• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

பிரதமருக்குள்ள அதிகாரங்களை தன்னகப்படுத்த ஜனாதிபதி தீவிர முயற்சி: எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு

Recommended Posts

(எம்.மனோசித்ரா)

19 ஆம் திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரத்தை தன்னகப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவதற்கான உள் நோக்கமும் இதுவே என எதிர்கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகின்றன.

gota___mahinda.jpg

இதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் தற்போது அதிகார மோதலொன்று ஏற்பட்டுள்ளது.

இதனை அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகக் காண்பிக்க முயற்சிக்கின்றனர். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரங்களையும் தன்னகப்படுத்திக் கொண்டு முழுமையான நிறைவேற்றதிகார ஜனாதிபதியாவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயற்சிப்பதற்கான உள்நோக்கமும் இதுவேயாகும்.

ஜனாதிபதி கடைகளில் போய் அமர்ந்து கொள்வதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.  

https://www.virakesari.lk/article/73166

Share this post


Link to post
Share on other sites

அடுத்த தேர்தலுடன் இவர்கள் 19  வது திருத்த சடடத்தை மாற்றி ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தை மீண்டு கொண்டு வருவார்கள் என்று எதிர் பார்க்கலாம்। இப்போது கோதாவிட்கு ஒரு சிக்கலான நிலைமை இருப்பது உண்மைதான்। இருந்தாலும் சகோதரகளுக்குள் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை। இருந்தாலும் இவர்கள் இதனை பிரச்சினையாக காண்பிப்பதுக்கு காரணம் அடுத்த பொதுத்தேர்தலில் மக்களின் அமோக வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கமே அன்றி வேறில்லை। அதாவது சிங்கள மக்களின் அமோக ஆதரவை பெற்று சிங்கள ஆட்சியை அமைப்பது।

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, பிழம்பு said:

19 ஆம் திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரத்தை தன்னகப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்

கோத்தாவை ஏமாத்தி ஜனாதிபதி ஆக்கிவிட்டு தான் ஆட்சியை கைப்பற்றிய கோத்தாவை ஏமாத்தி ஜனாதிபதி ஆக்கிவிட்டு தான் ஆட்சியை கைப்பற்றிய மகிந்த என்ன ஏமாளியா?

 

கோத்தாவின் பின்னடைவும் அழிவும் மகிந்த குடும்பத்தால் தான்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அரசுக்கு அழுத்தம் தராதீர் என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு!   ´அரசியல் தீர்வு தருவோம் என்ற உத்தரவாதம் எதனையும் முன்வைத்து புதிய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, எவரும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்ககூடாது´ எனத் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்வதிகார போக்கை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இனமக்களதும் பிரச்சினைகளையும் உணர்ந்து அவற்றுக்கான தீர்வினை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதியினதும் அரசினதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் வாழும் இனங்களின் தலைமைகள் தமது மக்களின் அபிலாஷைகளை எடுத்து இயம்புவதும் அதற்கான தீர்வைக் கோரி நிற்பதும் அவர்தம் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையைச் செய்ய முற்படுவோரை அதிகாரப் போக்கில் தடுத்த நிறுத்த நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கலாசாரம் ஆகும் எனவும் ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் நீண்ட காலமாகச் சிறுபான்மை இனங்கள் தமக்கான அதிகார பரவாக்கல் குறித்து குரல் எழுப்பி வருகின்றன. இதற்கான தீர்வை எட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவற்றின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் அரசியல் தீர்வுகள் குறித்து எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசின் பிரதிநிதியான அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். எந்தச் சமூகம் தனது பிரச்சினையை ஆளும் தரப்பிடமே முன் வைக்க முடியும். அதனை சரிவர அறிந்து அவற்றிக்குத் தீர்வு தர வேண்டியது ஆட்சியில் இருக்கும் அரசின் பொறுப்பாகும். அதனை விடுத்து, அழுத்தம் கொடுக்கக் கூடாது, கோரிக்கை வைக்கக் கூடாது எனத் தெரிவிப்பது ஆணவத்தின் வெளிப்படாகும். இதனை ஜனநா யக ரீதியாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ´இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் நான் ஜனாதிபதி, எனவே அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவி ஏற்பு தொடக்கம் நடந்த முடிந்த சுதந்திர தின உரை முதல் அழைப்பு விடுத்து வருகின்றார். அவரது நல் எண்ணத்தை சிறுபான்மை சமூகங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன. இந்நிலையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. எனவே, இத்தகைய கருத்து பகிர்வுகளைத் தவிர்த்து அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படும் எண்ணவோட்டங்களை விதைத்து இந்த நாடு ஜனநாயகத்தின் அடையாளமாக உலக அரங்கில் வலம்வர ஆவன செய்யவேண்டும் என்றார்.   http://tamil.adaderana.lk/news.php?nid=125856
  • பொறுமையிழந்த விக்கியிடம் சூடு வாங்கிய கஜேந்திரகுமார்!     தமிழ் மக்கள் கூட்டணிமீதும் அதன் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தொடர்பாகவும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் கஜேந்திரகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தொடர்பான பலவிடயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடகவியலாளர் கேள்விகள் கேள்விகள்:-“தமிழ்த் தேசியமக்கள் முன்னணி”யினர் நீங்கள் ஒற்றையாட்சிஅரசியலமைப்புக்குள் தமிழ் மக்களைஏமாற்றிமுடக்குவதற்குஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சிக்குள் இணைந்துள்ளதாக கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன? பதில்:-யார் இந்தத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர்? அந்தப் பழையதமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானேநீங்கள் கூறுகின்றீர்கள்? ஊடகவியலாளர்:– ஆம். பதில்:-அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பைமாற்றிவிட்டார்களா? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஸ்டி என்றுமாற்றியிருந்தால் ஜீ.ஜீ.தனதுகட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாகஅர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம்,வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாகமுடியும். ஜீ.ஜீ.சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே! எனக்குத் தெரிந்தவரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்றுவரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சிதான்! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம். நாங்கள் கேட்பதுசமஸ்டி. அதுஎல்லோருக்குந் தெரிந்தவிடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்தியஅரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோவொருகரவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா? ஊடகவியலாளர்:-ஆமாம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள்! பதில்:-சரி! எங்களுக்கு அவ்வாறானஉறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்கமாட்டோம் அல்லவா? ஊடகவியலாளர்:-விளங்கவில்லை. பதில்:-அதாவதுநாங்கள் மத்தியஅரசாங்கங்களுடன் கரவான உறவுவைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்னசெய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்றுசேரவிடாது தடுப்போம் அல்லவா? அதாவதுதமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா? ஊடகவியலாளர்:-ஆமாம். பதில்:-நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம்? அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிடவேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பின் ஒற்றுமையைமுதலில் 2009ல் குலைத்தவர் யார்? தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்துஅதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார்? பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்துதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்ததுயார்? காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றுசேர்ந்துதமக்குள் ஒருஐக்கியத்தைத் தேடியபோதுதம் கட்சிக்கெனவேறுஒருஅலகைஉண்டுபண்ணிகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப்பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர்யார்? யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார்? ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக் கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார்? எமது இரண்டாவது “எழுகதமிழ்” நிகழ்வைஎப்படியாவதுகுலைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார்? தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஸ்டியா, தனிநாடாஎன்பதைவெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார்? இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் கரவாகக் கண்டு வந்தவர்கள் யார்? கோதாபயபாதுகாப்புசெயலாளராக இருந்தபோது தமது சகோதரனை விடுவிக்க கோதாபயவுடன் கரவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்குஆதரவானமக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார்? பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்றரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசாங்கத்திற்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்குமீன் போலக் காட்டும் கட்சிஎந்தக் கட்சி? ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில்அடம் பிடிப்பவர்கள் யார்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போனநிலையில் அரசியலைகொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டுஉருவாகும் போது தேசியநலன் கருதிதாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்குதுரோகம் செய்பவர்கள் யார்? ஆகவேதமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக்குலைத்துவருபவர்கள் யார் என்றுநான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒருகேள்விகேட்கவிரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மைஅளிக்கும்? ஊடகவியலாளர்:-அரசாங்கத்திற்கும்,பேரினவாதிகளுக்கும்! பதில்:-சரியாகச் சொன்னீர்கள்! அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மைஅளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒருகட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றிவருவது நாங்களா? அவர்களா?. அத்துடன் இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்கமுடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பதுஎ னதுசந்தேகம். எனதுசந்தேகம்பிழையென்றால் இப்பொழுதாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டிவைத்து விட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்துபயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை!   http://thamilkural.net/?p=28715
  • ஈழம் மகிழ்நன் வருக! வருகவே!!  
  • அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்!   “சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசுகள் வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடிபணியாது.” இவ்வாறு தெரிவித்தார் கோட்டாபய அரசின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும், இந்தக் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலக முடியாதவாறு அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் கொழும்பில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்துக்கேற்ப அமெரிக்கா ஆடுகின்றதோ அல்லது அமெரிக்காவின் தாளத்துக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆடுகின்றதோ என எமக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நாட்டின் ஜனாதிபதி சம்பந்தன் அல்ல கோட்டாபய என்பதை அமெரிக்கா முதலில் கருத்தில்கொள்ள வேண்டும். கோட்டாபய அரசுடன் பேசாமல் சம்பந்தன் குழுவினர் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் கதைகளைக் கேட்டுக்கொண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா அநாவசியமான முடிவுகளை எடுப்பதுடன் விசமத்தனமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது” – என்றார். http://thamilkural.net/?p=28714  
  • 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சஜித்   by : Dhackshala 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும், 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்தோடு, இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த 7 ஆம் திகதி அரசாங்கத்தால் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க, 2020ஆம் ஆண்டு ஆரம்பித்து முதல் 15 நாட்களில் மட்டும், 142 பெண் துஸ்பிரயோகங்கள், 42 பாலியல் குற்றச் சாட்டுக்கள், 54 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக இலங்கை பொலிஸுக்கு முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெண்களை துஸ்பிரயோகம் செய்த 78 முறைப்பாடுகள், பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான 34 முறைப்பாடுகள் மட்டுமே இதுவரை விசாரணை செய்யப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டைப் பார்க்கும்போது, 2019ஆம் ஆண்டில் துஸ்பிரயோக சம்பவங்கள் 10 வீதத்திற்கும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் 27.6 வீதத்திற்கும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தற்போது 2020இல் விசாரணை நிறைவு செய்யப்பட்ட சம்பவங்களைப் பார்க்கும்போது அது அதிகரித்த நிலைமையே காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான விடயமாகும். நாடாளுமன்றுக்கு வழங்கப்பட்ட அறிக்கைக்கு இணங்கவே நான் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளேன். அத்தோடு, 2020-02.07ஆம் திகதியில் மட்டும் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் 6 பதிவாகியுள்ளன. ஊடகங்களும் இதனை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இவ்வாறான சம்பவங்கள் 7 பதிவாகியுள்ளன. இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் என நாம் இவ்வேளையில் வலியுறுத்த விரும்புகிறோம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டிருந்தால், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மீதான மக்களின் நம்பிக்கையும் முற்றாக இல்லாது போய்விடும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக, இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த சம்பவங்கள் தற்போது அதிகரித்துக்கொண்டு வருவது அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடாகவே நாம் காண்கிறோம். ஏன், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன- இதனை கட்டுப்படுத்த எவ்வாறான செய்றபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் நாடாளுமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். http://athavannews.com/2020ஆம்-ஆண்டின்-முதல்-15-நாட்கள/