• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

யாழ் இளைஞன், துருக்கியில்.. உயிரிழப்பு!

Recommended Posts

sseeee.jpg

யாழ் இளைஞன், துருக்கியில்.. உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழந்துள்ளார்.

மயில்வாகனம் சிவரஞ்சன் என்ற 37 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகவரூடாக பிரான்ஸிற்கு செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரான்ஸிற்கு புலம்பெயர முயற்சித்த வேளை துருக்கியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் துருக்கியிலிருந்து சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

http://athavannews.com/யாழ்-இளைஞன்-துருக்கியில்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி உற்சவமான பூங்காவனப் பூசைகள் நேற்று (05) இரவு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன்போது பறவைகாவடிகள், பாற்செம்பு காவடி என்பன இடம்பெற்றது.     https://newuthayan.com/ஒட்டுசுட்டடான்-தான்தோன்/  
    • லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது   லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதிவு: ஜூலை 06,  2020 13:13 PM புதுடெல்லி   கிழக்கு லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முயற்சியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மோதல்-வன்முறை வெடித்தது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பில் 45 வீரகள் பலி மற்றும் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த மோதலுக்கு பிறகு, சீனாவுக்கு நிகராக இந்திய தரப்பிலும் பதுங்கு குழிகள், தற்காலிக கட்டுமானங்களை ஏற்படுத்தி நேருக்கு நேர் நிற்கும் நிலை உருவாகியது.   எல்லையில் பதற்றமும் அசாதாரண சூழ்நிலையும் உருவானது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ லெப்டினென்ட் ஜெனரல்கள் நிலையில், கடந்த 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.   முதலில் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங்சோ ஏரி, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் மோதல் போக்கு உருவான இடங்களில், மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு டெப்சங் சமவெளி உள்ளிட்ட பின்புல பகுதி படைக்குவிப்பு தொடர்பாக கவனம் செலுத்துவது என்றும் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.   உடன்பாட்டில் சீன தரப்பு உறுதியளித்தபடி நடந்துகொண்டதா என்பதைக் கண்டறிய நேற்று நேரில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வானில் மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும், இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.     https://www.dailythanthi.com/News/India/2020/07/06131303/China-Withdraws-Troops-At-Galwan-Valley-By-At-Least.vpf    
    • மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே    அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே    பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே  
    • உலகளவில் 3-வது இடம்: இந்தியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்குகிறது;4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாஸிட்டிவ் கோப்புப்படம் புதுடெல்லி கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு சென்றது மட்டுமல்லாமல் கரோனாாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 24 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 425 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதி்க்கப்பட்டு வருகின்றனர் கரோவானால் இதுவரை ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர், 2 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் சதவீதம் 60.85 ஆக அதிகரித்துள்ளது கரோனாவால் மோசமாக பாதி்கப்பட்ட நாடுகளில் அமெரி்க்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் தற்போது இந்தியா இடம் பெற்றுள்ளது. ரஷ்யா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 8,822 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,067 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,943 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,510 ஆகவும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 757 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 608 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 785 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 456 ஆகவும் அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 295 ஆகவும், ஹரியாணாவில் 265 ஆகவும், ஆந்திராவில் 232 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 372 பேரும், பஞ்சாப்பில் 164 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 132 பேரும், பிஹாரில் 95 பேரும், ஒடிசாவில் 36 பேரும், கேரளாவில் 25 பேரும், உத்தரகாண்டில் 42 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 19 பேரும், அசாமில் 14 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11.740 ஆக உயர்ந்துள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,444 பேராக அதிகரித்துள்ளது. 71,359 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 36,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,892 பேர் குணமடைந்தனர். ராஜஸ்தானில் 18,662 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14,930 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,707 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 22,126 பேரும், ஆந்திராவில் 18,697 பேரும், பஞ்சாப்பில் 6,283 பேரும், தெலங்கானாவில் 23,952 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 8,429 பேர், கர்நாடகாவில் 23,479 பேர், ஹரியாணாவில் 17,005 பேர், பிஹாரில் 11,876 பேர், கேரளாவில் 5,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,174 பேர் குணமடைந்துள்ளனர். ஒடிசாவில் 9,070 பேர், சண்டிகரில் 450 பேர், ஜார்க்கண்டில் 2,584 பேர், திரிபுராவில் 1,568 பேர், அசாமில் 11,388 பேர், உத்தரகாண்டில் 3,124 பேர், சத்தீஸ்கரில் 3,207 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,063 பேர், லடாக்கில் 1,005 பேர், நாகாலாந்தில் 590 பேர், மேகாலயாவில் 62 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாதர் நகர் ஹாவேலியில் 271 பேர், புதுச்சேரியில் 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 331 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 186 பேர், சிக்கிமில் 123 பேர், மணிப்பூரில் 1,366 பேர், கோவாவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/india/562930-single-day-jump-of-24-248-covid-19-cases-pushes-india-s-tally-close-to-7-lakh-mark-4.html  
    • கரோனாவைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை: 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன். (இடமிருந்து வலமாக) மதுரை "கரோனாவைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை, 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்", என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா’ வைரஸ் ஒரு நுண் கிருமி, புதிய வகை வைரஸ். கண் நோய் போல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. ஆனால், சாதாரண சோப்புத் தண்ணீரில் கூட இந்த வைரஸ் அழிந்துவிடுகிறது. அதனால், இந்த தொற்று நோயைப் பார்த்து அச்சப்படவோ, தேவையற்ற பீதியடையவோ வேண்டாம். முகக்கவசம் அணியாமல் செல்வோர் மட்டுமே அச்சப்பட வேண்டும். நுரையீரல் பாதிப்பிற்கு முன் வந்தால் மிக விரைவாகவே இந்த நோயில் இருந்து குணமடையலாம். இன்னும் உயிரிழப்பை தடுக்கலாம். பெருமைக்காக சொல்லவில்லை. நம்பிக்கையூட்டுவதற்காக சொல்கிறோம். தற்போது வரை 98.7 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இந்த தொற்று நோய்க்கு 1.5 சதவீதத்திற்கு கீழேதான் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதலின் கீழ் 12 விதமான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்குகிறோம். உயிரிழப்பை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. வெண்டிலேட்டர்களை அதிகரியுங்கள், இந்த நோய் சிகிச்சைக்கு அதுதான் முக்கியம் என்று உலக சுகாதாரநிறுவனமே சொன்னது. ஆனால், மதுரையில் தற்போது ஒரு நோயாளிக்குக் கூட வெண்டிலேட்டர் பயன்படுத்தப்படவில்லை. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த மருந்துகளை மதுரைக்கு கூடுதலாக வழங்கியுள்ளோம். இந்த நோயை ஒழிக்க முககவசம், சமூக விலகல் மட்டுமே முக்கியம். முகக்கவசங்களை கழட்டி கைகளில் வைத்துக் கொள்ளக்கூடாது. இவர்களால் அவர்களுக்கு மட்டுமில்லை, மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று நோய் பரவி பாதிக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கரோனா தவிர மற்ற நோயாளிகளில் நடக்கும் அனைத்து இறப்புகளையும் கணக்கீடு செய்து அவற்றையும் குறைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிகமாக தமிழகத்தில் 35 ஆயிரம் பரிசோதனைகள் தினமும் செய்யப்படுகிறது. இன்னும் பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்,’’ என்றார். https://www.hindutamil.in/news/tamilnadu/562979-don-t-get-scared-of-corona-virus-health-secretary-radhakrishnan-2.html