Jump to content

2020-ஐ மாற்றப்போகும் டெக்னாலஜி புரட்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2020-ஐ மாற்றப்போகும் டெக்னாலஜி புரட்சி!

 

17.jpg

சி.இ.எஸ் எனப்படும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ, லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல விநோதமான நவீன கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வெளியாகியுள்ளன. அவற்றில் சில வித்தியாசமான மற்றும் காண்போரை ஆச்சரியப்படுத்தும் டெக்னாலஜி பற்றிய தொகுப்பைப் பார்ப்போம்.

சாம்சங் - நியான்

17a.jpg

சாம்சங் கொண்டுவந்திருக்கும் இந்த டெக்னாலஜியில் எது உண்மையான மனிதன், எது கணினியால் சித்திரிக்கப்பட்டது என்று கண்டறிவதற்கே பல மணிநேரம் ஆகும். ஆர்டிஃபிசியல் ஹியூமனாய்டு டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நியான் புராஜெக்ட் மனிதர்களின் முக பாவனைகள், பேசும் விதங்கள் அனைத்தையும் விர்ச்சுவல் வடிவத்தில் உருவாக்கி நமக்கு அசல் மனிதர்களைப் போலவே காட்டும் திறன் கொண்டது. இதனுடைய கண்டுபிடிப்பாளர் இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் மிஸ்ட்ரி. சிக்ஸ்த் சென்ஸ், சாம்சங் கியர் போன்ற பிரமிக்க வைக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு இவர் பெயர் பெற்றவர். அதுமட்டுமின்றி சாம்சங் ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அவதாரம்

17b.jpg

சி.இ.எஸ் 2020இல் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான சில படங்களை அந்தப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜனவரி 2009ஆம் ஆண்டு முதல் ஜூலை 2019ஆம் ஆண்டு வரை உலக அரங்கில் அதிக வசூல் செய்த படமாக திகழ்ந்தது அவதார். அவதாரின் இரண்டாம் பாகம் 2021ஆம் ஆண்டில், டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமான செய்தி வெளியானது. அதன் பிறகு இந்தப் படத்தில் வரும் சில கிராபிக்ஸ் காட்சிகளைப் படக்குழுவினர் சி.இ.எஸ் 2020இல் வெளியிட்டுளார்கள். அதுமட்டுமின்றி மெர்ஸிடெஸ் நிறுவனம், அவதார் படத்தில் வரும் மிருகங்கள் போல் இருக்கும் கான்செப்ட் கார் ஒன்றைக் காட்சிக்கு வெளியிட்டுள்ளது. இந்த சி.இ.எஸ் 2020இல் ஹோண்டா, சோனி, ஆடி, BMW, ஃபியட் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் தங்களுடைய கான்செப்ட் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன் ப்ளஸ் நிறுவனத்திற்கு இன்னும் ஒரு ப்ளஸ்

17c.jpg

ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சந்தையில் சிம்மசொப்பனமாக திகழும் ஒன் ப்ளஸ் நிறுவனம், தற்போது 'ஒன் ப்ளஸ் எக்ஸ் மெக்ளேரன்' எனப்படும் கான்செப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைலின் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும் கேமரா தானாகவே மறையும் படியாக புதிய முயற்சியில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறு பரிமாணம்

17d.jpg

கண்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில் ஆர்கானிக் எல்இடி ஒளியை வெளியிடும் சுருட்டக்கூடிய தொலைக்காட்சியை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு வித்யாசமான கடல் அலை வடிவில் இருக்கும் இந்த டிவி, காண்போரை வேறு உலகிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு மிகவும் அழகான காட்சிகளை காட்டுகிறது. இதற்கிடையே சாம்சங் நிறுவனம் செல்ஃபி கேமரா மூலம் கைகளை ஸ்கேன் செய்து மொபைல் திரையை தொடாமலே செய்திகளை உள்ளிடக்கூடிய கீபோர்டையும் காட்சிக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா, டெல் போன்ற நிறுவனங்கள் ஆர்கானிக் எல்இடி திரையுடன் மடக்கக்கூடிய மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

செல்லப்பிராணியாக மாறிய சூட்கேஸ்

17e.jpg

சீனாவை சேர்ந்த 'ஃபார்வர்டு எக்ஸ் ரோபோடிக்ஸ்' நிறுவனத்தின் சூட்கேஸ் ஓவிஸ், நவீன அல்காரிதம் மூலம் புரோகிராம் செய்யபட்டுள்ளது. முகத்தை ஸ்கேன் செய்வது, யார்மேலும் மோதாமல் நகர்வதற்கு ஏற்ற சென்சார்களின் மூலம் நாம் போகும் இடெமெல்லாம் வீட்டு செல்லப் பிராணி போல் பின்தொடர்வது என அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஓவிஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. GPS பொறுத்தப்பட்டிருப்பதால் வெகு தொலைவில் இருந்ததாலும் மொபைல் பயன்படுத்தி ஓவிஸ் இருக்கும் இடத்தை கண்டறிய முடியும்.

கூகுள் அசிஸ்டன்ட் புதிய அப்டேட்

இனி ஸ்மார்ட்ஃபோன் திரையில் படிக்கத் தேவையில்லை. கூகுள் அசிஸ்டன்டின் புதிய அப்டேட் நமக்கு திரையில் இருப்பவற்றை படித்துக்காட்ட வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் திரையில் இருப்பவற்றை "ஹே கூகுள். ரீட் திஸ்" என்று சொன்னால் கூகுள் அசிஸ்டன்ட் அதனை மினிமைஸ் செய்த பிறகும் படித்துக்கொண்டே இருக்கும். மேலும் காலண்டரில் குறித்திவைத்துள்ள முக்கிய நிகழ்வுகளை நமக்கு ஒலி வாயிலாக நினைவூட்டும். இந்த அப்டேட் அடுத்து வரப்போகும் ஸ்மார்ட்ஃபோன்களில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியின் PS5

வீடியோ கேம்ஸ் விளையாடுவதை வியாபார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுசென்ற சோனி நிறுவனம் தற்பொழுது PS5 எனும் புதிய கேமிங் டிவைஸை அறிமுகப்படுத்தியுள்ளது. 3D ஆடியோ, மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ், கேமிங் அனுபவம் தடைபடாமல் இருக்க வேகப்படுத்தப்பட்ட ப்ராசஸர் பொறுத்தப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது.

இனி ரத்தப்பரிசோதனை இல்லை

நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி பரிசோதனைகளுக்கு ரத்தத்தை கொடுக்கத் தேவையில்லை. இதயத் துடிப்பை வைத்து ஒருநாளைக்கு எத்தனை தூரம் ஓடியிருக்கிறீர்கள் என்று சொல்லும் டெக்னாலஜி அறிமுகமாகியிருக்கிறது. கையில் பிரேஸ்ட்லெட் போல் மாட்டக்கூடிய "ஏ டயபெடிக்ஸ் பிரேதலைஸர்" எனப்படும் இந்த கருவி, ரத்தத்தின் சக்கரை அளவை இதய துடிப்பை வைத்துக் கண்டறியக்கூடியது.

 

https://minnambalam.com/entertainment/2020/01/09/17/ces-technology-future-gamechangers-industry-revolution

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.