• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்!

Recommended Posts

india.jpg

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்!

மேயர்,  பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே  நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தலைவர்களுக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது.

இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்று தாக்கல் செய்யப்படும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க, அ.ம.மு.க.கட்சிகள் வெளிநடப்பு செய்தமை  குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மேயர்-பதவிக்கு-மறைமுக-தே/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கைக் குழு ஜெனீவா பயணம் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.   http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகக-கழ-ஜனவ-பயணம/150-246004
  • யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன் கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருதனாா் மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் நேற்றிரவு இராணுவத்தினா் சுற்றிவளைத்து பெருமளவு இளைஞா்களை கைது செய்திருக்கின்றனா்.சம்பவத்தில் 50 உணவு பெதிகளை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை. அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றது. எங்கள் ஹோட்டலில் இரு ந்து ஒரு சிகரட் அல்லது ஒரு மதுபான போத்தலை கூட இராணுவத்தினா் மீட்கவில்லை என இன்று காலை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரும் ஹோட்டல் உாிமையாளருமான த.துவாரகன் தெரிவித்துள்ளார். அத்துடன் நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவா்களை இராணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவா்கள் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்கள் அல்ல. எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார். நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம் பொலிஸாா் உறுதிப்படுத்தியிருப்பதுடன், கைது செய்யப்பட்டவா்களை விடுதலையும் செய்துள்ளனா். பின்னா் நான் இராணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டாா்கள். பெருமளவு இளைஞா்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற்றுகையிட்டதாக கூறினா். பின்னா் அவா்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினா்.ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னா் இராணுவத்தினாின் வாகனங்களிலும், தனியாா் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். கைது செய்யப்பட்ட இளைஞா்கள் குற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா? என சோதிக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனா் என தெரிவித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-விடுதி-சுற்றி-வளைப்/
  • இவர் ஒன்றும் இலகுவாக அரசியலை விட்டுப்போகும் ஆள் இல்லை। ஷொப்பிங் பையுடன் போனவர் இன்று கோடீஸ்வரராக மாறினதே இந்த அரசியலால்தான்। இவரை அடித்து துரத்தினாலும் போக மாட்டார்। இப்போது இவருக்கு கொஞ்சம் பின்னடைவே ஏட்பட்டிருக்கிறது। சிங்களவர் வெறுக்கிறபடியால் எந்த பிரதான கட்சியும் சேர்க்க தயங்குகின்றன। ஒரு இஸ்லாமிய தீவிரவாதியாகவே சிங்களவர்களும் , தமிழர்களும் இவரை நோக்குகிறார்கள்। உண்மையும் அதுதான்। இருந்தாலும் சிங்கள தீவிரவாதிகளும் இவருக்கு எதிராக நிறைய வழக்குகளையும், முறைப்பாடுகளையும் வைத்திருக்கிறார்கள்। இவருக்கு குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு அமைச்சு பதவி கிடைக்காது। இருந்தாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம்।
  • டெல்லி வடகிழக்கில் மீண்டும் கலவரம்; பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு: அமித் ஷா அவசர ஆலோசனை பிடிஐ டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கலவரம் ஏற்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கலவரத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முதல்வர் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகியோ பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது, போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இன்று காலையும் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்,48 போலீஸார், பொதுமக்களில் 98 பேர் காயமடைந்தனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸார் உத்தரவிட்டனர். மஜ்பூரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இங்கு இருக்கிறேன். இதுபோல் ஒருமுறை கூட கலவரம் வந்தது இல்லை. அமைதியான இந்தப் பகுதியில் இப்போது முதல் முறையாக இதுபோன்ற கலவரம் நடந்துள்ளது" எனத் தெரிவித்தார். அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக இருக்கும்படியும், வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் நம்ப வேண்டாம் என போலீஸார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அமித் ஷா ஆலோசனை இதற்கிடையே டெல்லி கலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, ராம்விர் பிதூரி ஆகியோர் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாநடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த முதல்வர் கேஜ்ரிவால் கூறுகையில், "கலவரம் நடந்த பகுதியில் அதைக் கட்டுப்படுத்த போதுமான அளவு போலீஸார் இல்லை. எந்த விதமான உத்தரவும் இல்லாமல் போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சருடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் வெளியூர் நபர்கள் யாரும் உள்ளே வராத அளவுக்கு சீல் வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.   https://www.hindutamil.in/news/india/541281-fresh-violence-in-northeast-delhi-toll-rises-to-seven.html  
  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிடம் உள்ள இத்தனை நல்ல பழக்கங்களைக் கண்டறிந்து அறியத்தரும் ஐபிசிதமிழுக்கு அவர் மக்களை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதுபற்றி ஒரு வரி....🤑🤑