Jump to content

ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிடைக்காத ஒன்றை ஆட்சியாளர்களால் கொடுக்க முடியாத ஒன்றையும் தான் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் காரணம் ஆரம்ப காலத்தில் விட்ட பிழை

 

மீண்டும்  தவறு

கொடுப்பதற்கு ஒன்றுமில்லாதபோது......?????

Link to comment
Share on other sites

On 1/13/2020 at 7:57 AM, போல் said:

இதற்கும் புதிய கட்சி ஆரம்பித்ததிலிருந்து அரைவேக்காட்டு அரசியல் செய்யும் மோட்டு அரசியவாதி விக்னேஸ்வரனுக்கும் எட்டா பொருத்தம்.  
உதாரணம் கீழே:

மேலுள்ள கூற்றில் இஸ்ரேலை வரிந்துகட்டியதன்  மூலம் விக்னேஸ்வரன் நண்பர்களை உருவாக்கிறாரா அல்லது பகைவர்களை உருவாக்கிறாரா?

எனவே விக்னேஸ்வரனின் அண்மைக் கால செயற்பாடுகளை பார்க்கும் போது, அவர் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதியாக, மோட்டு அரசியல்வாதியாக, பித்தலாட்ட அறிக்கைகளை விடும் நயவஞ்சக அரசியல்வாதியாக பரிணமித்து வருவது தெளிவு.

இல்லை என்றால், இவற்றை  விக்னேஸ்வரன் தெளிவாகத்தான் செய்கிறார் என்றால், விக்னேஸ்வரன் ஒரு கைக்கூலி அரசியல்வாதியாக, எலும்புத்துண்டுக்கு பின்னால் அலையும் கேவலமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெளிவு.

எனவே, விக்னேஸ்வரன் மாற்றுத் தலைலைமை வழங்குவார் என நம்புபவர்கள், அவர் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் அல்லது டக்ளஸ் கும்பலின் அல்லது கஜேந்திரகுமார் கும்பலின் அல்லது ஆனந்தசங்கரி வகை அரைவேக்காட்டு/கைக்கூலி அரசியல்வாதிகளை சிறந்தவர் என கூறும் நிலை தற்போது இல்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்தும் தான் மாற்றுத் தலைமையை வழங்க முடியுமென்று விக்னேஸ்வரன் நம்புவாரானால், அவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நம்புவார்களானால், முதலில் விக்னேஸ்வரன் தனது தான்தோன்றித் தனமான / அரைவேக்காட்டு / கைக்கூலி அரசியல் முயற்சிகளை நிறுத்தி ஒரு சிறந்த குழுவின் வழிநடத்தலுடன் பொறுப்புடன் நடக்க தன்னை மாற்றிக்கொள்வதுடன், அந்த உறுதிமொழியை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது..

அருமையான கருத்து!

21 hours ago, விசுகு said:

மிகத்தவறான

வரலாற்றை அறியாத  பதிலும்  எதிர்பார்ப்பும்

சிங்களவரால்   தூக்கிச்செல்லப்பட்ட தமிழர்களாலும்  முடியுல

சம பங்கு நிலையிலிருந்து சம பங்கு கேட்டவர்களாலும்  முடியல

சம பலத்துடன் நின்று தீர்வுகேட்டவர்களுக்கும்  கிடைக்கல

தவறு கேட்பவர்களிடமில்லை

இதை உணராதவரை தீர்வென்ன எதுவுமில்லை

சிங்களவருடன்  ஒட்டினால்  தான் வாழ்வு என்பது தனி  மனிதருக்கு கூட நிலைக்காது

இனத்துக்கு??????

இது எனக்கு 1983 இல் சிங்களவரால் உணர்த்தப்பட்டது

மிக மிக நிதர்சனமான உண்மை!

தமிழினம் இத முழுமையா உணர்ந்து, ஏதாவது கிடைக்குமோ என்று அங்கலாய்க்காமல், எது தேவையோ அதை அடைய முழுமையான முயற்சிகளை தளராம எடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Gowin said:

அருமையான கருத்து!

மிக மிக நிதர்சனமான உண்மை!

தமிழினம் இத முழுமையா உணர்ந்து, ஏதாவது கிடைக்குமோ என்று அங்கலாய்க்காமல், எது தேவையோ அதை அடைய முழுமையான முயற்சிகளை தளராம எடுக்க வேணும்.

நன்றி

நோர்வே  பேச்சுவார்த்தைகளில் புலிகள் வைத்த  இடைக்கால நிர்வாகத்திட்டத்தை அரசு தட்டிவிட

புலிகள்  ஒரு கோரிக்கையை  வைத்தார்கள்

நாங்க  கேட்பதெல்லாம்  கேட்டாச்சு

எழுதித்தந்தாச்சு

உனக்கு  எதிலும்  உடன்பாடில்லை

உன்னால் தரக்கூடிய  தீர்வை  நீ  முன்  வை 

பரிசீலிக்கின்றோம்  என்றார்கள்

அதில்  அரசு  மாட்டிக்கொண்டது

ஆனால்  பிரிவுகளை  உருவாக்கி

பலவீனப்படுத்தலை  தொடர்ந்து  செய்து

பயங்கரவாதம்  என்ற ஒற்றைச்சொல்லை பயன்படுத்தி தப்பிக்கொண்டது

இன்றும் அதிலிருந்தே  தொடங்கலாம்...

ஆனால்  ஏதாவது  ஒரு  சிங்களக்கட்சியை  ஆட்சி  பீடம் ஏற்றுவதும் அதற்கு  முண்டு  கொடுப்பதுமாகவே இன்றையநிலை  போகிறது

இதில அது  தருவார்கள்இது  தருவார்கள்

அதைப்பெறுவோம் இதைப்பெறுவோம்  என்ற  வீரப்பிரசாரம்  வேறு..?

Link to comment
Share on other sites

On 1/13/2020 at 7:57 AM, போல் said:

மேலுள்ள கூற்றில் இஸ்ரேலை வரிந்துகட்டியதன்  மூலம் விக்னேஸ்வரன் நண்பர்களை உருவாக்கிறாரா அல்லது பகைவர்களை உருவாக்கிறாரா?

விக்கியருக்கு மறை கழண்டு போச்சு போல.
ஒருக்கா அந்த ஆசுப்பத்திரில மண்டையை செக் பண்ணுறது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும்' - விக்னேஸ்வரன்

விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமைNURPHOTO / GETTY IMAGES Image captionசி.வி.விக்னேஸ்வரன்

நடிகர் ரஜினிகாந்தை சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்று கூறுபவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடிகர் ரஜனிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் இச்சந்திப்பு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் மேற்கொண்டு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு.

ரஜினியை நான் சென்று பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட விஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜனியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நாங்கள் அளவளாவினோம்.

ரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன.

உடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து பேசப்பட்டன.

Justice C.V Wigneswaran Rajinikanth

ரஜினி சம்பந்தமாகப் பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும் நான் பின்வரும் குணாதிசயங்களை அவரிடம் நேரில் கண்டேன்.

அவரின் அன்பு,எளிமை, ஆன்ம விசாரத்தில் உள்ள நாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கம் தவிர்ந்த சுபாவம், அசைக்க முடியாத இறை நம்பிக்கை, தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை, இயற்கையாகவே உடலிலும் பேச்சிலும் ஒரு வேகம் போன்ற குணாதிசயங்களை அவரிடம் கண்டேன்.

ரஜினி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை கால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த 'பந்தா' காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன்.

ரஜினியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-51138006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2020 at 3:04 AM, குமாரசாமி said:

 

 

 

இதைத்தான் சீமானை ஆதரிக்கின்றவர்களும் சிந்திக்கலாம் இல்லையா? 
 

அது வேறு ... சீமான் 2052ஆம் ஆண்டு மாறுவார் 
எதிர்காலத்தில் மாற கூடிய ஒருவரை எப்படி ஆதரிப்பது?

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

அது வேறு ... சீமான் 2052ஆம் ஆண்டு மாறுவார் 
எதிர்காலத்தில் மாற கூடிய ஒருவரை எப்படி ஆதரிப்பது?

ம்ம்ம். ரொம்ப ரொம்ப ஆபத்தானவர். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை சந்தித்தமையை பாக்கியமாகவே கருதுகிறேன் - விக்கினேஸ்வரன்

நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர். அவரை நான் சந்தித்தமையை பாக்கி யமா கவே கருதுகிறேன் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

கேள்வி :- ரஜனியைநீங்கள் போய் சந்தித்ததாகவும் மக்களுக்கு இத்தனைபிரச்சனைகள் இருக்கும் போது ரஜனியைபார்க்கப்போனமைதவறென்று கூறப்பட்டுள்ளதே. உங்கள் கருத்தென்ன?

பதில் :- ரஜனியை நான் சென்றுபார்த்துவந்ததுஉண்மையே. அதுஒருதனிப்பட்டவிஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. அசோக் வெங்கட் 11ஆம் திகதி மாலை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தபோது”ரஜனியைபபார்க்க வருகின்றீர்களா? அவரின் அலுவலகத்தில் இருந்துபேசி இன்று மாலை என்னால் சந்திப்பை உறுதிப்படுத்தமுடியும்”என்று கூறினார்.

மாலை 6 மணிக்குப் பின் என் மற்றைய சந்திப்புக்கள் முடிந்துஹோட்டலுக்குச் செல்வதாக இருந்தது. ஆகவே 6 மணிக்குப் பின்னர் என்றால் அவரைசந்திக்கமுடியும் என்றேன். அசோக் ரஜனியின் காரியதரிசியுடன் பேசி இருக்கின்றார். நான் சந்திக்கவருவதாகக் கூறப்பட்டபோது ரஜனி மகாவலிபுரத்தில் இருந்த தனது தோட்டவீட்டில் இருந்துஉடனே அவரின் போயஸ் கார்டின்ஸ் வீட்டுக்கு வருவதாகக் கூறி என்னைமாலை 06.30 மணியளவில் சந்திக்கமுடியும் என்று கூறியிருந்தார்.

நான் அங்குசென்று அவர் வீட்டின் முன்பக்கத்தில் இறங்கியதும் ஒருவர் என் கையைப் பற்றிக் கொண்டு”வாருங்க! வாருங்க! எப்படி இருக்கிறீங்க?” என்றுகேட்டார். சற்று இருட்டாக அந்த இடத்தில் இருந்தது. கூர்ந்துபார்த்தபோது ரஜனியே அங்குநின்றார்! நான் அதற்குமுன் நேரடியாக ரஜனியைச் சந்தித்ததில்லை. பலவருடகாலம் பழகியதுபோல் என் கையைப் பற்றி ரஜனிதமது இருப்பறைக்கு எம்மைஅழைத்துச் சென்றார்.

அங்குசென்றதும் பாபாஜியின் படமும், இராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும்,எம் நாட்டுசுவாமிசச்சிதானந்தயோகியின் படமும் சுவரில் தொங்கபோட்டு இருந்தன. உடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலகநியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள்,யதார்த்தங்கள் சார்ந்துபேசப்பட்டன. பத்திரிகைகளில் கூறுவதுபோல் நான் ரஜனியை இலங்கைக்குவருமாறுஅழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரைமணித்தியாலநேரம் அளவளாவினோம்.

ரஜனிசம்பந்தமாகப் பலவிதகருத்துக்கள் பேசப்பட்டுவருகின்றன. நான் அவரில் நேரில் கண்டகுணாதிசயங்கள் பின்வருமாறு-

அவர் எளிமையின் சிகரம்,அவருக்குஆன்மவிசாரத்தில் அதிகநாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கந் தவிர்ந்தசுபாவம் உடையவர், அசைக்கமுடியாத இறைநம்பிக்கைஉடையவர், தாமரைமேல் நீர் போன்றவாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர், இயற்கையாகவே உடலில் ஒருவேகம். பேச்சிலும் அப்படித்ததான், இயற்கையாகவே அன்புநிறைந்தவர். அவரது அன்பு நடிப்பல்ல. அவரின் எளிமைச் சுபாவத்தால் வந்த நெகிழ்ச்சியே அது.

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டபலவற்றுள் சுவாரஸ்யமான இரு விடயங்கள் பின்வருமாறு-

”பாபா”படத்தால் பெருவெற்றியைப் பெறலாம் என்றுஎண்ணியிருந்தார் ரஜனி. அதுபடுதோல்வியடைந்தது. அப்போதுபலவிநியோகஸ்தர்கள் பலத்தநட்டம் அடையும் நிலைஏற்பட்டது. ரஜனியின் திரைவாழ்க்கை இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று கூட பலர் எண்ணினார்கள். தனக்கெனத் தயாரிப்பாளர்கள் கொடுப்பதாகக் கூறியபணத்தை முழுமையாகவே எடுக்காது விட்டு பல விநியோகத்தர்களையும் மற்றவர்களையும் பாரியநட்டத்தில் இருந்துகாப்பாற்றினார்.

அடுத்தபடம் பற்றிப் பேசும் போதுமுன்னையபடத்தில் அவருக்குகிடைக்கவேண்டியமுழுத்தொகையும் அந்தஅடுத்தபடத்தில் தனது ஊதியமாகத் தருமாறுகோரினார். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். என்றாலும் ஒருசிறுதொகையை அட்வான்ஸாகத் தருவதாகவும் மிச்சத்தைபடம் ரிலீசாகியபின் தருவதாகவும் தயாரிப்பாளர் கூறினார். ரஜனிஅதற்கிசைந்தார்.

படையப்பா என்று நினைக்கின்றேன் அந்தஅடுத்தபடம். அதுபலத்தவெற்றிப் படமாக அமைந்தது. கோரியமுழுத்தொகையும் ரஜனிக்குக் காலாகாலத்தில் கிடைத்தது.

”பாபா”படம் படுதோல்வியடைந்தது பற்றி என்னுடன் வியந்துபேசினார். ஏன் என்றுதெரியவில்லை என்றார்.

அதற்கு எனது கருத்தாகப் பின்வருமாறு கூறினேன். -”நீங்கள் பாபாஜியின் பரமபக்தர். யோகானந்தபரமஹம்சரின்பக்தர். அவர்களைக் கருப்பொருளாகவைத்துபணம் சம்பாதிப்பதை அவர்கள் விரும்பவில்லைபோலும். ஆனால் நீங்கள் அவரின் விஸ்வாசி என்ற அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து நட்டமடையவிடவும் அவர்கள் விரும்பவில்லைபோலும்”என்றேன்.

 ”ஆம்”என்பதுபோல் தலையசைத்தார்.

பாபாஜி இப்பொழுதும் ஒரு இளைஞராக இமாலயமலைப் பிரதேசத்தில் இருந்துவருவதைப் பற்றிநாமிருவரும் எமதுகருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

அடுத்துஎன்னைப் பற்றியஒருசிறுகுறிப்பு. அவர் தமது மாகாவலிபுர தோட்டவீட்டில் இருந்து எனக்காகத்தன் போயஸ் கார்டன் வீட்டிற்குவந்தமைபற்றியும் தன் வீட்டுப் படியிறங்கிவந்துஎன்னைஅழைத்துச் சென்றமைபற்றியும் வியந்துகுறிப்பிட்டேன். நன்றி கூறினேன்.

அப்பொழுதுஅவர் கூறினார் - ”உங்கள் முகத்தில் ஒருதேஜஸ் தெரிகின்றது. உங்கள் தாடிமுகத்திற்குப் பொருத்தமாகஅமைந்துள்ளது. உங்களைச் சந்திக்கவேண்டும் என்றுஆர்வமாக இருந்தேன். வவுனியாவில் ஒரு கூட்டத்திற்குவருவதாக இருந்தது. அப்போது சந்திக்க எதிர்பார்த்தேன்.ஆனால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. ஆகவே நீங்கள் வருவதாக அறிந்ததும் நான் அவசரஅவசரமாக இங்குவந்தேன்”என்றார்.

”பரம ரஜனி இரசிகர்களான என் இரு மகன்மார்களும் நீங்கள் கூறியவற்றை அறிந்துகொண்டால் மிக்கமகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறினேன்.

ரஜனிபந்தாவே இல்லாதமனிதர் எனக் கண்டுஉண்மையில் வியப்படைந்தேன்.

சிறியபுகழை, பதவியைஅடைந்து விட்டாலே பலர் தலைகால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்றநாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒருதிரைப்படக் கலைஞர் என்றமுறையில் அவர் பலத்த பந்தாகாட்டுவார் என்றுஎதிர்பார்த்திருந்தேன். அவரின் மறைந்த அடுத்த வீட்டுக்காரியின் குணம் அவரிடம் சற்றும் இல்லாதிருந்ததைக் கண்டுபிரமித்தேன். எந்த ஒருமனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒருபெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன்.

அங்குபடம் எடுத்துக் கொண்டிருந்த அன்பரைப் படம் எடுத்துமுடிந்ததும் நீங்களும் வாருங்கள் என்றழைத்து அவருடன் இருந்துஒருபடம் அந்த அன்பரின் கமராவில் எடுத்துக் கொண்டார். உங்கள் கேள்விக்கு இப்போவருகின்றேன்.

அன்று ரஜனியைப் பார்க்காது இன்னொருவரைச் சந்தித்திருந்தால் இவ்வாறானகுற்றம் என்மீதுசுமத்தப்பட்டிருக்குமா? அப்பொழுதுஉங்களிடம் என் சம்பந்தமாகக்குறைகண்டு கூறியவர் ”எம் மக்களுக்கு இத்தனைபிரச்சினைகள் இருக்கும் போதுஏன் இன்று இன்னாரைச் சந்திக்கச் சென்றார்” என்றுகேட்டிருப்பாரா? ஆகவே ரஜனியைச் சென்று விக்னேஸ்வரன் சந்தித்தமைஅவர் மனதில் விசனத்தை ஏற்படுத்தவேறு காரணங்கள் இருந்திருக்கின்றன.

 முக்கியமாக அரசியல் காரணங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இவ்வாறானகருத்தைவெளியிட்டிருப்பார் என்றுமுடிவெடுக்கஅதிகநேரம் தேவையில்லை. அவரிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். ”நீங்கள் தமிழ் மக்கள் பிரச்சனைகளில்மட்டும் சதா அமிழ்ந்திருக்கும் ஒருவர் என்றால்,வேறெந்தநாட்டமும் கொண்டவர் அல்லஎன்றால்,உங்கள் கடமைநேரம் முடிந்தபின்னர் ஒருசினிமாதானும் பார்க்காதஒருவர் என்றால் தயவுசெய்துஎங்கள் கட்சியில் சேருங்கள். உங்களைப் போன்றவிருப்புவெறுப்பற்றதெய்வீகத் தொண்டர்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். வாருங்கள்! வந்துஎம்முடன் சேருங்கள்! மக்களுக்காகப் பாடுபடுங்கள்! என்னைப் பொறுத்தவரையில் நான் சாதாரணமானவன். உங்கள் உச்சமட்டதெய்வீகஎதிர்பார்ப்புக்களுக்குமுகம் கொடுக்கக்கூடியஒருவர் அல்லநான்.”

என்னைக் குறை கூறுபவர்கள் சிலவிடயங்களைமனதில் கொண்டிருக்கவேண்டும்.

எனதுதனிப்பட்டவிஜயத்தைஅரசியல் சந்திப்புபோன்று ஆக்கியவர்கள் பத்திரிகையாளர்கள்,நான் தற்போதுபதவியில் இல்லாதவன். ஏதோபெரியதவறைநான் இழைத்ததாகசிலர் பேசிக் கொள்வதுவிந்தையாக இருக்கின்றது, மக்களாகியநாங்கள் எம்மைப்பற்றிசிலவிடயங்களைமனதில் வைத்திருக்கவேண்டும். Man is a conditioned being என்றுதத்துவஞானிது. ஜெ கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். நாம் யாவரும் சுற்றுச் சூழலால்,படிப்பால்,அனுபவத்தால் உருமாற்றப்பட்டவர்கள். ”எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.அந்தக் குழந்தைநல்லதுகெட்டது”என்றுமேற்குறிப்பிட்ட பாதிப்புக்களால்த்தான் உருமாறுகின்றது. இதைவிடஅவர்களின் முன்னையபிறவிகளில் இருந்தும் சிலவிருப்புவெறுப்புக்களை கொண்டுவருகின்றார்கள். ஒருவர் சரிஎன்பது இன்னொருவருக்குதவறாகப்படும்.

ரஜனியை தெலுங்கன், சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்றெல்லாம் கூறுபவர்கள் அவரைச் சென்று ஒருமுறைசந்தித்துவாருங்கள் என்றுகேட்டுக் கொள்கின்றேன். அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். அப்போது அவரின் உயரியபண்புகள் தெரியவரும்.

என்னையுந்தான் தெற்கில் தாறுமாறாகவிமர்சிக்கின்றார்கள். இனவாதி என்கின்றார்கள், பயங்கரவாதிஎன்கின்றார்கள். கலவரத்தை உண்டாக்கஎத்தனிக்கும் ஓர் கயவன் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அதைச் சரி என்று வடக்கில் உள்ளவர்கள் கூறுவார்களா? ஒவ்வொருவர் பார்வையில்த்தான் வெளிஉலகம் அவர்களுக்கு தென்படுகின்றது.

சிலர் நான் நீதியரசராக இருந்தவர்,ஒருசினிமாக் காரரைச் சென்றுசந்தித்தது தவறுஎன்று கூறுகின்றார்கள். நாளை ரஜனி பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தால் அப்போதும் அவரைதிரைக் கூத்தாடிஎன்றுதான் கூறுவீர்களா?

ரஜனியைச் சந்தித்ததால் அவரின் உயரியகுணங்களைநான் அறிந்துகொண்டேன். அவருடன் எம்முடையசந்திப்பு முடிந்ததும் தானே என்னுடன் வந்துநான் ஏறியதும் என் கார் கதவைச் சாத்தி வழி அனுப்பிவைத்தார். அந்தச் சிறந்தமனிதரின் அறிமுகத்தை,சந்திப்பைஒருபாக்கியமாகக் கருதுகின்றேன்.

 

https://www.virakesari.lk/article/73347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ!

namal-rajapaksa-rajinikanth-1579330507.j

கொழும்பு: நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள். அவர் தாராளமாக இலங்கைக்கு வரலாம் . அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

ரஜினி இன்னும் அரசியலுக்கும் வரவில்லை. கட்சியும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவரை வைத்து நடந்து வரும் அரசியலுக்கு மட்டுமே ஓய்வே இல்லை. கடந்த பல வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது.இந்த அரசியலைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் கூட. இதனால் தங்களுக்கும், ரஜினிக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற ஆதங்கமும் அவர்களை விட்டுப் போகவில்லை.சமீப காலமாக ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வேலைகள் முழு வேகம் பிடித்துள்ளன.

அவரும் முடிந்தவரை தள்ளிப் போட்டுக் கொண்டேதான் போகிறார். இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னைக்கு வந்தார் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் தலைவர்களை விட ரஜினிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது அனைவரையும் அதிர வைத்தது.அப்போது அவர் ரஜினியை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

ஆனால் ரஜினிக்கு விசா தர இலங்கை அரசு மறுத்து விட்டதாக திடீரென ஒரு தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் விளக்கம் வந்தது. இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அதிலும் தமிழில் போட்டுள்ளார்.அதில், நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என்று நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பல கருத்துக்கள் உடனுக்குடன் வந்து குவிந்துள்ளன. சிலர் பேசாமல் ரஜினியை இலங்கையிலேயே வச்சுக்கோங்க என்றும் நக்கலடித்துள்ளனர். சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

நமல் ராஜபக்சே சொல்வதைப் பார்த்தால் ரஜினியை வைத்து இலங்கையிலும் ஒரு பாலிட்டிக்ஸ் வெடிக்கும் போலத் தெரிகிறது. என்ன மாதிரியான திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் புரியவில்லை. ஆனால் என்னமோ நடக்க போகிறது.. அது யாருக்கு.. என்பதுதான் காத்திருந்து வேடிக்கை பார்க்க வேண்டிய மேட்டர். பார்க்கலாம்.

https://tamil.oneindia.com/news/colombo/namal-rajapaksa-clarifies-about-rajinis-visit-374370.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரஜினி இன்னும் அரசியலுக்கும் வரவில்லை. கட்சியும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவரை வைத்து நடந்து வரும் அரசியலுக்கு மட்டுமே ஓய்வே இல்லை.

அந்த ரஜினியை ஆன்மிக விக்கி சந்தித்தை வைத்தே ஒரு பிரமாண்டமான நம்பிக்கையே யாம் களத்தில்  இருக்கின்றது😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அந்த ரஜினியை ஆன்மிக விக்கி சந்தித்தை வைத்தே ஒரு பிரமாண்டமான நம்பிக்கையே யாம் களத்தில்  இருக்கின்றது😂

1527328250-6498.jpg

ஓம் தோழர்.. யோகத்தில் அமரும் போது சின் முத்திரையின் (👌) பயன்பாடு மற்றும் பெருபேறுகளை இருவரும் சிலாகித்து கதைத்ததை உந்த பத்திரிகைகள் கண், மூக்கு வைத்து  கதை கட்டி விடுகினம்..☺️

Link to comment
Share on other sites

On 1/14/2020 at 5:51 PM, Rajesh said:

விக்கியருக்கு மறை கழண்டு போச்சு போல.
ஒருக்கா அந்த ஆசுப்பத்திரில மண்டையை செக் பண்ணுறது நல்லது.

Bildergebnis für நம்பிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஓம் தோழர்.. யோகத்தில் அமரும் போது சின் முத்திரையின் (👌) பயன்பாடு மற்றும் பெருபேறுகளை இருவரும் சிலாகித்து கதைத்ததை உந்த பத்திரிகைகள் கண், மூக்கு வைத்து  கதை கட்டி விடுகினம்..☺️

மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர் ☺️

Link to comment
Share on other sites

On 1/17/2020 at 12:03 PM, கிருபன் said:

நாளை ரஜனி பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தால் அப்போதும் அவரைதிரைக் கூத்தாடிஎன்றுதான் கூறுவீர்களா?

விக்கியர்ட கற்பனைக்குதிரை தாறுமாறா தான் பறக்குது.

இப்பிடி நியாயம் கற்பித்து வாழ்ற ஆட்கள் நிச்சயமா பிரச்சினைக்காரர் தான்.

விக்கியர் ஆசைப்பட்டு படுகுழில விழுந்திட்டு இப்ப கும்மாங்கூத்து ஆடுறார்.

5 hours ago, Paanch said:

Bildergebnis für நம்பிக்கை

விக்கியர் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான்.
அதை நம்பாட்டி அதிபயங்கரமானது என்டு விக்கியர் சொல்லப்போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎12‎/‎2020 at 4:42 PM, valavan said:

இதுதான் நிகழ்கால & எதிர்கால யதார்த்தம்.

ஆனால் சிங்களவர்கள் மனங்களை மாத்த முயலவேண்டும் என்று சொன்னீர்கள் பாருங்கள், அவர்கள் மனம் மாறுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இலங்கை எனும் குட்டி தீவில் அவர்களுக்கெதிராக ஒருகாலம்..

குட்டி தொகை கொண்ட தமிழர் இனம் சம பலம் கொண்ட ராணுவத்தை வைத்திருந்தபோதே  ஆயுதத்தை முதலில் கீழே வைய்யுங்கள் தீர்வு தருகிறோம் என்று சொன்னவர்கள் அவர்கள்...

 

இப்போ எந்த பலமும் எம்மிடம் இல்லாதபோது மனம் மாறுவார்கள் அல்லது அவர்கள் மனங்களை மாற்ற முடியும்  என்பது தங்களின் அதீத கற்பனை.

அதெல்லாம், உங்கள் பேரன் பேர்த்திகள், அவர்களுடைய பேரன் பேர்த்திகள் காலத்திலும் சாத்தியமில்லை.

சுவரில்லா சித்திரங்கள் படத்தில் கல்லாபெட்டி சிங்காரம் ஒரு வசனம் பேசுவார்..

‘கண்ணடிச்சா வராத பொம்பள கையை பிடிச்சு இழுத்தா வரவா போறா’?

ஈழ தமிழரின் நிலை என்பது இனிமே சுவரில்லாத சித்திரங்கள்தான்.

 

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்...எதுவும் உடனே சரி வராது. காலங்கள் எடுக்கும்.... ஈழம் என்று ஒரு நாடு உருவாகுமோ தெரியாது. ஆனால் தமிழரும்,சிங்களவரும்  ஒன்றிணைந்து,ஒரு நாட்டில் ஒற்றுமையாய் வாழும் காலம் உருவாகும் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣

Link to comment
Share on other sites

11 hours ago, Rajesh said:

விக்கியர்ட கற்பனைக்குதிரை தாறுமாறா தான் பறக்குது.

இப்பிடி நியாயம் கற்பித்து வாழ்ற ஆட்கள் நிச்சயமா பிரச்சினைக்காரர் தான்.

விக்கியர் ஆசைப்பட்டு படுகுழில விழுந்திட்டு இப்ப கும்மாங்கூத்து ஆடுறார்.

விக்கியர் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான்.

விக்கியார் அண்மைக்காலங்களில் இது போன்ற சிற்றின்பங்களில் மட்டுமே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

On 1/12/2020 at 8:42 AM, valavan said:

ஆனால் சிங்களவர்கள் மனங்களை மாத்த முயலவேண்டும் என்று சொன்னீர்கள் பாருங்கள், அவர்கள் மனம் மாறுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?


சிங்களவரது மனங்களை மாற்றி, தமிழருக்கு என்று ஒரு தனி நாட்டை இந்த தீவில் அமைக்க எவை தடையாக உள்ளன என்பது பற்றி பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது ஆலோசகராக இருந்த பேராசிரியர் ஒருவருடன் தனிப்பட்ட முறையில் பேசக்கிடைத்தது.

சிங்களவரின் முக்கியமான பிரச்சினை அவர்களின் பாதுகாப்பு பற்றிய பயம். இந்தியாவில் இலங்கை சனத்தொகையின் பல மடங்காக தமிழர் இருக்கின்றனர். வறுமை காரணமாக மலையகத்தமிழரின் உறவினர்கள் கள்ளத்தோணிகளாக இலங்கை வந்து பிடிபடும் காலம் இருந்தது. தமிழருக்கு இலங்கைத்தீவுக்குள் நாடு உருவானால் இந்தியத்தமிழர் பெருமளவில் இந்த தீவுக்கு வந்து குடியேறுவர் என்றும், அவர்களுக்கு இடம் தேவைப்படுவதால் தமிழர் சிங்கள நாட்டினை எல்லைப்புறங்களில் ஆக்கிரமித்து சிங்களவரை மிகச்சிறிய நிலப்பரப்பினுள் அடக்கி வைப்பர் என்றும் சிங்களவர் அஞ்சுகின்றனர் என்று சொன்னார். இதை அவர் சொன்ன போது என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் என்னவென்றால், இதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இதே திட்டத்தை விபரித்து, இப்படித்தான் எமது எதிர்காலம் அமையும் என்று விளக்கி இருந்தார்.

ஆகவே,  சிங்களவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமே அவர்களின் மனத்தை மாற்றமுடியும். எப்படி சிங்களவர்கள் நம்பத்தகுந்த பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை நாம் வழங்க போகிறோம்?

 

On 1/12/2020 at 8:42 AM, valavan said:

இலங்கை எனும் குட்டி தீவில் அவர்களுக்கெதிராக ஒருகாலம்..

குட்டி தொகை கொண்ட தமிழர் இனம் சம பலம் கொண்ட ராணுவத்தை வைத்திருந்தபோதே  ஆயுதத்தை முதலில் கீழே வைய்யுங்கள் தீர்வு தருகிறோம் என்று சொன்னவர்கள் அவர்கள்...

இப்போ எந்த பலமும் எம்மிடம் இல்லாதபோது மனம் மாறுவார்கள் அல்லது அவர்கள் மனங்களை மாற்ற முடியும்  என்பது தங்களின் அதீத கற்பனை.

ஆயுதபலத்தை வைத்து மனங்களை மாற்ற முடியாது. அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யவே ஆயுதபலம் உதவும். ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் முற்றாக அழிந்து போவார்கள், அல்லது என்றோ ஒருநாள் கிளர்ந்து எழுந்து ஆக்கிரமிப்பாளரை அழிப்பார்கள். 

Link to comment
Share on other sites

On 1/19/2020 at 10:57 AM, போல் said:

 

தட்டுத்தடுமாறி ஆன்மீக சந்திப்பு என்று நம்பவைக்க விக்னேஸ்வரன் படாதபாடு படுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2020 at 9:04 AM, குமாரசாமி said:

 

இதே சிந்தனையைத்தான் ஒரு சாரார் சீமான் மீதும் வைத்திருக்கின்றார்கள்.

சீமான் தனிக்கட்சி!!

அகில உலக தலைவர் ரஜனி கட்சி? அந்த ஆண்டவனுக்கே தெரியாதாம்.😎

 

இதைத்தான் சீமானை ஆதரிக்கின்றவர்களும் சிந்திக்கலாம் இல்லையா? 
 

இப்பதான் அண்ணை பொயின்ற பிடிச்சிருக்கியள்.

ரஜனி தமிழ் நாட்டில் பிஜேபியின் A டீம் கேப்டன் ( பிஜேபியின் எந்த டீமும் தேறாது என்பது வேறு விடயம்).

ரஜனிக்கு கொடுக்கப்பட்ட வேலை, தமிழ்நாட்டில் திராவிட எதிர் அரசியல் செய்து, தமிழ்நாட்டில் திராவிடம் (அதிமுக) V திராவிடம் (திமுக) என்ற நிலையை மாற்றி திராவிடம் V இந்துதுவா என்ற நிலையை உருவாக்க வேண்டும். 

சீமான் பிஜேபியின் C டீம் கேப்டன். 

சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை - தமிழ் தேசியத்தினுள் ஒளிந்தபடி திராவிட அரசியலை தாக்கி, ரஜனியின் டீம் உள்ளே வர வெற்றிடத்தை ஏற்படுத்தி கொடுப்பது.

இப்படி கிருஸ்ணசாமி, பா ரஞ்சித் என ஒவ்வொரு வேறுபட்ட முனைகளில் இருந்து திராவிடத்தின் மீது போர் தொடுக்கும் பல சில்லறை டீமுகள் இப்போ தமிழ்நாட்டில் இறக்கிவிடப்பட்டுள்ளன. 

A-Z அத்தனை டீமுகளினதும் ஒரே குறிக்கோள் தமிழ்நாட்டில் இந்துதுவாவை மாற்று சக்தியாக நிறுத்துவது.

இதன் ஒரு அங்கம் - இந்துதுவா ஈழத்தமிழர் அபிமானமுடையது என நிறுவுவது. அதற்கு விக்கி பயன்படுத்தபடுகிறார் என்பது தெளிவு.

ஆனால் இதை வைத்து அவர்களை நாமும் ஏன் பயன்படுத்தி எம் பயணத்தை முன்னேற்ற முயற்சிக்க கூடாது என விக்கியும் யோசிக்கலாம் அல்லவா?

அப்போ ஏன் சீமானை அரவணைத்து எம் பயணத்தை முன்னேற்ற முயற்சிக்க கூடாது?

ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்துதுவா நிறுவப்பட்ட மறுகணமே, சீமானுக்கான தேவை அற்றுப்போக, அவர் சத்தமின்றி மேடையில் இருந்து  அவரின் போசகர்களால் அகற்றப்பட்டு விடுவார்.

அதனால் சீமானுடன், தமிழ் தேசிய இந்திய எதிர்ப்பு அடிப்படையில் போடப்படும் எந்த உடன்பாடும் செயல் வடிவம் பெறாது.

ஆனால் ரஜனியுடன், இந்துத்துவா, ஆன்மீக அடிப்படையில் கட்டப்படும் உறவால் கொஞ்சூண்டு பேரம் பேசும் வலுவையாவது அடைய முடியும் என சொல்ல முடியாவிட்டாலும், முயற்சிக்கலாம்.

 

On 1/16/2020 at 11:14 PM, Maruthankerny said:

அது வேறு ... சீமான் 2052ஆம் ஆண்டு மாறுவார் 
எதிர்காலத்தில் மாற கூடிய ஒருவரை எப்படி ஆதரிப்பது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

சீமான் பிஜேபியின் C டீம் கேப்டன்.

ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இப்பதான் அண்ணை பொயின்ற பிடிச்சிருக்கியள்.

ரஜனி தமிழ் நாட்டில் பிஜேபியின் A டீம் கேப்டன் ( பிஜேபியின் எந்த டீமும் தேறாது என்பது வேறு விடயம்).

ரஜனிக்கு கொடுக்கப்பட்ட வேலை, தமிழ்நாட்டில் திராவிட எதிர் அரசியல் செய்து, தமிழ்நாட்டில் திராவிடம் (அதிமுக) V திராவிடம் (திமுக) என்ற நிலையை மாற்றி திராவிடம் V இந்துதுவா என்ற நிலையை உருவாக்க வேண்டும். 

சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை - தமிழ் தேசியத்தினுள் ஒளிந்தபடி திராவிட அரசியலை தாக்கி, ரஜனியின் டீம் உள்ளே வர வெற்றிடத்தை ஏற்படுத்தி கொடுப்பது.

இப்படி கிருஸ்ணசாமி, பா ரஞ்சித் என ஒவ்வொரு வேறுபட்ட முனைகளில் இருந்து திராவிடத்தின் மீது போர் தொடுக்கும் பல சில்லறை டீமுகள் இப்போ தமிழ்நாட்டில் இறக்கிவிடப்பட்டுள்ளன. 

A-Z அத்தனை டீமுகளினதும் ஒரே குறிக்கோள் தமிழ்நாட்டில் இந்துதுவாவை மாற்று சக்தியாக நிறுத்துவது.

இதன் ஒரு அங்கம் - இந்துதுவா ஈழத்தமிழர் அபிமானமுடையது என நிறுவுவது. அதற்கு விக்கி பயன்படுத்தபடுகிறார் என்பது தெளிவு.

ஆனால் இதை வைத்து அவர்களை நாமும் ஏன் பயன்படுத்தி எம் பயணத்தை முன்னேற்ற முயற்சிக்க கூடாது என விக்கியும் யோசிக்கலாம் அல்லவா?

அப்போ ஏன் சீமானை அரவணைத்து எம் பயணத்தை முன்னேற்ற முயற்சிக்க கூடாது?

ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்துதுவா நிறுவப்பட்ட மறுகணமே, சீமானுக்கான தேவை அற்றுப்போக, அவர் சத்தமின்றி மேடையில் இருந்து  அவரின் போசகர்களால் அகற்றப்பட்டு விடுவார்.

அதனால் சீமானுடன், தமிழ் தேசிய இந்திய எதிர்ப்பு அடிப்படையில் போடப்படும் எந்த உடன்பாடும் செயல் வடிவம் பெறாது.

ஆனால் ரஜனியுடன், இந்துத்துவா, ஆன்மீக அடிப்படையில் கட்டப்படும் உறவால் கொஞ்சூண்டு பேரம் பேசும் வலுவையாவது அடைய முடியும் என சொல்ல முடியாவிட்டாலும், முயற்சிக்கலாம்.

இவ்வளவும் பாஜக மத்தியில் இருக்கும் வரை தானே?
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது கதை காட்சிகள் மாறலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமா?

புலிப் பணத்தை, வெளிநாட்டில் புலி வேசம் போட்டவர்கள் ஆட்டையை போட்டார்கள்?

ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா?

முன்னாள் போராளிகள் என்ற பெயரில் அரசு இறக்கும் ஆட்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்?

ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா?

சுமந்திரன் பெட்டி வாங்கினார்.

ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா?

சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக இனத்தை கூவி விற்றார்.

ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா?

விக்கி ரஜனியை சந்தித்து தமிழ் தேசியத்துக்கு ஊறு செய்கிறார்.

ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா?

முடியாதில்ல? அப்ப இதற்கு மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும். இவ்வளவு நுணுக்கமாக, திராவிட கொள்கை மீது, ரஜனி, சீமான், ரஞ்சித், கிருஸ்ணசாமி என பல முனைகளில் சிறிதும் பெரிதுமாக போர் தொடுக்கும் இந்துதுவா/பிஜேபி இந்த யுக்திக்கான ஆதாரங்களை விட்டு வைப்பார்களா என்ன?

அப்போ நான் சீமான் மீது சொல்வது என் ஊகம்/அபிப்ராயமா?

யெஸ் அண்ட் நோ - முன்பே ஒரு திரியில் எழுதிவிட்டேன்:

1. தமிழ் தேசியத்தை வளர்க்க பெரியாரை அவர் கொள்கைகளை விமர்சிக்க வேண்டியது இல்லை - விமர்சனத்தை, தேர்தல் அரசியல் செய்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயாவில் இருந்து ஆரம்பிக்கலாம். பெரியாரின் அற்புதமான கொள்கைகளை இந்த வியாபாரிகள் கொள்ளை அடிக்க பயன்படுத்தினார்கள். இந்த உண்மையை சொல்லி சீமான் அரசியல் செய்திருக்கலாம். பிஜேபியின் வளையத்துக்குள் போக முதல் சீமான் செய்த அரசியல் இதுதான். இப்போ பெரியாரை, அவர் கொள்கைகளை மூர்க்கமாக எதிர்க்க என்ன திடீர் காரணம்? பெரியாரை மக்கள் மனங்களில் இருந்து நீக்காமல் - இந்துதுவாவை புகுத்த முடியாது - அதனால்தான் எங்கே இருக்கு பெரியார் பூமி? என்று கேட்க வேண்டியதாகிறது.

2. சாதிய அடிப்படையில் தமிழரை தமிழன், தமிழன் அல்லாதோர் என கூறுபோடுதல். பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை அணியில் இருக்கும் மக்களை, தமிழன், தமிழன் அல்லாதோர் என பெரும் பிரிப்பு பிரிப்பது சீமானின் வேலை. அதை பின்னர் சிறுக, சிறுக தலித், கொங்கு வேளாளர், தேவாந்திரகுலம், தேவர், என உடைப்பது ரஞ்சித் தரவளிகளின் வேலை. 

3. முருகன் முப்பாட்டன் என்ற திடீர் பல்டி. இது நேரடியாக இந்துதுவா புகுத்தல். பிஜேபிக்கு அடுத்து கொள்கை ரீதியில் தமிழ்நாட்டில் இந்து மதத்தை முன்னிறுத்துவது நாத மட்டுமே.

4. நாயக்கரும், முதலியாரும், தமிழர் இல்லை ஆனால் - இந்திய துணை கண்டத்துக்கு அப்பால் இருந்து வந்த பிராமணர் தமிழர் எனும் அப்பட்டமான இந்துதுவா கொள்கை நிலைப்பாடு.

இப்படி சீமான் பிஜேபியின் C டீம் என்பதற்கு - பல telltale signs எம் கண்முன்னே இருக்கிறது.

இவற்றை வைத்து முன்வைக்கப்படும் நியாயமான சந்தேகம்தான் சீமான் பிஜேபியின் மறை கரம் எனும் கோட்பாடு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவும் பாஜக மத்தியில் இருக்கும் வரை தானே?
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது கதை காட்சிகள் மாறலாம் அல்லவா?

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தியா எங்கெணும் இந்துதுவாவை ஒரு சக்தியாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் சின் நிலைப்பாட்டு கொள்கை முடிவில் மாற்றமில்லை.

மத்தியில் ஆட்சி மாறினால் என்ன ஆகும்? சீமான் தன் கொந்திராந்தை செவ்வனே தொடர்ந்து செய்வார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.