Jump to content

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Wish-Pongal-Bring-In-Good-Luck-DG123350.

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.. 💐

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image associée

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....!   💐

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

pongal-special-right-time-to-start-the-pongal-festival

ஊரோடும், உறவோடும் உறவாடி அன்போடு வாழ்வோம்!! 
 அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!! 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அவைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன் 

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வாழ்த்து 2020.

இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை

அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக

உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம்

திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?;

 

தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி

அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்;

கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி

திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா

 

நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை

கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து

வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே

ஆடத் தருமம் நிலை தாழ்ந்த அவலம் போக்கி உய்வோமா?

 

வங்கக் கரையில் நிலைத்துயர்ந்த வாழ்க்கை இன்று மண்ணாகி

மங்கத் தமிழன் சிரம் தாழ்ந்து மாணா மானத்தாற் குறுகி

எங்கள் வரலாறழிந்தொழிய இயலாதவராய் வீழ்ந்ததுபோய்

பொங்கி மறவர் மீண்டுவரும் போழ்தை இனி நாம் காண்போமா?

 

இனிய பொங்கற் திருநாளில் எமக்காய் இந்த ஞாலமதில்

தனியே அரசொன்றமைத்திடவே சபதம் எடுத்து, தலை தாழ்ந்து

குனியான் தமிழன் எத்தகைய கொடுமை செயினும் யாருக்கும்

பணியான் என்ற பாடமதை பலரும் படிக்க வைப்போமா?

 

ஓர் நாள் எமக்காய்த் தமிழ்த்தேசம் உலகில் உதிக்கச் செய்வோமென்(று)

ஏர் நாள் தன்னில் எல்லோரும் எடுக்கும் சபதம் நிறைவேறி

பார்மீதினிலே தமிழர் கொடி பட்டொளி வீசிப் பறப்பதற்காய்

வாரீர் வாரீர் ஆர்வலர்காள்; வாழ்வைச் சிறிது கொடுப்போமா?

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

 

சித்தி கருணானந்தராஜா.

 

 
   
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து

பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவது போன்று நானும் பிரித்தானியாவிலுள்ள தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாட விரும்புகிறேன்.

எங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் வணிகங்களை உருவாக்குவதிலிருந்து எங்கள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்குக் கற்பித்தல், நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தல், நம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்தல் என மேலும் பல, உங்களது அருமையான பங்களிப்புக்களாகும்.

இந்த நாட்டை பூமியில் வாழக்கூடிய மிகச்சிறந்த இடமாக மாற்றுவதே எங்களது திட்டமாகும்.

எனவே எங்கள் அருமையான தமிழ்ச் சமூகத்திற்கு மகத்தான நன்றி கூறுகிறேன்.

இன்றும், வரவிருக்கும் நாட்களிலும் பண்டிகைகளின் ஒவ்வொரு இன்பத்தையும் விரும்புகிறேன்.

இனிப்பு பொங்கல் நிறைந்துள்ள பாரம்பரிய பானை போன்று நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புனும் வாழ எனது வாழ்த்துக்கள்.

நன்றி 10 Downing Street

http://athavannews.com/பிரதமர்-பொரிஸ்-ஜோன்சனின்/

 • Like 2
Link to comment
Share on other sites

 

 

பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து. தமிழ்மக்களின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

எனதருமை யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வாழியவே.

பண்டிகைகள் – WELCOME TO SIVARPANAM

Keine Fotobeschreibung verfügbar.

Edited by குமாரசாமி
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உளம் கனிந்த... பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 🌈

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..💐

a06d6005-2500-4d79-8502-e4f45a347114-8df 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


தை-பா.உதயன் 

காலைச்சூரியன் எழுதிய கவியினால் 
வானம் முழுவதும் வசந்தம் தெரியுது 
காலைப் பறவைகள் பாடல் இசைக்குது 
காதல் கவிதையை காற்றில் வரையுது 

ஏழு சுரங்களும் எழுதிய ராகமாய் 
ஆளக்கடலலை தாளம் இசைக்குது 
வானம் முழுவதும் வண்ணக் கோலமாய் 
காலைக் கதிரவன் கவிதை வரைகிறான் 

நீலக் கடலலை ராகம் இசைக்குது 
அது ஆடும் அழகினை பறவை ரசிக்குது 
சந்தம் இசைக்குது சலங்கை சிரிக்குது 
சிந்து பைரவி ராகம் கேட்குது 

காலைப் பொழுதினில் பூக்கள் விரியுது 
கையில் வந்தொரு கனவு உயிர்க்குது 
பாடும் பறவைகள் சிறகை விரிக்குது
தை பேசும் கவியினை வானில் வரையுது .

-பா.உதயன் ✍️

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள் 🙏

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!  💐

Illustration Happy Pongal Greeting Background Stock Vector (Royalty Free) 536645059

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லொருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.