Jump to content

கொட்டாஞ்சேனையிலும் கொள்ளுப்பிட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறு வேறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாஞ்சேனையிலும் கொள்ளுப்பிட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறு வேறு

காரை துர்க்கா   / 2020 ஜனவரி 07 

தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ் மக்களது கரங்களைப் பற்றிக் கொண்டு செல்லவில்லை என, தமிழ் மக்கள் உள்ளும் புறமும் வெதும்பிப் போய் உள்ளனர். அதற்கு உதாரணமாக, இந்தக் கதை பொருத்தமாக அமையும்.   

‘சிறுமி ஒருத்தியும் அவளது தந்தையும் பாலம் ஒன்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அவ்வேளையில், சிறுமியை நினைத்துப் பயந்த தந்தை, தனது கையைப் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அந்தச் சிறுமி, “வேண்டாம் அப்பா! நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினாள்.  

தந்தையோ,“ இரண்டும் ஒன்றுதானே” என மகளை ஆச்சரியத்தோடு  கேட்டார். மகள் கூறினாள்; “அப்பா! அதில் பெரிய வேறுபாடு இருக்கின்றது. நான் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு ஏதாவது நேர்ந்தால், ஒரு வேளை நான் உங்கள் கையை விட்டு விடக் கூடும். ஆனால், நீங்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு என்ன நேர்ந்தாலும் எனது கையை நீங்கள் விட்டு விட மாட்டீர்கள்” எனப் பதில் அளித்தாள்.  

எனவே, எந்த உறவு முறையிலும் நம்பிக்கையின் சாரம் என்பது, அதன் கட்டுப்பாட்டில் இருப்பது அல்ல; மாறாக, அதன் பந்தத்தில் இருப்பதாகும். 

இவ்வாறாக, ஈழத் தமிழ் மக்களின் 70 ஆண்டு கால ப(சொ)ந்தத்தில் இருந்து வந்த தமிழரசுக் கட்சி, இன்று பல சவால்களை எதிர் கொண்டுள்ளது.  

ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம்,  11 ஆண்டுகளுக்கு முன்னர் (2009), முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அன்று, நிர்க்கதியான நிலைக்குள், தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களின் முழுமையான நம்பிக்கைக்கு உரியதாக இருந்து வருகின்றதா?  

இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் அறிக்கைகள் வெளியிட்டும் கருத்துகள் தெரிவித்தும் வருகின்றனர்.  

“வடக்கு, கிழக்குக்கு வெளியே போட்டியிடும் சாத்தியம், தமிழ்க் கூட்டமைப்புக்கு இருப்பது போல, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் சாத்தியமும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இருக்கின்றது” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்து உள்ளார்.  

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, மலையக மக்கள் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயம் பாதிக்கப்படும். மலையக மக்கள், கூட்டமைப்பை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். எனவே, கூட்டமைப்பு சிந்தித்துச் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்” என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்து உள்ளார்.  

“கூட்டமைப்பின் முடிவால், ஒற்றுமைக்கு வேட்டு” என ஜனநாயக முற்போக்கு முன்னணியின் பிரதித் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்து உள்ளார்.  

இவை, மாவை சேனாதிராஜா,  சுமந்திரன் ஆகியோரது கருத்துக்கான மலையகத் தலைவர்களின் பிரதிபலிப்பாகவோ, பதில் கருத்தாகவோ அமைந்து உள்ளது எனலாம்.  

இதேவேளை, ‘மலையகத்தில், கூட்டமைப்பு போட்டியிடாது’ என, மாவை சேனாதிராஜா, தன்னிடம் அலைபேசி ஊடாக உறுதி அளித்ததாக, இராதாகிருஸ்ணன் நிகழ்வு ஒன்றில், உரையாற்றுகையில் தெரிவித்து உள்ளார்.  

அவ்வாறாயின், தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற நீர்கொழும்பு, வத்தளைப் பிரதேசங்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடலாம் என எதிர்பார்க்கலாமா?.  

இந்நிலையில், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் கூட்டமைப்பு போட்டியிடுவதாயின், தனித்து அல்லது வேறு சில சிறிய தமிழ்க் கட்சிகளைக் கூட்டிணைத்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். 

தமிழ் முற்போக்குக் கூட்டணி,  மலையகக் கட்சிகள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து, ஐக்கிய தேசிய முன்னணியாகப் போட்டியிடலாம்.  

தமிழ்க் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட முடியாது; போட்டியிடாது. அதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐ.தே.கவைப் பிரிந்து, வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்க முடியாது.  

இது, கூட்டமைப்பு எதிர் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற நிலையை ஏற்படுத்தலாம். அதன் நீட்சி,  மனோ கணேசனின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  

இந்நிலையில், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களால், வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் அரசியல்வாதிகளில் உயர்வாக மதிக்கப்படும் ஒருவராகவும் அவரது வெற்றியைத் தங்களது வெற்றியாக நோக்கும் வகையில் உள்ளார்ந்தமாக நேசிக்கும் ஒருவராக, மனோ கணேசன் உள்ளார்.  

இதனால், வடக்கு, கிழக்குக்கு வெளியே போட்டியிடுவது என்ற தமிழரசுக் கட்சியின் எண்ணம், கூட்டமைப்புக்கும் மலையகத்து தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் இடைவெளியை ஏற்படுத்தலாம்.   

வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்புக்குச் சென்று, கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவதைக் காட்டிலும், கொழும்பில் பிறந்து வளர்ந்து, அங்கு தோல்வி அடைவது ஜீரணிக்க முடியாதது. இது, வடக்கு, கிழக்கு மக்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கும் இடையே ஒருவித எதிர்ப்பு உணர்வை எற்படுத்தலாம்.  

மறுவளமாக, கொழும்பு, கம்பஹாவில் கூட்டமைப்பு போட்டியிட்டாலும், அங்கு வதியும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கூட, மனோ கணேசன் சார்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் தன்மைகள் காணப்படுகின்றது. ஏனெனில், மனோ கணேசனை ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’யாகவே, எல்லாத் தமிழ் மக்களும் நோக்குகின்றார்கள்.  

இவ்வாறான நிலையில், கொழும்பு, கம்பஹாவில் கூட்டமைப்பு போட்டியிட்டு, தமிழ் மக்களின் வாக்குகளைப் பாரிய அளவில் சிதறச் செய்யும் செயலைச் செய்து விடுவார்களோ எனத் தமிழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.  

ஒரே பிரதேசத்தில், ஒரே கட்சியில், ஒரே விதமான அடிப்படைகளில் போட்டியிடுகின்ற போதே, விருப்பு வாக்கு வேட்டையில், தனது கட்சியைச் சேர்ந்தவரையே தரக்குறைவாகப் பேசும், முரண்பட்டுக் கொண்ட சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் உள்ளன.  

இந்நிலையில், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தமிழ், தமிழர்கள் என்ற ஒற்றைச் சொல்லில், தமிழ்மக்கள் இதுவரை ஒன்றுபட்டு இருக்கின்றனர். இவர்களை, யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், கொழும்புத் தமிழர்கள், மலையகத்துத் தமிழர்கள் என, நான்கு திசைகளில் கொண்டு சென்று விட்டு விடலாம் எனத் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இறுதியில் அங்கு தமிழ்ப் பிரதிநிதித்தவத்தை இல்லாமல் செய்து விடுமோ என, மக்கள் உள்ளூறப் பயம் கொண்டு உள்ளனர்.  

அடுத்து, இனத்தால் தமிழர்கள் என்றாலும் களுவாஞ்சிக்குடியிலும் கரவெட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறுவேறு. அதேபோல், கொட்டாஞ்சேனையிலும் கொள்ளுப்பிட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறுவேறு. யுத்தம் காரணமாக, வடக்கு, கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து, கொழும்புக்குச் சென்றவர்கள், மீள தமது சொந்த இடங்களுக்கு வரவில்லை; வருவதற்கான சூழ்நிலை இல்லை.  

இந்நிலையில், கொழும்பில் வாழும் எம்மக்களுக்காக எனக் கூறிக்கொண்டு, வாக்கு வேட்டைக்காகத் தமிழரசுக் கட்சி, கொழும்பு செல்லக் கூடாது. ஏனெனில், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டதே, தமிழ் அரசு. அதனடிப்படையில் உதித்ததே தமிழரசுக் கட்சி ஆகும். 

மாறாக, தமிழரசுக் கட்சி, கொழும்பில் வதியும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து வருகின்ற வேலைத்திட்டங்களை மேற்(கொண்டிருக்க) கொள்ள வேண்டும்.   

கொழும்புப் பிரதேசங்களில், உயர்கல்வி, தொழில் வாய்ப்புகள் காரணமாக வாழ்பவர்களை விடுத்து, ஏனைய தமிழ் மக்கள், தங்கள் தாயகம் நோக்கி நகர வேண்டும்.  

இன்று, தாயகத்தில் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வாக்கு வங்கி சரிந்த நிலையில் உள்ளது. ஆனால், அதற்காக எல்லை தாண்டிச் செல்லக் கூடாது.  

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், மாற்று அணி மெல்ல மெல்ல உருப்பெற்று வருவதாகச் செய்திகள் சொல்கின்றன. இவ்வாறு முன்னரும் கதைகள் வந்தன. அத்துடன் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி, தமிழரசுக் கட்சிக்கு (கூட்டமைப்பு) சவாலாக இருக்குமா, இல்லையா என்பதற்கு அப்பால், தாயகத்தில் ஒன்றுபட்டு ஒற்றுமையாகத் தமிழக் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான நிகழ்தகவுகள் அருகி வருகின்றன.  

இந்நிலையில், தாயகத்திலேயே தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும் அதனூடாக வெற்றி பெறவும் கூட்டமைப்பு பகீரதப் பிரதயத்தனம் செய்ய வேண்டிய சூழ்நிலையில், எல்லை தாண்டி இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்டவர்களுக்கு இடையில் இரண்டு கருத்துகள் ஏற்பட வழி வகுக்கக்கலாமா?  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொட்டாஞ்சேனையிலும்-கொள்ளுப்பிட்டியிலும்-வாழ்பவர்களது-பிரச்சினைகள்-வேறு-வேறு/91-243673

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.