Jump to content

‘பாலியல் துன்புறுத்தல்’: ஆப்பிள் உருவாக்கிய வைபரேஷன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பாலியல் துன்புறுத்தல்’: ஆப்பிள் உருவாக்கிய வைபரேஷன்!

9.jpg

ஆப்பிள் வழங்கிவரும் இலவச ஸ்டோரேஜ் சேவையான ஐக்ளவுட்(icloud)இல் ஆப்பிள் டிவைஸ்களைப் பயன்படுத்தும் யூசர்களால் சேமிக்கப்படும் படங்களை, ஸ்கேன் செய்கிறோம் என அந்த நிறுவனத்தின் பிரைவசி குழு நிர்வாகி வெளியிட்ட தகவல் ஆப்பிள் பயனாளர்களிடையே பலவிதமான ரியாக்‌ஷனை உருவாக்கியிருக்கிறது.

லாஸ் வெகாஸில் நடைபெற்ற CES 2020 டெக் திருவிழாவில் பயனாளர்களின் பிரைவசி குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆப்பிள் பிரைவசி குழு நிர்வாகியான ஜேன் ஹோர்வத். ஆப்பிளின் பிரைவசி நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியபோது, “நாங்கள் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ‘குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்’ தடுப்பில் ஈடுபட்டுவருகிறோம். உதாரணத்துக்கு, ஆப்பிளின் ஐக்ளவுட் சேவையில் பதிவேற்றப்படும் படங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, அவற்றில் எந்த குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறோம்” என்று கூறினார். இது பல விதமான விவாதங்களை ஆப்பிள் பயனாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

 

2019ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது பிரைவசி பாலிசியை அப்டேட் செய்தது. அதன்படி, சமூகத்தை பாதிக்கும் பல குற்ற நடவடிக்கைகளுக்கு ஆப்பிள் பொறுப்பாக விரும்பவில்லை என்பதைத் தெரிவித்து, எங்களின் சேவையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தது. அதில் ஒன்றுதான் ‘ஐக்ளவுட்’ ஸ்டோரேஜில் அப்லோடு செய்யப்படும் படங்களை மெஷின் லெர்னிங் (Machine Learning) மூலம் ஸ்கேன் செய்வது.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் மெஷின் லெர்னிங் உதவியுடன் படங்களை ஸ்கேன் செய்கின்றன. ஆனால், அவற்றைப் போல வெளிப்படையாக ஆப்பிள் இதுவரை அறிவித்ததில்லை அல்லது இதுவொரு முக்கியமான பிரச்சினையாக பலரும் கவனிக்கவில்லை.

 

‘சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்’ என்றுதான் ஆப்பிள் கூறியிருக்கிறதே தவிர, எந்த மாதிரியான தொழில்நுட்பம் என சொல்ல மறுத்துவிட்டது. மற்ற நிறுவனங்கள் ‘PhotoDNA’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இந்த மாதிரியான படங்களை ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கின்றன.

அது என்ன PhotoDNA?

உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் தனித்தனியான DNA குறியீடுகள் இருப்பதுபோல, இணைய உலகம் மற்றும் பொது உலகத்தில் கண்டெடுக்கப்படும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்ட படங்களைத் தொகுத்து, ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி DNAக்களை உருவாக்குவது PhotoDNA நிறுவனத்தின் பணி. குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தலாகப் பதிவு செய்யப்பட்ட படங்களுக்கென தனி அடையாள எண்ணை உருவாக்கி, அதை தனது சர்வரில் சேமித்து வைத்துக்கொள்கிறது PhotoDNA. இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தும் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற ஊடகங்களில் ஒவ்வொரு படம் பதிவேற்றப்படும்போதும், அவற்றை ஸ்கேன் செய்து ஒரு DNA குறியீட்டை உருவாக்கி, அதை PhotoDNA சர்வரில் இருக்கும் DNA குறியீடுகளுடன் இயந்திர அறிவு ஒப்பிட்டுப் பார்க்கும். ஒருவேளை இரண்டு குறியீடுகளும் ஒரே மாதிரி இருந்தால், அந்தப் படத்தை ஐக்ளவுடில் சேமித்து வைத்தவர் குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். அவர் மீது நடவடிக்கை எடுக்க PhotoDNA அறிவுறுத்தும்.

நல்லா இருக்கே, இதுல என்ன பிரச்சினை?

‘நல்லவன் கண்ணுக்குத் தான் கடவுள் தெரிவார்’ என்று சொல்வதைப் போல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடாதவர்கள் ஆப்பிள் மற்றும் இதர நிறுவனங்களின் இந்த முயற்சியை ஆதரிக்கலாமே என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற மெஷின் லெர்னிங் சேவையின் மூலம், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குழந்தை காப்பாற்றப்படும் எனும்போது இதனை மகிழ்ச்சியாக அனுமதிக்கலாம். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் இருக்கும் படங்களைக்கூட எடுத்து ஸ்கேன் செய்துகொள்ளச் சொல்லலாம். ஆனால், இப்படி ஸ்கேன் செய்து உருவாக்கும் குறியீடுள்ள படங்களில், குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில், அந்தக் குறியீட்டினை என்ன செய்வார்கள் என்று சொல்லாமலேயே ஸ்கேன் மட்டும் செய்வோம் என்று கூறுவதுதான் பலரிடமும் அசாதாரண உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை அப்படி இருக்குமோ?

உதாரணத்துக்கு, தனது காதலியுடன் எடுத்த அந்தரங்கமான படத்தை ஐக்ளவுடில் ஓர் இளைஞர் சேமித்து வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது PhotoDNA இதை ஸ்கேன் செய்து சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த PhotoDNA குறியீட்டை யாராவது ஒரு ஹேக்கர் திருடி, அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி அதே படத்தை மீண்டும் மீள் உருவாக்கம் செய்து இணையத்தில் பதிவு செய்துவிட்டால் என்ன செய்வது?

பெரிய தொழிலதிபர் ஒருவர், தனது வங்கிக் கணக்குத் தகவல்களை போட்டோ எடுத்து ஐக்ளவுடில் சேமித்து வைத்திருந்ததை, ஹேக்கர் ஒருவரோ அல்லது PhotoDNA நிறுவனத்தில் பணியாற்றும் யாரோ ஒருவரோ திருட்டுத்தனமாக எடுத்து மீள் உருவாக்கம் செய்து பணத்தைத் திருடிவிட்டால் என்ன செய்வது?

 

மேற்கண்ட சூழல்களைப் போல, பல ரகசியமான தகவல்களைப் பாதுகாப்பதற்காகவே ஐக்ளவுட், கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை ஸ்கேன் செய்து, யாராவது அதைத் திருடிவிட்டால் கஷ்டத்தில் நிற்கப்போவது பயனாளர்கள் தானே என்கிற கேள்வி நியாயமானது.

PhotoDNA கூறும் நியாயம்

பல பில்லியன்கள் செலவில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளின் ஆழம் என்னவென்று தெரியும். எனவே, இதை அனைவருக்கும் சரிசமமாக மாற்றும் முயற்சியில்தான் மீள் உருவாக்கம் செய்ய முடியாத PhotoDNA அடையாள எண்களை உருவாக்க முடிவெடுத்தனர் PhotoDNA நிறுவனத்தினர்.

PhotoDNA நிறுவன தகவல்களின்படி “ஸ்கேன் செய்யப்படும் படங்களின் சூழல் மற்றும் அம்சங்களை ஸ்கேன் செய்து அதற்கான அடையாள எண் உருவாக்கப்பட்டதும், அந்தப் படங்களை உடனடியாக அவர்களது சர்வரிலிருந்து அழித்துவிடுவதாகக் கொள்கை முடிவு எடுத்திருக்கிறோம்” என்று கூறுகின்றனர். “உலகில் உள்ள அனைவரையும் கண்காணித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் எங்களுக்குள் எந்தக் குற்றவாளியும் நுழைந்துவிடக் கூடாது” என இதற்கான நியாயம் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்ட படத்தை ஒருமுறை ஸ்கேன் செய்து, அதன் DNA எண்ணை சர்வரில் சேமித்ததும் உடனடியாக அந்தப் படத்தை அழித்துவிடுகின்றனர். கூகுள் டிரைவ் போன்றவற்றில் அப்லோடு செய்யப்படும் படங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி DNA எண்ணை உருவாக்கி உடனடியாக அதை சர்வரில் உள்ள DNA எண்களுடன் ஒப்பிடுகிறது மெஷின் லெர்னிங். எந்தப் படமும் ஒத்துப்போகாத நேரத்தில் அந்தப் படம் மற்றும் அதன் தகவல்களை உடனடியாக அழித்துவிடுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

யாரைத்தான் நம்புவதோ..!

நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் இந்த விஷயத்தில், படங்களின் தகவல்களை அழித்துவிடுவோம் என்று நிறுவனங்கள் குறிப்பிடுவதில்தான் சிக்கல். வீட்டிலுள்ள மனைவி, மக்களைவிட அதிக நேரம் செலவிடும் ஃபேஸ்புக் தகவல்களைத் திருடிக் கொடுத்து ஆதாயம் தேடிக்கொண்ட வழக்கு இப்போது வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திடீரென ஹேக்கர்கள் தோன்றி, அனைத்து தகவல்களையும் திருடிவிடுகின்றனர். அதிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே சில நிறுவனங்கள் அழிந்துபோகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ‘நாங்க இருக்கோம்’ என இந்த நிறுவனங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதேசமயம், மெஷின் லெர்னிங் இப்போதுதான் பருவ வயதை அடைந்திருக்கிறது. 2000 முதல் 2020 வரை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மெஷின் லெர்னிங் நடைமுறைக்கு சிறுமிகளின் குரல்களையே பதிவு செய்து வந்திருந்த உலகம் இப்போதுதான் ஒரு பருவப் பெண்ணின் குரலமைப்பைக் கொடுத்திருக்கிறது. இவற்றை உருவாக்கும் நிறுவனங்களுக்கே இல்லாத நம்பிக்கை மக்களுக்கு எப்படி வரும் என்பதுதான் முக்கியமான கேள்வி. மற்றபடி, என் போட்டோக்களை ஸ்கேன் செய்யக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மக்களின் பயத்தைக் காரணம் காட்டி சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களிடமிருக்கும் பயத்தைப் போக்கினால்தான் நாம் எதிர்பார்க்கும் குற்றமற்ற சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும். இப்படியொரு வசதி இருப்பதையே ஆப்பிள் நிறுவனம் இப்போதுதான் கூறியிருக்கிறது. மேலே குறிப்பிட்ட தெளிவுகளையெல்லாம் எப்போது சொல்வார்கள்?

- சிவா
 

https://minnambalam.com/public/2020/01/12/9/apple-scan-photos-in-icloud-to-prevent-child-abuse

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.