Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?  -யதீந்திரா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?  -யதீந்திரா


கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொண்ட ஒருவர். உதாரணமாக ஓப்பிரேசன் திரிவிட பலய, ஓப்பிரேசன் லிபரேசன் (வடமாராட்சி ஒப்பிரேசன்) போன்றவற்றை குறிப்பிடலாம். வடமாராட்சி ஓப்பிரேசன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கை. யாழ்குடாநாட்டை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த இராணுவ நடவடிக்கையில் கோட்டபாய ஒரு முக்கிய இராணுவ அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். தாக்குதலில் இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான், ஓப்பிரேசன் பூமாலை என்னும் பெயரில் இந்திய கடற்படை விமானங்கள் உணவுப்பொதிகளை போட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் போனது. இந்தியா அப்போது தலையீடு செய்யாதிருந்திருந்தால், தாங்கள் அப்போதே விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம் ஆனால் இந்தியா விடயங்களை குழப்பிவிட்டது என்றவாறான ஒரு கருத்து கொழும்பில் உண்டு.

1992இல் இராணுவத்திலிருந்து ஒய்வுபெற்ற கோட்டபாய, 1998இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கோட்டபாய இலங்கையின் பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகளை இராணுவ ர்Pதியில் தோற்கடிக்கலாம் என்னும் நம்பிக்கை இலங்கையில் எவருக்குமே இருந்திருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், அதனை செய்ய முடியும் என்பதில் கோட்டபாய மிகவும் உறுதியாக இருந்ததாக எரிக் சொல்கெய்ம் கூறுகின்றார். 2011இல் நோர்வேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகின்ற போதே, சொல்கெய்ம் இதனை கூறியிருந்தார். அதவாது, இந்த உலகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சாத்தியமென்று எவருமே கூறியிருக்கவில்லை. அப்போது இராணுவத் தளபதியாக இருந்த, ஜெனரல் சரத்பொன்சேகா விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் பலவீனப்படுத்துவது சாத்தியமே தவிர, முழுமையாக அழிக்க முடியாது என்றே கூறியிருந்தார். ஆனால் ஒருவர் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தார். அவர்தான் கோட்டபாய ராஜபக்ச. அதே வேளை பிறிதொரு உரையாடலில் கோட்டபாய பத்து வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக வரக் கூடுமென்றும் சொல்கெய்ம் கூறியதாகவும் ஒரு தகவலுண்டு. திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்காக வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றின்போது, இந்தக் கேள்வியை நான் முன்வைத்திருந்தேன். நீங்கள் இவ்வாறு கூறியதாக சொல்லப்படுகின்றது ஆனால் தற்போது அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவர் வெற்றிபெறும் பட்சத்தில் அது இலங்கையை மையப்படுத்தி நிகழும் புவிசார் முரண்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதற்கு சொல்கேய்ம் நேரடியாக எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை அதே வேளை தான் அவ்வாறு கூறவில்லை என்றும் மறுக்கவில்லை. கோட்டபாயவின் வெற்றியை சொல்கெய்ம் பத்து வருடங்களுக்கு முன்னரே கணித்திருக்கின்றார் என்னும் முடிவுக்கே வரலாம்.

Gota and Mahinda

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சினை மீளவும் பேசு பொருளாகப் போகின்றது. முன்னைய ஆட்சியாளர்கள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் அணுகுமுறையை கடைப்பிடித்திருந்தனர். 2015இல் கொண்டுவரப்பட்ட பேரவையின் பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியதன் மூலம், உலகிற்கு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொண்டனர் ஆனால், ஏற்றுக்கொண்டது போன்று விடயங்களை நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்குள் இருந்த உள் முரண்பாடுகளை காரணம் காட்டி பொறுப்புக் கூறலை இழுத்தடித்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மீளவும் யுத்த வெற்றியின் சொந்தக்காரர்களிடம் ஆட்சி சென்றிருக்கின்றது. அவர்கள் இனி இந்த விடயத்தை எவ்வாறு கையாளுவர்?

மைத்திரி-ரணில் அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போவதாக கூறியிருந்தாலும் கூட, இராணுவத்தை குற்றவாளியாக்கும் எந்தவொரு சர்வதேச தலையீடுகளும் இடமளிக்க முடியாது என்றே கூறிவந்தனர். இத்தனைக்கும் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிரேரணையில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றலுடன் கூடிய, நீதி விசாரணை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போவதாக உறுதியளித்த அரசாங்கமே அவ்வாறு கூறியிருக்கின்ற நிலையில், யுத்தத்திற்கு தலைமை தாங்கிய, பிரதான நபரே இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், நிலைமைகள் எவ்வாறிருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதில் சிரமமிருக்காது. ஜனாதிபதி கோட்டபாய இராணுவம் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டால், அது அவர் தன்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு சமமானது. எனவே கோட்டபாயவின் அதிகார எல்லைக்குள் இந்த விடயங்களை விவாதிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லவே இல்லை. அதற்காக மனித உரிமைகள் பேரவையுடனான தொடர்பை அரசாங்கம் துண்டித்துக் கொள்ளாது. தங்களின் நியாயத்தை சொல்லுவதற்கான ஒரு சர்வதேச களமாக அதனையும் அரசாங்கம் பயன்படுத்தும்.

இன்றைய உலக ஒழுங்கில் மனித உரிமைகள் மீதான உலகளாவிய கரிசனை என்பது பலம்பொருந்திய நாடுகளின் அதிகார நலன்களோடு தொடர்புபட்டிருக்கின்றது. இதனை ஒவ்வொரு ஆட்சியாளரும் நன்றாக புரிந்து வைத்திருக்கி;ன்றார். இலங்கையின் ஆட்சியாளர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். 2009இற்கு பின்னரான சூழலில் சில விடயங்களில் மேற்குலகுடன் (அமெரிக்காவுடன்) ஒத்துப்போகாத காரணத்தினால்தான், அமெரிக்கா மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது, சில மென் அழுத்தங்களை பிரயோகித்தது. ஆனாலும் அந்த மென் அழுத்தங்களை மகிந்த பொருட்படுத்தவில்லை. மேற்குடன் ஒரு பிடிவாதமான அரசியல் அணுகுமுறையையே மகிந்த கடைப்பிடித்தார். மகிந்த மேற்குடன் நெகிழ்வான போக்கை கடைப்பிடித்திருந்தால் அமெரிக்காவின் அழுத்தங்கள் தொடர்ந்திருக்காது. இவ்வாறானதொரு சூழலில்தான் மகிந்த எதிர்பாராத தோல்வியை சந்தித்தார். மகிந்த அதிகம் சீனாவை நோக்கிச் சாய்ந்து கொண்டிருந்த பின்புலத்தில்தான் அவர் ஆட்சியை இழந்தார். ஆரம்பத்தில் அது சீனாவிற்கு வைக்கப்பட்ட ஒரு செக் என்றே பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் இடம்பெற்ற விடயங்களோ அதனை தவறென்று உணர்த்தியது. ஆட்சி மாற்றங்களின் மூலம் இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கை முற்று முழுதாக தடுத்துநிறுத்த முடியாது என்னும் உண்மை தெளிவானது. ஏனெனில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு கொடுத்ததும், கூடவே 15000 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு கொடுத்ததும் மகிந்த ராஜபக்ச அல்ல. அதனை செய்தது, மேற்குடனும் இந்தியாவுடனும் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய ஆட்சியாளர்கள்தான். எனவே மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவதன் ஊடாக, சீனாவை சற்று எட்ட வைக்கலாம் என்னும் கணிப்பு வெற்றியளிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் 2019 – தேர்தலில் இந்தியாவோ அல்லது மேற்கோ பெரிய ஆர்வங்களை காண்பிக்கவில்லை. அவர்களின் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் கூட, வருபவர்களை கையாளுதல் என்னும் அடிப்படையிலேயே விடயங்களை கையாண்டனர்.

கோட்டபாய ராஜபக்ச ஜனாபதியாக வந்ததிலிருந்து பல்வேறு விடயங்களை கூறிவருகின்றார். அவர் கூறும் விடயங்கள் நாட்டின் அபிவிருத்தி என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் நல்ல திட்டங்கள்தான் ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் இலங்கைக்குள் அதிக முதலீடுகள் வர வேண்டும். அவ்வாறு நடக்க வேண்டுமாயின் அவர் பல்வேறு விடயங்களில் மேற்கின் நலன்களோ ஒத்துப் போகத்தான் வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் அவரால் முன்னோக்கி நகர முடியாமல் போகும். இதெல்லாம் அவர்கள் அறியாததும் அல்ல. சிங்கள ராஜதந்திரம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு பயணிப்பதில் வல்லமை மிக்கது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவையும் அமெரிக்காவையும் சினேக வட்டத்திற்குள் வைத்துக் கொள்வதிலேயே கோட்டபாய கவனம் செலுத்துவார். முதலில் இந்தியா அதன் பின்னர் அமெரிக்கா என்பதே அவரது அணுகுமுறையாக இருக்கலாம். கோட்டபாய நிச்சயம் ஜெனிவாவில் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த வகையில் அவர் ஜெனிவாவை சில விடயங்களில் எதிர்ப்பார். ஜெனிவாவை எதிர்த்துக் கொண்டும் அமெரிக்காவுடன் நிற்க முடியுமென்னும் உலக யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
 

http://www.samakalam.com/செய்திகள்/கோட்டபாய-அரசு-ஜெனிவாவை-எ/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாய்ங்கய்யா  வந்துட்டாய்ங்க .

கோட்டாபயவிடம் சொல்லி இந்த ஆய்வாளர்களை முதலில் பிடித்து உள்ளே போடவேண்டும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மட்டக்களப்பு BRANDIX ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு! By Sayanolipavan   மட்டக்களப்பு- ஆரையம்பதியில்   அமைந்துள்ள BRANDIX ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.   மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX  ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருவதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.   தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் பேர் தொழில் புரிந்துவருகின்றனர் இந்த நிலையில் தற்போது மினுவாங் கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுதலையடுத்து இந்த ஆடைத்தொழிற்சாலையில் தற்போது ஊழியர்கள் குறைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டு ஆடைத் தொழிற்சாலை இயங்கிவருகின்றது.   இருந்தபோதும் தற்போது களுவாஞ்சிக்குடி மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இருவருது சகோதரிகள் உறவினர்கள் குறித்த அடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.   இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக இன்றில் இருந்து மூடி சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் ஆடைத்தொழிற்சாலை நிருவாகத்திற்கு அறிவுரை வழங்கியதையடுத்து உடனடியாக ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது .   இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வந்த பின்னர் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியும்” என அவர் தெரிவித்தார்.     http://www.battinews.com/2020/10/brandix.html    
  • சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்! மின்னம்பலம்   சிறந்த நிர்வாகத் திறன் தொடர்பான தர வரிசையில் தென்மாநிலங்கள் முதன்மை இடத்திலும், வட மாநிலங்கள் பின் தங்கியும் உள்ளன. நாட்டின் சிறந்த நிர்வாகத் திறனுள்ள மாநிலமாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிவில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. பொது விவகாரங்கள் மையம் (public affairs centre) வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான பொது விவகாரக் குறியீடு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பான இந்த மையத்தின் தலைவராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் செயல்பட்டு வருகிறார். மாநிலங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.   அதன்படி, பெரிய மாநிலங்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. கேரளா 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 0.912 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதேபோல ஆந்திரா 0.531, கர்நாடகா 0.468 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் உத்தரபிரதேசம் (- 1.461), ஒடிசா (-1.201) மற்றும் பீகார் (-1.158) உள்ளிட்ட வட மாநிலங்கள் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் 1.745 புள்ளிகளுடன் கோவா முதலிடம் வகிக்கிறது. மேகாலயா (0.797) இரண்டாவது இடத்திலும், இமாச்சல் பிரதேசம் (0.725) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதில் மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தராகண்ட் (-0.277) ஆகியவை மோசமான செயல்பாடுகளுடன் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்தங்கின. யூனியன் பிரதேசப் பகுதிகளில் சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலம் 0.52 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், லட்சத்தீவுகள் 0.003 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறது. எதிர்மறை புள்ளிகளுடன் தாதர் நாகர் ஹாவேலி, அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர் ஆகியவை மோசமான நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளன இதுதொடர்பாக கஸ்தூரி ரங்கன் கூறுகையில், “பிஏஐ தரும் சான்றுகள் மற்றும் அது வழங்கும் தரவுகள் ஆகியவை இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்க மாநிலங்களை கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.   https://minnambalam.com/politics/2020/10/31/4/-best-governed-states-and-ut-pac-ranking-taminadu-get-2nd-rank  
  • இந்தியாவின் தடையை செருப்புகாலில் போட்டு மிதிக்கிறோம்!-சீமான் அதிரடி | சீமான் செய்தியாளர் சந்திப்பு  
  • பிரான்ஸ் குறித்து இம்ரான் கான்: "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம், நபிகள் பற்றிய புரிதல் இல்லை" பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு,  இம்ரான் கான் "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பிரான்ஸில் இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கு நிலவுவதாக கூறி, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பாகிஸ்தான், வங்கதேசம், லெபனான் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியதுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்குக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ள அவர், அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். "சர்வதேச அளவில் இந்த பிரச்சனை எழுப்பப்படும்" "இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் முகமது நபிகள் மீது கொண்டுள்ள உணர்வு குறித்து மேற்குலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை" என்று மீலாதுன் நபியை ஒட்டி பாகிஸ்தானில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், உலகம் முழுவதும் நிலவி வரும் இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலை குறித்து பேசுவது அவர்களது கடமை என்று கூறியுள்ளார். தேவைப்பட்டால் இந்த பிரச்சனையை தானே சர்வதேச அளவில் எழுப்பப்போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரான்ஸுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனை குறித்து பேசியபோது, "மேற்குலக நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று நான் கோரியுள்ளேன்" என்றும் இம்ரான் கான் கூறினார். "இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலையானது, இஸ்லாத்தை பின்பற்றும் சிறுபான்மை மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை பாதிக்கிறது." என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீவிரமடையும் பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள்  பட மூலாதாரம், EPA   படக்குறிப்பு,  இந்தியாவில் நடந்த போராட்டம் இஸ்லாம் குறித்த மக்ரோங்கின் சமீபத்திய கருத்துகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் போராட்டங்களை தூண்டியுள்ளன. அதாவது, இஸ்லாமிய மதம் "நெருக்கடியில்" இருப்பதாக கூறிய அவர், பிரான்ஸில் முகமது நபிகளின் கேலிச்சித்திரங்களை வெளியிட பதிப்பாளர்களுக்கு உள்ள உரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார். பட மூலாதாரம், EPA முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்ஸில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், "இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று எதிர்வினையாற்றியிருந்தார். முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்யும் நிலையில், அதை இழிவுப்படுத்தும் வகையில் மக்ரோங்கின் கருத்துகள் இருப்பதாக முஸ்லிம்கள் கருதினர். இதையடுத்து, பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக முஸ்லிம் நாடுகள் பலவற்றிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம், பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்தனர். நீஸ் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரால் சுடப்படும் முன் "அல்லாஹு அக்பர்" எனக் கத்தியதாக கூறப்படுகிறது. பட மூலாதாரம், EPA இந்த தாக்குதல் சம்பவம் ஒரு "இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்" என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.  பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தை நோக்கி அணிவகுத்து வந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். சில போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை உடைக்க முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும், ஜெருசலேமின் ஓல்ட் சிட்டியில் உள்ள இஸ்லாத்தின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஸா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு பிரான்ஸில் முகமது நபிகளின் கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.     https://www.bbc.com/tamil/global-54758369
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.