• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிழலி

ஊழிக் கால நடனம் - நிழலி

Recommended Posts

பனியும் மழையும் இல்லா
குளிர் கால இரவொன்றை
கடும் காற்று
நிரப்பிச் செல்கின்றது

...

காற்றின் முனைகளில்
பெரும் வாள்கள்
முளைத்து தொங்குகின்றன
எதிர்படும் எல்லாக்
கனவுகளையும்
வெட்டிச் சாய்கின்றன

திசைகள் இல்லா
பெரும் வெளி ஒன்றில்
சூறைக் காற்று
சன்னதம் கொண்டு
ஆடுகின்றது
புல்வெளிகளும் நீரோடைகளும்
பற்றி எரிகின்றன
தீ சூழும் உலகொன்றில்
பெரும் காடுகள் உதிர்கின்றன

காலக் கிழவன்
அரட்டுகின்றான்
ஆலகால பைரவன்
வெறி கொண்டு
ஆடுகின்றான்
சுடலைமாடன் ஊழித்
தாண்டவத்தின் இறுதி
நடனத்தை ஆரம்பிக்கின்றான்

அறம் பொய்த்த உலகில்
அழிவுகள்
ஒரு பெரும் யானையை போல்
நடந்து செல்கின்றது
மதனீரில் பாவங்கள் கரைகின்றது
பிளிறல்களில் எல்லா பொய்களும்
அழிகின்றது

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

 

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

 • Like 11
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கவிதை நன்றாக வந்திருக்கின்றது......அதில் ஏன் இந்த விரக்தி......இன்றைய உலகம் போகின்ற போக்கைப்பார்த்து மனசு வேகின்றதுபோல......ஆயினும் ஒரு கவிஞன் கூடியவரை அறம் பாடுவதை தவிர்த்தல் நல்லது என நினைக்கின்றேன்.இறுதி இரண்டு பந்திகளையும் சொன்னேன்.......!  👍

Share this post


Link to post
Share on other sites

மனித அராஜகத்துக்கு இயற்கை  தான் தகுந்த பதிலடி கொடுக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். அப்பாவிகள்  ஏன் தண்டிக்கப்பட வேண்டும்??

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

கவிதை நன்றாக வந்திருக்கின்றது......அதில் ஏன் இந்த விரக்தி......இன்றைய உலகம் போகின்ற போக்கைப்பார்த்து மனசு வேகின்றதுபோல......ஆயினும் ஒரு கவிஞன் கூடியவரை அறம் பாடுவதை தவிர்த்தல் நல்லது என நினைக்கின்றேன்.இறுதி இரண்டு பந்திகளையும் சொன்னேன்.......!  👍

 

1 hour ago, nunavilan said:

மனித அராஜகத்துக்கு இயற்கை  தான் தகுந்த பதிலடி கொடுக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். அப்பாவிகள்  ஏன் தண்டிக்கப்பட வேண்டும்??

கடந்த சில தினங்களாக புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் பற்றி விவரணங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மனித காரணங்களால் இயற்கை மிகழும் சிக்கலான போக்கில் நகர்ந்து கொண்டு இருக்கின்றதை உணர முடிந்தது. இங்கு கூட இப்ப கடும் பனிக்காலம் நடப்பதற்கு பதிலாக பெரும் மழை மட்டும் பொழிகின்றது, 

இந்த மாற்றங்களால் அதற்கு முக்கிய காரணமான மனித இனம் மட்டுமே சீரழியுமாயின் பரவாயில்லை. ஆனால் மற்ற உயிரினங்கள் தான் மிக அதிகமாக அழிகின்றன.அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும் இந்த சிறு உயிர்கள் தான். தாம் ஏன் அழிகின்றோம் என்பதை கூட அறிய முடியாமல் செத்து மடிகின்றன.

அண்மையில் பத்து வருடங்களுக்கு முன், சுனாமியினால் அணுக்கதிர் ஆலைகள் பாதிப்படைந்தமையால் மக்கள் வெளியேறிய ஜப்பானின் ஒரு தீவை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்க்கும் போது, மனிதர்கள் இல்லாமையால் அணுக்கதிர் வீச்சைக் கூட சமாளித்துக் கொண்டு பல மிருகங்கள் தம் இனத்தை பெருக்கிக் கொண்டு சிறப்பாக வாழ்வதை கண்டுள்ளனர். ஆக மனிதன் தான் இயற்கையின் மிகப் பெரும் எதிரி.

மனிதர்களே இல்லாததாக பூமி ஆகும் போதுதான் மனிதர்கள் தவிர்ந்த மிச்ச எல்லா உயிரினமும் வாழும் சூழல் உருவாகும்.

Share this post


Link to post
Share on other sites

இயற்கையை நாம் பாதுகாப்பதா ? 

இயற்கையின் சீற்றத்திலிருந்து நம்மைத்தான் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் இயற்கையை சீண்டாமல் இருந்தாலே போதும்.

ஆகவே மனித குலத்தை பாதுகாப்பது எப்படி என யோசிப்பதே சிறந்தது. 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, நிழலி said:

நிழலி
ஜனவரி 12, இரவு 10

மனிசி பிள்ளையள் நித்தாவுக்கு போனாப்பிறகு சிங்கனுக்கு ஞானோதயம் பிறந்திருக்கு. 😂

7 hours ago, நிழலி said:

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

ஒரு சில சமுதாயம் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மனித குலத்தையும் சபிக்கக்கூடாது.:cool:

Share this post


Link to post
Share on other sites

உண்மையிலேயே நிழலி எழுதியது போல கற்பனையில் கரைந்து போகிறேன் 
மனிதர் இல்லா பூமி  .... ஒரு வெறும் 10 ஆண்டுகள்..
பூமி தன்னை ஆரோக்கியப்படுத்திக்கொள்ளும் , அழகு படுத்திக்கொள்ளும்
ஆரவாரம் இல்லாத அதிசயம் !!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பூமியில் உயிரினங்கள் அழிய மனிதன்தான் காரணம். மனிதன் இறுதியில் எல்லாற்றையும் அழித்து தானும் அழிந்துபோவான்! 

Share this post


Link to post
Share on other sites

நீதியின் அச்சில் இந்த உலகம் சுற்றவில்லை ,அநீதி ,அக்கிரமம், சமத்துவமின்மை ,சுரண்டல், யுத்தம் ,இவை அனைத்தோடும் போராடும் காலம் இப்போ .சமூக ஒப்பந்த கோட்ப்பாடுகளை எல்லாம் மனிதன் மறந்து ஆதி கால மனித வாழ்வுக்கு திரும்பி விடுவான் போல் தான் தெரிகிறது.நல்ல கவிதை உங்கள் கோபத்தின் வெளிப்பாடு புரிகிறது.

Share this post


Link to post
Share on other sites

கருத்திட்டவர்களுக்கும் ஊக்குவிப்புப் புள்ளிகள் இட்டவர்களும் என் நன்றிகள்!

Share this post


Link to post
Share on other sites
On 1/13/2020 at 4:25 PM, நிழலி said:

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

Ähnliches Foto

Ähnliches Foto

Bildergebnis für australien feuer tiere

Bildergebnis für australien feuer tiere

Bildergebnis für australien feuer tiere

அவுஸ்திரேலிய தீயால், மனம் வெதும்பி  எழுதிய கவிதை. 😥

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்

இன்றையநிலையை மாற்றமுடியுமா?

மாற்றமுடியாதுவிட்டால்  

இந்தப்போட்டி  தொடருமானால்???

எதுவும் தேவையில்லை  மனிதரே  மனிதனை  அழித்து  முடிப்பான்

கவிதைக்கு  நன்றி  தம்பி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • க.விஜயரெத்தினம் கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம், தமிழ் மக்களிடம், புத்திஜீவிகளிடம், அரசியல் பிரமுகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்று, நேற்று (19) நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கிலே-தமிழர்-அணியை-உருவாக்க-முயற்சி/73-245846
  • ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது   வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது   சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் விபத்தில் இறந்த ஒருவரின் புகைப்படத்தை பதிவு செய்து சிஏஏ போராட்டத்தால் மரணமடைந்ததாக தவறாக பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது   இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மக்கள்தொகை குறைப்பதற்காக ஒரு சில கடைகளில் விற்கப்படும் பிரியாணிகளில் கருத்தடை மாத்திரம் கலப்படம் செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் அப்படி எந்த கடையிலும் பிரியாணி தயாராக இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://tamil.webdunia.com/article/regional-tamil-news/whatsapp-rumor-about-biriyani-120022000084_1.html?utm_source=Regional_Tamil_News_HP&utm_medium=Site_Internalhttps://www.google.ca  
  • எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.
  • போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே.   League points table 2019 Team   Pld W L T NR Pts NRR Mumbai Indians (C) 14 9 5 0 0 18 +0.421 Chennai Super Kings (RU) 14 9 5 0 0 18 +0.131 Delhi Capitals (3) 14 9 5 0 0 18 +0.044 Sunrisers Hyderabad (4) 14 6 8 0 0 12 +0.577 Kolkata Knight Riders 14 6 8 0 0 12 +0.028 Kings XI Punjab 14 6 8 0 0 12 –0.251 Rajasthan Royals 14 5 8 0 1 11 –0.449 Royal Challengers Bangalore 14 5 8 0 1 11 –0.607   Most runs (2019) Player Team Mat Inns Runs Ave SR HS 100 50 4s 6s  David Warner Sunrisers Hyderabad 12 12 692 69.20 143.86 100* 1 8 57 21  K. L. Rahul Kings XI Punjab 14 14 593 53.90 135.38 100* 1 6 49 25  Quinton de Kock Mumbai Indians 16 16 529 35.26 132.91 81 0 4 45 25  Shikhar Dhawan Delhi Capitals 16 16 521 34.73 135.67 97* 0 5 64 11  Andre Russell Kolkata Knight Riders 14 13 510 56.66 204.81 80* 0 4 31 52        David Warner of Sunrisers Hyderabad received the Orange Cap.   Most wickets (2019) Player Team Mat Inns Wkts BBI Avg Econ SR 4w 5w  Imran Tahir Chennai Super Kings 17 17 26 4/12 16.57 6.69 14.84 2 0  Kagiso Rabada Delhi Capitals 12 12 25 4/21 14.72 7.82 11.28 2 0  Deepak Chahar Chennai Super Kings 17 17 22 3/20 21.90 7.47 17.59 0 0  Shreyas Gopal Rajasthan Royals 14 14 20 3/12 17.35 7.22 14.40 0 0  Khaleel Ahmed Sunrisers Hyderabad 9 9 19 3/30 15.10 8.23 11.00 0 0        Imran Tahir of Chennai Super Kings received the Purple Cap. End of the season awards (2019) Player Team Award    Shubman Gill Kolkata Knight Riders Emerging Player of the Season     Sunrisers Hyderabad Fairplay Award    Kieron Pollard Mumbai Indians VIVO Perfect Catch of the Season    Andre Russell Kolkata Knight Riders TATA Nexon Super Striker of the Season    K. L. Rahul Kings XI Punjab fbb Stylish Player of the Season    Imran Tahir Chennai Super Kings Purple Cap    David Warner Sunrisers Hyderabad Orange Cap    Andre Russell Kolkata Knight Riders Most Valuable Player  
  • -சுப்பிரமணியம் பாஸ்கரன் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வின்போது, இலங்கை அரசாங்கத்துகு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் முன்வைக்க வேண்டுமென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சனி தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர்,  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில், சர்வதேசத்திடம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்.. ஓ. எம். பி அலுவலகத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமெனத் தெரிவித்த அவர், அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் கூறினார். இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் எதையும் தமக்கு செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தமது உறவுகள் தொடர்பில் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லையெனவும் சாடினார். இந்த நிலையில் மீண்டும் கால அவகாசங்களை வழங்காது, அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டுமெனவும், கலாரஞ்சனி கேட்டுக்கொண்டார். http://www.tamilmirror.lk/வன்னி/கடுமையான-அழுத்தங்களைப்-பிரயோகிக்க-வேண்டும்/72-245826