• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பிழம்பு

சௌதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள்

Recommended Posts

 • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
 
சௌதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள்படத்தின் காப்புரிமை TWITTER

சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சௌதி அரேபியாவில் பனிப்பொழிவா?

கடுமையான வெயிலுக்கு பெயர்பெற்ற சௌதி அரேபியாவில் எப்படி பனி பொழிகிறது என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல் சௌதி அரேபியா முழுவதும் இந்த பனிப்பொழிவு ஏற்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகளில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிப்பொழிவு நிகழ்வது இயல்பான ஒன்றே என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவுபடத்தின் காப்புரிமை TWITTER

இந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு ஆரம்பிப்பது குறித்த செய்தி கிடைத்ததும் சௌதி அரேபியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலாவுக்கு வருகின்றனர். "பனிப்பொழிவுக்கு பின்னர் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நம்புகிறோம்" என்று அந்நாட்டு சுற்றுலா துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஷ்ரக் அல்-அவஷட் செய்தி வெளியிட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவுபடத்தின் காப்புரிமை TWITTER

சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் உள்ளூர் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர்கள் உயரம் கொண்ட ஜபல் அல்-லாஸ் மலையில் அதிக அளவில் பாதாம் கிடைப்பதால் அதை இங்குள்ள மக்கள் 'பாதாம் மலை' என்றே அழைக்கிறார்கள்.

சௌதி அரேபியாவில் இயற்கை அழகு மிகுந்துள்ள பிராந்தியங்களில் ஒன்றாக டபூக் பிராந்தியம் விளங்குகிறது. ஜோர்டானை ஒட்டி அமைந்துள்ள இந்த பிராந்தியத்தில்தான் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் நறுமணத் தாவரங்கள் அதிக அளவில் வளர்கின்றன.

டபூக் பிராந்தியத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பானது என்றாலும், சமூக ஊடகங்களில் இதுதொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

"உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? இது ரஷ்யா இல்லை; இத்தாலி, நார்வேவும் இல்லை" என்று தெரிவித்து அப்துல் மஜீத் என்பவர் ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, லெபனான், இரான், பாலத்தீனம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு மக்களை வாட்டி வருகிறது.

https://www.bbc.com/tamil/global-51087348

Share this post


Link to post
Share on other sites

நேற்று துபாயிலும் சில இடங்களில் ஐஸ் மழை பெய்ததை பார்க்க முடிந்தது 

Share this post


Link to post
Share on other sites

அவுஸில தீ எரிஞ்சு  எரித்து கொல்லுது, சவுதியில பனி கொட்டி கொல்லுது.....!

தீக்கு திமிரும், பனிக்கு  பனியும் பிடிச்ச உலகத்தில வாழுறம்.....!   🤔

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று துபாயிலும் சில இடங்களில் ஐஸ் மழை பெய்ததை பார்க்க முடிந்தது 

நீங்க எந்த நாட்டில தான் ராஜா வாழுறீங்க?

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, suvy said:

அவுஸில தீ எரிஞ்சு  எரித்து கொல்லுது, சவுதியில பனி கொட்டி கொல்லுது.....!

தீக்கு திமிரும், பனிக்கு  பனியும் பிடிச்ச உலகத்தில வாழுறம்.....!   🤔

இப்ப எல்லாம் தலைகீழாய் நடக்குது.நான் இருக்கிற இடத்திலை நோர்மலாய் இப்ப நடக்க ஏலாத அளவுக்கு சினோ இருக்கும். உள்ள இடம் முழுக்க ஒரே பச்சைப்பசேலண்டு கிடக்கு:(

Share this post


Link to post
Share on other sites

இங்கு இந்தக் கிழமை முழுக்க,  +12 பாகை அளவில் காலநிலை இருக்கும்.
இந்த மாதங்களில்  -10  பாகையளவில் குளிராக இருப்பது வழமை.
20 பாகை வித்தியாசம் என்பது, மிக அதிகம்.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

இப்ப எல்லாம் தலைகீழாய் நடக்குது.நான் இருக்கிற இடத்திலை நோர்மலாய் இப்ப நடக்க ஏலாத அளவுக்கு சினோ இருக்கும். உள்ள இடம் முழுக்க ஒரே பச்சைப்பசேலண்டு கிடக்கு:(

அப்படி அதிசயமா எந்த ஊருல நிற்கிறீங்க..:) ?

நாலைஞ்சு படத்தை புடிச்சு போடுங்கோ சாமி..!

இங்கே துபையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பேய் மழை பெய்தது..!

Drama-As-Flights-Get-Cancelled-Delayed-After-Heavy-Rains-Left.jpg?resize=800,445&ssl=1  EOAA4jZXUAYcZGz-e1578746052963.jpeg

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க எந்த நாட்டில தான் ராஜா வாழுறீங்க?

நான் இலங்கையில் தான் அண்ண ஆனால் செய்திகளில் அனைத்தையும் அறிந்து கொள்வது எனது வேலை உறுதியான பின்னர்  சில வேளைகளில் சம்பளமற்ற விடுமுறையில் சென்று வேலை செய்யலாம் என நினைத்திருக்கிறன் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.puthinamnews.com/?p=78272
  • ஐ.தே.க.வின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய? ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, கரு ஜயசூரியவை இடைக்காலத் தலைவராக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்க வருமாறு சஜித் பிரேமதாசவுக்குப் பல முறை ரணில் விக்ரமசிங்க தரப்பினால் அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அவர் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. தேர்தல் தோல்வியோடு கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் பிரேமதாச, தலைவரைச் சந்திக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்திருக்கும் நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கினால் மாத்திரமே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும் சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்தப் பின்னணியில், கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்கி, அவரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, செயற்குழுவினரின் ஆதரவையும் பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இதேவேளை, இடைக்கால தலைவராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க இணக்கம் தெரிவித்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏனைய நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின்படி, தற்போதைய தலைவர் பதவியை இராஜினாமா செய்தால் மட்டுமே புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். இல்லையேல், எதிர்வரும் 2024ஆம் ஆண்டுவரை ரணில் விக்ரமசிங்கவே தலைவராகத் தொடர்வார். இதேநேரம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாயிருந்தால், இம்முறை பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரிய களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் முரண்பாடுகள் இல்லாத நிலையில், கட்சியின் ஜனாநாயக சம்பிரதாயங்களின்படி தலைமைப் பதிவியை ஏற்றுக்கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். கட்சியின் யாப்பு எவ்வாறிருப்பினும் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கு சஜித் பிரேமதாச கைக்கொண்டுவரும் நடைமுறைகள் பற்றிக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பின்னணியிலேயே சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து அந்நியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாகவிருந்தால் சஜித் அணியினர் தனிவழி செல்வது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன. https://www.puthinamnews.com/?p=78237 ஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகி, சஜித் பிரேமதாசவிடம் தலைமைப் பதவியைக் கையளிக்க வேண்டும் என்பது, தொடர்ச்சியான கோரிக்கையாகும். சஜித் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். எனினும், பௌத்த பீடங்கள் கரு ஜயசூரியவை தலைவராக்குமாறு கோரி வருகின்றன. இந்த நிலையில், தலைமைத்துவ சபை ஒன்றை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு, தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார். ஆனால், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தலைமைத்துவ சபையை நிராகரித்து, சஜித்தை தலைவராக்கும் முயற்சிகளை முன்னெடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு, சாதகமான பதில்கள் கிடைக்காத பட்சத்தில், இரகசிய வாக்கெடுப்பை நடத்தி, தீர்வைக் காணும் முயற்சிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.puthinamnews.com/?p=78275
  • கொழும்பு, கம்பஹாவில் போட்டியிடவே ஆலோசனை; மாவை தெரிவிப்பு! “ வரவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருகின்றது. மலையகத்தில் போட்டியிடும் எண்ணம் ஏதும் எமக்கு இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதனை, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் வெளிப்படுத்தியுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 10வது ஆண்டு நினைவுப் பேருரை, நேற்று புதன்கிழமை மாலை, ஹட்டனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, வீ.இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுத் தேர்தலில் மலையகத்தில் போட்டியிடாது என கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரான மாவை சேனாதிராஜா, என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது பற்றியே பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். அத்துடன் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக அனைவரும் கலந்து பேசித் தீர்மானிக்கலாம் என்றும், மாவை சேனாதிராஜா என்னிடம் தெரிவித்தார்.” என்றுள்ளார். https://www.puthinamnews.com/?p=78240
  • விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி முல்லைத்தீவில் அகழ்வு       by : Dhackshala முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும் இதன்போது எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்குப் பின்புறமாக இந்த அகழ்வுப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடியே இவ்வாறு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மிக நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/விடுதலைப்-புலிகளின்-தங்க/
  • யாழ்.பல்கலை மாணவி கொலை விவகாரம்: கணவருக்கு விளக்கமறியல்   by : Litharsan யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அவரது கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி அவரை எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார். குறித்த வழக்கில் கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர். தனது மகளை 2017ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்ததுடன் அவருடன் வாழ்ந்து வந்ததாகவும் அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன என்றும் மாணவியின் தாயார் சாட்சியமளித்தார். இதையடுத்து, ‘மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். மனிதப் பிறப்பு எடுத்துவிட்டு மிருகமாக வாழ முடியாது’ என நீதவான் சந்தேகநபருக்கு எச்சரித்தார். அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி வருட சிங்கள மாணவி ஒருவர் நேற்று பிற்பகல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலம் கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருந்தது. கொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி காஞ்சனா (வயது – 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கைதானவர் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் என்பதுடன் குறித்த பெண்ணின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவி-கொலை-வி-2/