Jump to content

ஈராக்கின் அமெரிக்க தளம் மீது 6 ரொக்கட்டுகள் வந்து வீழ்ந்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது.


Recommended Posts

ஈராக்கின் அமெரிக்க தளம் மீது 6 ரொக்கட்டுகள் வந்து வீழ்ந்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது.

 
 

Related: US defence secretary questioned on Iran tensions

Iran crisis: Tehran launches missile attack on US-Iraqi Ain al-Asad air base

 

Republican Guard fires 'tens' of warheads, state TV reports say

 
 
 

Iran has claimed responsibility for a rocket attack at the Al-Asad air base in western Iraq which is used by US forces – a major escalation of an already tense and chaotic situation.

Reuters cited a US official as having confirmed the attack, which was reported also by the Agence France-Presse news agency.

 

The official said there was no information yet on casualties or other damage. Donald Trump has threatened retaliation if Iran uses force against America.

 
 

Iranian state television said Tehran had launched “tens” of surface-to-air missiles at the base, according to the Associated Press.

 

It came as other, unconfirmed reports said an explosion had been heard in the northern Iraqi city of Erbil.

https://www.independent.co.uk/news/world/middle-east/iran-crisis-us-air-base-rocket-attack-al-asad-erbil-latest-updates-a9274536.html

Link to comment
Share on other sites

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் தொடுத்த ஈரான்

ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளை வெளியேற்ற ஈரான் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளால் தாக்குதல் தொடுத்துள்ளது. 

ஈராக்கில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கப் படைகளின் குடியிருப்புகள் மீது 13 ராக்கெட்டுகள் வெடித்துச் சிதறின. ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளமான அல் ஆசாத் மீது ஏவுகணைகளை சரமாரியாக ஏவியும் ஈரான் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அமெரிக்கர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் புரட்சிகர காவல்படையினர் அமெரிக்க விமானப்படைத்தளத்தை தாக்கியதாக செய்தி வெளியிட்டது. தங்கள் நாட்டின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மிகுந்த பலத்துடன் பதிலடி தரப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இதனிடையே வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரான் ராணுவம் தனது நகர்வுகளை அதிகரித்து வருவதாகவும், அமெரிக்கப் படைகளின் மீது ஆளில்லா விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமெரிக்க வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆளில்லா விமானங்களை வீழ்த்தும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/95909/ஈராக்கில்-அமெரிக்கப்படைகள்-மீது-ராக்கெட்-மூலம்தாக்குதல்-தொடுத்த-ஈரான்

ஈரான், ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்க தடை

துபாய் : ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஜன.,7 ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு சுமார் 12 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2453166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் உலகப்  போர் ஆரம்பிக்கப் போகிறது. 😮

Link to comment
Share on other sites

ஈரான், தமது இராணுவ நடவடிக்கை  முடிக்கப்பட்டதாகவும் அமெரிக்காவுக்கு தாம் மேற்படி தாக்குதலின் மூலம்  முகத்தில் அடித்து இருப்பதாகவும்  சொல்கிறது.

Link to comment
Share on other sites

பெரிய செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுதளம் அழிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அமெரிக்க வான்வழியாக ஈராக்கிற்கு பறக்க முடியாமல் போய்விடும். படைகள் வெளியேறிய தேவை உருவாக்கி உள்ளது. இது அமெரிக்கவிற்கு சங்கடமே. இருக்கவும் முடியாது, வெளியேறவும் முடியாது.  

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

பெரிய செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுதளம் அழிக்கப்பட்டுள்ளது.

 

இத் தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் அம்பனை? . ஏனெனில் விமான ஓடு பாதை சேதம் பற்றி நான் வாசித்த எந்த ஊடகத்திலும் இதுவரைக்கும் வரவில்லை. எதில் இந்த தகவல் வந்தது என அறியத் தந்தால் நாமும் மேலதிகமாக அறிய முடியும்

இந்த தாக்குதலால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு 'மானக்கேடு' ஒன்றுதான். ஈரானிய அதிபர் சொல்லியிருப்பதை போன்று முகத்தில் விழுந்த அடி இது.

11 hours ago, தமிழ் சிறி said:

மூன்றாம் உலகப்  போர் ஆரம்பிக்கப் போகிறது. 😮

 

நான் நினைக்கவில்லை இது பெரிய அளவிலான போராக மாறும் என்று. ஒரு உலகப் போரை அல்லது வளைகுடா போரை நடாத்தும் அளவுக்கு உலக நாடுகளின் பொருளாதாரம் இடம் கொடுக்காது, ஈரானும் தன் தளபதி மீதான தாக்குதலுக்கான எதிர்வினை முடிந்து விட்டது என்ற தொனியில் தான் அறிவித்தலும் கொடுத்து இருக்கு (Concluded).

ட்றம்ப் ஒரு செல்வந்த வர்த்தகர். போரை தேர்ந்தெடுத்தால் பொருளாதாரம் படு மோசமாக பாதிக்கப்படும் என நினைக்க கூடியவராகவே ஒரு வர்த்தகர் இருப்பார். எனவே நான் நினைக்கவில்லை அவர் போரை மேலும் விரிவுபடுத்துவார் என. அமெரிக்க நேரம் காலை 11 அளவில் அவரது உரை இடம்பெற இருக்கின்றது. பார்ப்போம் என்ன சொல்கின்றார் என.

Link to comment
Share on other sites

யுத்தம் ஒன்றை மேற்கொள்ளாத அமெரிக்க சனாதிபதிகளில் ஒருவர் ட்றம்ப் என பெயர் எடுக்க கூடியவராக இருப்பார் என நினைக்கின்றேன் (ஒபாமா கூட லிபியா மீது ஆக்கிரமிப்பை செய்தவர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ராணுவத்தளம் மீது இரான் தாக்குதல் - "இரான் மக்கள் உற்சாக குரல் எழுப்பி தாக்குதலை கண்டனர்"

பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா படைகள் அனைத்தையும் வெளியேற்றுவதே காசெம் சுலேமானீ கொலை செய்யப்பட்டதற்கான கடைசி பதில்," என இரான் அதிபர் ஹசான் ருஹானி தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்களின் மீது இரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ருஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

`பிரிச்சனையை முடிக்க விரும்பும் இரான்`

இந்த தாக்குதல் மூலம் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு இரான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது என்கிறார் பிபிசி மத்திய கிழக்கு பிரிவு ஆசிரியர் ஜெர்மி போவன்.

மேலும் அவர் தெரிவிப்பது: இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து தொலைக்காட்சியில் கேட்டவுடன் இரான் மக்கள் உற்சாக குரல்களை எழுப்பினர். காசெம் சுலேமானீ கொலை செய்யப்பட்டதற்கான பழிவாங்கல் குறித்துதான் நாட்டில் பேசப்பட்டு வந்தது மேலும் விரைவில் பழிவாங்கப்படும் எனவும் இரான் தெரிவித்திருந்தது.

ஆனால் நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதல் பெரிய அளவிலான தாக்குதல் இல்லை. பெரிய தாக்குதல் ஒன்றுக்கு அதைவிட பெரிய தாக்குதல் மூலம் பதலடி கொடுக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தல் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிகிறது.

இரானின் அதிஉயர்தலைவர் அயதுல்லா கமேனி, இது அமெரிக்காவுக்கான `அறை` என்றும், வரும் காலத்தில் அமெரிக்காவை இந்த பிராந்தியத்திலிருந்து வெளியற்றவே இரான் விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இரான் இந்த முடிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது என்பது போலவே தெரிகிறது.

’இரான் தற்காப்பு முயற்சியாக முடிவான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது,’ என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.

அவரின் வார்த்தைகள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். அவர் முடிவான நடவடிக்கை என்று கூறியதன் மூலம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இரான் விரும்புகிறது என்றே தெரிகிறது. மேலும் தற்காப்பு என்று சொல்வதன் மூலம் அமெரிக்காவை போல் அல்லாமல் தாங்கள் சர்வதேச சட்டத்தை மதிக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆனால் தற்போது எழுந்துள்ள அடுத்த கேள்வி இரான் அரசின் ஆதரவாளர்கள் திருப்தி அடைவார்களா என்பதும், டிரம்ப் அடுத்த என்ன செய்யப்போகிறார் என்பதும்தான்.

இராக்படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக எச்சரிக்கை

ஜெனரல் காசெம் சுலேமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என இராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, நள்ளிரவில் இரானிடமிருந்து எச்சரிக்கை வந்ததாக இராக்கின் பிரதமர் அடேல் அப்துல் மஹடி தெரிவித்தார்.

காசெம் சுலேமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் தாக்குதலை நடத்தியது அல்லது நடத்தப்போகிறது என அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த தாக்குதல் அமெரிக்க படைகள் இருக்கும் இடங்களில் மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக அடேல் தெரிவிக்கிறார்.

ஆனால் எந்த இடத்தில் என்பது குறிப்பிடவில்லை. அதே நேரம், அல் அசாத் விமானத் தளம் மற்றும் இர்பில் மாகாணத்தில் உள்ள ஹரிர் விமானத் தளம் ஆகியவற்றில் ஏவுகணைகள் பறப்பதாக அமெரிக்கா தெரிவித்தது என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நெருக்கடி, இராக்கை மட்டுமல்ல, அந்த பிராந்தியத்தையும், உலகையும் பெரும் போருக்கு அழைத்துச் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், பிரான்ஸ் கண்டனம்

போரிஸ் ஜான்சன்படத்தின் காப்புரிமை EPA

இரான் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரான் இவ்வாறான `பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான` தாக்குதல்களை மீண்டும் தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் இரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பதட்டத்தை குறைப்பதே தற்போது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இரானுக்கு சிரியா ஆதரவு

சிரியாவின் வெளியுறவு அமைச்சர் இரானுக்கு தங்களின் முழு ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது இரானின் உரிமை என சிரியாவின் செய்தி முகமையான சனாவில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்காவின் பொறுப்பற்ற கொள்கைகள் மற்றும் அராஜக மனநிலையே இதற்கு காரணம்," என சிரியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொளும்புவில் உள்ள அமெரிக்கா தூதரகம், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்ட சூழலால் வெளிநாடுகளில் உள்ள தங்களின் குடிமக்களின் பாதுகாப்பில் ஆபத்து ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

இரான் நடத்திய தாக்குதலும், பயண எச்சரிக்கையும்

அமெரிக்க விமானத்தளம் மீது இரான் தாக்குதல்படத்தின் காப்புரிமை Getty Images

இராக்கில் இரண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் இரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக இரான் மற்றும் இராக் நாடுகளுக்கு தங்கள் நாட்டினர் செல்வதற்கு உலக அளவில் பல நாடுகளும் பயண எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

போர் பதட்டம் காரணமாக இரான் மற்றும் இராக் வான் பகுதியில் விமானங்களை இயக்க வேண்டாம் என்று விமான சேவை நிறுவனங்களுக்கு பல நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இராக்கில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும்வரை இராக்கிற்கு மிகவும் முக்கியமில்லாத பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று இந்திய குடிமக்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், அந்த நாட்டின் உள்ளே பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இரான் மற்றும் இராக் வான்வெளி வழியாக பறக்கும் விமானங்களின் பாதையையும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மாற்றியுள்ளன.

இந்த தாக்குதல்களின் எதிரொலியாக, இரான், இராக், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளின் வான்வெளியில் பறப்பதற்கு கிளம்பும் அமெரிக்க சிவில் விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டின் பெடரல் விமான நிர்வாக அமைப்பு தடை விதித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததையடுத்து, தனது கடற்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களை அப்பகுதியில் பிரிட்டன் அரசு நிலைநிறுத்தியுள்ளது.

இதனிடையே இந்த தாக்குதல்களில் மொத்தம் 22 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

அல் அசாத் ராணுவ தளம் மீது ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் செயலற்று கீழே விழுந்துவிட்டதாக இராக் ராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை இன்று (புதன்கிழமை) காலையில் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.

ஏவுகணை தாக்குதல் குறித்து இரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படம் இதுபடத்தின் காப்புரிமை EPA Image caption ஏவுகணை தாக்குதல் குறித்து இரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படம் இது

அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

''இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிபிசி பாதுகாப்பு விவகார செய்தியாளர் ஜோனத்தன் மார்கஸ் சொல்வது என்ன?

ஜெனரல் சொலேமனிக்குள்ள முக்கியத்துவம் மற்றும் அவரை கொன்றதால் ஏற்பட்ட பதற்றம் ஆகியவற்றை பொருத்து பார்த்தால் அமெரிக்காவில் இருக்கும் இராக் தளத்தில் இரான் ராணுவம் நடத்திய தாக்குதல் மிதமான ஒரு பதிலடி என்றே சொல்லலாம்.

இந்த தாக்குதல் மூலம் சில உயிரிழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பது தெரிகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே ஒரு பெரிய சண்டையை விரும்பவில்லை என்பதே தெரிகிறது.

இதுதான் இரானின் பதிலடியா என்பதும் நம்மால் தற்போது சொல்லமுடியாது.

1979க்குப் பிறகு நேரடித் தாக்குதல்

1979-ம் ஆண்டு இரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்ட பிறகு, அமெரிக்கா மீது இரான் நேரடியாகத் தொடுக்கும் தாக்குதல் இது.

சுலேமானீ இறுதிச்சடங்குபடத்தின் காப்புரிமை EPA

''அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம். இரான் மீதான வலிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்'' என்று இரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் இரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமை EPA

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது

https://www.bbc.com/tamil/global-51029381

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

நான் நினைக்கவில்லை இது பெரிய அளவிலான போராக மாறும் என்று. ஒரு உலகப் போரை அல்லது வளைகுடா போரை நடாத்தும் அளவுக்கு உலக நாடுகளின் பொருளாதாரம் இடம் கொடுக்காது, ஈரானும் தன் தளபதி மீதான தாக்குதலுக்கான எதிர்வினை முடிந்து விட்டது என்ற தொனியில் தான் அறிவித்தலும் கொடுத்து இருக்கு (Concluded).

ட்றம்ப் ஒரு செல்வந்த வர்த்தகர். போரை தேர்ந்தெடுத்தால் பொருளாதாரம் படு மோசமாக பாதிக்கப்படும் என நினைக்க கூடியவராகவே ஒரு வர்த்தகர் இருப்பார். எனவே நான் நினைக்கவில்லை அவர் போரை மேலும் விரிவுபடுத்துவார் என. அமெரிக்க நேரம் காலை 11 அளவில் அவரது உரை இடம்பெற இருக்கின்றது. பார்ப்போம் என்ன சொல்கின்றார் என.

 

12 hours ago, நிழலி said:

யுத்தம் ஒன்றை மேற்கொள்ளாத அமெரிக்க சனாதிபதிகளில் ஒருவர் ட்றம்ப் என பெயர் எடுக்க கூடியவராக இருப்பார் என நினைக்கின்றேன் (ஒபாமா கூட லிபியா மீது ஆக்கிரமிப்பை செய்தவர்)

நிழலி,  உலக ஊடகங்கள் எல்லாம்... போரை பற்றி எழுதிக் கொண்டிருக்க....
உங்களது பார்வையும், கணிப்பும்.... வித்தியாசமாக உள்ளது. 👏
எதற்கும் இன்னும் இரண்டு, மூன்று கிழமைகள்  பொறுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உலக ஊடகங்கள் எல்லாம்... போரை பற்றி எழுதிக் கொண்டிருக்க...

ஊடகங்களுக்கு பரபரப்பாக  செய்திகள் வெளியிட வேண்டும். தமிழ் ஊடகங்களோ வெல்ல போவது யார்? ஈரானா அமெரிக்காவா என்கின்ற மாதிரி எழுதி கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

 

நிழலி,  உலக ஊடகங்கள் எல்லாம்... போரை பற்றி எழுதிக் கொண்டிருக்க....
உங்களது பார்வையும், கணிப்பும்.... வித்தியாசமாக உள்ளது. 👏
எதற்கும் இன்னும் இரண்டு, மூன்று கிழமைகள்  பொறுத்திருப்போம்.

ட்ரம்பின் நேற்றைய உரையில் இருந்தும் இன்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் கடிதத்தில் இருந்தும் அமெரிக்கா இந்த போரை விரிவாக்க விரும்பவில்லை என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. பொருளாதார தடைகளை மட்டும் அதிகரிக்க போவதாக அமெரிக்கா மட்டும் சொல்லியிருக்கின்றது. ஆனால் ஈரானுக்கு உதவ ரஷ்யாவும் சீனாவும் இருப்பதால் பெரியளவுக்கு பாதிப்பு ஈரானுக்கு எழப்போவதில்லை.

முன்னர் பெரும் போர்களை நாடுகளுக்கிடையில் நடாத்தி ஆயுத வியாபாரம் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வந்தன அமெரிக்கா போன்ற நாடுகள். பெரும் போர்களை நடாத்தும் அளவுக்கு உலக பொருளாதாரம் இடம் கொடுக்காமையால் இப்ப அந்த போக்கு மாறி, பிராந்தியங்களில் பதட்ட நிலையை தோற்றுவித்தும் (சவூதி V ஈரான்), உள் நாட்டுப் போர்களை ஊக்குவித்தும் லாபம் சம்பாதிக்கின்றனர்.

அமெரிக்க வலிந்து போரை நடாத்த முனைந்து இருந்தால் கூட நேட்டோ நாடுகள் இதற்கு ஆதரவு கொடுத்து இருக்காது. அவர்களின் வழக்கமான தோழமை நாடுகள் எல்லாம் கைவிரிக்க, தனித்து நின்று ஈரானை எதிர்த்து இருக்க வேண்டிய நிலை ட்ரம்ப் இற்கு ஏற்பட்டு இருக்கும் (இஸ்ரேல் தலையிட்டு இருக்காது - தன் தலையீடு ஏனைய முஸ்லிம் நாடுகளையும் ஈரான் பக்கம் சாய வைக்கும் என்பதால்). இதனால் தான் ட்ரம்ப் அடக்கி வாசிக்கின்றார்.

அமெரிக்காவின் இந்த வெட்கம் கெட்ட நிலை ட்ரம்பிற்கு சனாதிபதித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன்.

டிஸ்கி

கீழே நான் எழுதியிருப்பதை இங்கு எழுதிக் கொண்டு இருந்த ஒருவர் சொல்லியிருப்பார்'

"ஈரானும் அமெரிக்காவும் திரைமறைவில் நண்பர்கள். ஈரானின் ஆட்சியாளர்களுக்கு எதிரான உள் நாட்டு கலவரங்களை (நவம்பர், டிசம்பரில் கடுமையான கலவரம் நிகழ்ந்து ஈரானால் கட்டுப்படுத்தப்ப்ட்டது) கட்டுப்படுதி மக்களை ஈரானின் ஆட்சியாளர்கள் மீதும் ஈரானின் மீதும் பற்றுக் கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து நடாத்திய நிகழ்வுகளே தளபதி மீதான கொலையும், எவருக்கும் பாதிப்பு ஏற்படாத ஏவுகணைத் தாக்குதல்களும். ஈரானில் இப்போதைக்கு ஆட்சி மாற்றத்தை விரும்பாத மேற்குலகின் சதி இது"

யார் எழுதியிருப்பார் என்று உங்களால் கணிக்க முடியும்.

Link to comment
Share on other sites

வடகொரிய அதிபர் கிம் காதல் கடிதம் ட்றமுக்கு  எழுதியது போல்  சுலைமானியும் எழுதி இருந்தால் சுலைமானி தப்பி இருப்பாரோ??🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, motorcycle and outdoor

உலக யுத்தம் நடக்கப் போகுது,  பெற்றோல் தட்டுப்பாடு வரப் போகுதென்று....
யாழ்ப்பாணத்தில்... பெற்றோல்  நிரப்பி வைக்க, திரண்ட மக்கள்.

தமிழன்டா.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 6:25 AM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and outdoor

Image may contain: 7 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

iran-missile-top-720x450.jpg

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது தாக்குதல்: 4 ஈராக் இராணுவ வீரர்கள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், 4 ஈராக் இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து சலாஹூதின் மாகாண பொலிஸார் கூறுகையில், இந்த விமானப்படை தளத்தில் முன்பு அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த தளத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் இராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் மொத்தம் 8 ‘கட்யுஷா’ ரக ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

http://athavannews.com/ஈராக்கில்-உள்ள-அமெரிக்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.