Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஊழிக் கால நடனம் - நிழலி


Recommended Posts

பனியும் மழையும் இல்லா
குளிர் கால இரவொன்றை
கடும் காற்று
நிரப்பிச் செல்கின்றது

...

காற்றின் முனைகளில்
பெரும் வாள்கள்
முளைத்து தொங்குகின்றன
எதிர்படும் எல்லாக்
கனவுகளையும்
வெட்டிச் சாய்கின்றன

திசைகள் இல்லா
பெரும் வெளி ஒன்றில்
சூறைக் காற்று
சன்னதம் கொண்டு
ஆடுகின்றது
புல்வெளிகளும் நீரோடைகளும்
பற்றி எரிகின்றன
தீ சூழும் உலகொன்றில்
பெரும் காடுகள் உதிர்கின்றன

காலக் கிழவன்
அரட்டுகின்றான்
ஆலகால பைரவன்
வெறி கொண்டு
ஆடுகின்றான்
சுடலைமாடன் ஊழித்
தாண்டவத்தின் இறுதி
நடனத்தை ஆரம்பிக்கின்றான்

அறம் பொய்த்த உலகில்
அழிவுகள்
ஒரு பெரும் யானையை போல்
நடந்து செல்கின்றது
மதனீரில் பாவங்கள் கரைகின்றது
பிளிறல்களில் எல்லா பொய்களும்
அழிகின்றது

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

 

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

 • Like 11
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக வந்திருக்கின்றது......அதில் ஏன் இந்த விரக்தி......இன்றைய உலகம் போகின்ற போக்கைப்பார்த்து மனசு வேகின்றதுபோல......ஆயினும் ஒரு கவிஞன் கூடியவரை அறம் பாடுவதை தவிர்த்தல் நல்லது என நினைக்கின்றேன்.இறுதி இரண்டு பந்திகளையும் சொன்னேன்.......!  👍

Link to comment
Share on other sites

மனித அராஜகத்துக்கு இயற்கை  தான் தகுந்த பதிலடி கொடுக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். அப்பாவிகள்  ஏன் தண்டிக்கப்பட வேண்டும்??

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

கவிதை நன்றாக வந்திருக்கின்றது......அதில் ஏன் இந்த விரக்தி......இன்றைய உலகம் போகின்ற போக்கைப்பார்த்து மனசு வேகின்றதுபோல......ஆயினும் ஒரு கவிஞன் கூடியவரை அறம் பாடுவதை தவிர்த்தல் நல்லது என நினைக்கின்றேன்.இறுதி இரண்டு பந்திகளையும் சொன்னேன்.......!  👍

 

1 hour ago, nunavilan said:

மனித அராஜகத்துக்கு இயற்கை  தான் தகுந்த பதிலடி கொடுக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். அப்பாவிகள்  ஏன் தண்டிக்கப்பட வேண்டும்??

கடந்த சில தினங்களாக புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் பற்றி விவரணங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். மனித காரணங்களால் இயற்கை மிகழும் சிக்கலான போக்கில் நகர்ந்து கொண்டு இருக்கின்றதை உணர முடிந்தது. இங்கு கூட இப்ப கடும் பனிக்காலம் நடப்பதற்கு பதிலாக பெரும் மழை மட்டும் பொழிகின்றது, 

இந்த மாற்றங்களால் அதற்கு முக்கிய காரணமான மனித இனம் மட்டுமே சீரழியுமாயின் பரவாயில்லை. ஆனால் மற்ற உயிரினங்கள் தான் மிக அதிகமாக அழிகின்றன.அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும் இந்த சிறு உயிர்கள் தான். தாம் ஏன் அழிகின்றோம் என்பதை கூட அறிய முடியாமல் செத்து மடிகின்றன.

அண்மையில் பத்து வருடங்களுக்கு முன், சுனாமியினால் அணுக்கதிர் ஆலைகள் பாதிப்படைந்தமையால் மக்கள் வெளியேறிய ஜப்பானின் ஒரு தீவை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்க்கும் போது, மனிதர்கள் இல்லாமையால் அணுக்கதிர் வீச்சைக் கூட சமாளித்துக் கொண்டு பல மிருகங்கள் தம் இனத்தை பெருக்கிக் கொண்டு சிறப்பாக வாழ்வதை கண்டுள்ளனர். ஆக மனிதன் தான் இயற்கையின் மிகப் பெரும் எதிரி.

மனிதர்களே இல்லாததாக பூமி ஆகும் போதுதான் மனிதர்கள் தவிர்ந்த மிச்ச எல்லா உயிரினமும் வாழும் சூழல் உருவாகும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை நாம் பாதுகாப்பதா ? 

இயற்கையின் சீற்றத்திலிருந்து நம்மைத்தான் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் இயற்கையை சீண்டாமல் இருந்தாலே போதும்.

ஆகவே மனித குலத்தை பாதுகாப்பது எப்படி என யோசிப்பதே சிறந்தது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

நிழலி
ஜனவரி 12, இரவு 10

மனிசி பிள்ளையள் நித்தாவுக்கு போனாப்பிறகு சிங்கனுக்கு ஞானோதயம் பிறந்திருக்கு. 😂

7 hours ago, நிழலி said:

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

ஒரு சில சமுதாயம் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மனித குலத்தையும் சபிக்கக்கூடாது.:cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நிழலி எழுதியது போல கற்பனையில் கரைந்து போகிறேன் 
மனிதர் இல்லா பூமி  .... ஒரு வெறும் 10 ஆண்டுகள்..
பூமி தன்னை ஆரோக்கியப்படுத்திக்கொள்ளும் , அழகு படுத்திக்கொள்ளும்
ஆரவாரம் இல்லாத அதிசயம் !!!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூமியில் உயிரினங்கள் அழிய மனிதன்தான் காரணம். மனிதன் இறுதியில் எல்லாற்றையும் அழித்து தானும் அழிந்துபோவான்! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீதியின் அச்சில் இந்த உலகம் சுற்றவில்லை ,அநீதி ,அக்கிரமம், சமத்துவமின்மை ,சுரண்டல், யுத்தம் ,இவை அனைத்தோடும் போராடும் காலம் இப்போ .சமூக ஒப்பந்த கோட்ப்பாடுகளை எல்லாம் மனிதன் மறந்து ஆதி கால மனித வாழ்வுக்கு திரும்பி விடுவான் போல் தான் தெரிகிறது.நல்ல கவிதை உங்கள் கோபத்தின் வெளிப்பாடு புரிகிறது.

Link to comment
Share on other sites

கருத்திட்டவர்களுக்கும் ஊக்குவிப்புப் புள்ளிகள் இட்டவர்களும் என் நன்றிகள்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2020 at 4:25 PM, நிழலி said:

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

Ähnliches Foto

Ähnliches Foto

Bildergebnis für australien feuer tiere

Bildergebnis für australien feuer tiere

Bildergebnis für australien feuer tiere

அவுஸ்திரேலிய தீயால், மனம் வெதும்பி  எழுதிய கவிதை. 😥

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்

இன்றையநிலையை மாற்றமுடியுமா?

மாற்றமுடியாதுவிட்டால்  

இந்தப்போட்டி  தொடருமானால்???

எதுவும் தேவையில்லை  மனிதரே  மனிதனை  அழித்து  முடிப்பான்

கவிதைக்கு  நன்றி  தம்பி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.