழ்ந்தது போல் கறுவாத் தோட்ட அரசியலும் ஹம்பாந்தோட்டையின் அரசியலால் வீழட்ச்சியை நோக்கியுள்ளது. இதே தருணமே பாகிஸ்தானின் ஆட்சித் துறையில் இராணுவ பிரசன்னத்திற்கு வழியமைத்தது. இத்தகைய நகர்வு உள்நாட்டில் எப்படியானதாக அமைந்தாலும் எதிர்வினைகள் பலவீனமானதாகவே அமையும். ஆனால் பிராந்திய மட்டத்திலும் பூகோள மட்டத்திலும் மிக எச்சரிக்கை உடையதாக அமைய வாய்ப்புள்ளது. ஜே.வி.பி. இனது எழுச்சியின் போதும் வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தின் போதும் அத்தகைய எதிர் வினைகளை பிராந்தியத் தளத்திலிருந்து அவதானிக்க முடிகிந்தது.அத்தகைய அனுபவம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் அவதானிக்க முடிந்தது. அதில் பிராந்திய பூகோள சக்திகள் இணைந்திருந்தன என்பதை அக்காலப்பகுதியில் காணமுடிந்தது. எனவே அதற்கான வாய்ப்புக்களை தடுக்கும் உத்திகளை பிராந்'திய பூகோள தளத்திலிருந்து பார்த்துக் கொள்வதற்கான சூழல்கள் அதிகரி-ப்பதாக தெரிகிறது. ஆனாலும் பாகிஸ்தான் பிரதமரது இலங்கைப் பயணம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. முதலாவது இந்தியாவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு ஒரு பதில் அளிப்பது அல்லது எதிர்வினையாறட்றுவதாகவே தெரிகிறது. இந்திய வெளியுறவு அமைச்சரது விஜயம் அதிக நெருக்கடியை இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அதனை சமநிலைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை ஆட்சித்துறைக்கு உண்டு. அதிகாரச் சமநிலைக்கான போராட்டம் ஒன்றின் களத்துக்குள் அரசுகள் இயங்குகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடைமுறை இந்தியாவுக்கும் பூகோள சக்திகளுக்கும் ஒரு செய்தியை கொடுக்கும். அதற்கு பதிலளிக்க இந்தியா உடனடியாக முயலும். அது எதிரானதாக மட்டும் அமையாது சார்பானதாகவும் அமைய வாய்ப்புண்டு. சார்பானதாக அமைந்தால் அது இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமானதாக மாறும். இரண்டாவது பாகிஸ்தான் பிரதமர் வருகை என்பது வெளிப்படையாக இரு நாட்டுக்குமான உறவாகவே கருத வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு எண்ணுவதை விட தனது எதிரி நாட்டின் பிரசன்னம் தனது இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும் என்ற நோக்கில் அமையும். சுதந்திரத்திலிருந்து இரு நாட்டு அரசியலும் எதிர் துருவங்களாக செயல்பட்டதன் விளைவு என்பது மறுக்க முடியாது. எனவே இந்தியா இத்தகைய உறவை தனக்கு எதிரான உறவாகவே பார்க்க முயலும். மூன்றாவது பாகிஸ்தான் பிரதமரது விஜயம் சீன சார்புச் சக்திகளின் உறவைக் காட்டுவதாகவே இந்தியா மட்டுமல்ல பூகோள அரசுகளும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் கருத வாய்பட்புள்ளது. காரணம் சீன- பாகிஸ்தான் உறவானது பொருளாதார மற்றும் இராணுவ பாதுகாப்பு சார்ந்தது. மிக அண்மையில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டதுடன் இரு நாட்டுக்குமான நட்புறவை இரும்பாலான பிணைப்பு என பிரதமர் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.அது மட்டுமல்ல இலங்கை அத்தகைய உறவுக்குள் சென்றுவிட்டாலும் தடுத்து நிறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா முனைகின்ற போது பாகிஸ்தான பிரதமரது இலங்கை விஜயம் அவ்வளவு ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நான்கு இதனை இலங்கை ஒரு இராஜதந்திர உத்தியாகவே பார்கிறது. அதாவது இந்தியாவுக்கு இலங்கையின் போக்கு எப்படியானதாக அமையும் என்பதை சுட்டுவதாகவே தெரிகிறது. அதாவது இலங்கை விடயத்தில் இந்தியாவின் எல்லையை வெளிப்படுத்தியதுடன் அதனை இந்தியா மீறுமாயின் இலங்கை பயணிப்பதற்குரிய பாதை எதுவென்பதும் சுட்டப்பட்டுள்ளது.அதில் பாகிஸ்தான் ஒரு எடுகோளாகவே இலங்கை கருகிறது. பலமான சீன -பாகிஸ்தான் இலங்கை நட்புறவு உருவாகும் என்பதையும் இந்தியாவுக்கு உணர்த்தியுள்ளது ஐந்து இத்தகைய எண்ணத்திற்கு சமகாலத்தில் இரு விடயங்களை அடையாளப்படுத்த முடியும். அதாவது இந்தியா வான்பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு 19.01.2021 இல் வழங்கியுள்ளது. 20.01.2021 இல் இலங்கை கடற்படையில் மோதுண்டு தமிழக மீனவர்கள் இறந்துள்ளதாகவும் அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய சிறியரக கபட்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. எனவே பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயம் அதிகமான எதிர்வினைகளை ஆற்றக்கூடியதாகும். இலங்கை ஆட்சித்துறையிலுள்ளவர்கள் எப்போது நெருக்கடி காலத்தில் முகாமை செய்யும் இராஜதந்திரத்தை கொண்டவர்கள் என்பதை கவனித்தல் அவசியம். இந்தியத் தரப்பு எத்தகைய நகர்வை நோக்கி பயணிக்கப் போகிறது என்பது முக்கியமானதாகும். தற்போதை வெளியுறவும் தமிழக தேர்தல் களமும் இலங்கையிடம் கட்டுப்படுவதை அதிகம் ஒரு தெரிவாக இந்தியா கொள்ள வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் http://aruvi.com/article/tam/2021/01/28/22036/
  • நான் மேயராகப் பதவியேற்க உதவிய சுமந்திரனுக்கும் மாவைக்கும் நன்றி.! - மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராக வருவதற்கு உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உள்ளிட்ட பலருக்குத் தமது நன்றியை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இந்த நன்றியைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ். மாநகர சபையின் மேயராக நான் வருவதற்கு 6 கட்சியினர் உதவியுள்ளனர். அதாவது தேர்தலிலே சந்தர்ப்பம் வழங்கி சபையின் உறுப்பினராகுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தர்ப்பம் வழங்கியது. அதே போன்று எனது உறுப்புரிமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கிலே எனக்கு எதிராக வாதாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அந்த வழக்கை மீளப்பெற்று நான் மேயராகுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார். இதேபோன்று மாநகர மேயர் தேர்விலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் ஆனோல்ட்டை போட்டியிட வைத்து என்னை வெல்ல வைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உதவினார். பழைய மேயரின் வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது வாக்களிக்கச் சபைக்கு வராது அந்த பட்ஜட் தோல்வியடைய ஐக்கிய தேசியக் கட்சியினர் உதவினர். அதன்பின்னர் மேயர் தேர்வின்போது எனக்கு ஈ.பி.டி.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். ஆகவே, இந்த 6 கட்சியினருக்கும் எனது நன்றி" - என்றார். http://aruvi.com/article/tam/2021/01/28/22031/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.