Sign in to follow this  
பிழம்பு

சௌதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள்

Recommended Posts

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
 
சௌதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள்படத்தின் காப்புரிமை TWITTER

சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சௌதி அரேபியாவில் பனிப்பொழிவா?

கடுமையான வெயிலுக்கு பெயர்பெற்ற சௌதி அரேபியாவில் எப்படி பனி பொழிகிறது என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல் சௌதி அரேபியா முழுவதும் இந்த பனிப்பொழிவு ஏற்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகளில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிப்பொழிவு நிகழ்வது இயல்பான ஒன்றே என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவுபடத்தின் காப்புரிமை TWITTER

இந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு ஆரம்பிப்பது குறித்த செய்தி கிடைத்ததும் சௌதி அரேபியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலாவுக்கு வருகின்றனர். "பனிப்பொழிவுக்கு பின்னர் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நம்புகிறோம்" என்று அந்நாட்டு சுற்றுலா துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஷ்ரக் அல்-அவஷட் செய்தி வெளியிட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவுபடத்தின் காப்புரிமை TWITTER

சுற்றுலாவுக்கு பெயர்போன இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் உள்ளூர் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர்கள் உயரம் கொண்ட ஜபல் அல்-லாஸ் மலையில் அதிக அளவில் பாதாம் கிடைப்பதால் அதை இங்குள்ள மக்கள் 'பாதாம் மலை' என்றே அழைக்கிறார்கள்.

சௌதி அரேபியாவில் இயற்கை அழகு மிகுந்துள்ள பிராந்தியங்களில் ஒன்றாக டபூக் பிராந்தியம் விளங்குகிறது. ஜோர்டானை ஒட்டி அமைந்துள்ள இந்த பிராந்தியத்தில்தான் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் நறுமணத் தாவரங்கள் அதிக அளவில் வளர்கின்றன.

டபூக் பிராந்தியத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பானது என்றாலும், சமூக ஊடகங்களில் இதுதொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

"உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? இது ரஷ்யா இல்லை; இத்தாலி, நார்வேவும் இல்லை" என்று தெரிவித்து அப்துல் மஜீத் என்பவர் ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, லெபனான், இரான், பாலத்தீனம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு மக்களை வாட்டி வருகிறது.

https://www.bbc.com/tamil/global-51087348

Share this post


Link to post
Share on other sites

நேற்று துபாயிலும் சில இடங்களில் ஐஸ் மழை பெய்ததை பார்க்க முடிந்தது 

Share this post


Link to post
Share on other sites

அவுஸில தீ எரிஞ்சு  எரித்து கொல்லுது, சவுதியில பனி கொட்டி கொல்லுது.....!

தீக்கு திமிரும், பனிக்கு  பனியும் பிடிச்ச உலகத்தில வாழுறம்.....!   🤔

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று துபாயிலும் சில இடங்களில் ஐஸ் மழை பெய்ததை பார்க்க முடிந்தது 

நீங்க எந்த நாட்டில தான் ராஜா வாழுறீங்க?

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, suvy said:

அவுஸில தீ எரிஞ்சு  எரித்து கொல்லுது, சவுதியில பனி கொட்டி கொல்லுது.....!

தீக்கு திமிரும், பனிக்கு  பனியும் பிடிச்ச உலகத்தில வாழுறம்.....!   🤔

இப்ப எல்லாம் தலைகீழாய் நடக்குது.நான் இருக்கிற இடத்திலை நோர்மலாய் இப்ப நடக்க ஏலாத அளவுக்கு சினோ இருக்கும். உள்ள இடம் முழுக்க ஒரே பச்சைப்பசேலண்டு கிடக்கு:(

Share this post


Link to post
Share on other sites

இங்கு இந்தக் கிழமை முழுக்க,  +12 பாகை அளவில் காலநிலை இருக்கும்.
இந்த மாதங்களில்  -10  பாகையளவில் குளிராக இருப்பது வழமை.
20 பாகை வித்தியாசம் என்பது, மிக அதிகம்.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

இப்ப எல்லாம் தலைகீழாய் நடக்குது.நான் இருக்கிற இடத்திலை நோர்மலாய் இப்ப நடக்க ஏலாத அளவுக்கு சினோ இருக்கும். உள்ள இடம் முழுக்க ஒரே பச்சைப்பசேலண்டு கிடக்கு:(

அப்படி அதிசயமா எந்த ஊருல நிற்கிறீங்க..:) ?

நாலைஞ்சு படத்தை புடிச்சு போடுங்கோ சாமி..!

இங்கே துபையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பேய் மழை பெய்தது..!

Drama-As-Flights-Get-Cancelled-Delayed-After-Heavy-Rains-Left.jpg?resize=800,445&ssl=1  EOAA4jZXUAYcZGz-e1578746052963.jpeg

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க எந்த நாட்டில தான் ராஜா வாழுறீங்க?

நான் இலங்கையில் தான் அண்ண ஆனால் செய்திகளில் அனைத்தையும் அறிந்து கொள்வது எனது வேலை உறுதியான பின்னர்  சில வேளைகளில் சம்பளமற்ற விடுமுறையில் சென்று வேலை செய்யலாம் என நினைத்திருக்கிறன் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • 60,330 have signed. Let’s get to 75,000       https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
    • நீங்கள் சொல்வதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கிருபன் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஈழத்தில், பெரும்பான்மை சிங்கள இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிருபன், தமிழகத்தில் சிறுபான்மை தெலுங்கர்கள், அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு, பெரும்பாண்மை தமிழர்களை ஆள்வதை என்ன கோணத்தில் நோக்குகிறார் என்கிற கேள்வி எழுகின்றது. எமது நாட்டின் அரசியல் அனுபவத்தினால் பயம் கொள்வதாக கூட இருக்கலாம். பண்டாரநாயக்க (தெலுங்கர்) சிங்கள தேசியவாதம் பேசி, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவருவேன் என்று என்று பேசி பதவிக்கு வந்தார், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் அதேயே பேசி அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில், நாம் தமிழர் நிலைப்பாடும் அதேபோல அமையுமோ என்று அவர் கவலை கொள்வது நியாயம். ஆயினும் பெரும்பான்மையினமாக அங்கே தமிழர் இருந்தாலும், ஆளும் சிறுபான்மையினர், ஊழல் இல்லாத, நேர்மையான ஆட்சி செய்தால், சீமானுக்கு அங்கே இடமில்லை என்பதும் உண்மைதானே. 350 கோடி பிரசாந்த் கிசோருக்கு கொடுத்து, வாக்குக்கு காசும் கொடுத்து பதவிக்கு வருபவர்கள், அந்த செலவழித்த பணத்தினை எடுக்க, இன்னும் ஊழல் செய்வார்களே. அதுக்கு மிச்சம் இருக்கும் மணலையும், மலையினையும் வித்து துளைப்பார்களே என்பதே என்போன்றவர்கள் பலர் அச்சம்.  சீமான் வேண்டாம் என்று சொன்னால், அப்படியானால் இந்த ஊழல் முதலைகளின் கையில் தமிழகம் என்னாகும் என்றும் சொல்லவேண்டும். அதிமுகவின் ஊழல் விபரம், மோடி கையில் இருப்பதால் தான் நீட், gst போன்ற எதிலுமே மத்திய அரசின் மூக்கு நுழைத்தலை தடுக்க முடியவில்லை. இதே நிலை தான் திமுக வந்தாலும். இதனால் தான் சீமான் திமுகவால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றார்.  சீமான் எதிர்ப்பு வேறு, அதுக்காக திமுக ஆதரவு நிலைப்பாடு எடுப்பது, ஊழலை ஆதரிப்பது ஆகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை என்று ஆதங்கம் இருந்தது. அதனால் தான் திமுக விடீயோக்களை கிருபன் இணைத்தபோது, கடுமையாக எதிரித்தேன்.  இந்த மாதிரி இயற்கையை பத்தி பேசும் ஒருவரின், கறி இட்லி குறித்த கருத்துதான் மனதை கவர்ந்ததால், அது எந்த வகை ரசனை என்று புரியவில்லை
    • சம்மந்தன் அவர்கள் தனது நண்பராக தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து கூறலாம்.  சம்மந்தரின் தனிப்பட்ட வாழ்த்து அவரது கட்சியோ அல்லது அவரது மக்களோ ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் காலையில் பாராளுமன்றத்தில் அனல் பறக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதம் செய்துவிட்டு மாலையில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆக மொத்தத்தில் சம்மந்தரின் இந்த வாழ்த்து செய்தியில் எமக்கு செய்தி ஏதும் இல்லை? 
    • அக்கருத்து இத்திரியின் போக்கு குறித்த பொதுவான கருத்தேயன்றி உங்களை குறிப்பிட்டு எழுதப்படவில்லை.        ஈழத் தமிழரின் போராட்டம் தோற்றதிலும் இனப்படுகொலையிலும் இந்திய மததிய அரசின் துரோகங்கள் திராவிடக் கட்சிகளின் துரோகஙகளின் எதிரவினை தான் நாம தமிழர் என்ற தமிழ் தேசீய எழுசசி. பின்னர் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சியாக வளர்கின்றது. ஈழப்போரின் முடிவின் நீட்சிதான் இந்த இனத் தேசீய எழுச்சி. ஒரு விடுதலைப்போராட்டம் எபபொழுதும் முற்று முழுதாக முடிவதிலலை. ஈழ விடுதலைப் போராட்டம்  புலிகள் தலைவர் ஈழத்தமிழர்கள்  அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளும் தான் இந்த எழுச்சியின் அடிப்படை - பின்னர் அது தமிழகத்தின் பல்வேறு தள அரசியல் சமூக பிரச்சனைகளோடு விரிவடைகின்றது. இந்தக் காலத்தில் சீமான் ஈழத்தமிழரின் போராட்ட அடயாளங்களை தக்கவைக்கின்றார், பின்னர் வேறுரொவர் தககவைக்கலாம். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் போராட்டம்  தியாகஙகள் இனப்படுகொலை நிகழ்வுகளை உயிரப்புடன் வைத்திருக்க தவறுகின்றோம்.. அதற்கு பதிலாக சீமானை தூற்ற முற்படுகின்றோம்?   இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைறைக்கும் உள்ள கால இடைவெளியில் ஈழ விடுதலைபபோரும் இனப்படுகொலையும் உயிர்புடன் இருக்கவேண்டும்.. உயிர்புடன் இல்லாத பட்சத்தில் எதிர்காலத் தலமுறை புதிதாக உணர்வுபெற்று எழுச்சி பெற வாய்ப்பில்லை. உயிர்புடன் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் பணியை ஈழத்தமிழராகிய நாம் எதிர்க்க தேவையில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தங்களாலனவரை மாவீரர் தினங்கள் இனப்படுகொலை தினைங்களை  எழுச்சியுடனும் உணர்வுடனும் தொடரவேணும். அதை விடுத்து நாம தமிழர் கட்சியை எதிர்ப்பதும் ஈழவிடுதலைப்போர் இனப்படுகொலை பற்றி பேசக் கூடாது என்பதால் என்ன நன்மை நிகழப்போகின்றது. ? இவைகள் தவிர்க்க முடியாதவை. நாயக்கர் கால ஆட்சியின் பின்னர் தமிழராக அடயாளப்படுத்துகின்றவர்கள்  கைகளில் தான் தமிழக அரசியலின் பொரும்பான்மை  அதிகாரம் உள்ளது . சிறு வணிகங்கள பெரு வணிகங்கள் அரசு துறை பணிகள் , சினிமாத் துறை , தலை நகர் சென்னையின் வர்த்தகம் என இந்த அதிகாரம் விரிவடைந்துள்ளது. இவைகள் பற்றி பேசாமல் தமிழ்த் தேசீய எழுச்சி சாத்தியமில்லை. திராவிடமா தமிழ்த்தேசீயமா என்று வரும்போது  பெரும்பாலான திராவிட கொள்கை ஈர்பாளர்கள் திராவிடத்தின் பக்கமே செல்கினறார்கள். இதன் அரசியல் தள விழைவு ஸ்டாலினையோ அவரின் மகன் உதயநிதியையோ அவரின் மகனையோ தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவது என்பது தெரிந்தும் அதை செய்கின்றார்கள், இதற்கு சுபவி வைககோ  மதி மாறன் என பலரை எடுத்துக்காட்டலாம். ஆனால் மஞ்சள் பையுடன் ரெயிலுக்கு ஐம்பது பைசா இல்லாமல் அரசியல் தொடங்கிய கருணாநிதியின் ஊளல்கள் சொத்துக் குவிப்புகள்  குடும்ப அரசியல் தொடக்கம் காங்கிரஸ் பிஜேபி கூட்டணிகள் இறுதியாக திரும்ப ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந் கிஷே◌ார் என்கிற பார்பனரின் கார்பரேட்  கம்பனியுடன் 350 கோடிக்கு ஒப்பந்தம் செய்து வேலை செய்வது தெரிந்தும் தமிழ்த்தேசீயத்தை விட திராவிடத்தின் பக்கம் நிற்கின்றனர்..  பெரியார் கொள்கைகளின் பற்றாளர் சுபவி ஸ்டாலினை தளபதி என்று துதிபாடுகின்றார், ஈழப்போராட்டம் முடிந்துபோன கதை என்கின்றார். வைகோ தமிழ்த்தேசீயம் என்று கிழம்பியிருக்கிறாங்கள் அவங்களை நம்பக் கூடாது என்று நாம் தமிழரை சாடி ஸ்டாலினுக்கு துதிபாடுகின்றார் ஸ்டாலின் பிரசாந் கிஸோர் என்கிற பர்பனர் ஆலோசனையில் நடக்கின்றார். இங்கே திராவிடக் கொள்கைகள் அரசியல் அதிகாரம் பார்பானியம் கார்பரேட் என அனைத்தும் கைகோர்த்து நிற்கின்றது. திராவிடக் கட்சித் தலமைகளின் பூர்வீகம் தமிழராக அடயாளப்படுத்துபவர்களிடமே உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகால தமிழகத்தின் அரசியல் அதிகாரம் திராவிடக் கட்சிகளிடமே உள்ளது.  பிரிவினை அரசியல் இந்த அதிகர குவிப்பின் சிதைவுக்கு அவசியமாகின்றது.