Jump to content

ஈரான் அமரிக்க மோதலும் ரூசியாவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . - வ.ஐ.ச.ஜெயபாலன் 

Recommended Posts

ஈரான் அமரிக்க மோதலும் ரூசியாவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . - வ.ஐ.ச.ஜெயபாலன் 

*

அமரிக்கா ஈரானை நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த சேதி பலருக்கும் வியப்பாக அமைந்துவிட்டது. அதனை ஈரான் நிராகரித்து விட்டது.

அமரிக்க ஈரான் மோதலில் பழம் எடுத்தது முக்கியமாக ரூசியாதான். ஈரானுக்கு வெற்றியின் கொட்டைகளும் பழத்துண்டுகளும் கிடைத்திருக்கிறது.  

IRAQ_-_Saddam_corda.jpg.

அமரிக்கா ஈரான் யுத்தத்தில் உண்மையில் ரஸ்ஸியாதான் வெற்றி பெற்று வருகிறது.  அமரிக்கா சதாம் குசேயினை விழுத்தாமல் இருந்தைருந்தால் ஈரான் ஈராக் சீரியா லெபனான் யேமன் மற்றும் வழைகுடா நாடுகளில் சியா  ஐக்கிய வலைப்பின்னல் உருவாகி இருக்க முடியாது. பரந்து பட்ட சியா முஸ்லிம்களின் ஐக்கிய த்தை தடுத்துவந்த  சதாம் குசேனை அழித்ததின் மூலம் அமரிக்கா தனக்குத் தானே சூனியம் வைத்துவிட்டது. சதாம் குசெயினின் கழுத்தி மாட்டுப்பட்ட தூக்குக் கயிற்றுள் அமரிக்க மத்திய கிழக்கு ராஜதந்திரமும் மாட்டிக் கொண்டதி. அங்கிருந்துதான் அமரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.                                                                                                                                                                                                                          ஈரானின்சியா  மத  வலைபபின்னலின்  உதவியின்றி சீரியா லெபனான் யேமன் உட்பட லிபியா வரையிலான  மத்திய கிழக்கிலும் ரூசியா பலமாக வேரூன்றி இருக்க முடியாது.

மேலும் முக்கியமாக   துல்லியமாக தாக்கி அழிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சீரியா ஊடாகவும் ஈரான் ஊடாகவும் பரீட்சித்து அமரிக்காவை மறை முகமாக எச்சரிக்கும் வாய்ப்பும் ரூசியாவுக்கு கிட்டி இருக்கிறது.

இன்று மத்தியகிழக்கில் அமரிக்காவைவிட ஈரானைவிட முக்கியமான விளையாட்டு வீரனாக சீனாவின் அனுசரணையுடன்   தன்னை நிலை நிறுத்தி வருவது  ரூசியாதான்.    

.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

இலங்கை அரசின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் நீங்கள்  இப்படி சர்வ்தேச அரசியல் பற்றி பேசுவது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா இருக்காதா ஐயா?

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி valavan, அரசியல் இராசதந்திர ரீதியாக இலக்குத்தான் முக்கியம். பழம் தவிர காம்பு இலை எதையும் கண்டு கொள்ளக்கூடாது. வாய்திறக்கக்கூடாது. இந்தியா சர்வதேசம் தொடர்பாக வாய்திறக்கமுன்னம் இதனை யோசிப்பதுண்டு. இந்த ஆய்வில் அமரிக்கா ரஸ்சியா ஈரான் தொடர்பான என் விமர்சனம் கோட்பாட்டு ரீதியாக மூன்று தரப்புக்கு வெளியே நின்றுதான் கருத்துச் சொல்லியுள்ளேன். மூன்றுதரப்புக்கும் உலக சமாதானத்துக்கும்  உதவக்கூடிய கருத்துத்தான் நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அவர்களே,

அதெல்லாம் இருக்கட்டும் ஊங்களுக்குத்தெரிந்த தமிழக அரசியல்வாதிகளைக் கண்டால் தேசியத்தலைவர் மேதகு வெலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீது தமிழக சட்டமன்றத்தில் ஆளும்தரப்பும் எதிர்த்தரப்பும் மாறி மாறிச் சேறு அள்ளி வீசியதை ஈழத்தமிழர்கள் ஒருசிலர் ரசிக்கவில்லை எனக்கூறவும். காரணம் தமிழக சட்டசபை என்பது தமிழ் நாட்டில் வாழும் ஏழுகோடிக்கு மேற்பட்ட மக்களைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் ஒரு அரச அலகாகும், தவிர அன்று அவர்கள் பேசியவார்த்தைகள் சட்டசபையின் குறிப்பேடுகளில் காலவதியாகாமல் அப்படியே இருக்கும். 

சிலவேளை உங்கள்போன்ற அரசியல்விமர்சகர்கள் கலைஞர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம் அல்லது நீங்கள் தேசியத்தலைவர்மீதான அவர்களது விமர்சனங்களுடன் ஒத்துப்போகலாம் அதை விடுத்து. 

பின்லாந்து தேசத்தின் தலைநகர் கெல்சிங்கியிலிருந்து தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளது தகிடுதத்தங்கள் அப்பட்டமாகக் கவனித்துவரும் ஏனைய ஈழத்தமிழர் போல் அல்லது தமிழ்தேசியம் நோக்கிப்போகிறேன் எனப் பொதுவெளியில் சில பல அமைப்புகளுடன் சேர்ந்து வெள்ளையும் சுள்ளையுமாக அலைபவர் போல் தட்டில் சோத்துக்குப் பதிலாக வேறோ  ஒன்றைப் போட்டுத்தின்பவர்போல் என்னால் இருந்துவிடமுடியாது. இப்படியான் தமிழக அரசியல்  ***************** ************* ஆதரவை நாம் சட்டமன்றச் சம்பவத்தினை எதிர்த்து அரசியல் செய்தால் இழந்துவிடுவோம் என் யாரும் எண்ணினால், எனது அபிப்பிராயத்தின்படி அதன் பிரதிபலனாக தமிழீழமே கிடைத்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வளைவுசுளிவுகள் எல்லோருக்கும் பொருந்தலாம் என்னளவில், தலைவர் விடையத்தில் இல்லை 

Link to comment
Share on other sites

இப்ப சென்னையிலும் இந்தியாவிலும் தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைகள் மிக மிக குறைந்துவிட்டது. நாங்கள் வாய் திறந்து மீண்டும் சர்ச்சைகளை வளர்த்து விடுவது தப்பான ரஜதந்திர மாகும்.  

 மற்றபடி யாரும் ஆதாரங்கள் அடிப்படையில் ஆரோக்கியமாக விமர்சிப்பது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. மற்றப்படி சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பதுபோல செயல்படுவது மிக மிக தப்பாகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.