Sign in to follow this  
nunavilan

வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ

Recommended Posts

வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ

 
JR-696x464.jpg

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி

செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் சாதனை படைத்தார். 177 கோல்களை பெற்றிருக்கும் அவர் பிரான்க் லம்பர்டின் சாதனையை சமன் செய்தார். 

ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் அலன் ஷீரர், வெயின் ரூனி மற்றும் அன்டி கோல் ஆகியோர் மாத்திரமே இவரை விடவும் முன்னிலையில் உள்ளனர். 

ரியாத் மஹ்ரஸ் இரட்டை கோல் மற்றும் அகுவேரா, காப்ரியல் ஜேசுஸின் கோல்கல் மூலம் நடப்புச் சம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் பாதி ஆட்டத்தில் 4-0 என முன்னிலை பெற்றது. 

பெரிதும் வெற்றி உறுதியான நிலையில் இரண்டாவது பாதியை ஆரம்பித்த மான்செஸ்டர் சிட்டி சார்பில் அகுவேரா 57 மற்றும் 81 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பெற்றார். போட்டியின் மேலதிக நேரத்தில் கிடைத்த பெனால்டி மூலம் அஸ்டன் வில்லாவினால் ஒரு கோலை பெற முடிந்தது. 

இந்த வெற்றியுடன் சிட்டி புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் அந்த அணி முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 14 புள்ளிகளால் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜுவன்டஸ் எதிர் ரோமா

ஜுவன்டஸ் சார்பில் தொடர்ந்து கோல்களை குவித்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரோமா அணிக்கு எதிரான போட்டியில் தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜுவன்டஸ் சிரீ A தொடரில் முதலிடத்திற்கு முன்னேறியது. 

போட்டி ஆரம்பத்தின் 3ஆவது நிமிடத்தில் மெரிஹ் டெமிரால் பெற்ற கோல் மூலம் ஜுவான்டஸ் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 10 ஆவது நிமிடத்தில் ரொன்டோ பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொண்டு டிகோ பெரோட்டி ரோமா சார்பில் கோல் திருப்பியபோதும் ஜுவன்டஸின் வெற்றியை தடுக்க முடியவில்லை. 

ரொனால்டோ இந்தப் பருவத்தில் பெறும் 14 ஆவது கோலாக இது இருந்தது. கடைசியாக அவர் ஆடிய ஆறு சிரீ A போட்டியில் பெறும் ஒன்பதாவது கோல் இதுவாகும்.   

PSG எதிர் மொனாகோ

நெய்மாரின் இரட்டை கோல் மற்றும் ஒரு கோல் உதவியோடு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சோபித்தபோதும் மொனாகோ அணிக்கு எதிரான இந்தப் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.  

போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே நெய்மார் கோல் பெற்ற நிலையில் மொனாகோ 07 மற்றும் 13 ஆவது நிமிடங்களில் விரைவாக இரண்டு கோல்களை பெற்றது. 

எனினும் 24 ஆவது நிமிடத்தில் போடே பல்லோ டூர்ரோவின் ஓன்கோல் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த நிலையில் நெய்மார் 42 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை போட்டார். 

இந்நிலையில் இஸ்லாம் ஸ்லிமானி 70 ஆவது நிமிடத்தில் புகுத்திய சர்ச்சைக்குரிய கோல் ஒன்றின் மூலம் மொனாகோ போட்டியை சமநிலை செய்தது. இந்த கோல் ஆரம்பத்தில் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே கோலாக ஏற்கப்பட்டது. 

எனினும் PSG லீக் 1 புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

http://www.thepapare.com/international-football-roundup-12th-january-2019-ronaldo-tamil/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • என்ன செய்யிறது எங்கடை வீடைப்பற்றி பக்கத்துவீட்டுக்காரன் சொல்லிகேக்கவேண்டிய நிலையில் எங்கடை ஆட்கள் இருப்பதை பார்த்து ………….. விடுதலை புலிகளின் சாப்பாடை பற்றித்தான் நிறையபேருக்கு பிரச்சனையா இருக்கு. தலைவர் நல்லபடியாகத்தான் தன்னுடைய பிள்ளைகளை பார்த்தார் . இது எனது சகோதரர் சொன்னது  எல்லோருக்கும் ஒரேவகையான உணவு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் செயற்படடை பொறுத்து அவர்களின் உணவும் மாறுபடும். அரசியல், நிர்வாகம் செய்ப்பவர்களுக்கு சாதாரண உணவு {அது யாராக இருந்தாலும்}, பயிற்சி, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு விசேட உணவு, விசேட பயிற்சியில் இருப்பவர்களுக்கு அதிவிசேட உணவு (இந்த உணவை கனவில் கூட ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாடீர்கள்  )  
  • சார்!  நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்து ஏதாவது அர்த்தம் தெரிகின்றதா ?
  • அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம்.     ஒரே ஒரு மனிதன்.. அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல.. ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான். தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகிறது.. அந்த இறுதி மூச்சு காணொளி பார்க்கும் எவரையும் கொதித்தெழ செய்யும்.. அந்த கொதித்தெழுதலைதான் இன்று அமெரிக்கா பிரிட்டன் உட்பட வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கலந்து வசிக்கும் நாடுகளில் பற்றி எரியும் போராட்டங்கள் மூலம் பார்க்கிறோம். இந்த போராட்டங்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் நிரப்பக்கூடிய முக்கியமான போராட்டங்களாக பார்க்கிறேன்.. இந்த போராட்டங்கள் உலக சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது.. அதன் பெயர் `அறம்’.. இந்த பூமி பந்து முழுமைக்கும் பரவியிருக்கும் மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டியது அந்த அறம்தான். காவலர் சீருடை அணிந்த ஒரு வெள்ளைக்காரனின் நிறவெறிக்கு கொல்லப்பட்டவர் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவர். ஆனால் அந்த கொலையை கண்டித்து உலகத்தையே வீட்டுக்குள் முடக்கிப்போட்ட இந்த கொடூரமான கொரோனா காலத்திலும் மக்கள் வீதிக்கு வந்தார்கள். அப்படி வீதிக்கு வந்தவர்கள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் அல்ல.. என்பதும் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கிளர்ந்த இந்த போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்பதுதான் பற்றி எரியும் இந்த போராட்டத்திற்கு நடுவில் நம்மை நெகிழச் செய்கிறது. ஆம் கொன்றவன் என் இனத்தானாக இருந்தாலும் அவன் செய்தது மாபெரும் பிழை என்று அறத்தின்பால் நிற்க வீதிக்கு வந்தார்கள் வெள்ளையர்கள்.. இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இதை அப்படியே இந்திய மனநிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.. அசிங்கமாக இருக்கிறது.. நடந்து போய்விடக்கூடிய தூரமான ஈழத்தில் பெரும் இனப்படுகொலை நடக்கிறது.. இந்தியர்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. சிங்களர்கள் ஈழத்தமிழர்களை கண்ணைக் கட்டி பின் மண்டையில் சுட்டுக் கொன்றதுபோலவே ஆந்திராவில் மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி 20 தமிழர்களை தெலுங்கர்கள் சுட்டுக்கொன்றார்கள்.. ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கர்களை விடுங்கள்.. இங்கு தமிழில் பேசி தமிழில் எழுதி தமிழால் வாழ்ந்து கொண்டு.. வெளியே தமிழராகவும் உள்ளே தெலுங்கராகவும் இருப்பவர்களே அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி தமிழில் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள்.. மடை மாற்றினார்கள் சுத்தமான காற்று வேண்டும்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று போராடிய தூத்துக்குடி மக்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள்… வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை என்று மாநில முதல்வர் வெட்கமே இல்லாமல் சட்டசபையில் சொன்னார்.. தமிழர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி இந்து மதவெறியர்களால் இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படுகிறார்கள்.. இந்துக்கள் எனும் பொது சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. சாதி வெறிகாரணாமாக ஒடுக்கப்பட்ட சாதிக்காரனும் அவனை காதலித்த மகளையும் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யும்போதும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் மலம் கரைத்து ஊற்றப்படும்போதும் சேரிகள் கொளுத்தப்படும்போதும் ஊர் சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்தபடியே இருக்கிறது.. இதற்கு பச்சை தமிழன் பச்சை திராவிடன் பச்சை இந்தியன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. அசுரன் படத்தில் , “செருப்பு போட்டதுக்காக அவன் என்ன அடிச்சது கூட வலிக்கல மாமா.. ஆனா சுத்தி நின்னு வேடிக்கைப் பார்த்த ஒருத்தர் கூட ஏன் அந்த பிள்ளையை அடிக்கேனு கேட்கல மாமானு” தனுஷ் கட்டிக்கப்போகும் பெண் சொல்வதுபோல் ஒரு அற்புதமான காட்சி வரும்.. அதுதான் உண்மை.. எல்லா அநீதிக்கும் துணையாக நிற்பது இந்த வேடிக்கைப் பார்க்கும் புத்திதான்.. ஆனால் மனிதம் என்பது வேடிக்கைப் பார்ப்பது அல்ல.. அநீதி நடக்கும்போது அறத்தின் பால் நிற்க வேண்டும் என்பதுதான் வெள்ளை நிறவெறியால் மூச்சு நரம்பு நெறித்து கொல்லப்பட்ட கறுப்பினத்து ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக வீதிக்கு வந்து போராடும் வெள்ளையர்கள் இந்த உலகத்திற்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.. ஆம்.. அறம் என்பது யாதெனில் என்பதை கொஞ்சம் வெட்கத்தை விட்டு வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..! கார்டூனிஸ்ட் பாலா https://orupaper.com/american/
  • பிளான் எல்லாம் நல்லாய்த்தான் இருக்கு ஆனால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது? தாயகத்தில் தற்போது தமிழருக்கு தலைமை வகிக்கக்கூடிய ஒருவரின் பெயரை சொல்லுங்கள். புலம்பெயர் தமிழர்கள்   போராட்டத்தை முன்னெடுக்க முடியாது தான்.இனிவரும் காலங்களில் தாயக அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் பிரசன்னமும் நிச்சயம் இருக்க வேண்டும். ஏனெனில் புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்கள அரசிற்கு மட்டும் நன்றாகவே தெரியும்.  சீமான் ஈழமக்களின் அவலங்களை மேடைக்கு மேடை பேசும் போது வராத கோவம் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்லும் போது ஏன் உங்களைப்போன்றவர்களுக்கு கோபம் வருகின்றது? இலங்கையில் ஆமைக்கறி,உடும்புக்கறி சாப்பிடுபவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? சீமான் தமிழினத்தின் தலைவராக மாறவில்லை.
  • அம்மா தாயே, வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு என்கின்ற ரீதியில் எல்லாவற்றையும் போட்டுக் குழப்புகின்றீர்கள். 😀